https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 21 பிப்ரவரி, 2019

திங்கள், 11 பிப்ரவரி, 2019

அடையாளமாதல் - 435 *காலப் புணைவு *

ஶ்ரீ:





பதிவு : 435 / 607 / தேதி 11 பிப்ரவரி  2019

*காலப் புணைவு 


எழுச்சியின் விலை ” - 36
முரண்களின் தொகை -03 .



தொடர்ந்து இப்பதிவுகளை எழுத குறைந்தது மூன்று காரணம் இருக்கிறது . ஒன்று நான் எனது ஆழ்மனத்தடன் நிகழ்த்த முயலும் உரையாடல், அது எனக்கான மெய்மையைக் குறித்து . எனக்கு போதிய காலம் இல்லை என்கிற ஒரு சொல் எப்போதும் மனதில் எழுந்த படி இருப்பது அதற்கு காரணம் . இரண்டு புதுவையின் அரசியல் மற்றும் அதை வளர்த்தெடுத்த தலைவர் சண்முகம் பற்றிய வரலாற்று பதிவு போன்றது . புதுவை அரசியல் பற்றிய சிறிய குறிப்பு இது மட்டுமேயாக இருக்கக்கூடும் . இது ஒரு சிறிய முயற்சி மட்டுமே . இதில் நிஜ  நிகழ்வுகளை அதன் போக்கில் சொல்ல முயற்சிக்கிறேன்

நிகழ்ந்தவற்றை மிகையாக அல்லது கற்பனையாக சொல்ல விழையவில்லை . நான் எனது தனிப்பட்ட பார்வைவிமர்சனத்தை தவிர்க்க முயன்றிருக்கிறேன். ஆரம்ப பதிவுகளில் எனது பார்வையாக கொடுக்கப்பட்டிருந்தாலும் , பின்னர் அவற்றை விலக்கி  முற்றாக குறைத்திருக்கிறேன் . இந்த பதிவுகளுக்கு அவையும் ஒரு காரணம் என அமைந்துள்ளது. ஒவ்வொரு பதிவிலும் நடை அல்லது கூறுமுறை போன்றவற்றை மாற்றி அமைத்தபடி இருக்கிறேன் . அது மொழியை கைவரப் பெற செய்யும் முயற்சிகள் .

அரசியல் தனது முரணியகத்தின் வழியாக தனக்கான பாதையை கண்டடைகிறது . ஒவ்வொரு பத்தாண்டுகளில் யாரும் எண்ண இயலாத சில தலைகீழ் மாற்றத்தை உருவாக்கி , அதை ஒருவரின் வெற்றி , பிறிதொருவரின் வீழ்ச்சி என ஆரம்ப காலத்தில் எனக்கு வருத்தம் தருவதாக தோன்றவைத்தது , மாற்றம் என்பது எதிர்காலத் காலத்தை கருத்தில் கொண்டது , அதை நிகழ்காலத்துடன் பொருத்தி புரிந்து கொள்ள முடியாது என்பதும் அதில் யாருக்கும் வெற்றி என்றோ தோல்வி என்றோ ஒன்று நிகழ்வதேயில்லை . எல்லா கணிப்புகளையும் காலம் தனது விந்தையான நகைச்சுவை உணர்வுடன் புறந்தள்ளி சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது .

அது தனது சிக்கலான முடிவுகளை தன வழியாகவே வெளிப்பட இருப்பது , வளர்ச்சிதை மாற்றம் என்கிற கருத்தாக்கத்துடன் அது எழுவது . அதில் நிகழ்வதை புரிந்துகொளவ்தும் வாய்ப்பிருந்தால் அதில் நுழைந்து செய்ய வேண்டியதை முயற்சிப்பதுமாக காலம் என்னை கடந்து போனதை நினைவு படுத்திக்கொள்கிறேன் . இங்கு யாரும் பெருமையுடன்  வாழ்ந்து மறைந்துவிட முடியாது . வாழும் நாளில் தங்களது பெருமை கரைந்து போவதை பார்க்காது போகிறவர்கள். விண்ணகத்து கொடையைப் பெற்றவர்கள் 

சுதந்திர கால கட்ட இந்தியவில் நிகழ்ந்ததை கூரிய பார்வையுடன் அலசும் ஜெயமோகனின் கட்டுரைகளை இங்கு நினைத்துப் பார்க்கிறேன் . இலட்சியவாதம் அரசியலின் பிரதான கருத்தியலாக இருந்தது. அதன்  வழியாக அடையப்போகும் ஒரு பொன்னுலகை மக்கள் முன் காட்டியாகவேண்டிய அவசியம் இருந்தது. காங்கிரஸும் கம்யூனிஸ்டுக் கட்சியும் அந்த பொன்னுலகை எதிர்காலத்தில் சுட்டிக்காட்டின. திராவிட இயக்கம் அதை இறந்தகாலத்தில் சுட்டிக்காட்டியது. இழந்துவிட்ட ஒரு மகத்தான காலகட்டத்தை அலங்காரமும் உணர்ச்சிகரமும் கொண்ட சொற்கள் வழியாக அது மக்கள் மனத்தில் நிறுவியது. ஏற்கனவே தமிழகத்தில் வலுவாக நிகழ்ந்திருந்த தமிழியக்கத்தில் இருந்து அந்தக்கனவை அது கடன்வாங்கியது எனகிறார் திரு,ஜெயமோகன்.

தமிழக அரசியலை பொருத்தவரை மிக முக்கியமான பார்வையாக இதைக்  கருதுகிறேன். காங்கிரஸ் இயக்க தலைவர்கள் . சுதந்திரத்திற்கு பின் மக்களின் போக்கை கணிக்க தவறினார்கள் .திராவிட இயக்கங்களின் எழுச்சி  பரப்பியம்” என்கிற  பிரச்சார யுக்த்தியை கையிலெடுத்த போது , அதற்கு ஈடு கொடுக்க இயலாமல் , பகத்தவச்சலம் , காமராஜர்  போன்றவர்கள் திணறிக் கொண்டிருந்த சூழலில், திரவிட இயக்கங்களை கையாளுவதில் வெற்றி பெற்றிருந்தார் சண்முகம் .

புதுவையை பொருத்தவரை , அவர் வலது கம்யூனிஸ்ட்களை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது   அதுவே அவரின் அரசியலை வடிவமைத்ததிருக்க வேண்டும் .கம்யூனிஸ்ட்கள் லட்சியவாதம் ஓங்கியிருந்த காலம் .கொள்கை அடிப்படையில் செயல்பட்டவர்களை எதிர்கொள்ள சிரமம் இருப்பதில்லை . அது இல்லாத பிற பிரப்பியக்கங்களை கையாலவதுதான் சத்தியமல்லாதது

புதுவை கம்யூனிஸ்ட் பெரும் தலைவராக அறியப்பட்ட .சுப்பையா ரஷ்ய தலைவர்களுடன் நேரடித் தொடர்பிலிருந்தார் . காந்தியை புதுவைக்கு முதலில் அழைத்து வந்தவர் அவர்தான் என்றாலும் , பின்னர் அரசியல் நிலைபாட்டால் , மாற்று இயக்கம் நோக்கி நகர்ந்தார்., தேசியவாதியாக தன் அரசியலை துவக்கிய சுப்பையா எதிர்கொண்ட சிக்கல்கள் புதுவை மாநிலத்திற்கென பிரத்யேகமானவை , அதுவே அவரை காந்திய வழிகளில் இருந்து வெளியேறச் செய்தது . அவர்கள் நீண்ட கால காத்திருப்பிற்கு தயாரில்லை 

சனி, 9 பிப்ரவரி, 2019

அடையாளமாதல் -434 * ஒற்றைப் பரிமாணம் *

ஶ்ரீ:





பதிவு : 434 / 606 / தேதி 09 பிப்ரவரி  2019

* ஒற்றைப்  பரிமாணம்  * 


எழுச்சியின் விலை ” - 35
முரண்களின் தொகை -02 .





ஒட்டுமொத்தமாக கனவுஜீவியாகவும் அன்றாட நடைமுறையில் யதார்த்தவாதியாகவும் இருப்பதே காந்திய வழிமுறை என்றார் ஜே.சி.குமரப்பா .  எண்ணி எண்ணி விரித்துக்கொள்ள வேண்டிய வரி அது. பெரும்கனவுகளை கொண்டிருத்தல், இலட்சியங்களின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முனைதல் ஆகியவை ஒட்டுமொத்தமான பார்வையை முடிவு செய்யவேண்டும். காந்திய வழிமுறை பற்றி ஜே.சி.குமரப்பா சொன்னதாக ஜெயமோகன்.

கூட்டுறவு இயக்கங்களை கட்டமைக்கும் முயற்சி பற்றிய சிந்தனையே அரசிலை நோக்கிய எண்ணங்களுக்கும் , திட்டமிடலுக்கும்  பெரும் பாய்ச்சலை கொடுத்திருந்தது. என்ன செய்தாலும்  அரசியலின் வெற்றிடத்தை நிரப்ப இயலாது. அதற்கான இளந்தலைவர்களை , அரசியலின் "நுண்   கறைக்கு"   அப்பால்  பழக்குவது குறித்த ஆயாசம் . மனச்சோர்வை கொடுத்திருந்தது . அரசியல் குறித்த தெளிவான பார்வை மற்றும இலக்கு உருவாகி வந்தது இதற்கு பிறகுதான். தேர்தலரசியலை நான் எப்போதும் விழைந்ததில்லை . அதற்கு மாற்று திட்டமான அமைப்பை ஒருங்கிணைத்து , ஒருமுகப்படுத்தி அதிலிருந்து எழும் இயக்கத்தை அரசிலுக்கான விசையாக தொடுக்க 
எனக்கு பிறிதொரு துறை வேண்டி இருந்தது

அரசியலுக்கு முற்றும் புதியவர்களான அவர்களுக்கு ,அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருத்தியல் தேவை எழுந்தது. அதை அரசியலில் இருந்தே எடுக்க முடியும். ஆனால் அதில் அவர்களுக்குள் முரண்பாடுகள் எழும் வாய்ப்புகள் அதிகம். சமூகத்தை தொடர்புறுத்தும் அரசியலின்  எந்த செயலை செய்யும் ஒருவருக்கு நேரும் சிக்கலையும், அதிலிருந்து வெளியேறும் வழியையும்    போட்டுப்பார்க்கும் பயிற்சியாக பிறிதொரு தளம் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்  .  நீண்ட தேடலுக்கு பிறகு மிக மிக தற்செயலாககூட்டுறவு இயக்கம் வழியாக அரசியல் ஒருங்கிணைப்புஎன்கிற கருதுகோளை வந்தடைந்தேன். அது ஒரு சரியான மாற்று தளமாக இருந்தது

தேர்தலரசிலையும் அதன் மூலம்  அதிகாரத்தை பெற, நெறிகளுக்கு கட்டுப்படாத சமன்பாடுகள் மீது மனவிலக்கத்தை கொண்டிருந்தேன்  . தொடர்ந்தது நிகழும் சமன்படுகள் ஒருவரை எங்கு கொண்டு விடும் என யாராலும் கணிக்க இயலாது .நான் அதற்கானவனில்லை, அல்லது அது எனக்கானது இல்லைதேர்தலரசியல் முலம் பெரும் அதிகார அரசியலே  நிஜமான அரசியலின் முகம் என்றாலும், அதற்கான கோட்பாடுகள் , நெகிழ்வுத்தன்மை கொண்டது . கரவுப்பாதைகளின் வழியாக அரசியலை தனிப்பட்ட வெற்றியை நோக்கி நகர்வது . அது யாரையும் , யாருக்கும் உண்மையாக இருக்க விடாது என்பது மட்டுமின்றி அதில் ஈடுபடும் எவருக்கும்  அழுத்தமான தனி முகத்தை , அடையாளத்தை அது ஒருபோதும் கொடுப்பதில்லை  . 
சண்முகம் அந்த வளையத்தின் கட்டுப்பாட்டில் வராமல்  போனதற்கு , பிறிதொரு தளமான சுதந்திர போரட்ட களம் அவரை வடிவமைத்தது காரணமாக இருந்திருக்கலாம் . அது நெறியை , சமூக பிரக்ஞையை முன்னிறுத்தியது .சண்முகம் சுதந்திர போராட்டத்தின் வழியாக அரசியலுக்கு வந்தவர் .அவர் அரசியலில் நுழைந்த காலம் , நாடு சுதந்திரத்தை நோக்கிய பயணத்தின் இறுதி கட்டத்தில் இருந்தது . அவர் முழுமையாக அரசியலில் ஈடுபடத் துவங்கிய போது ,தில்லியில் நேரு தலைமையில் இந்திய தேசிய கொடி செங்கோட்டையில் ஏறியிருந்தது.

போராட்டக்காலத்தின் அடுத்த தலைமுறையை சேர்ந்தவர் என்பதால் , திராவிட இயக்கம் போன்ற அமைப்புகள்  அரசியலில்  காலூன்ற முயற்சித்து கொண்டிருந்தது. அந்த இயக்கங்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியது அவர்களின் களமாக ஒருங்கியிருந்தது .சுயராஜயம் பிறப்புரிமை”  என்கிற கருத்தியலை முன்வைத்து வெற்றி பெற்ற அதை நடைமுறைபடுத்த அடுத்த திட்டமிடலுக்கு நகர்ந்த போது  ,சுதந்திர இந்தியாவில் மக்களை ஒன்று திரட்ட வேறு பல கோட்பாடுகளின் தேவை எழுந்தது . மனித திரளை பண்பாட்டின் முனைக்கு கொண்டு வருவது பற்றியும்  மனம் அது எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒற்றை பரிமாணத்தை அடைகிறது என்பது இன்னமும் புரிந்து கொள்ள முடியாதது

1935ல் காங்கிரஸ் பிரிட்டிஷாரிடமிருந்து மாகாணசபைகளில் ஆட்சியமைப்பதற்கான உரிமையை வென்றெடுத்து தேர்தலரசியலில் நுழைந்ததும் அதிகார அரசியல் இந்தியாவில் ஆரம்பித்தது. ஆரம்பித்த கணமே அது காங்கிரஸை உடைத்தது. தேர்தலில் போட்டியிடும் பொருட்டு காங்கிரஸில் இருந்து வெளியேறிய சுயராஜ்யக்கட்சியின் பிளவின் பின்னடைவை காங்கிரஸ் தாண்டிவர காந்தியின் ஆறுவருடக்கால கடும் உழைப்பு தேவையாகியது. மனம்சோர்ந்த அவர் கிட்டத்தட்ட அரசியலைவிட்டே விலகி கிராமசேவைப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். தன்னைச்சூழ்ந்திருந்த அனைவரும் அதிகரா அரசியலின் வேட்பாளர்கள் என உணர்ந்த காந்தி அதற்கு முற்றிலும் அப்பாற்பட்டவர்களான ஒரு தொண்டர்படையை அமைத்தார். அந்த தொண்டர்களுடன் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். அவருடைய இலட்சியவாத அரசியலின் வீரர்களாக அவர்களே கடைசிவரைத் திகழ்ந்தனர்” என்கிறார் திரு.ஜெயமோகன் .அரசியலின் மூலம் அதிகாரத்தை பெற புதிய கருத்தியல்கள் எழுந்தது.