https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 22 நவம்பர், 2022

மணிவிழா 33

 ஶ்ரீ:


மணிவிழா - 33


22.11.2022



* மெய்மை  *






வைணவ கோட்பாட்டை மதக் கல்வியாக பெற்றவர்கள் அதன் ஈர்பில் ஈடுபட்டு தங்களை பல கட்டுப்பாடுகளின் கீழ் வைத்துக் கொள்வது உடனடியாக நிகழ்ந்து விடுகிறது. அது அவர்களால் சமூகத்தில் கலந்து பழகும் சூழலை உருவாக்கிக் கொள்ள முடியாமலாகிறது. அனைத்திலிருந்தும் சொல்லளவில் விளகி ஒருவகைவானப்பிரஸ்தம்போல வாழ நினைக்கிறார்கள். ஆனால்  உலகியல் நெருக்கடிகள் வந்து மோதும் போது தளர்வடைகிறார்கள். அவற்றை எதிர் கொள்ளும் கருவிகள் உபதேசங்கள் தத்துவங்கள். அவற்றை வாழ்வில் போட்டுப் பார்க்க சிறிது கற்பனை தேவையாகிறது. அவர்கள் கல்வி கற்பனையை முற்றாக நிராகரிக்கிறது. எனவே மனம் உடைந்த மேகம் போலாகிறது


பெயரளவில் விரக்தி பேசுவது மட்டுமே கற்ற கல்வியில் இருந்து பெற்றது என பேசும் பலரை பார்க்கிறேன். அவர்கள் செய்வது வெறும் மேற்கோள் அரசியல். தங்களின் வாழ்கை செய்பாடுகளை அவற்றிற்கு வெளியே நிறுத்திக் கொள்வார்கள். இரண்டையும் ஒரு போதும் கலக்காத எண்ணையும் தண்ணீரையும் போல.அதுவே அவர்களுக்கென அமைத்துக் கொண்ட மிக விரிவான வட்டத்திற்குள் செயல்படுபவர். அங்கும் கூட அவர்களுக்கே உரிய வம்புகளும் சர்ச்சைகளும் உண்டு. மிக பிரபல நகைச்சுவையாக சொல்லப்படுவதுவைணவத்தில் பத்து பேர் கூடி இருந்தால் பதினோரு கோஷ்டி இருக்கும்என்று


விசிஷ்டாத்வைதம் அன்றாட வாழ்க்கை அல்லது ஆன்மீகம் சார்ந்த நெறிநோக்கு அல்ல. அது ஒரு தரிசனம், அந்த தரிசனத்தின் விரிவான தத்துவ விளக்கத்தை ஒரு மனிதன் மிக சுதந்திரமாக தனது வாழ்கையில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்ஜெ”. இலக்கிய வாசிப்பு அனுபவம் மட்டுமே ஒருவருக்கு அதை கொடுக்க முடியும் என்பதை என் தந்தை வழியாக அறிகிறேன் . அதனால் ஒரே குருவின் அருகமர்ந்து பாடம் கேட்டவர்களுக்குள் நேர எதிர்கருத்து உருவாக வாய்ப்பளித்தது. அக்கல்வியில் தானாக உணர்ந்து தெளிந்து அதில் அமையவேண்டும் . அதை ஒரு நூலில் அல்லது உபண்யாசங்களில் இருந்துஅறிந்துகொள்வதுமுற்றிலும் பிழையாகும் வாய்ப்புள்ளது. காலக்‌ஷேப முறை என்பது ஒரு நீண்ட நாள் தொடர் கற்றல் முறை. குருவின் அருகமர்ந்து கற்கும் மிக குறைந்த எண்ணிக்கையினர். துரதிஷ்டவசமாக எடுத்துக் கொண்ட பேசு பொருளின் மையத்தை விதந்தோதி சொல்லிச் செல்லுதல் வழிமுறையை தவறுதலாக புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அதில் கராறாக சொல்லப்படுபவை ஆச்சாரங்களை. நவீன வாழ்கைக்கு தேவையான உயர் தத்துவம் குறித்த புதிய பார்வைகளை அவர்களுக்கே உரிய சிடுக்குகள் காரணாக அவற்றை ஒருபோதும் முன்வைப்பதில்லை.


மதம் இரண்டு வழிகளில் கற்பிக்கப்பட்டது. ஒன்று, குடும்ப முறையாக. இன்னொன்று குரு முறையாக. முதல் வகை எப்போதுமே ஆசாரம், சம்பிரதாயம், பக்தி சார்ந்ததாகவே இருக்கும். அறிவார்ந்த பாதை, ஆன்மிகமான பாதை குரு முறையாகவே கற்பிக்கப்படும். அந்த குரு மரபு சென்ற சில நூறாண்டுகளாகவே பழுதடைந்துவிட்டிருக்கிறது. குரு முறை என இன்று சொல்லப்படுவது பெரும்பாலும் மடங்கள் சார்ந்ததாக உள்ளது. அது இன்னொரு பெரிய குடும்ப மரபுதான். அங்கும் ஆசாரம், சம்பிரதாயம் மட்டுமே உள்ளது. மெய்யியல் கல்வி என்பது முற்றிலும் இல்லாமலாகிவிட்டது.


மதம் தன்னை நவீனப்படுத்திக் கொண்டே இருந்தாகவேண்டும். ஓர் அமைப்பாகத் தேங்கிவிடலாகாது. சமகால வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். பழங்காலத்தில் உறைவதாக இருக்கலாகாது. குரு என்பவர் மாணவனின் பயணத்தில் அக்கறை கொண்டவராக இருக்கவேண்டும். தன்னை முன்னிலைப்படுத்துபவராக இருக்கலாகாது. எந்த ஞானவழியாக இருந்தாலும் முழுமையான சுதந்திரம் அதில் இருக்கவேண்டும். மாணவன் தனக்குரிய வழியை தேர்வுசெய்ய வாய்ப்பிருக்கவேண்டும். பிறப்பால் அல்லது சூழலால் எதிலும் கட்டுண்டிருக்கக் கூடாது என்கிறார்ஜெ”. 


இதுவே நவீன உலகின் சரியான புரிதலாக இருக்கும் என நினைக்கிறேன் . அதே சமயம் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் முறையான மதத்தில் இருந்து 

தத்துவத்தை வேறுபடுத்தி பார்க்கும் அறிமுகம் இல்லாமைக்கு இந்திய கல்வி முறைகள் முக்கிய காரணமாக இருக்கிறது. இனி அதை சரி செய்ய இயலுமெனத் தோன்றவில்லை. ஐரோப்பிய தத்துவங்கள் மதத்தில் இருந்து விலகிய பிறகே நவீன உலகிற்கானதாக மாறி இருக்கிறது. அது போல இங்கும் நிகழ இருப்பதை காண்கிறேன். ஆனால் அது தொடுவான் போல எங்கோ காலத்தில் இருக்கிறது.


உணவு விடுதிக்கு சென்று உணவருந்துவதை கடுமையாக விமர்சித்து ஒரு உபண்யாசகர் பேசிய போது என் ஆழ்மனம் அதை நிராகரித்தது. அவை எந்த எதார்த்த மன நிலையையும் பிரதிபலிக்கவில்லைபழைய காலங்களில் நீள் பயணம் என்பது தீர்த்த யாத்திரை போல. அதில் உணவு சமைத்து பரிபாறப்படுகிறது. சிறிய பயணங்களை மேற் கொள்ளும் குடும்பம் கட்டு சோற்றுடன் செல்லும். எனக்கு தெரிந்து ஆழ்வார் திருநகரியைச் மதுரகவி ஆழ்வார் கொடிவழியை சேர்ந்தஅண்ணாவிபயணங்களில் கோவில் பிரசாதம் தவிற பிற எவற்றையும் உண்ணுவதில்லை என்கிற நோன்பில் இருந்தார். இன்னளவும் அவரது நிலைப்பாடு அது. அனைத்து உலகியல் நடவடிக்கையில் இருந்து வெளியே இருந்தார்ஒரு அதீத மனநிலை அனைவருக்குமானதல்ல. நவீனமாதல் உலகை கிராமமாக்கி கொண்டு இருக்கிறது. அதில் தனிப்பட்ட நீண்ட பயணங்களை மேற்கொள்ளபவர்கள் இதை எந்த தளத்தில் வைத்து புரிந்து கொள்வது. மெய்மை என்பது பற்றி எங்கும் பேசப்படுவதாக அறியவில்லை


ஆன்மீக இயக்கங்கள் கால இடைவெளிகளில் ஒவ்வொரு முறையும் அர்பணிப்புள்ள புதிய முயற்சிகளாக துவங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆரம்பத்தில் அவற்றில் பல வெற்றிகரமானதாகவும் இருந்திருக்கிறது. ஆனால் நீடித்திருப்பதில்லை என்பது பொதுவான அம்சம். ஒரு இயக்கம் வெற்றியடையும் போது அதன் புகழே அதற்கு எதிராகி நிற்கிறது . முக்கியமாக நிர்வாகிகளுக்குள் நிகழும் உள் அரசியல் காரணம். அந்த சூழல் எழும்போது ஈடுபாட்டுடன் செயல்பட்டவர்கள் விலக ஒன்றும் தெரியாத ஒரு கும்பல் அதை கைபற்றி விடுகிறது. முதல் சில வெற்றிகளை பிரதி செய்ய முயன்று தோற்கும் போது அமைப்பு சூம்பிப் பிறகு இல்லாமலாகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...