https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மே, 2024

அறம் என்கிற காலம்






 நண்பர்களுக்கு வணக்கம்


இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன். கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்றியது என நினைக்கிறேன். நண்பர்கள் எப்படி பார்க்கிறார்கள் என தெரியவில்லை


விபீஷணனின் வாத அடுக்கு முறை நுட்பம் வேறு வகைமை கொண்டாதாக பார்க்கிறேன். இராவணன் இன்றிருக்கும் இடம் சிக்கலுக்காட்படும் என்கிற வாதத்தை அவர் வைக்காமல் அவனக்கு கையில் கிடைக்க இருக்கும் இந்திரப் பதவி நழுவுவதை பேசுகிறார். வேறு காரணங்கள் அவனிட் எடுபடாது என நினைக்கிறார். எனவே இந்திரப் பதவி பராக்கிரமத்தால் மட்டும் அடைந்துவிடுவதல்ல அறம் மற்றும் விழுமியம் அதற்கு பலம் சேர்க்க வேண்டும் போல. இந்திரனை வெற்றி கொண்ட பிறகு சிலரை அடிமை கொண்டது தவிற இராவணன் இந்திரப் பதவியில் அமர்ந்ததாக எங்கும் இல்லை என நினைக்கிறேன். அமராத பதவிக்காக இராவணனின் வீண் போர் நிகழவில்லை என்பதால் கண்களுக்கு புலப்படாதஅறம்இராவணனது விழுமியம் மூலமாக அடையப் பட வேண்டும் என அவனை காத்திருக்க வைத்திருக்கிறது போலும். இன்று அதற்கு ஆபத்து என விபீஷணன் சொல்ல வருகிறான்


மேலும் மஹாபலி இந்திரனை வென்று ஆட்சியில் அமர்கிறான். அவனது பராக்கிரம் மட்டுமல்லாது அவனது விழுமியமும் அவனுக்கு துணைத்து அந்த பதவியை பெற்றுத் தந்திருப்பதால் இந்திரன் முறையிட பலத்தால் அவனை வெற்றி கொள்ளாமல் வாமண ரூபம் எடுத்து தானமாக பெற்றுத்தரும் செயல் அறம் என்கிற ஒன்று அனைத்தையும் அளக்கிறது போலும்.  

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

 2022ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் எனது மணிவிழா அழைப்பிதழை அவருக்கு கொடுக்கு மனைவியுடன் சென்றிருந்தேன். மேடை முழுஜெநிகழ்வால் சரடுபோல கோர்த்திருந்த நடுவில் மாலை மாற்றிக் கொள்ள அருண்மொழிநங்கை மேடையில் ஏறி பின்னர் இறங்கி பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டார். அப்போது மேடையின் நிறைவில் உள்ள சிறு குறையாக எனக்கு பட்டவுடன் அதை புதுவையில் எப்படி நிகழ்த்த வேண்டும் என முழு பார்வையை உருவாக்கிக் கொண்டேன். என் மணிவிழாவில் இரண்டு முறை அவர்கள் மாலை மாற்றிக் கொண்டனர். ஒன்று அவர் எனக்கு மங்களநான் எடுத்துக் கொடுக்கும் முன்பு பின்னர் அவர்வைணவங்கள்தனியுரைக்கு முன்னர். அதுவே ஜெ பிறந்தநாள் நிகழ்வின் துவக்கமாக இருந்தது









இரண்டாவது ஆண்டு அது தற்செயலாக நிகழ்ந்தது. தங்கை மகள் திருமணத்திற்கு முதல்நாள் அரங்கத்திற்கு உள்ளே சிறு மேடையில்ஜெயின் குமரித்துறைவி புத்தகம் அனைவரும் இலவசமாக எடுத்துக் கொள்ள வழி செய்ய வேண்டும் என என் தங்கை சொன்ன போது அரைமனதுடன் அதற்கு உடன்பட்டேன். திருமண நிகழ்விற்கு மத்தியில் அது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்கிற ஐயம் இருந்தது மேலும் அந்த திருமணம் உயர் மேட்டுக் குடி மனபாவணையில் நிகழும் என ஊகித்திருந்தேன். புத்தகம் கிடைக்குமா என விஷ்ணுபுரம் பதிப்பபகம் நண்பர் மீணாவிடம் கேட்ட போது புத்துகம் இருப்பை சொன்னார். மற்றபடி அதை விழாவாக எடுக்க வேண்டும் என்பது கடலூர் சீனுவின் திட்டம். “குமரித்துறைவிபுத்தகம் அதுவரை எங்கும் வெளியிடப்படவில்லை என்பதால் அதை வெளியீட்டு விழாவாக நிகழ்த்தலாம் என்றார். அவரும் நண்பர் நாகராஜும் அதை மேடையில் வெளியிட்டார்கள்.





