https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 29 நவம்பர், 2022

அடையாளமாதல் * அமரவியலாத பதவி *

 


ஶ்ரீ:



பதிவு : 650  / 840 / தேதி 29 நவம்பர்  2022



* அமரவியலாத பதவி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 46 .




 

முதலவரின் தனிச் செயலாளராக வில்லங்கம் பொறுப்பிற்கு வருவது பிற எவரையும் விட சண்முகத்திற்கே மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதை கடந்து அவரை வேண்டாம் என நினைக்க சண்முகத்திற்கு பல முக்கிய காரணம் இருந்தது. அது நிர்வாக ரீதியிலான சிக்கல். முதல்வரின் செயலாளராக அவர் அமராமல் போகும் வாயப்புப் பற்றி ஆரம்பத்தில் எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. காரணம் அவர் விலக்கி வைக்கப்பட கூடும் என நான் ஊகித்திருக்கவில்லை. காரணம் சண்முகம் தன்மனநிலை சார்ந்த முடிவுகளை அதற்கு உகக்கும் ஒற்றை காரணத்திற்காக செய்வதில்லை. பொது நிகழ்வில் தன் தனிப்பட்ட விருப்பத்தை முன் வைப்பதில் பெரிய தயக்கம் கொண்டவர். நானும் வில்லங்கமும் அந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியைற்பு நிகழ்விற்கு நாள் குறித்து பின்னர் துணைநிலை ஆளுனர் மாளிகையில் முன் தோட்டத்தில் மேடை அமைக்கும் இடம் தேர்வு செய்ய ஆளுனர் மளாகைக்எஉ சென்ற போது அங்கு மொத்த அமைச்சரவையும் பதவியேற்க இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆளுனர் மாளிகையுள்ளே நிகழ்த்த இடம் போதாது என்பதால் வெளியே நடத்த இடம் ஒருங்கி இருந்தார்கள். சுமார் 1500 பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என கணக்கிட்டிருந்தோம். சட்டசபையில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு அமைச்சர்களின் அறை சாவிகளை பெற்று போகச் சொன்னார்கள். சாவிகளைப் பெற சட்டமன்றம் செல்லும் போது பழைய நினைவுகள் எழுந்தன. 1994ல் அன்றைய முதல்வர் வைத்திலிங்கம் பாலனுக்கு சாதகமாக இளைஞர் காங்கிரஸை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்க சிபாரிசு செய்த போது எழுந்த மன உளைச்சலை இப்போது நினைவு கூர்கிறேன். பிரச்சனை முதல்வர் தலையிட்டு சமாதானம் அவரது அலுவலகத்தில் நிகழ்ந்தது.பொருந்தாத ஒப்பந்தத்திற்கு பிறகு மிகுந்த மனக் கொந்தளிப்பில் அவரது அறையைவிட்டு வெளிவந்தபோது எழுந்த பெரும் நிலையழிவையின் அடிப்படையில் இனி எனக்கான உரிய இடம் அமையாமல் சட்டமன்றத்தினுள் நுழைவதில்லை என்கிற வெஞ்சின் எடுத்திருந்தேன். ஐந்தாண்டுகள் சட்டமன்றத்தினுள் நுழையவேயில்லை. அந்த வெஞ்சினம் ஒரு வேடிக்கை போல

அதற்கு என்னிடம் எந்த அடிப்படை பலமோ எதிர்காலம் குறித்த தெளிவான திட்டமோ இல்லை அன்று அது ஒரு ஆற்றாமை மட்டுமே. அனைவராலும் கைவிடப்படப்படும் ஒரு சூழலில் நிராதரவாக விடப்பட்டவனின் குமுறல்இன்று இதோ சட்டமன்ற செயலாளரால் அழைக்கப்பட்டு நான் அந்த அறை சாவிகளை வாங்க அந்த சட்டமன்றத்தினுள் நுழைகிறேன். காலம் அதன் கனிவுவுறுதல் குறித்த  இனம்புரியாத அந்த எழுச்சியை வாழ்கையில் பெரும் நம்பிக்கையை கனவு போல உருவாக்கிய நிகழ்வு இது. ஆழ்மனதின் இடைவிடாத இறைஞ்சல் தெய்வங்களால் கேட்கப்படுகின்றது போலும் அது ஒரு காலத்தில் அதற்கு பதில் சொல்லுகிறதுஅதை கேட்டும் இடத்தில் நம்மை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நமக்கு நாமே விதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பல சந்தர்பங்களில் எனது கனவுகள் அப்படியே நிகழ்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் காலம் அல்லது எனது மனத்தால் நான் அங்கிருந்து வெளியேறியிருப்பேன் . ஆனால் நான் நினைத்தது அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. அது ஒருவகையில் மனநிறைவை அளிக்கிறது


அமைச்சரவை பதவியேற்ற மறுநாள் சட்டமன்றத்திற்குள்  நுழைந்த போது வில்லங்கம் அங்கு இல்லாமையை அறிந்து கொண்டேன். தனி செயலாளராக காரைக்கால் நெடுங்காட்டைச்  சேர்ந்து பன்ணீர்செல்வம் நியமிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிய்தது . அது ஒரு தீயூழ் என நினைத்தேன இறுதியில் அதுவே நிகழ்ந்தது மாறனிடம் தொடர்பு கொண்டு பேசிஎன்ன நடக்கிறது என கேட்ட போதுசற்றுப் பதட்டமடைந்தான் நேரில் வந்து சொல்லுவதாக் கூறினான். நேரில் சந்தித்த போது என்னிடம் மாறன் வில்லங்கம் பற்றி எதிர்மறையாக சொன்ன அனைத்து விஷயங்களும் மறுக்க முடியாத நிஜம். எனக்கு அவன் சொன்ன விஷயங்கள் எனது நிலைப்பாடும் அவனக்கு மிக அனுக்கமானது. ஆனால் அரசியலில் அதிகாரப் பதவிக்கு திறமை முதன்மைத் தகுதி அதை விருப்பு வெறுப்பினால் முடிவு செய்வதில்லை. முதல்வராக வந்திருக்கும் சண்முகத்தின் வயது மற்றும் அரசு நிர்வாகத்தில் அவருக்கு இருந்த நீண்ட இடைவெளி அரசு நிர்வகத்தில் சமகால யுக்தி அதில் உள்ள இளைய அதிகாரிகளின் அரசிலுக்கு ஈடு கொடுப்பது போன்றவை உருவக்கும் சிக்கலை நான் மாறனுக்கு எவ்வளவு எடுத்துக் கூறுயும் அதை அவன் ஏற்பதாக இல்லை. தனது செயல்பாடுகளை வில்லங்கம் முடக்கிவிடுவார் என்கிற ஒற்றைபடை சிந்தனையால் அஞ்சினான். இந்த விஷயத்தில் காரைக்கால் நெடுங்காடு முருகையன் மாறன் கரூர் பாஸ்கர் என மூவரும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை துவங்க்கி வைத்தது நிச்சயமாக மாறனாக இருக்க வேண்டும். முருகையன் மாறனைவிட வில்லங்கத்தின் மீது கடும் குரோதம் கொண்டவர் ஆனால் சண்முகத்திடம் பேசும் ஆற்றலற்றவர். மாறன் அதை தலைவரிடம் நேரடியாக சொல்வதை தவிற்து கரூர் பாஸ்கரை பேச வைத்திருக்க வேண்டும். கரூர் பாஸ்கர் இதுபற்றி பேசி சண்முகத்தின் மனதில் அந்த மாற்றத்தை கொண்டுவந்திருந்தார் . மாறன் மற்றும் முருகையான் அதிற்கு பின்னால் இருப்பது மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதுஅரசு அதிகாரத்தை தன்னை மிஞ்சி வில்லங்கம் செல்லக்கூடும் என்பது குறித்த சண்முகம் முன்னமே கவலை கொண்டிருந்தார் அவருக்கு முக்கியத்துவமில்லாத பதவி கூட கொடுக்க முடியாது என்பது அடிப்படை.   


1996 ஆட்சி மாற்றத்தில் வில்லங்கத்தின் பங்கு இருந்ததை அறிந்த திமுக முதல்வர் ஜானகிராமன் கோபம் கொண்டிருந்தார். வில்லங்கத்தை மாஹேவிற்கு மாற்றம் செய்து அவர்மீது துறை ரீதியான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்த நிர்பந்து அங்கேயே அவர் கணக்கை முடிப்பதாக திட்டம். அவர் தனது அரசு வேலை மூலம் கிடைக்க வேண்டிய அத்தனை பலன்களையும் கிடைக்கவிடாமல் செய்யும் முயற்சிகள் துவங்கி

கொண்டிருப்பதை வில்லியங்கம் தனது அரசுத்துறை நண்பர் மூலம் அறிந்து கொண்டார் . மாஹிக்கு இடமாற்றம் செய்தபோது அமைதியாக அங்கு சென்று ஓரிரு மாதங்களில் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்தார். அரசு அவரை அவ்வளவு லேசில் விடுவாத இல்லை மிக நீண்ட அரசின் இழுபறிக்கு பின்னர்  வேலையில் இருந்து விலக அனுமதித்தது அந்த அரசு. சண்முகம் அவர் அரசு பதவியில் இருந்து விலகியதை காரணம் சொல்லி அவருக்கு செயலாளர் கொடுப்பதற்கில்லை என சொல்லி அனைவரையும் திகைக்க வைத்தார்.


