2022ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் எனது மணிவிழா அழைப்பிதழை அவருக்கு கொடுக்கு மனைவியுடன் சென்றிருந்தேன். மேடை முழு “ஜெ” நிகழ்வால் சரடுபோல கோர்த்திருந்த நடுவில் மாலை மாற்றிக் கொள்ள அருண்மொழிநங்கை மேடையில் ஏறி பின்னர் இறங்கி பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டார். அப்போது மேடையின் நிறைவில் உள்ள சிறு குறையாக எனக்கு பட்டவுடன் அதை புதுவையில் எப்படி நிகழ்த்த வேண்டும் என முழு பார்வையை உருவாக்கிக் கொண்டேன். என் மணிவிழாவில் இரண்டு முறை அவர்கள் மாலை மாற்றிக் கொண்டனர். ஒன்று அவர் எனக்கு மங்களநான் எடுத்துக் கொடுக்கும் முன்பு பின்னர் அவர் “வைணவங்கள்” தனியுரைக்கு முன்னர். அதுவே ஜெ பிறந்தநாள் நிகழ்வின் துவக்கமாக இருந்தது.
இரண்டாவது ஆண்டு அது தற்செயலாக நிகழ்ந்தது. தங்கை மகள் திருமணத்திற்கு முதல்நாள் அரங்கத்திற்கு உள்ளே சிறு மேடையில் “ஜெ” யின் குமரித்துறைவி புத்தகம் அனைவரும் இலவசமாக எடுத்துக் கொள்ள வழி செய்ய வேண்டும் என என் தங்கை சொன்ன போது அரைமனதுடன் அதற்கு உடன்பட்டேன். திருமண நிகழ்விற்கு மத்தியில் அது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்கிற ஐயம் இருந்தது மேலும் அந்த திருமணம் உயர் மேட்டுக் குடி மனபாவணையில் நிகழும் என ஊகித்திருந்தேன். புத்தகம் கிடைக்குமா என விஷ்ணுபுரம் பதிப்பபகம் நண்பர் மீணாவிடம் கேட்ட போது புத்துகம் இருப்பை சொன்னார். மற்றபடி அதை விழாவாக எடுக்க வேண்டும் என்பது கடலூர் சீனுவின் திட்டம். “குமரித்துறைவி” புத்தகம் அதுவரை எங்கும் வெளியிடப்படவில்லை என்பதால் அதை வெளியீட்டு விழாவாக நிகழ்த்தலாம் என்றார். அவரும் நண்பர் நாகராஜும் அதை மேடையில் வெளியிட்டார்கள்.
மூன்றாவது ஆண்டு விழா வெண்முரசு கூடுகை நண்பர் அம்ருதவல்லி அவர்களின் எண்ணம். 22 ஏப்ரல் அவர்களின் திருமணநாள் என்பதால் ஒரு சிறு பணமுடிப்பு இளம் எழுத்தாளர் ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு வருடம் அதை தான் தருவதாக சொன்னார். சில மாதங்களுக்கு முன்னர் அது பற்றிய பேச்சு வ்வந்த போதே அது எழுத்தாளர் அரிசங்கர் என முடிவு செய்திருந்தோம். “ஜெ” பிறந்தநாள் கொண்டாட்டம் 24.04.2024 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது