https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 14 நவம்பர், 2022

மணிவிழா. 25. அளித்த இடம்

 



ஶ்ரீ:


மணிவிழா - 25


14.11.2022



* அளித்த இடம்  *



ராமாநுஜர் ஆயாரமாவது ஆண்டு விழாக் குழுவின் முதல் அதிகாரப்பூர்வ செயற்குழு கூட்டத்திற்கு வேளுக்குடி ஸ்வாமி தலைமை ஏற்றது அப்போது உருவாகி வந்த ஒருவித அரசு சூழ்தல் கணக்கு. தென்னிந்திய ஆன்மீக உலகில் வேளுக்குடி ஒரு உச்ச நட்சத்திரம். அதுவரை யாரும் அடைந்திராத இடத்தை தனக்கென கொண்டவர். எளிதில் அணுக முடியாத தனித்த செயல்முறைகளை கொண்ட ஆளுமை


பொதுவாக அந்த இடத்திற்கு வரும் ஆளுமை தான் சந்திக்கும் அனைவரிடமும் தன்னை பொதுவாக முன் வைப்பார் . அவர்களுக்கிடே நிலவும் அடுக்குமுறை புரிந்து கொள்ள வேண்டிய அவசியமின்மை காரணமாக சூழலை, ஆளுமைகளை புரிந்து கொள்வதில் உதாசீனர்களாக இருப்பார்கள். என்ன சொன்னாலும் ஒரே மாதிரியான புண்ணகையுடன் தலை அசைத்தபடி கடந்து சென்றுவிடுவார்கள். அவர்கள் கண்களுக்கு வேறுபாடே தெரிவதில்லை . யாரையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் . தங்களை பாதுகாத்துக் கொள்ள பல வித உள் வெளி வளையங்களை உருவாக்கி அதன் மத்தியில் இருப்பார்கள் . அந்த வளையங்களை கடந்து செல்வது எளிதல்ல


அதே சமயம் யாரையும் சார்ந்திராது சுயமாக செயல்படும் தனியாளுமைகளை மிக மிக அரிதாகவே பார்த்திருக்கிறேன். அவர்களே வாழ்க்கை பற்றி பெரும் நம்பிக்கையை கொடுப்பவர்கள். அத்தகைய ஆளுமைகள் சமரசமில்லாத தலைமை பண்பை கொண்டவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன்புதுவை முன்னாள் முதல்வர் சண்முகம், எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் வேளுக்குடி ஸ்வாமியை அப்படிப்பட்டவர்கள் . அரசியல் சரிநிலைகளை ஒதுக்கி அந்த இடத்தில் இருந்து கொண்டு தங்கள் துறை பற்றி சந்தேகத்திற்கு இடமில்லாதபடி வாழ்ந்து காட்டுகிறார். அதுவே அவர்களை பின் தொடர்பவர்களுக்கு பெரும் நம்பிக்கை அளிப்பது





வெறும் சமரசங்களினாலான அரசியலில் கூட தனது ஆளுமையை சிதைக்கும் எதையும் ஏற்காதவர் சண்முகம் இரண்டாவதாக வேளுக்குடி ஸ்வாமி. மூன்றாவதாக எழுத்தாளர் ஜெயமோகன். இந்த மூவரையும் இணைக்கக் கூடிய புள்ளி சிந்தனை வாழ்கை நிலைப்பாடு என அனைத்தையும் ஒன்றென கொண்டவர்கள்


வேளுக்குடி தனதுகிஞ்சித்காரம்அறக்கட்டளை தவிர பிற எதிலும் எந்தப் பொறுப்பும் வகிக்க விரும்பாதவர். அவர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவில் துணைத்தலைவராக வந்தது நான் உருவாக்கிய ஒருவித நுண்ணிய செயல்பாடு. இருந்தும் அதை அவர் மிக எளிதாக மறுத்திருக்க கூடும். ஆனால் ஆயிரமாவது ஆண்டு துவக்க விழா மிக செறிவாக நடத்தேறிய முறை அவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும்


பொது நிகழ்வு நடத்துவற்கு பல வாய்ப்புகளை காலம் அருளியது. அந்நிகழ்வுகளை நிகழ்த்தும் முறைகள் பிறரை சென்று தொடாத புதிய எனது முயற்சிகள் மூலம் நான் பலரின் கவனத்தை ஈர்ப்பதை அறிந்திருக்கிறேன் . அதை வலிந்து அப்படி செய்வதில்லை. செய்வதை முழு ஈடுபாட்டுடன் செறிவாக செய்ய முயற்சிப்பேன். புதிதாக ஒன்றை உருக்கும் போது மைய கருதுகோளுக்கு பலம் சேர்க்கும் அதன் பக்கவாட்டில் உள்ள அனைத்தையும் பலப்படுத்துவது எனது பாணி. அதேசமயம் சமரசமில்லாது அதை நடைமுறைக்கு உகந்ததாக வடிவமைத்துக் கொள்வேன். பிறர் செய்ய துணியாத கற்பனையை அதன் அடுத்த கட்ட பாய்சலை அதன் உள்ளீடாக வைத்திருப்பேன். சற்று கூர்ந்து பார்க்கும் எவருக்கும் அந்த வித்தியாசம் தெரியும். எதை இயற்றினாலும் அது அதன் உச்சத்தை தொடுவதாக நினைத்துச் செய்கிறேன் அதை என்னுடை இயல்பாக பலமாக எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அனைத்தையும் செறிவாக முன்வரைவுடன் தீர்க்கமாக கட்டமைத்த பின்னர் செயலில் இறங்குவது எனது வழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்