வியாழன், 24 நவம்பர், 2022

மணிவிழா - 35

  

ஶ்ரீ:


மணிவிழா - 35


24.11.2022



* அழகியல் *





எனது அடிப்படை தேடுதலை சொல்லுதல் அவரிடம் எந்த புரிதலையும் ஏற்படுத்தாது. அது தனி தளத்தில் நிகழ இருக்கிறது. விழாக்குழுவின் செயல்பாடுகளை இரண்டாக பிரித்திருந்தேன். ஒன்று பொது தளத்திலும் பிறிதொன்று சம்பரதாய நெறியிலும் நிகழும். இரண்டையும் இணைத்து நிர்வகிக்கும்காரிய கமிட்டியில் திட்டங்கள் அந்தந்த தலைவர்களால் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறபடும். பின்னர் அதற்கு தேவையான நிதிகாரிய கமிட்டியால்அளிக்கப்படும். தனிப்பட்டு நிதி திரட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். அமைப்பு எளிதில் பலவீனமடைவது ஊழல் குற்றச்சாட்டுகளால். அதுவே முதலில் தவிர்க்கப்பட வேண்டியது. பல சமூக நலன் மற்றும் ஆன்மீக செயல்பாடுகள் கோவில் திருவிழாக்கள் போன்றவை  தொழிலதிபர்களால் கோடிக்கணக்கில் செய்யும் நிதி உதவியை சார்ந்திருக்கிறது . இரண்டும் மிகச் சரியாக ஒரு புள்ளியில் இணைந்தால் மட்டுமே அந்த பயணம் நீண்ட தூரம் செல்ல முடியும். அந்த நிதி பல மனநிலைகளில்  இயக்கங்களுக்கு அளிக்கப்படுகிறது. எல்லாம் தர்ம சிந்தனையை மையப்படுத்தியது என்றாலும் கொடுப்பவருக்கு மரியாதையை அந்த நிகழ்வுகளின் வழியாக பெற்றுத்தந்து அவர்களின் உதவியை தக்க வைத்துக் கொள்வார்கள். அது ஒரு நுண்ணிய ஆடல் மிக கவனமாக செய்ய வேண்டியது


அதே சமயம் அவருக்கு விளக்கும் போது என் சார்பில் சில உறுதிமொழிகளை கொடுக்க எண்ணியிருந்தேன். சம்பிரதாய கமிட்டி அதன் விஷயங்கள் நம்பிக்கையுள்ளவர்களால் தலைமை ஏற்கப்பட்டு எந்த சமரசமும் இல்லாமல் நிகழும். பொதுத்தளத்தில் நிகழவேண்டியது குறித்து இன்னும் முழுமையான கருத்துரு உருவாக்கம் முழுமையடையவில்லை. அதன் மைய நிகழ்வுதிறந்த அரங்கம்”. இதுவரை யாரும் முயற்சிக்காதது. இன்று மையக் கருத்து வரைவாக ஏற்கப்பட்டிருக்கிறது. அதன் துவக்கம் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு நடைபெறும். இப்போதைக்கு வைணவ மரபான நிகழ்வுகள் முதல் நிலையில் துவங்கப்படும்


நிர்வாக ரீதியான மரபான வைணவர்களுடன் நான் எதிர் கொள்ளும் சிக்கலை கடக்க ஏற்படுத்திக் கொண்ட முயற்சிக்கவே அவரை சந்திக்க சென்றேன். அதே சமயம் வைணவ மரபை பற்றிய எந்த எதிர் கருத்தும் எனக்கு இல்லை. ராமாநுஜரும் நம்மாழ்வாரும் எனக்குள் இளமையாக நம்பிக்கையாக இருக்கின்றனர். அந்த நம்பிக்கை குறித்த எந்த விவாதமும் யாருடனும் இல்லை. அவரிடம் மட்டுமின்றி பிற எவருடனும் அது குறித்து தர்க்கிக்க வேண்டிய தேவை எனக்கில்லை . அதில் அவர்களை போன்றவர்களே ஆகச்சிறந்தவர். அந்த ஞானம் அமைப்பிற்கு தேவை. ஆனால் அவர்களின் பிரசாரம் நான் அறிந்து அவற்றை நடைமுறை படுத்த முயலும் செயல் கடந்து கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. அது செயல்படுத்தப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடில்லை.


ஆச்சார அனுஷ்டானங்கள் கடைபிடிக்கும் ஒருவர் தனிமனித உரிமை, சுதந்திரம்,ஜனநாயக பண்பை வெளியே தள்ளிவிடுகிறார். அந்த அதிகாரம் மரபிலிருந்து தனக்கு வருவதாக நினைக்கிறார். பிற மனிதர்களின் மரபை சித்தாந்தத்தை அனுஷ்டான ஆச்சார வாதம் கொண்டு காட்டி மறுப்பதை எந்த குற்றவுணர்வும் இன்றி செய்ய அவர்களால் முடிகிறது. அது மெல்ல அவர்கள் தங்களை முன்வைத்தபடி மனித நேயத்திற்கு எதிரானவராக திருப்பி விடுகிறதோ என்கிற அச்சம் எனக்குண்டு. அவர்கள் முப்பது வருடங்களாக பிறரை தொடர்ந்து வலியுறுத்தி வந்த பல ஆச்சார அனுஷ்டானஙகளை வயோதிகம் குடும்ப சூழல் மற்றும் நோயின் கடுமை காரணமாக விலக்கி வைக்க நேர்ந்ததை பார்த்து அதிர்ந்திருக்கிறேன். அதை மன மாற்றம் என எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவை அந்த சூழல் உருவாக்கும் நெருக்கடியால் நிகழும் மாற்றம். ஆனால் எண்ண அளவில் அவர்களிடம் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை


முப்பது வருடத்திற்கு முன்னால் அந்த சூழலில் அவர்களிடம் பலர் பேசிய கருத்தை பார்க்க மறுக்கும் போக்கை கடந்து சென்றவர்கள். இன்று நிதர்சனமாக கண்களுக்கு காட்சியாவது இந்த கால் நூற்றாண்டில் உலகியலில் நடந்து வரும் வேகமான பொருளியல் சார்ந்த தன்னிறைவு. அதனால் உருவாகும் உறவு மேலான்மைச் சிக்கல். மனவழுத்தம் கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் உருவாகி வரும் மாற்றத்திற்கு முன்னால் எந்த தத்துவங்களுக்கும் பொருளில்லை என்கிற இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று அதனுடன் உரையாடக் கூடுமென்றால் அது அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றால் மட்டுமே இயலும் என நம்புகிறேன் . ஒரு வகையில் விழாக் குழுவின் செயல்பாடுகள் அதை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டன. மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றத்தை அவர்கள் சீரழிவாக பார்கிறார்கள் பதற்றமடைகிறார்கள் அதன் மீட்சி குறித்து சிந்திக்கிறார்கள். ஆனால் அவை முரணியக்கங்கள். புதியதாக ஒன்றை பிறப்பிக்க நிகழும் ஒன்று.

புதன், 23 நவம்பர், 2022

மணிவிழா - 34

 


ஶ்ரீ:


மணிவிழா - 34


23.11.2022



* தெளிவென அறிவது *







புதுவை வைணவ மாநாட்டு அமைப்பின் ஆரம்ப கால நிர்வாகிகளில் ஒருவராக என் தந்தை பொறுப்பேற்ற காலத்தில்காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமிதலைமையில் புதுவை ராமாநுஜ நாவலர் மன்றம் துவக்கப்பட்டட போது. யானை வந்து வரவேற்பில் நிற்க ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட மூன்று நாள் நிகழ்வு என கேள்விப்பட்டிருக்கிறேன். அது நடந்து 40 வருடமாகிறது. இப்போதும் காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் வருடம் ஒரு முறை நடைபெறகிறது ஐம்பதிற்கும் குறைவானவர்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு சிறுத்து ஒரு சடங்கு போல நிகழ்ந்து முடியும். பின்னர் அதுவும் தேய்ந்து அரை நாள் நிகழ்வாகிப் போனது. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு துவக்க விழாவில் ஆயிரக்கணக்காவர்கள் கலந்து கொண்டது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக வைணவமாநாடு பின்னர் ஜெயராம் கல்யாண மண்டபத்தில் நடத்த ஆரம்பித்த பிறகு கூடுகை எண்ணிக்கை எழுநூறைத் தாண்டியது


புதுவையில் அதுவரை மரபு சார்ந்து நிகழ்ந்த வைணவ மாநாடுகள் பல வருடங்களாக தனிப்பட்ட நிதி உதவிகளை சார்ந்து நடத்தப்பட்டது .வைணவ மாநாடு போன்றவைகளின் நிதி உதவி மிக குறுகிய வட்டத்தில் இருந்து பெறப்படுவதால் உருவாகும் போதாமையை களைய வேண்டும் என முதலில் திட்டமிட்டிருந்தேன். அது சம்பந்தமான அனைத்து முன் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நீண்ட நாட்கள் எடுத்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்திய பின்னர் விழா துவங்கு ஒரு வாரமே இருக்கும் சூழலில் மரபான வைணவ அறிஞர்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன்


சம்பிரதாயத்தின் நவீன நோக்கு பற்றிய கருத்தியலுக்காக அந்த இயக்கத்தை பயன்படுத்த நினைத்தது அதன் தற்போதைய போக்கை என் ஆழ்மனம் நிராகரிப்பதை உணர முடிந்தது காரணமாக இருக்கலாம் . ஆனால் அவை வெறும் உணர்வு மட்டும் தானா அல்லது பொருட்படுத்தக்க பின்புலங்களை கொண்டதா என அறிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன். விழா குழுவில் புரட்சி செய்வதல்ல எனது நோக்கம் புரட்சியில் எனக்கு நம்பிக்கையில்லை. அவை குறிப்பிட்ட கால, பொருளை,நிராகரிப்பை சார்ந்தது பற்றி எரிந்து பிறரை ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஈர்ப்பது . ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது என புரிந்திருந்தேன். எனது எண்ணம் குறித்த உரையாடல் நிகழ வேண்டும் என நின்னத்தேன். விழாக் குழுவின் நோக்கமும் அதன் மைய பேசு பொருளும் மரபான தத்துவம் குறித்து ஆழமான வெளிப்பாட்டை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தேன். வைணவ அறிஞர்களை புறகணிப்பது எனது நோக்கமல்ல. குழு நிர்வாகத்திற்கு அடிப்படைகளை செய்து முடித்த பின்னர் முக்கிய வைணவ அறிஞர்களை உள்ளே கொண்டுவரும் இடம் வந்து சேர்ந்ததும் அவர்களில் முதன்மையான பெருமாள் ராமாநுஜத்தை சந்திக்க முடிவு செய்திருந்தேன். அனைவருடனும் முரண்பட்டாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக சலிக்காத செயல்பாட்டாளராக அவர் இருந்ததிருக்கிறார். அதற்குறிய இடம் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்


பெருமாள் ராமாநுஜத்தை சந்திக்க செல்லும் முன்பு என்னை மிக கவனமாக தொகுத்துக் கொள்ள முயன்றேன். அவர் என்னென்ன முன்வைப்பார் என தெரியும். கடந்த பல ஆண்டுகளாக அதை தொடர்ந்து வலியுறித்தி வந்தவர் . இப்போது வயாதிகம், கறார் போக்கு காரணமாக பிறரால் கைவிடப்பட்ட அனுபவம் போன்றவை அவரை சிறிதளவாவது மாற்றி இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் அவருள் நிகழ வேண்டிய மாற்றம் எங்கு என்பதை பற்றியே எனது எண்ணம் இருந்தது. உருவாக இருக்கும் விழா குழு ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமாக நிகழும் போது அதன் இரண்டு கூறு பற்றி அவருக்கு தெளிவு படுத்த வேண்டும்ஒன்று பொது தளத்திலும் பிறிதொன்று சம்பரதாய நெறியிலும் நிகழும் மாற்றம் . இரண்டையும் இணைத்து நிர்வகிக்கும்காரிய கமிட்டியில் திட்டங்கள் அந்தந்த தலைவர்களால் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறபடும். பின்னர் அதற்கு தேவையான நிதிகாரிய கமிட்டியால்அளிக்கப்படும். தனிப்பட்டு நிதி திரட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். அமைப்பு எளிதில் பலவீனமடைவது ஊழல் குற்றச்சாட்டுகளால். முதலில் தவிர்க்கப்பட வேண்டியது. அதே சமயம் எதையும் அவருடன் தேவையற்று தர்க்கிக் விரும்பாமல் மிக மென்மையாக என் தரப்பை வைக்க விரும்பினேன்.