மூன்றாவது ஆண்டு விழா வெண்முரசு கூடுகை நண்பர் அம்ருதவல்லி அவர்களின் எண்ணம். 22 ஏப்ரல் அவர்களின் திருமணநாள் என்பதால் ஒரு சிறு பணமுடிப்பு இளம் எழுத்தாளர் ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு வருடம் அதை தான் தருவதாக சொன்னார். சில மாதங்களுக்கு முன்னர் அது பற்றிய பேச்சு வ்வந்த போதே அது எழுத்தாளர் அரிசங்கர் என முடிவு செய்திருந்தோம். “ஜெபிறந்தநாள் கொண்டாட்டம் 24.04.2024 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது 

சனி, 27 ஏப்ரல், 2024

புதுவை இளம் எழுத்தாளருக்கு கௌரவ பரிசு. தாமரை கண்ணன்

 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியில் நடைபெறுகின்றது.  கடந்த 7 ஆண்டுகளாக புதுவை வெண்முரசு கூடுகை என்னும் வாசகர்கள் குழுவால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. கலந்துரையாடல் மட்டுமல்லாது எழுத்தாளர்கள் சந்திப்பு புதிய வாசகர்களுக்காக பயிற்சி முதலிய இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை புதுவை வெண்முரசு கூடுகை ஒருங்கிணைக்கின்றது.  எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு முதல் புதுவையை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவரை கௌரவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் மாத கூடுகையில் புதுவையை சேந்த எழுத்தாளர் அரிசங்கர் படைப்புகள் குறித்து உரையாடல் நிகழ்ந்தது. 


அரிசங்கர் பாரீஸ். உண்மைகள் பொய்கள் கற்பனைகள், மாகே கஃபே ஆகிய நாவல்களும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் பக்கார்டி என்னும் குறுநாவலும் எழுதியிருக்கிறார்.  இவரது சிறுகதை தொகுப்புகள் உடல், பதிலடி. ஏமாளி, சப்தங்கள் ஆகியவை தற்போது அரிசங்கர் சிறுகதைகள் என்ற தொகுப்பாகவும் கிடைக்கின்றன. தொடர்ந்து புதுச்சேரியை தனது எழுத்தில் முன்வைப்பதாகவும்  எளிய மனிதர்களின் உலகத்தை அதன் அனைத்து நிஜங்களுடன் கதைகளில் காட்டும்படியாகவும் இவரது கதையுலகம் வழங்குகிறது . அரி நண்பர்களுடன் இணைந்து நவீன இலக்கியத்திற்காக பனை என்ற வாசகர் வட்டம் ஒன்றையும் புதுவையில் நடத்தி வருகிறார்.  












அரிசங்கரது சமீபத்திய நாவலான மாகே கஃபே குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. அரிசங்கருக்கான பரிசை வெண்முரசு கூடுகை  வாசகர் திருமதி அமிர்தவல்லி அவர்கள் வழங்கினார், மூத்த வாசகர் திரு விஜயன் பொன்னாடை போர்த்தினார். அரிசங்கர் தனது ஏற்புரையில் புதுவையில் நவீன இலக்கியம் சார்ந்த தேவைகள் குறித்து பேசினார். இந்நிகழ்வுக்கு பிறகு மாதாந்திர கூடுகை துவங்கியது வெண்முரசு காண்டீபம் நாவலின் ஐந்து முகத்தழல் பகுதி குறித்து நண்பர் சிவராமன் பேசினார், அதன்பிறகு கூடுகை நண்பர்கள் அனைவரும் அப்பகுதி மீதான தங்கள் பார்வையை முன்வைத்து உரையாடினர்.  

-- 
WITH REGARDS,
L.S.THAMARAI KANNAN
.