https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 15 நவம்பர், 2022

மணிவிழா 26

 



ஶ்ரீ:


மணிவிழா - 26


15.11.2022



* பிரமாண்ட துவக்கம் *



பெரும் ஆளுமைகளிடம் புதிய செயல் திட்டங்களை பேசும் வாய்ப்பு கிடைப்பதில்லை . அபூர்வமாக கிடைத்தால் அதை விளக்க மிகச் சிறிய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். முழு திட்டத்தையும் வார்த்தைகளால் ஐந்து அல்லது ஏழு வரிகளில் சொல்ல வேண்டும் என பழக்கப்பட்டிருந்தேன். சொற்களை விட திட்டத்தின் முன்வரைவு நாம் நினைப்பதை மிக தெளிவாக வரையறை செய்து காட்டிவிடும் என்பதால் எந்த திட்டம் குறித்தும் அது பற்றிய தெளிவான முன்வரைவை அளிக்க முயல்வேன்.அந்த பழக்கத்தை எனக்கு கற்றுக் கொடுத்தவர் எனது அரசியல் குரு புதுவை முன்னாள் முதல்வர் சண்முகம். அவரிடம் எதையும் உரையாடி விவாதித்து அவரை தெளிவுபடுத்தினால் மட்டுமே அவற்றை அரசியலாக முன்னெடுக்க முடியும். ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமால்லாதது. 60 வருட அரசியல் அனுபவங்களை கொண்ட ஒருவரின் மனத்தை வெல்வது எளிதில் இயல்வதில்லை. நான் அதை வெல்ல புதிய வழிமுறை ஒன்றை கண்டடைந்தேன்






எந்த புதிய அரசியல் திட்டமாக இருந்தாலும் அதன் வடிவத்தை முழுமையா முன்வரைவு படுத்தி அவர் முன் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். அவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அதன் துவக்கத்தையும் நிறைவையும் கறாரா சொல்லுபவையாக அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியவையாக அவை தன்னியல்பில் முடிவை வெளியிடுபவையாக இருக்கும் . அதை ஆலோசனை கட்டத்திலேயே ஒப்பு நோக்க சிறந்ததாக வடிவமைக்கப் பட்டிருக்கும்.


அரசியலில் எனது பல புதிய முயற்சிகளை அவரின் ஆசியோடு வென்றதற்கு நான் அமைத்துக் கொண்ட வழிமுறை அதுஎன்பது திட்டங்களை செயல்வடிவமாக்கி அதை எழுத்து பூர்வமாக அவரிடம் கொடுக்கும் போது நான் நினைப்பவை அங்கு வார்த்தைகளுக்கு இடையே மறைந்திருக்கும். அவர் அதில் செய்ய முயற்சிப்பது திருத்தம் மட்டுமே. மையக் கருவை கைவைக்க முடியாதபடி பிண்ணப்பட்டருக்கும்.


நிர்வாகத்திற்குள் வேளுக்குடி ஸ்வாமி வருவது விழா குழுவின் உச்சகட்ட அங்கீகாரம். அவரிடம் நேரடியாக பொறுப்பேற்க சொன்னால் நிச்சயம் மறுத்திருப்பார். நான் வழக்கம் போல எனது யுக்தியில் இரு நாட்களில் கூட இருக்கும் முதல் செயற்குழு கூட்ட அழைப்பிதழின் நகலை அவருக்கு காட்டியிருந்தேன். அதற்கு காரணம் அவர் முதல் முறையாக விழா குழு சார்பில் நடைபெறிருக்கும் மூன்று நாள் உபண்யாசத்தில் கலந்து கொள்ள புதுவை வந்திருந்தார். அவர் புதுவைக்கு வரும் போதே விழாக் குழு பற்றிய தவறான தகவலை அவருக்கு சொல்லியிருக்க வேண்டும். அது பெருமாள் ராமாநுஜம் என பின்னர் புரிந்தது







பெருமாள் ராமாநுஜம் என்னிடம் உரையாடும் போது விழா குழு பற்றிய முழு விபரத்தையும் அதன் அமைப்பு முறை மற்றும் செயல்பாடுகள் குறித்து மிக விரிவாக சொல்லியிருந்தேன். வழக்கமாக அவர் பேசும் மரபான ஆச்சார விஷயங்களை பிற சம்பிரதாயங்களை உள் கொண்டு வர தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். நிறைய தேய்வழக்காகிப் போன பல விஷயங்களை அவர் முன் வைக்க அவை எங்கு பேணப்பட வேண்டும் என்பதை வரையறை செய்து பிற இடத்தில் அவற்றை கொண்டு வருவது பற்றிய அவரது எண்ணத்தை துவக்கத்திலேயே நிராகரித்திருந்தேன்.  


நான் அவரிடம் கேட்ட ஒரு கேள்விஇன்றைய நவீன உலகில் குறுகிய மத அடையாளங்களுக்கு என்ன பொருள். அதை கடந்து எல்லா தரப்பினரையும்ராமாநுஜரைஏற்க வைத்து அதை பிரமாண்டமான விழவாக அதை முன்னெடுப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. அதற்கு பெருந்திரளான மக்களின் பங்கேற்பும் நிர்வகிக்கும் சக்தியுள்ள அமைப்பும் அதற்கு தேவையான பொருளியல் உதவியை எங்கிருந்து கொண்டு வருவீர்கள். சரி நீங்கள் சொல்லும் அத்தனை விதிகளுக்கு உட்பட்டு நான் அந்த விழா குழுவை அமைக்கிறேன் என வைத்துக் கொண்டால் அதற்கு முதலில் திறமையான அர்பணிப்புள்ள நிர்வாகிகள் பத்து பேராவது வேண்டும். உங்கள் இத்தனையாண்டு செயல்பாடுகளில் ஒரு பத்து பெயரை சொல்லுங்கள்என்றேன். ஓரிருவரை கூட அவரால் பரிந்துரைக்க முடியவில்லை. இவர்களின் உலகம் எதார்த்தை உள்வாங்காது எங்கோ மேகங்களில் இருந்தது. அந்த கனவே வழக்கொழிந்து போன ஒன்று என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்த சிக்கலை தெரிந்தே நான் பெருமாள் ராமாநுஜத்தை சந்திக்க சென்றிருந்தேன்


ஒரு முறை வேளுக்குடி ஸ்வாமியிடம் தனிப்பட்ட உரையாடலின் போது அவர் தனது மனக் குறையை பதிவு செய்திருந்தார். வருடத்திற்கு ஐந்து லக்ஷம் பேரை சந்திக்கும் அவரால் செய்பாட்டில் ஆர்வமுள்ள நூறு பேரை கண்டடைய முடியவில்லை என்றார். எனக்கது ஆச்சர்யத்தை தரவில்லை கள எதார்த்தம் அது. இங்கு யாரையும் சந்திக்க இயலாதவர்கள் மரபின்  தேய்வழக்கங்களை பிடித்துக் கொண்டு கடந்த காலத்தை நோக்கி திருப்பி அமர்ந்திருப்பதை அறியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்