https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 47 பல வண்ணமுக மனிதர்கள் - 2


ஶ்ரீ:
அடையாளமாதல் - 47
பல வண்ணமுக மனிதர்கள் - 2
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 20

அரசியல் களம் - 16
சேவாதள அமைப்பு காந்தியால் தொடங்கப்பட்டது . கட்சி கூட்டம் நடைபெறுகிறபோதும் , தலைவர்கள் வந்து போகிற போதும் பாதுகாப்பாக நிற்க வேண்டும். மற்றைய காலங்களில் மாதம் நாலனா பெற்றுக்கொண்டு காங்கிரசின் கொள்கை பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும் .தில்லியில் காந்தியுடன் தொடர்புள்ள நிறைய சேவாதளத் தொண்டர்களின் குடும்பத்தை சேர்ந்த சில நண்பர்களுண்டு எனக்கு . அந்த நாட்களைப் பற்றி கதை கதையாய் அவர்கள் நிறைய சொல்லக்  கேட்டிருக்கிறேன் , கண்ணீர் மல்கி இருக்கிறேன் . அவர்கள் மத்தியில் என்னை ஒரு புழுவைப்போல உணர்ந்திருக்கிறேன் .


இன்றும் அவர்கள் வாழுமுறையில் எந்த மாற்றமும் இல்லை காந்தியை தன் குடும்ப உறுப்பினர் அளவிற்கு நெருக்கமாக சொல்லும்போது நான் என்னை நினைத்து அவமானப்பட்டிருக்கிறேன் . எது இவர்களை அத்தகைய தியாகங்களுக்கு இட்டுச்சென்றது . எப்படிபட்ட மனசமாதனங்களின் வழியாக வெளியேறி தங்களை கண்டடைந்தனர் . அது நமது புரிதலுக்கு வந்தாலே நாம் பெரும் பாக்கியவான்கள் தான். சேவாதள் சேவைக்கென காந்தியால் அடையாளங்களாக வாழ்ந்தவர்கள் .

அந்நாள் விடிந்ததும் கட்சிகாரர்கள் காலை ஏழு மணிமுதலே சிறு சிறு கூட்டமாக கோரிமேட்டில் குவியத் தொடங்கினர் . அனைவரின் உள்ளுணர்வுகளும்  உந்த இரண்டு மணிநேரத்தில் கனிசமான அளவில் நிறைந்திருந்தனர் . சென்னை புதுவை முக்கிய சாலை அது போக்குவரத்து இடைஞ்சலால் கூட்டம் கூடிநிற்பதும் , பின் கலைந்து நிற்பதுமாக மாறி மாறி முன்னும் பின்னும் நகர்ந்த படிய இருந்தனர் .

முக்கிய போக்குவரத்து சாலை என்பதால் எந்த இடத்தில் சென்னையிலிருந்து வரும் மேலிடப் பார்வையாளர் மற்றும் பொறுப்பாளர்களின் கார்கள் வந்து நிற்கும் என தெரியததால் , யாரும் ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக நட்ந்து இடமறிய அலைபாய்ந்து கொண்டேயிருந்தனர். முக்கிய தலைவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. தில்லி மேரிடத்திலிருந்த புதுவைக்கு வருபவர்களை எல்லையில் நிறுத்தி சால்வை மாலை மற்றும்  வாழ்த்து கோஷத்துடன் வரவேற்று முக்கிய வீதி வழியாக அழைத்துச் செல்வது ஓரு சடங்காகவே மாறியிருந்தது

அது ஊர்வலம்போல பகுதி பகுதியாய் கடந்து செல்ல ஒவ்வொரு பகுதியிலும் சிலர் மாலை மரியதை மண்டகபடி செய்ய , எங்கும் பட்டாசு வெடித்து புகை மண்டி வெடிமருந்து நெடியுடன் அலுவலகம் சென்று அமர்வதற்குள் ஊர் தேர்தல்களை கட்டிவிடும்.

பொதுவாக இதுபோன்ற கட்சிநிகழ்வுகளில் , முக்கிய தலைவர்கள் அனைவரும் கட்சி அலுவலகத்திலிருந்தோ , சண்முகம் வீட்டில் கூடியோ ஒன்றாக செல்வது வழமை . இந்தமுறை அப்படி நடக்காதென எல்லோரும் புரிந்திருந்தனர் , உச்ச நேரம் வேகமாக நெருங்க பரூக் மற்றும் கண்ணன் போன்ற தலைவர்கள் வந்து சேர்ந்த பின் சூழல் மிக இருக்கமாக உணரப்பட்டது . இளைஞர் காங்கிரஸ் தொகுதி ரீதியாக வரச்சொன்னதில் வேடிக்கபார்க்கும் ஆர்வத்தில் நானும் சென்றிருந்தேன் .

அலையலையாக வெள்ளைவெளேரென்ற சட்டை வேட்டி கால்சராய் ஆடைகளில் எங்கும் நிறைந்த மக்கள் திரள் . இளைஞர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர் , ஏறக்குறைய எல்லோர் கையிலும் மூவர்ண காங்கிரஸ் கொடியும் , வெள்ளை பட்டுபோல மிகப்பெரிய கொடியில் ஆரன்ஞ்சு பச்சையில் பல் சக்ரம்போல வரையப்பட்ட இளைஞர் காங்கிரசின் கொடியுமாக எங்கும் வண்ணக் கலவையாக அலையடித்துக் கொண்டிருந்தது

பின்காலை வெய்யில் அங்கு கூடியிருந்தவரின் ஆடைகளில் பட்டு அவற்றின் வென்னிறபரப்பை மின்னலைப்போல மின்னி கண்ணகளை கூசி நீர்மை கொள்ள , பார்வையை மழுங்கடித்து . எதிலும் விழியைச் செலுத்த இயலாமல் செய்தது . எங்கும் எழுந்து கொண்டிருந்த அந்த ரீங்காரம் ஒரு கார்வையாக சிந்தனையை மழுங்கடித்து அதனுள் செல்லமுடியாமல் வெளியேற விருப்பமும் இல்லாது பைத்தயம் போல ஓரு இலக்கை நோகும் பார்வையற்று, போதை மாதிரி ஏதோ ஒன்று தலைக்கேற , அந்த திரளில் காணாமல் போய்க்கொண்டிருந்தேன்.

மனித உடலை மறைந்து எங்கும் வெண்மையைத் தவிர பிறிதொன்றில்லை என்றானது . எங்கு யாரிருக்கிறார்கள் என கண்டுபிடிக்க இயலாதபடி அனைவரும் முகமிந்த வெண்மை மட்டுமேயாகி இருந்தனர் . தலைவர்கள் பலர் வந்துவிட்டதால் , அவர்களின் ஆதரவாளர்கள் வந்து கூட கூட எங்கும் மனிதர்கள் மேலும் வெண்மையை கூட்டி பிதுங்கி வழிந்தனர்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக