https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 14 நவம்பர், 2016

மனத்திரிபு

மனத்திரிபு








கோவில் காண்டா மணி ஒலித்தபடியே இருந்தது , காலை நேரம் கூட்டம் அனேகமாக இல்லை , கோவில் பட்டர் பரிவார சன்னதிகளை திறப்பதும் திரைகளுக்கு உள்ள சாதிகளுக்கு காலை உணவை கண்டருளப் பண்ணினார் . அவர் கையிலிருந்த மணி ஓயாமல் அடித்துக்கொண்டு இருந்தது . சாம்பிராணி புகை மூட்டமாக வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தார் சித்திரைக்கு இன்னும் நாள் இருக்கிறது என்று சூரியபகவானுக்கு யாரும் சொல்லவில்லை போலும் புழுக்கம் தாங்கவில்ல காற்றாடவில்லை , வீசும் என்ற நம்பிக்கையும் இல்லை . உற்சவத்தை ஒட்டி பலிபீடம் அருகில் தற்காலிக தட்டார பந்தல் வெய்யில் மட்டுமல்ல காற்றையும் மறைத்தது .
பட்டர் பலிபீடத்தில் பலிசாதித்த சுத்தன்ன உருண்டைகள் துளசி வைத்துவிட்டுப் போனார் .

தாத்தா ரா.மா.கோவிந்தசாமிபிள்ளை ,புதுவை மாகாத்மா காந்தி வீதியில் உள்ள வரதராஜர் கோவில் ராமர் சன்னதியில் என் அப்பாவிற்கு காத்திருந்தார் . பாண்டுரங்கன் சன்னதியில் படியில் குடையை ஊன்றியபடி உட்காரந்திருந்தவர் அவர் கண்ணில் யார் பட்டாலும்  வழக்கமான உரத்த குரலில் வசவுதான் , எல்லாம் கிராமத்து பாணி கெட்ட வசவுகள் . அவர் இருக்கும் இடம் நிழல்படாது திசைக்கொருவராக தெறித்துக்கொண்டிருந்தனர்

தாத்தாவிற்கு பின்னால் பெரியப்பா நின்று கொண்டிருந்தார் ஏறக்குறைய தாத்தாவின் இளவயது கார்பன் காப்பி போலத்தான் இருந்திருப்பார் . அதே நடையுடை திருமண் . தாத்தாவிற்கு பிறகு அவர்தான் எல்லா கோவில் வேலைகளை செய்யப் போகிறவர் என்று இருப்பார் . முன்கோபி சகஜமாக யாருடனும் பேசமாட்டார் . கோபம் என்று வந்தால் நாக்கு ஒரு மாதிரி நெருப்பு பிழம்பு , மறக்கமுடியாத சுடுசொல் வல்லார் அதற்கு இலக்க்கான எவராகிலும் தன் வாழ்நாளில் அதை நினைத்த உடல் பற்றியெறிவதை உணர்வர். எதையும் வெறுப்பின் மொழியிலேயே பேசுபவர் .  மிக புராதன மனிதர் போல இருப்பார் எந்த மாறுதலையும் விரும்பாதவர் பழமைவாதி வெளிப்படையானவர் யாரிடமும்  தாட்சணயம் கிடையாது , எப்போதும் கசப்பு எட்டிக்காய் போல.

வருஷோஸ்த்வமாக ராம நவமி உற்சவம் பத்து பண்ணிரண்டு நாள் நடைபெரும் நாளுக்கு ஒரு சாதியினர் முறை . பெரும்தணக்கரர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் தனியாக ஒருநாள் செலவை ஏற்றுக்கொள்வார்கள் அது அவர்களின் தனிப்பட்ட உற்சவமாக நடைபெறுவது வழக்கம். அன்று தாத்தாவின் முறை .

தாத்தா கம்பீரமான ஒரு ஆளுமை ஊரில் அவரைத் தெரியாத ஒருவருமில்லை . உயரம் நடுத்தரதிற்கு சற்று குறைச்சல் கணுக்கால் வரை ஏற்றிக்கட்டிய கதர் வேட்டி ,முழுக்கை முரட்டு ஆந்திரா கதர் சட்டைக்கும் ஜிப்பாவிற்கும் நடுவிலுள்ள வஸ்த்து அந்த காலத்து மாடல் கை புஜத்தில் ஒற்றை பிரில் , மொட்டைக் கழுத்து மார்பு வரை திறந்திருக்கும் பட்டன் கிடையாது . இருபக்கமும் காஜா எடுத்திருக்கும் அதில் தங்கச் சங்கிலியில் கோர்த்தது போல பின் புறம் பட்டையாக முன் புறம் சிறிய குண்டு வடிவில் இருக்கும் . சட்டை மாற்றிக் கொள்வதற்கு முன்னதாக அதைத்தான் முதிலில் பொருத்துவார் . முழுக்கை அதை மடித்தெல்லாம் விட முடியாது  . முடிவில் இனைக்கும் பட்டன் ஒருமாதிரி இந்தகாலத்து கோர்ட் சட்டை கை பின் போல ஆனால் சுதேசி . வழுக்கைத் தலை அளவான தெண்கலைத் திருமண் காதில் பெரிய வெள்ளைகள் கடுக்கன் , பெரிய பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி . சிறு மடிப்பு பட்டு உத்திரியம் அதை கழுத்தை சுற்றிப் ஒரு முனை வலது மார்பிலும் மறுமுனை வலது பக்க முதுகிலுமாக நடுப்பகுதி மார்பில் தழையும்படி இருக்கும் , கையில் எப்பொழுதும் குடை வைத்திருப்பார் .

தாத்தா வியாபாரத்தில் தனக்கென இடத்தை பிடித்து செல்வாக்காக உலவத் துவங்கினார், பக்தியில் மிகுந்த  ஈடுபாடு கொண்டவர் வியாபார விஷயமாக 1920 களில் பாம்பே சென்றபோது பூனா பக்கத்தில் உள்ள பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன் மேல் சொல்லவியலாத பிரேமை . தன்முதல் பிள்ளைக்கு அந்த பெயரையே வைத்தார்
வைஷ்ணவராக இருந்தாலும் அவருக்கு சைவ வைணவ பேதமில்லை ராமநவமி உற்சவம் போலே ஆனித் திருமஞ்சணம் வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரமாதமாக ஏற்பாடு செய்து பண்டு கட்டி வைத்திலுந்தார் விடாமல் நடக்க வேண்டும் என்று மணக்குள விநாயாகர் உற்சவ மூர்த்தி தாத்தா செய்து வைத்தது  . இன்று அந்த பண்டிலிருந்து வரும் வட்டிக்கு பூ கட்டுகிற இலையைக் கூட வாங்க முடியாது.

அவரது ஆன்மீக ஈடுபாடு மற்றும் செயல்பாட்டிற்கு நிச்சயம் குரு என்று ஒருவர் இருந்திருக்கலாம் அல்லது தொடர் வாசிப்பின் வழியாக இந்த இடத்திற்கு வந்திருக்கலாம் . தன் அலமாரியில் ஒரு வெள்ளி கூஜா பார்த்திருக்கிறேன் , அதில் அவர் எந்த கோவிலுக்கு போனாலும் கோபுர வாசல் அருகே குனிந்து சிறிது மன்னை எடுத்து சிறு காகிதத்தில் மடித்து எடுத்து வந்து அந்த கூஜாவில் சேர்பது வழக்கம் , தான் மரணித்தபிறகு அது தன் மீது தூவிய பிறகே சரமகாரியம் செய்யப்படவேண்டும் என தன் உயிலில் குறிப்பிட்டிருந்தார் . அசைவ உணவை கடைசீவரை விடவில்லை . மதிய உணவுடன் ஏதாவதொரு பச்சடி இருக்க வேண்டும் அம்மா சளைக்காது அனைத்து காயிலும் வெல்லம் போட்டு வைப்பார் கருணைகிழங்கு உட்பட . காலை உணவில் இட்லயை தயிர் கலந்து சாப்பிடுவது மட்டுமில்லாது கண்னாவி அதை அருகில் உள்ள எங்களுக்கும் ஒரு துண்டை நீட்டுவார் அதை பார்த்தாலே அனைவரும் சிட்டாக பறந்து விடுவோம்

கோவில் உற்சவத்தில் மிராசு போல் இருந்தாலும் நித்தியபடி கோவில் காரியங்களை தானே செயவது வழக்கம் . தினம் ஒரு தூக்கு எண்ணையும் கைவிளக்குமாக தார்பாய்ச்சிய வேட்டியுடன் இரண்டு கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் திரி போட்டு வளக்கேற்றுவார் , கிணற்றில் உள்ள மாடம் உள்பட . பட்சி பட்டாசாரியார் ஒருமுறை சொல்லும் போது ஏதோ ஒரு தமிழ் வருட பெயர் சொல்லி அன்றைக்கு அடித்த புயலில் தாத்தா பேய்மாதிரி விளக்கு போட்டுக் கொண்டிருந்தார் என்று. வாழ்கையின் புரிதல்களை தேடி பலமான வாசிப்பினால் அடைவது என இருந்தாலும் ஒரு  சிலர் ஒரே புத்தகத்தை இடைவிடாத வாசிப்பினாலே அதை அடைந்து விடுகிறார்கள் போலும் . பண்டரிபுர நாயகனின் லீலைகளை பற்றிய ஒரு புத்தகம்தான் அவரது பொழுதுபோக்கு . அதில் ராமதாசர், பக்தமீரா போன்றவரகள் சரித்திரமாக இருக்கும் . தாத்தா தன் பேத்திகள் அனைவருக்கும் இந்த புத்தகத்தில் வரும் காதாபாத்திரத்தின் பெயரையே .

பக்த சரித்திர நூலை என் அக்கா அவருக்கு தினம் படித்துக் காண்பிப்பாள் , நெகிழ்வான இடங்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும் பக்தி பரவசத்தில் தலைக்கு மேல் கை குவித்துவிடுவார் . ஒரே புத்தகத்தில் திரும்ப திரும்ப படிப்பதில் என்ன சுவாரஸ்யம் வந்துவிடும் என அப்போது புரியவில்லை.அக்கா ஒரு சரித்திரத்தை படித்து முடித்தவுடன் அதைவாங்கி தலைமேல் வைத்து கொள்வார் , படித்தவருக்கு இருபது ஐந்து பைசா சம்பாவணை . அக்காவிடம் காசுகிடைத்தது பற்றி பேசினால் அவள்

தாத்தா அந்த காலத்தில் வலது கம்யூனிஸ்ட் அனுதாபி என்றும் சொல்லாலாம் . இந்தியாவில் ஆலைத் தொழிளாலர்களுக்கு எட்டு மணி நேர வேளை என்கிற உரிமையை பெற்றுத்தந்தவர் மக்கள் தலைவர் வ.சுப்பையாவிற்கு மிக நெருக்கமாக இருந்தார். காங்கிரஸில் காந்தி மிதவாதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவிர நிலை எடுத்தவர் சுப்பையா நேதாஜியின் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் .

இந்தியா முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக காங்கிரஸ் போராடிய போது புதுச்சேரி சுதந்திர போராட்டம் மிக வித்தியாசமானது  இங்கு பிரிட்டிஷ்காரர்கள் இல்லை பிரன்சுகாரர்கள்  ஆண்டனர் .

சுப்பையாதான் காந்தியை புதுவைக்கு முதலில் அழைத்து வந்தார் என்பார்கள் நீண்டநாள் எனக்கு ஏன் சுப்பைய்யா காங்கிரஸ் கட்சிக்காரர் இல்லை எனப் புரியவில்லை.

பெரியப்பாவிற்கு அப்பா நேர் எதிர் நல்ல ரசிகர் நவீனமயமாதலின் மத்திய காலகட்டம் அது. அனைத்து  சிந்தனாவாதிகளுக்கும் ஏற்படும் விஞ்ஞான ரீதியில் எதையும் நிரூபிக்க இயலும் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர் , திராவிட இயக்கம் காலூன்ற தொடங்கிய காலம் மேடைகளில் தமிழ் பேசப்பட்ட தாளகதிக்கு ஒரு பெரும் கூட்டமே மயங்கிக்கிடந்தது . அவர்களில் பலர் தங்கள் குடும்ப விழுமியங்களை போற்றும் பெரியவர்களை நமுட்டுச் சிரிப்புடன் எதிர்பவர்கள் ,ஆனால் அப்பா தாத்தாவின் மீது மரியாதை கொண்டவர் . நவீன சிந்தனை வட்டத்தில் நடைபெருவதை கூர்ந்து அவதானிப்பவராக இருப்பதால்  , தன் அளவில் சிலவற்றை பரிட்சார்த்தமாக முயற்சிப்பவர் . தன் கொள்கையில் அழுத்தமான பிடிப்பு உண்டு அதை உரத்து பேசாத மென்போக்காளர் . அந்த சம்பவம் நடக்கும்வரை .

தந்தைக்கு அடங்கிய பிள்ளை வியாபாரமார்தமாக வெளியூருக்கு சென்றிருந்தார், தாத்தா அவரைத்தான் எதிர்பார்திருந்தார்.

காலை திருமஞ்சணம் பின்பு உள்புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெரும் . தாத்தாவிற்கு அந்த நாளுக்கு வேறு எந்த முக்கிய காரியமும் ஒரு பொருட்டல்ல . அப்பா சொல்லும் வியாபார காரணங்களை அவர் எப்பொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை . அந்த காலத்திலேயே பம்பாய் சென்னை என்று பல ஊருக்கு சென்று வியாபாரம் பார்த்தவர் விஷயங்களை தெரிந்து கொண்டவர் . அரசியல் சமூகம் என எல்லாவற்றிலும் அறியப்படுபவர் .

திருமஞ்சணம் முடியும் தருவாயில் அப்பா வந்துவிட்டார் பார்வையிலே தாத்தாவால் கண்டிக்கபட்டார் முனுமுனுவென்றதோடு விட்டது அப்பாவை ஆசுவாசப்படுத்தியது .

தாத்தவிற்குத்தான்  முதல் தீர்த சடாரி பிறகு குடும்பத்தாருக்கு பின் பொது ஜனத்திற்கு . தோலுக்கினியான் கொண்டுவரப்பட்டு ஶ்ரீபாதந்தாங்கிகள் தாத்தாவிற்கு பணிவாக வணங்கினர் அவர் அமைதியாக ஏற்றுக்கொண்டார் உற்சவமூர்திகளை தோலுக்கினியானில் ஏளப்பண்ண சிறிது நேரம் ஆகும் அதுவரை ஊர்பெரியவர்கள் முக்கியஸ்தர்களின் பேச்சி என்று எங்கும் ஒரே அலராயிற்று .

சுமார் ஒருமணி நேரம் கழித்து உள்புறப்பாட்டிற்கு தயாரனது யாரோ மேளம் எனக்குரல் கொடுக்க நாதஸ்வரம் எங்கோ வெளியே  தம்மடிக்க போயிருப்பார் போல வெறும் மேளம் மட்டுமே ஒலிக்க சற்று நேரத்திற்கெல்லாம் நாதஸ்வரம் இயைந்து ஒலிக்கத்தொடங்கிது .

சன்னதியில் இருந்து தோலுக்கினியான் வெளிவந்து கிழக்கு முகமாக நின்றவுடன் இயல்பாக பிரபந்தமும் , வேதமும் சேவிக்கத் தொடங்கினர் . அது ஒரு மாதிரி இழுவையான ஸ்வரத்தில் சொல்லே புரியாமல் இருந்தாலும் கேட்க கேட்க இனிதாகியது . தூக்கியதாக யாரோ குறித்துக்கொள்வார் போல புறப்பாடு தொடங்கியதும் பெரியவர்கள் சிலர் வேகமாக வந்து அதை தூக்குவதற்கு முயற்சிப்பது போல் பாவனையால் சாமியை ஏமாற்றினார்கள் . அவர் குன்சாக எங்கோ பார்த்தபடி அச்சிட்ட புண்ணகையோடிருந்தார் . வழக்கபோல சிலர் முனபின் வர புறப்பாடு துவங்கியது .

முதல் திருப்பம் வருவதற்குள் புறப்பாடு கோஷ்டிக்கு மத்தியில் திடீர் கசமுசா இன்னதென்று புரியாத நிலையில் மேளமும் கோஷமும் நின்றுவிட்டது . என்ன நடக்கிறது என்று யாருக்கு எதுவும் புரியவில்லை . உற்சவருக்கு நெருக்கமாக நின்றிருந்த அனைவரும் ஒருவித பீதியோடு விலகத் தொடங்கினர் . எட்டிப்பார்தால் பெரியப்பாதான் ஒரேமாதிரியரி நாய்குந்தல் போல உட்கார்ந்திருந்தார் முகமும் செயல்களும் ஒருவித சேஷ்டை போல அங்குமிங்கும் பார்பது எல்லாம் குரங்கு செய்வது போலவே . முதலில் யாருடனோ சண்டை என நினைத்தேன் கூட்டத்தில் அவர் அப்படி தன்னை வெளிபடுத்திக் கொள்ளாதவர் எதையும் மிக நாசூக்காக செய்வார் கிள்ளுவதைக் கூட.

பட்டாசாரியார்கள் மிரட்சியுடன் அங்குமிங்கும் ஓடுவதுமாக இருந்தார்கள்  கோவில் மணியக்காரர் சாவியுடன் ஓடி வந்து அனுமார் சன்னதியை திறக்க யாரோ திரைபிடிக்க உள்ளே இருந்த அனுமன் விக்ரகத்தை மார்போடு அனைத்த படி ஓட்டமும் நடையுமாக வந்த பட்டாசாரியார் விக்கரகத்தை லட்சுமணரின் விகரகத்திற்கு எதிரில் வைத்தார் , பின் ராமர் பாத த்தில் இருந்து துளசி தீர்த்தம் மாலை சடாரி என ஒவ்வொன்றாக அவருக்கு கொடுக்க முதலில் இடுக்கிய கண்களால் பார்த்தவர் பின் எழுந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டார் .தாத்தா பாட்டியிடம் ஏதோ சொல்ல பாட்டி பெரியப்பாவின் கையை பிடித்தபடி ஊஞ்சல் மண்டபத்தை நோக்கி சென்றார் .

நாதஸ்வரம் பிசிரடித்து மேளம் உரத்து அதிரத் தொடங்கியவுடன் உள்புறப்பாடு மறுபடி துவங்கியது யாரும் யாருடனும் பேசவில்லை  தோலுக்கினியான் சன்னதி திரும்ப  இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் ஆனால் அன்று என்னவோ அரைமணிக்குள்கவே திரும்பிவிட்டார் அர்சனை முடிந்து பிரசாத வினியோகம் . மண்டப இறுதியில் உட்காரந்து இருந்த பெரியவர் உடையார் அருகிலிருந்த ராதாகிருஷ்ணனிடம்

" என்ன இருந்தாலும் முறையை மாற்றலாமா? சிறிய திருவடி சப்ரத்தில் ஏளப்ன்ன மறந்ததும் பாண்டுரங்கத்திறகு சன்னதம் வந்தது அனைவருக்கும் மிரட்சியை கொடுத்துட்டுது" என்றார் .

வேறுயாருக்காவது வந்திருந்தால் வேஷம் என்றிருபார்கள் இப்போது யாரும் ஒன்றும் சொல்லமுடியாது  என்றார்

பாண்டுக்கு தனக்கு என்ன நேர்ந்த்து என தெரியவில்லை, கிருபா தான் அதிர்ந்து போனார் , என்றார்

கிருபா நவீனவாதி பின்னொருநாள் இது பற்றி அவரிடம் பேசவேண்டும் என்ற பிறகு இருவரும் நமுட்டலாக சிரித்துக்கொண்டனர்.

அனைத்தையும் மௌனமாக கேட்டபடி தாத்தா பிரசாதம் சாப்பிடத் துவங்கினார். கடமை என்றும் புண்ணியம் என்றும் ஒரு காரியம் நம்பிக்கை அடிப்படையிலானது அது நிஜத்தின் அருகில் வருகிறபோது மனம் வித்தியாசமாக சிந்திக்கத் தொடங்குகிறது . விழைவின் அடிப்படையில் இன்பத்தை நோக்கி நகரும் அது ஏதாவதொரு சமன்பாடுகளைச் சொல்லி தன் அறமென இருப்பதில் மீறுகிறது . அந்த சிறு தனிமனித விழைவிற்கும் அந்த அறமீரல்களை தவறென நினைக்க மறுக்கிறது . இன்பம் குறிக்கோள் ஆயின் அது அனைத்தையும் வாழ்வில் ஒரு கணத்தில் நிகழ்ந்த முரண்பாடுகளை கருத்தில் கொண்டு மறுதலிக்கிறார்.

அப்பாவிற்கு இது புரிதலின் மற்றொரு அடுக்காயிருந்தது நிரூபணவாத அறிவியல் நோக்கில் ஆழமான சிந்தனையால். மரபான விஷயத்தையும் புறவயமாக நிரூபிக்க இயலும் என நம்பியவர . ஆகவே மரபுகள் உருவாக்கும் நம்பிக்கைகளை ஆசாரங்களை பொருத்துவதற்கு சரியான வாய்ப்பை இழந்திருக்கலாம் . அண்ணனுக்கு நிகழ்ந்தது இதில் எதிலும் விளக்கமுடியாததாக இருந்தது . குழப்பமான மனநிலையில் எழந்து சாப்பாட்ட இலையை போட்டவர் ஆஞ்சநேயர் சன்னதி வந்ததும் கைகள் தன்னிச்சையாக எழுந்து கூம்பின

பெரியப்பாவிடம் நிகழ்ந்ததை மெதுவாக சொன்ன ஒருவரை தன்னை கேலிசெய்வதாக கடுமையுடன் சொல்லிச்சென்றார்

தாத்தா தன் இருபிள்ளைகளின் நடத்தையை குடையை ஊன்றி மண்டபத்தில் அமர்ந்திருந்த பாரத்தவர் மனதுக்குள் சிரித்துக் கொன்டார்















திங்கள், 31 அக்டோபர், 2016

ஊழின் ஆடல் குறித்து

ஶ்ரீ:
ஶ்ரீமதேராமாநுஜாய நம்:

தேதி 06 நவம்பர் 15 / கடிதம் -4
புதுவை




என்ஞானாசரியனின் தாய் என் மனம் வாக்கு காயத்தில் எப்போதும் இருப்பாதக.  ஹரி:||

நிஜத்தை புரிந்து கொள்ளாது கூச்சலிடுபவர்கள் அறிவிலிகள் , தள்ளத்தக்கவர்கள் ஆதலால் பரிதாபத்திற்குறியவர்கள் அவர்களுக்கு உண்மை ஒருபோதும் தன் கதவுகளைத் திறந்து காட்டப்போவதில்லை .

நிதானமாக கோவப்படுபவர்கள் ஆபத்தானவர்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்மை ஒரு பொருட்டே அல்ல.





உன் கடிதம் படித்தேன் முதல் பகுதி மிக அழகானது. மகிழ்வளிப்பதாக இருந்தது உனக்கு நன்றி.


காரிய துரந்தரனை நோக்கி மேற்சொன்ன இரு சாராரும் கேள்விக்கணைகளை தொடுத்தல் புரிந்து கொள்ளக்கூடியதே , ஒருவனால் அவை விடை இறுத்து முடிவு காணா முடியாதவை  . ஆகவே   அது   முடிவிலி..................

கடிதப்பதிவுகள் ஆபத்தானதவை , காரணம் ,நம் பின்வருவோர் நம்மை நாமாக காணவைப்பது , மற்றவர்கள விட இதன் ஆழத்தை அறிவேன் , இது இரு முனை கூர் கொண்ட கத்தி நேர்மை நிலை தவறின்,  கேட்பவரை அக்கனமும் சொல்பவனை எக்காலத்தும்  கிழிக்கும்.

உன் கடிதம்  உன் அனுகுமுறைக்கும் நிலைப்பாட்டிற்கும் அத்தனை வாசி என்பது உனக்கு புரிய இது பயன் படும்.


செயல்படுபவனை புரிந்து கொண்டால் செயல்களின் அர்த்தம் புரியும் ,

செயல்கள் நடந்து முடிவது அவன் ஊழ்நிலையை பொறுத்தது. அது சரித்தவறுகளாக. மரியாதை அமரியாதையகால சூழ்தலில் மற்றவர்களுக்கு அர்த்தமாவது.

காலம் தன் முடிவில்லா கண்ணிகளை முடியத் துவங்குவது இங்குதான் .

அது , ஒரு வெக்தியை,  அதை செய்யக்கூடிய அதிகாரியா எனப் பாராது தன் நிர்வாகத்தை நடத்துகிறது .

நம்வரையில் அதைப் புரிந்து கொள்ள அதுவே அதற்கே சாஸ்திரங்களை ஈட்டு விட்டிருக்கிறது. அது நம்வரை எட்டக்கூடியதாக நம் பூர்வர்கள் செய்துவிட்டு போந்தனர்.

ஊழின் விளாட்டை புரிந்து கொள்கிறாயா?  ................ இதோ சமீபத்திய நிகழ்வு   ......முடிந்தால் ஆய்ந்துகொள்.

நான் சொன்னேன் என்று நீ சொன்னதாக லாவண்யாவும் குணாவும் என் கடிதத்தை விளங்கிப் போக நேற்று வந்தனர் . அவர்கள் வந்தது என் தீழூய் ....................... அவர்களுக்கும் அவ்விதமே.
நான் அவர்களை வரச்சொல்லவில்லை ,

என் முதல் கடிதத்திலேயே , குறிப்பில்

இது தொடர்பான  எவற்றையும் காலம் வரும்வரை  நிரகரிக்கிறேன்-
காலம்  வரின் , சொல்லெழுதலுக்கு அவசியமின்றி அனைத்தும் துலங்கும்

என்று எழுதியிருந்தேன் , ஆனால் உனக்கான பாதையை மட்டும் திறந்து வைத்திருந்தேன்.
அதற்கு உன்அனுகுமுறை மட்டுமே காரணம்






லாவண்யா சிறியவள் அவளும் என் னை போலவே இச்சூழலின் காரிய துரந்தரீ , எதிர்காலத்தில் தன் புரிதல்களால் தன்னை பிறருக்கு தனக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்த இருப்பவள் .          ஆனால் ஊழ். ................ அவள் குணாவை  உடன் அழைத்து வந்திருந்தாள் .  தனித்து வர இயலாத ஓர் நிலைபாட்டை ஊழின் காரணமாக அவள் எடுத்திருந்தமையால்.
வந்தது கடித விளங்க்கங்களை..........பெற      அதாவது    எப்படி அனுப்ப போச்சு ?  என்று . ஆனால் எது விளைத்ததனால் இக்கடிதம் முலைத்திருக்கிறது என விளங்கிக்  கொள்ளும் பொறுமை அற்று.



குணாபாய்

தன் வாழ்விலிருந்து  கற்றது பாடமாக  கைவரப்படாதவள் , மிக எளியவள், அனைவரின் அரவனைப்பிற்கானவள் . ஆனால் என் தீழூழ் என்னிடம் சொல்லத்தகாதன சொல்லி எனனால் கேட்கத்தகாதனவற்றை , என்னிடம் கேட்டுப் பெற்றவள் .

 ஒரு கோபத்தில் தான் சொன்னதை  என் நிலைபாட்டாக மாற்றாது விடமாட்டாள் போலும்........என்செய்வேன்.....     என் ஊழ் அங்ஙனம்

லாவண்யா தனியாக வந்திருந்தால் இதன் முடிவு வேறு வகையாக நிச்சயம் முடிந்திருக்கும் .  நான் அதை உறுதியாக நம்புகிறேன் அத்துனை திறன்மிக்கதாக இருக்கும்  அவள் சொல்லாடல்.


அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் அதற்கு நான் என் பதிலளித்தல் என்ன என விளக்கினால் ........ இக்கடிதம் எழுதும் அதிரமற்றவாகிப்போவேன்      ...காரணம் .......          இக்கடித விஷேஷம் அதுவன்று .

ஏனெனில் இது    ஊழ்  பற்றியதானது , உன் கடிதத்திற்கான பதில் , உங்கள் அனைவரின் இதுவரை எழுந்த மற்றும் எழவிருக்கும் அனைத்து கேளவிக்கானது

லாவண்யா என்னிடம் முறையாக விடைபெறுவதற்கு முன்பே குணா வெளியேறிவிட்ட பின் , நானும் லாவண்யாவும் எவ்வித செல்லும் எழாதே ஒருவரை ஒருவர் நோக்கிக்  கொண்டிருந்தோம்  .காலம் ஊழியாகக்கடந்தது        . என்னுள்ளே நானும் அவளும் தன்னுள்ளே கசிந்து கொண்டிருந்தோம் .  இறுதியாக "நா வரேன்னே " எனச் அவள் , அவளாகச் சொல்லிச்சென்றால். நான் என் மௌனம் காத்தேன்.

ஒருநிமிடம் , இது ஒன்றுமில்லாது செய்யும் சக்தி இருவரும்  பெற்றிருந்தும் ...... அது நடக்கவில்லை .........ஊழ்    

ஆனால் நடந்தது என் முதல் கடிதத்தில் நம் அனைவரின் விலக்களை பற்றிய என் முன்மொழிதலை ..........  வேறு   வழியற்று      ,அவள்    ,அவளை  மீறி     வழிமொழிந்தளே  ஊழ்


அதை என் தீழூழ்  எனச்சொல்லாது.   இதை அவள் தவறு என நான் கூறுவேனானால் நான் பொய்யன் , என் சொல் மனம் காயம் அனைத்தும் பொய்யே .


ஆம் அவ்வாறே ஆகுக.

ஹரி:||











குறிப்பு:-

ஶ்ரீபீஷ்மபிதாமகர் குறித்து ,என்னை மனத்துவைத்து நீ சொன்னது வியாகணத்தில் வெஞ்சினார்த்தமாக சொல்படுவது. அதன் ஸ்வாபதேசம் அதுவன்று . உன்னதமான வாழ்வியலானது . சமயம் வாய்பின் விளக்குகிறேன்.


செல்வியின் குறுஞ்செய்தி விளக்கம்

ஶ்ரீ:
ஶ்ரீமதேராமாநுஜாய நம்:


தேதி:-03-11-2015


உன் குறுஞ்செய்தி பார்தேன்

நம்பிக்கை    -  ஆம்.    நம்பிக்கைகளின் ஊற்றமும் அது ஏற்படுத்தும் நிலைபாடுகளுமே என அடையாளங்களாக , என்னை கடந்த காலங்களில் வைத்திருந்தது போலேவே, என்னை எக்காலத்தும் வைக்கக் கடவது.

யாவருக்குமான அக்கடிதம் உனக்குமானதாக ஆகிப்போனது எப்படி ,என நினைத்து கேட்டிருப்பாக கருதுகிறேன் .  கடந்த முறை பேசும் போது நான் என்ன மனநிலையில் இருந்தேன் , அதை எதனால் உன்னிடம் பேசினேன் என நீ அறிவாய் என நினைக்கிறேன்.

உன்னிடம் பேசியது எல்லாருக்குமானது .

அனால் ,அது செயலாற்றும் திறனழிந்துவிட்டதின் நிலையே லாவண்யா வீட்டு நிகழ்வின் வெளிப்படானது.

அது உன்னால் ஏற்பாடு செய்யபட்டதென அறிவேன் , அவள் என்னை மட்டுமே அழைப்பதன்  தவற்றையும் , அதின் பின்விளைவுகளையும் எடுத்துரைத்தது திருத்தியிருக்க வேண்டும் .அது உனக்கான கடமையாக நான் கருதுகிறேன். அல்லது குறைந்த பட்சம் என்னிடம் இதுபற்றி பேசி உன்ன நிலைப்பாட்டை தெரிவித்திருக்க வேண்டும்.

லாவண்யா எனக்கிழைத்த கீழ்மைக்கு அனைவரும் சாட்சிபூதர்களாக நின்றீர்கள்.

மற்றவர்களிடமிருந்து உன்னை வேறுபடுத்தும் இதை நீ இழந்து போனாய் .


வாழச் சென்றவர்கள் வேர் விட்டிருக்கிறார்கள் .தன் முடிவென்னும் முதல் குலை சவலையாக எனக்கு காய்திருக்கிறது, கோபமில்லை , வருத்தமளிக்கிறது.

சகோதர பனிப்போர் என்கிற நிலையை தாண்டுதல் , அவரவர் வீட்டு ஆண்கள் அனைவரும் அறிதல் எனச் சென்று நிற்கும். அதற்கு துணிந்தார்கள் எனத் தெரிகிறது.   எனில்   .  ஆம் ...... அது அப்படியே ஆகுக

  - ததாஸ்து ||.   என்பதை தவிர பாதை இல்லாமல் ஆனது என்குற்றமில்லை.

இருந்தும் உன்னிடம் மட்டும் இது குறித்து எழுதுவது உன் அனுகுமுறையைத் தெரிந்ததனால்!!!!!!

 அனால்

அனுகுமுறைக்கும் , நிலைபாட்டிற்குமான வாசியை நீ அறியாய் போலும்.

நிலைபாட்டிலிருந்து அனுகுமுறையாக பரிமளித்தலே சரி, இல்லையெனில் இரண்டும் நேர் எதிர் திசையில் பயணிக்கும்.

நீ எனக்கு மற்றவர்களுக்குமான பகைமையில் , புரியவைக்க வேண்டியது உன் நிலைபாடு.



க்ருபாநிதி அரிக்ருஷ்ணன்

சகோதரிகளுக்கு ஓர் திறந்த மடல்

ஶ்ரீமதே ரமனுஜய நம:

சகோதரிகளுக்கு ஓர் திறந்த மடல்



தேதி 29-10-2016


ஊரிலேண் காணி இல்லை *
உறவு மற்றொருவர் இல்லை .......

-நன்றி
- எந்தை கோ.கிருபாநிதிபிள்ளை அவர்கள்.





இந்த கடிதம் என் உடன் பிறந்த அனைவருக்குமானது , துரதிஷ்டவசமானது . பல முறை கணிசித்து, பிறகு இதை எழுதுவதற்கு விருப்பில்லாது போனதற்கு காரணம் ,அத்தனை காலம் கூட இதைக் கணிசித்தலால் ஏற்படும் மனமாசடைதலை தவிரும் பொருட்டே,  ஆனால் இன்று மீறி எழுதுவதற்கு ஓர் மனசாமாதனம், இது காறும் ஏற்பட்டமையால் .

என் ஞானகுரு ஶ்ரீபீஷ்மபிதாமகர் என்வாழ்வியலில் பெரும் தாக்கம் கொள்ளச்செய்தவர் , இன்று உலகோர் மஹாத்மா காந்தியை புரிந்து கொண்டால் அவரை புரிந்து கொள்ளலாம் . அனைத்தும் விட்ட பின்னும் , இருவரும் தங்கள் இறுதி தருணம் வரை உலக வாழ்வியலில் நிலை கொண்டிருந்தார்கள்  -  உலகத்தோருக்கு இருத்தலியலின் நுட்பம் புரிபட -

வாழ்வியலில்  நிகழ்காலமென்பதும் , எதிர்காலமென்பதும் எப்போதுமே  வதைப்பது , அனுபவ நிலைப்பாடுகளைக் ஒன்றுமில்லாது செய்வது.  நிகழ்வுகளில் இருந்து கற்றது கைகொடுக்காது , சூழ்நிலைகளில்  கடமைகளென்று நம் முன்னே வந்து நிற்கும் போது மனப் போராட்டமும் , சமாதானமும் எல்லா சமயமும் நிகர்நிலை கொள்ளாது , அதற்கு அங்குசம் இடாது அதைக் கடப்பது என்பது நிலையழியச்செயவது.       - இதுவே இருத்தலியலின் நுட்பம்


ஆம்,  இதுவும் அதுவே .


அனுப்புவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை .


உழ்........
உப்பக்கம் காணும் .......- என்பர்.


ஒரு மனிதனின் குணத்தை கொல்வது அவனை கொல்வதைக் காட்டிலும்  கொடுமையானது , வலிமிகுந்தது .

ஓர் நிகர்நிலை மனிதன் , தன்னை உலகம் எப்படி நோக்க வேண்டும் என்பதற்கேற்ப தன்னுடைய அடையாளங்களை உருவாக்கிக் கொள்கிறான் . உலகம் அவனை எப்படி பார்த்த பொழுதும் . அதை சூழ்நிலைக்கேற்ப  புனைந்து கொள்வது என்பது அவனால் இயலாது .

நம் தாய் நேற்று ,நாளை என்கிற கால பரிமாணத்தையும், அது ஆற்றும் எதிர் விணையை பற்றய மதிப்பீடுகளையும் அறியாத எளியவர் . அனுபவம்,காலம், நோய், என்கிற மனித தடைகளையும், பிறர் மனம், சமூகம் , தன்பொறுப்பு , பற்றிய கவலை அற்று  இன்றைய தேவை அவரது அனுபவம் ,கணக்குகள் அவரின் புரிதல்கள் என்பன  அவர் பேச்சுக்களாக வெளிப்பாடும்போது அது இத்தனை ஸ்தூலமானதானதாக  அர்த்தம் கொள்ளப்படுவதும் , கேட்பவர் சித்ததை கொதி நிலை அடையச் செய்வதும் , வியப்பாக இருக்கப்பட வேண்டியதில்லை.

சாமான்யர்களின் உலகம் என்றுமே கொந்தளிப்பானது.

வாழ்வியலில் மிக மலினமாக காணக்கிடைக்கும் இதை ஒப்புக்கொள்ளாது தாண்டுதல் , எந்தையாலும் அவர் நமக்கு அறிமுகப்படுத்திய சம்பிரதாயத்தாலும் நன்கு உரைக்கப்பட்டது. இது புரிதலின் உள்அடுக்குகளில் தொன்மங்களாக படியாது ஒருவருக்கு அனுபவத்தில் வாராது . கற்ற ஏட்டின் அளவே சென்று நிற்கும் .

பெண்கள் ஆண்களை ஆள்கிறார்கள், அதை ஆண்கள் வைதிக, சம்பிரதாய , மனொருக்கம் ,காமம் சாராத முதுமையின் வழியாக அவர்களை அங்கீகரிகிறார்கள். அதன்பால்பட்டு,  நிகர்நிலை உள்ளவர்கள் அதன் எல்லைகளை வகுக்குறார்கள் , அவர்கள் அடிமை பட்டிருக்கிறார்கள் என்றும்  , மற்றவர் அவர்களை  அங்ஙனம் நிலைநிருத்த முயல்வதும், அவரவர் கீழ்மையான மனவிகாரங்களே.


இந்நிலையை மீறி அவளோ , அல்லது அவள் சொல்லுக்கு நின்று நிகர்நிலை அழிந்து பெற்றவர்களுக்கு துரோகமிழைப்வானாக , உடனபிறந்தோரால் ஒருவன் நிலை நிருத்தப்பட்டு , கூற்று உண்மையாகி ,அவர்கள் எண்ணம், சொல்  வெல்லுதல் என்றாகிப்போனால்  , தன் பெற்றோருக்கே துரோகமிழைப்வானான அவனால் தனக்கென்றும் வாழ்வில் ஆவதுதான் என்ன?.எதிர்காலத்தில் உடன்பிறந்தோர் கடமைகளில் அவனால் ,மற்றொருவருக்கு  ஆவதுதான் என்ன?.


 இது, இப்படிதான் நிலைகொண்டுள்ளதாக அவர்கள் நிரூவாரானால் , அதன் விளைவுகளால் அவனிடமிருந்தும், தங்கள்  எதிர்பார்புகளில் இருந்தும் தங்களை விலக்கிக் கொள்ளலே, அவர்கள்  மீது அவர்களாலேயே விதிக்கப்பட்டதும் தொற்றி நிற்பதும் என்றாகிப்போகிறது  .

தங்களின் எண்ணங்களாலும் , அர்தமற்ற உரையாடல்கள் வாயிலாகவும் , காலத்திடம் அவர்கள் இருகை ஏந்தி இரந்து பெற்றது இதுவே என்றாகிப்போகும் .




என்றால் ,

ஆம் அவ்வாறே ஆகுக !!

ஹரி: ||




இது தொடர்பான  எவற்றையும் காலம் வரும்வரை  நிரகரிக்கிறேன்-
காலம்  வரின் , சொல்லெழுதலுக்கு அவசியமின்றி அனைத்தும் துலங்கும்




க்ருபாநிதி அரிக்ருஷ்ணன்






வியாழன், 6 அக்டோபர், 2016

தந்தையின் முதல் தொடுல் -2

ஶ்ரீ:
தந்தையின் முதல் தொடுல் -2



இரண்டு நாள் கழித்து அப்பாவும் புதுவை திரும்பினர்.என் சிறிய தங்கை ஓடிவந்து அதைச் சொல்லிவிட்டு அதன் நீட்சியாக அம்மாவின் திரவண்ணாமலை விஜயம் குறித்த வேரொரு தகவல் சொன்ன பிறகே அந்த விபரீதத்தை உணர்ந்தேன்.

அம்மாவின் எதிலும் உள்ள உச்சகட்டமான உணர்வு வெளிப்பாடுகளை அறிந்திருக்கிறேன். அதில் அன்பு,ஆதரவு,வரவேற்பையும் கூட வெறுப்பின் மொழியாகத்தான் வெளிப்படுத்துவார். எதையும் கற்பனையாக நாடகத்தனமாக புரிந்து கொள்வார் அதற்கு எப்பொழுதும் மற்றவரகள் திகைக்க வைக்கும்படியாக எதிர்வினையாற்றுவார்.பேச்சில் மட்டுமல்லாது அவரது உடல்மொழியும் எவரையும் நிலையழிச்செய்து விடும்  , ஆனால் தன் கற்பனையை உண்மையென உருக்கொடுத்து அதை தான் நம்பி பெண்கொடுத்த வீட்டுவரை சென்று  எதிர்வினையாற்ற கூடியவர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

அப்பாவிடம் சென்ற போது அவர் சொன்ன தவலை கேட்டு உறைந்து போனேன், அது முற்றிலும் பைத்தியக்காரத் தனமானதாக பட்டது. நான் அம்மாவை திருவண்ணமலைக்கு பஸ்சேற்றியது மாலை சுமார் ஆறு மணிக்கு இருக்கும் இன்று போல் மூன்று மணி நேரப் பயணமல்ல .  அவர் போய் சேருவதற்கு எப்படியும் இரவு பத்தரை மணிக்குமேல் ஆகி இருக்கும் . இழவு வீட்டில் நுழைவது போல் தெரு முனையில் இருந்தே சப்த்தமாக அழுதும் அலற்றி கொண்டும் சென்றதை ஊரே கூடி வேடிக்கை பார்திருக்கிறது. திருவண்ணாமலை ஊர் என்றாலும் மாமா வாழ்ந்த பகுதி கிராமம் போலத்தான் இருக்கும் மாமாவின் அப்பா ஊர் தலைகட்டுப்போல மிகவும் கௌரவமாக வாழும் குடும்பம்.

அப்பா சொன்னது ஒருநிமிடம் மனக்கண்முன் மின்னோட்டமென என் முதுகெலும்புகளில் பட்டு சொடுக்கியது போல் இருந்தது.

மாமா வீட்டிற்குள் நுழைந்த அம்மா பத்ரகாளி போல நடுநிசியில் சமந்தியை உலுக்கி எழுப்பி தன் மகளை  பாவிகளே  கொன்றுவிட்டீரகளே அவளை எங்கே புதைத்தீர்கள் என கேட்டதுடன் நிற்காமல் பின கட்டு கதவை மோதித்திறந்து தோட்டத்தில் அங்கும் இங்கும் தேடி அலைந்து  விட்டு , பின்னர் நடு வீதிக்கு வந்து மன்னை வாரி தூற்றிவிட்டு திரும்பி இருக்கிறார்.

நான் பிரம்மை பிடித்தார் போல் அப்பாவையே பார்த்து நின்றிருந்தேன்.எதை யோசித்து பார்பது?அம்மா ஆடிய ருத்ரதாண்டவத்தையா,மாமாவின் குடும்பத்தார்  இருந்திருக்கக்கூடிய மனநிலையா,அவர்கள் குடும்ப பெருமை சந்தி சிரித்ததையா. அக்காவின் எதிர்காலத்தையா. எல்லாவற்றையும்  விட பூதாரகரமாக எழுந்து வந்தது அந்த சந்தர்ப்பத்தில் அப்பா அங்கு இருக்க நேர்ந்த கொடும் ஊழ்  . பிரச்சனையை கொட்டுவாயிலேயே எதிர் கொள்வது கொடுமையானது. கால அவகாசம் தேவை எதையும் அவதானிக்க. நிச்சயம் தன் மான மரியதையை பணயம் வைத்து அக்காவை அங்கு விட்டு வந்திருப்பார் . என்னவொரு மனவழுதத்திற்கு ஆளாகியருப்பார் என உணர முயற்சித்தேன்.

அம்மாவை மனநல மருத்துவரிடம் காட்டியே ஆக வேண்டும் என்பதில் அப்பா பிடிவாதமாக இருந்தார்.

அவரிடம் அம்மாவின் மனநிலையை எடுத்துக் கூறி இந்த இரவுக்குள் அவர் அம்மாவிடம் பேச வில்லையென்றால் எந்த தவறான முடிவிற்கும் அம்மா செல்வார் என்றதும் , அப்பா தன்  பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்தார் .அம்மாவிடம் அவர் ஒப்புக்காக திட்டியும் பின் சமரசபேச்சும் சூழ்நிலையை  நிரவியது . அவரது நாடகத்தனமான நடவடிக்கையே கூட ஒரு வடிகாலாகி அவரை ஆற்றுப்படுத்தியிருக்கலாம் .இதில் வேடிக்கை சில மணி நேரத்திற்கு பிறகு அம்மா அப்பாவற்கான பணிவிடைகளை எந்த குற்றவுணர்வுமில்லாது செய்யத்துவங்கிவிட்டார் அவருக்கு நிகழ இருந்த பரிபவப்படல் நிலுவையில் கூட இருத்தி வைக்கப்படாமல் காலம் புறந்தள்ளியது .அதை அவர் இன்றும் உணரவில்லை. அன்றைய பொழுது ஒருவாறு முடிவிற்கு வந்தாலும் அதை கொண்டு அம்மாவை அளப்பதைப் பற்றியெல்லாம் எதுவும் சிந்திக்கவில்லை அது அப்போது என் வயதிற்கும் உகந்ததல்ல.

இன்று என்ன சொல்ல வருகிறார் என யோசிக்க ஆரம்பித்தேன் . அவர் சொன்னது இது ஒருவகையான மனப்பிறழ்வு தானாக யோசித்து செயலாற்றி அனைவர் வாழ்க்கையையும் நரகத்தில் தள்ளிவிடுவார் என்றார்.

இப்பொழுது அதை பற்றிய பேச்சுக்கான காரணத்தை கேட்டதற்கு அவர் கண்கள் பனிக்க சொன்னது தன்     அண்ணனுக்கும் தனக்குமான இடைவெளி தன் கால இறுதிக்குள் ஒரு முடிவிற்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கை என் அம்மாவின் பொருட்டு நான் மாற்றவேண்டி வந்தது இது ஆரம்பம் .

ஆண் எக்காரணத்தாலும் ஒருகாலத்திலும் மற்றவர்களிடமிருந்து கருணையையோ உதவியையோ நாடக்கூடாது. அதிலும் குறிப்பாக பெண்களிடம் உதவி கோரக்கூடாது. பெண்கள் ஒரு வயதுக்குமேல் ஆண்களை வெற்றுச்சுமைகளாக உணர்வார்கள். சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் இருப்பார்கள். கம்பீரம் ,தோரணை எல்லாம் போய் ‘பேச்சுகேட்க’ ஆரம்பிக்கும் காலம் அது .

இனி அவள் சார்ந்து இருந்து என் காலம் போய்விடும் ஆனால் உன்னை நினைத்து தான் கவலைப்படுகிறேன். அம்மாவிறகு உன்மீது நிறைய பாசம் உண்டு அவள் என்னுடனான அனைத்து  பிரச்சனைக்கும் நீ துருப்புசீட்டு எனக்கூறிச் சிரித்தார்.இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. புரியாமல் பேசுவதையே வழக்கமாக கொண்டவர்.

அனால் என் பிச்சனை நீ அல்ல உனக்கும் உன் உடன்பிறந்தவர்களுக் இடையேயான உறவுபற்றியது . உன் அம்மாவுடைய குணத்தால் நான் பெரிய விலை கொடுத்தேன் என்னுடன் பிறந்தவர்களுடைய பிரிவுக்கும் உன் அம்மாவுடன் பிறந்தவர்களுடனான உறவு சீரழிந்தற்கும் காரணமாக இருக்கிறாள்.எக்காரணம் கொண்டும் உன் உடன் பிறந்தவர்களுடான உன் உறவை சரியாக வைத்துக்கொள்.குடும்ப நல்லது கெட்டதற்கு உறவுகளின் ஒத்தாசை தேவை உனக்கு நான் ஏற்படுத்திக்கொடுத்ததும் உன் அக்கா தங்கைகளின் உறவுமே இனி உனக்கான உறவுகள் என்பதை புரிந்துகொள் என்றார்

திருவண்ணாமலை நிகழ்வுகளில் நானும் உடன் இருந்ததால் அது எப்படி அடங்கியது எனத் தெரியும் .சிதைந்த உறவு அதன் பின் இன்றுவரை அப்படியே நீடிக்கிறது.

ஆனால் அப்பாவிடம் அம்மாவுக்கிருந்த பணிவும் பயமும் அவரை நேர்கொள்ளச் செய்யும் விசையாக செயல்பட்டது. அது எப்படி எனக்கு விசையென்றாகும் என்கிற எண்ணம்மெல்லாம் அப்போது இல்லை.

என்னளவில் அப்பாவின் சொல்லை நடைமுறை படுத்த தொடங்கினேன்.

அப்பாவின் மறைவிற்கு பிறகு அம்மா எப்படி இருக்கப்போகிறார் என்பது முதல் கவலையென இருந்தது . அப்பாவிற்கு பணிவிடையிலேயே அவர் தன் காலத்தை கழித்தவர் அப்பாவின் மரணத்திற்கு பின் எப்படி தன் வாழ்வினை வடிவமைத்துக் கொள்வார்  என்பது பெரிய கேள்வியாக இருந்தது . ஆனால் மிக இயல்பாக அதைத்தாண்டி வந்தார் , தனக்கென எழுந்து வந்த பிரச்சனைகள் வரை .

அம்மாவிற்கு  திடீரென மாரடைப்பு வந்தது , கடைவீதிக்கு சென்று வீட்டு பொருட்டகளை வங்கி வந்தவரிடம் வழக்கம் போல் கடிந்து கொண்டேன் . அவர் உடலநிலை சிறிது காலமாக சரியில்லை வேளைக்கு நிறைய ஆட்கள் இருப்பினும் எதையும் தான் செய்வதில் திருப்தி காண்பவர் , அன்று மிகவும் சோர்ந்து காணப்பட்டவர் தன் உடல் உபாதையைக் கூறும் போதும் அடுத்து அடுத்து அவர் சொன்னது மாரடைப்பின் அறிகுறிகளை . மருத்துவமனையில் சேர்த்த உடன் ஐந்து முறை அடுத்தடுத்த மிக கடுமையான மாரடைப்பிற்கு ஆளானார் . குறிப்பட்ட நிமிடம் முற்றிலும் முழ்கிப்போனார் பிறகு ஷாக் டிரீட்மெண்டில் மீண்டார் என டாக்டர் பின்பு சொன்னார். அவரை ஐசீயூ வில் பார்த்த பொழுது உருவெளித்தோற்றம் அல்லது கனவு என ஒன்றின் பாதிப்பில ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார் , அது அவருக்கு  மறுபிறப்பு .

உடன்பிறந்தாருடன் மற்றும் அவர்கள் உறவினர்களுடனான என் நெருக்கத்தை சரியாக வைத்துக்கொள்ள முயற்சித்தேன்

வாழ்கையில் அம்மா வரையில் அப்பாவின் அனுகுமுறையே எனக்குமானதாக இருந்தது.

ஆனால் ஒரு சிறிய பொருளியல் என் வீடு மறு சீரமைப்புக்கு பிறகு கசப்பு உறவுகளில் எழுந்து. அது எழுந்து வந்த விதம் செய்பவர்களுக்கும் இன்று வரை புரியவில்லை ஆனால் பலியான எனக்கு அது முற்றி அனைத்தையும் சிதைத்த பிறகே புரிந்தது.

அப்பா சொன்னது சத்தியம்.அவரின் மரணத்திற்கு பிறகு வீட்டில் அடுத்த பெரிய பொது நிகழ்வென ஏதுமில்லாத்தால் ஒருவரை ஒருவர் உற்று நோக்கும் தோரும் கசப்பு பேருறு கொண்டு எழுந்து வந்தது .

அம்மாவிடம் பெரும் மாறுதலை பார்க்க ஆரம்பித்தேன் , அவர் தன்னை மையப்படுத்திய உலகில் வாழ்ந்து கொண்டுப்பது மிகத் தாமதமாக புரிய ஆரம்பித்தது . மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தவர்கள் அந்த நிகழ்விற்குப் பின் தலைகீழ் குணமாற்றம் அடைவது இயல்பு , ஆத்திகன் நாத்திகனாவது போல , வாழ்கையில் அதுநாள் வரை இருந்த விழுமியங்கள் முற்றாகவே மாறுபாடுகளை அடைகின்றன .

நவீன மருத்துவமும் அளிக்கும் உடல்நலம் சார்ந்த நம்பிக்கையும் , நுகர்பொருள்களும் சமூக ஊடகங்களும் அவர்களை இழந்த வாழுதலை மீண்டும் முதலிலிருந்து எனத் தொடங்க வைக்கலாம் . நிச்சயம் இது பல் நெடுங்காலமாக இருந்து வரும் சமூக அறத்திற்கு புது பரிணாமத்தை அளிக்க வல்லது . இளந்தலைமுறைக்கு தொல் மரபுகளில் நம்பிக்கை பற்றிய விழுமியங்களை ஊட்ட விழையும் போது இருவருக்குமே நிச்சயம் இது முரணென வெளிப்படாலாம் .


அவருக்கும் எனக்குமான விஷயம் சர்ச்சையில் முடிய ஆரம்பித்தது . எதற்கும் கட்டுபடாதாவராக உருவெடுத்தார் நவீன உலகின் ஊடகங்கள் அவரை பேருரு கொண்டவராக எழுந்து வர வைத்தது காரணம் அவர் என்னை விடுத்து தன் மகள்களை சார்ந்து வாழத்தொடங்கிவிட்டதை மிகத் தாமதமாக உணர ஆரம்பித்தேன் ஆனால் காலம் கடந்து விட்டது நானும் அம்மாவும் நேருக்கு நேர்ரென மோதத்தொடங்கினோம். வீட்டில் பெண்கள் பிளவுபட்டால் வீடு நரகம் . வெளியில் போகிற போக்கில் கிள்ளி விடுவது உள்ளே பிரளயமாக வெடிக்கத்தொடங்கி , உடன் பிறந்தவர்களுடனான உறவு முற்றிலும் சிதைந்து போனது

எது நடக்கக் கூடாதென்று அப்பா நினைத்தாரோ அது நடந்து முடிந்தது .

எங்கு கூடினாலும் முதலில் எழந்து செல்பவர் மற்றவர்களின் இளிவரலுக்கு ஆளானார்கள். மற்றவர்கள் எவரிடமும் இனைந்திருக்க முடியாமல் தனியெனப் பிரிந்து யாரோ ஒருவரின் தவறென மற்றவர் இனைந்து மணிக்கணக்கென பேசி வளர்த்தெடுத்தது கசப்பன்றி வேறல்ல ஒருநாள் அதற்கு தன்னையும் இரையாக்கினர். ஒன்று மறந்து விடுகிறது  அவர்களின் பிள்ளைகள் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . எந்த அறத்தை பழங்கதைகள் என புறந்தள்ளி நவீன உலகில் பிரவேசிக்கும் இவர்கள் நாளை என்ன விழுமியங்களை தன் விழுதுகளுக்கு சொல்லப் போகிறார்கள் .

நவீன உலகில் இந்திரலோகத்திற்கு இணையான இன்பத்தில் திளைப்பதாக உணரும் பெரியவர்கள் தான் இன்னும் வாழ்ந்து முடிக்காத உலகின் நுழைவாயில்களின் வெளியே அவர்களின் பிள்ளைகள் தங்கள் முறைவர வரிசையில் காத்து நிற்கவில்லை , அவர்களும் உள்ளே மௌன சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் வாழ்வியலில் வளர்ச்சிதைவு என்ன கோணத்தில் இருக்கப் போகிறது ? யார் அறிவார் .

சில சமயம் பெண்கள் தங்களின் சுதந்திரத்தை விடுதலை உணரவென நினைத்து கட்டுபாடு அற்றவர்களாக உருவெடுக்கிறார்கள் . அது அவர்களுக்கு நீண்ட கால அடைப்படையில் சிக்கலை உருவாக்குகிறது .அது அனைத்து எல்லைகளையும் அழிந்து வீங்கிப்பெருக்கெடுத்து நொதித்து நாறிப்போன ஆணவம் அன்றி பிறிதில்லை என்றானது . பின் மனித கரம் விலகி , கொடுந்தெய்வத்தின் விளையாட்டு களமென்றானது

மருமகனோட வாரா பெண்ணிற்கு பிறந்தகத்தில் சொல்லெழ பெற்றவர் அனுமதிப்பதில்லை என்பது நெறியாயின் பெற்றபிள்ளையின் சேவையை மற்றவர் இடத்து விட்டுக்கொடுத்து பேசி அனுதாபம் விலையெனப் பெறும் வயோதிகத்தாயின் புலம்பலுக்கு செவிசாய்காது எள்ளும் நீரும் கையல்லி இடும் பிள்ளையை பழிச் சொல்லெழுதலுக்கு  இடம் தாராதே என்பதும் நெறியே . அதை விடுத்து தான் சகோதரனுக்கு மாற்றென அவர்கள் கிளம்புகையில் தாயை உயிருடன் சிதையேற்றி நரகத்தில் தள்ளுபவரே .

அப்பா நலமாகி வீடு திரும்பிய சில நாட்களில் பெரியப்பா இறந்த சேதி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியை காட்டிலும் அவர் தன் கடைசி விருப்பாக சொன்ன தன் அண்ணனுடான சந்திப்பு அதை அவசியம் நிறைவேற்றுவதாக நான் கூறியது .
இந்த செய்தியால் அப்பா உடல்நிலை என்னவாகும் என மிகவும் பாதித்தது.வீட்டில் அனைவரிடமும் அப்பாவிற்கு தகவல் கசியலாகாது என எச்சரித்தேன்

அப்பாவிடம் பெரியப்பாவின் உடல்நிலை சரியில்லை , மருத்துவமனையில் இருப்பு உடல்நிலை மோசம் எனப்படிபடியாக இறந்த செய்தி சொன்னேன்

அவர் கதறியதைப் பார்த்து எனக்கேற்பட்டது குற்றவுணர்ச்சி, அம்மாவை புரிந்துகொள்ள செய்ய இயலாமை எல்லாவற்றிலும் மிகை நின்றது எந்த சந்தர்பங்களிலும் தத்துவங்களின் விசையால் எதையும் கடந்து செல்பவர் என நான் அறிந்தவரின் துக்கம் எப்படிப்பட்டதான வல்லமையாக இருக்கும் என யோசிக்கலானேன்.

முதலில் அப்பாவுடன் அம்மா இழவு வீட்டிற்கு வரமறுத்தது என்னை பற்றியெரியச்செய்தது என் கடும் வார்தைகளூடே அவர் மௌனமாக அப்பா பின்னால் வந்தார்.

அப்பாவிடம் என் வாக்கு நிற்கவில்லை பிராயசித்தமாக என் பெரியப்பாவின் குடும்பத்தினரால் வரும்  அவமானங்களை பொருத்து காரியம் முடியும்வரை அங்கிருந்து என துணிந்தேன், அங்கு எண்ணியபடி ஏதும் தவறவில்லை . இறுதிவரை அங்கிருந்துவிட்டு வீடு திரும்பினேன்

அப்பா அதற்கு பிறகு மனம் தேறியிருந்தார் . பெரியப்பாவின் இறுதி  காரியங்கள் எந்த விகல்பமும் எதிர்பார்ப்புமின்றி நான் இருந்து வந்ததை அப்பா பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் சென்றபோது தங்கைகள் அப்பாவை சுற்றி அமர்ந்திருந்தார்கள் நானும் சென்று அமர்த்தும் சற்றே சிந்தனை வயப்பட்டிருந்தார் சூழல் புரிந்து தங்கைகள் ஒருவர் பின் ஒருவர் எழுந்து விலகினர்.

தன்னிலை திருப்பியவராக அம்மாவிடம் நான் பேசியது சரியே என்றார் .

கடந்த சென்ற அந்த நாட்களில் என் தீர்மாணங்கள என்னை எங்கு நிறுத்தியுள்ளது . மூன்றாவது தமக்கை அவள் பெண்ணிற்கு இட்ட கண்ணாடி வளையலை என் மனைவிடம் திருப்ப அன்று அவர்களுக்கிடையேயான நல் உறவு அம்மா என் தமக்கையை  நோக்கி சொன்ன புண்சொற்கள் என்னை அம்மாவின் இளைய தங்கை களுக்குமான இரட்டைநிலைபாட்டென பட்டதால்.தொடங்கியது என் நரகம் .பின் வீடு கிரகபிரவேசம் , என் அம்மாவின் உளத்திரிபு என் அரவணைப்பு அவசியமற்று என் இடத்தை பெண்கள் எடுத்துக்கொள்ள .

எந்த என் நிலை குடும்மபத்தில் ஒற்றுமை நிலவ அப்பாவின் கணக்கு பொய்தல் எனத்தொடங்கி சிறு வயது தொடங்கி என் வாழ்கையை வழிநடத்தியது எது எனத் திரும்பிப்பார்கிறேன் பாலபிராயத்தை வியாபாரத்தில் நிலைநிருத்தி என் கைப்பிடித்து கடைக்கு அழைத்துச்சென்ற தாத்தா, நண்பர்களோட என் வீட்டில் கழியும் நாட்களை வீட்டின் பெணபிள்ளைகள் இருப்பதை காரணமெனக் காட்டி என்னை கண்டித்த அப்பா . அப்பாவின் மரணத்திற்கு பின் அம்மாவின் நெருக்குதலுக்கு தயங்கி புது மணநாட்களை இழந்தது அக்கா தங்கைகளின் சுயநல போக்கால் யாரும் என் உதவிக்கு வரவில்லை

தன்தவறென ஏதுமற்ற நிலையில் தன் தவறான புரிதலின்படி நெருங்கிய சொந்தங்களின் விலகல் , என்றாவது திரும்பும் அன்று நாம் சொல்லவேண்டியது பற்றிய விளக்கங்களை மனதில் பல்லாயிரம் முறை நடத்தி பார்த்திருப்போம் , இனி அந்த சந்தர்பத்திற்கு வாய்பில்லை என்பதும், அவர் தன்னைப்பற்றிய தவறான புரிதலோடேயே சென்றார் என்பது இனி ஆறாத புண்ணென இருக்கப் போகிறது.அப்பாவிற்கு நிகழ்ந்தது இதுவேதான்

பெருவிசும்பின் கண்ணியெனப்படுவது இது காலம் இயற்கை பண்பாடு வாழ்வியல் என எதை நோக்கினும் அது நம்மிடைய முரணிலைகளை முரணியக்கமென விட்டுச் செல்கிறது. அது ஒருநாளும் நம் தரப்பு நியாயங்களைக் கொண்டு மறுநிலயை நிரப்பி சமன்படுத்துதலில் நம் இழப்பை நகர்நிலை கொள்ளச்செய்யும் எனபது ஒருநாளும் நடவதாது ஏனெனில் அதுவும் சேர்ந்தே முழு உண்மை எனப்படுவது . நாம் ஏற்றாலும் நிராகரித்தாலும் .

தந்தையின் முதல் தொடுல் -1

ஶ்ரீ:

தந்தையின் முதல் தொடுல் -1




"உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன்" என்ற அப்பா வித்யாசாமாகத் தெரிந்தார், அவருடனான அந்த நெருக்கம் புது உணர்வாக இருந்தது

அது 1990 களின் தொடக்கம் இன்றைய அப்பா பிள்ளை உறவு போலன்றி எதிரில் உட்கார்ந்து பேசுவதெல்லாம் கிடையாது.ஆறு பெண்களுக்கு மத்தியில் பிறந்தவன் மிகவும் கண்டிப்புடன் வளர்கப்பட்டேன் . எனது இல்லம்.அது ஒரு வியாட்நாம் வீடு எப்போது வந்தாலும் என் மூத்த தமக்கைகள் இருவரின் சண்டை ,அதகளம் சில சமயம் ரத்தகளறியாவதும் உண்டு இதற்கு அதற்கென அல்லாது எதற்கும் சமயம் கிடைக்கும் போதெல்லாம்,இதில் இழவு MGR சிவாஜி நடிப்பு பற்றி கூட ,இவர்களுக்கு நடுவே அம்மா "பாவம் " இவர்களை அப்பாவிடம் காட்டிகொடுக்க இயலாமல் தடுக்கவும் முடியாது இவர்களின் சண்டையில் ஏதாவதொரு வகையில் தன்னை தண்டித்து கொள்வார் அடிக்கடி அம்மாவின் மூக்குத்தி உடைந்துவிடும்.இறுதியில் அப்பாவிற்கு தகவல் அனுப்பி.......அன்று அப்பா புது செருப்பு வாங்கவேண்டியிருக்கும் .இறுதியில் அம்மா தன் வயிரெரிய பெற்ற மக்களின் வாழ்கையை சீரழிக்கும்   வசவுகளை கூவி அதை முடித்து வைப்பார். விதி அம்மா யார் யார் எப்படி போவார் என ஏசினாரோ அதுவே தீச்சொலாகி அவர்களின் பிற்கால வாழ்கையில் ஊழ் என விளையாடியது . பாவம் அம்மா பிள்ளைகள்  கஷ்டப்படுவதற்காக நிகழ்காலத்தில் அழுது முந்தானையில் மூக்கை பிழிந்தது ஒரு முரண்நகை.

இதை தவிர்பற்கு வீட்டிற்கு மிக தாமதமாக வருவேன். வீட்டிற்கு வெளியே வெகு நேரம் செலவிடுவதால் நான்  அவ்வப்போது விதிகளை மீறுபனாகவும் அதற்காக கண்டிக்கபடுவதுமாக என் பதின் பருவம் கடந்ததால் அப்பா என்னைப்பற்றி " இது உருப்படாது " என்றே பொதுவில் கருத்து கொண்டிருந்தார்,ஆகவே எப்பொழுதுமே எங்களுக்குள் ஒரு இடைவெளி இருக்கும்.

தந்தைக்கு உதவியாக வியாபாரத்தில் முழுமையாக ஈடுபட்ட பிறகு என் பதின் வயது தவறுகள் எல்லாம் சிறு வயதுக் குறும்புகள் என்ற புரிதல் ஏறப்பட்டிருகலாம்.பின் எங்களிருவருக்குமான இடைவெளி மரியாதை நிமித்தமாக மிக மெல்லியதாக இருந்தது.

எனக்கும் அவருக்குமான புரிதல் வேறொரு தளத்திற்கு இட்டு சென்ற சந்தர்ப்பம் வந்தது. தந்தை மரணத்தின் வாயிலிருந்து தப்பிப்பிழைத்து உடல் தேறி வந்துகொண்டிருந்த நேரம் அது

உடல்நிலை உண்மைநிலை என்னவென்று அறியாது சென்னை ஆயிஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் . நோய்கண்டறியப்பட்டு டாக்டர் என்னிடம் விளக்குவார் என காத்திருந்த போது பாதி சிகிச்சையில் தந்தையை ஊருக்கு கூட்டிச் செல்லலாம் என்று அவர் கூறிய பிறகுதான் சூழ்நிலையின் கடுமை உறைத்தது , அவரை பாண்டிக்கு அழைத்து செல்ல மனமில்லை

எனக்குள் ஓடியது "ஒருவன் தன்னை குற்றவாளி அல்லது முட்டாள்" என ஒருபொழுதும் எண்ணலாகாது,அதைவிட தற்கொலைக்கு ஒப்பான கீழ்மை பிறிதொன்றில்லை. நம்மாலான அனைத்து முயற்சிகளையும் சரியாக செய்வது அதன் விளைவுகள் நம் கையில் இல்லை, இதுவே இன்றுவரையிலான என் கோட்பாடு . இருதய மருத்துவத்தில் சிறந்தவர் டாக்டர் சீனியர்.செரியன் அவரை சந்திப்ப்பது சுலபமல்ல பிரபலங்கள் பலருடைய சிபாரிசினால் வாய்ப்பு கிட்டியது .

மலர் மருத்துவமனை லாபியில் என்னை எதிர்பார்த்திருந்த டாக்டர் சீனியர் செரியனிடம் அப்பாவின் கோப்பைக்கொடுத்ததும் அதை நீண்ட நேரம் பரிசீலித்து பின் என்னிடம் சொன்னது அப்பாவின் நிலை சரியில்லை, நவீன மருத்துவ முயற்சியால் அவரின் காலத்தைக் கடத்தலாம் ஆனால் அது மிகவும் செலவேறிது என்பதே.

ஒருவருடம் அவர் ஆயுளை நீட்டிக்க முடியுமானால் என் இரண்டு தங்கைகள் திருமணங்களயும் அவரே முன்னின்று செய்ததாகும் எனக்கது போதுமானது. செலவைப்பற்றி கவலையில்லை என்றேன்.

சிரித்தபடி உனக்கு திருமணமாகிவிட்டதா என்றார் நான் தங்கைகளுக்கு முன் திருமணம் செய்து கொள்வதாக இல்லை என்றேன். அத்தனை காரியத்தையும் ஒரு வருடத்தில் செய்து விடுவாயா ?என்று முதுகில் தட்டிவிட்டு சிரித்தபடி சென்றுவிட்டார்.

அடுத்த நிமிடம் அப்பாவை மலர் மருத்துவமனைக்கு மாற்ற அனைத்தையும் செய்யலானேன் .மாற்றும் போது இரவு ஒரு மணிக்கு இருக்கும். டாக்டர் செரியனால் அப்பாவை எந்தெந்த மருத்துவர் பார்க்க வேண்டும் மற்றும் சிகிழ்ச்சை முறைகள் என மருந்துவ குறிப்புகள் மிக சரியாக அறிதியிட்டிருந்தார் அதன்படி அப்பா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதும் நேரே ஐசீயூவில் அனுமதிக்கப்பட்டார். பலமணிநேரம் கழித்து ஐசீயூவில் இருந்து வெளிவந்த நர்ஸ் என்னிடம் தந்தை என்னை பார்க விரும்புவதாக சொல்லிவிட்டு, பின் உன் தந்தை மிகவும் உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளார் , அவர் இருதயம் சிறு ரத்த அழுத்தத்தையும் தாங்கும் நிலையில் இல்லை பெரிதாக எதுவும் பேசாதீர்கள் என எச்சரித்து உள்ள அனுப்பினார்.

என்ன செய்வதென்று முதலில் புரியவில்லை மிகவும் குழம்பி இருந்த நாட்கள் அவை. பொதுவாக நானும் அவரும் பெரிதாக பேசிக்கொண்டதில்லை வியாபார நிமித்தமாக பேசுவது வழக்கம் அதைத்தாண்டி ஏதுமில்லை பெரும்பாலும் நான் சாப்பிட்டும் போது அவர் வந்தால் உணவுமேஜையில் அபூர்வமாக சந்தித்துக் கொள்வோம்.
நான் அவர் உணவுண்ணும் நேரத்திற்கு வராதபடி பாரத்துக் கொள்வேன் ஒரு ஆசானுக்குறிய மரியாதை சில சமயம் என் சிறு பிராய தவறுகளுக்கான கூச்சம் அல்லது குற்றவுணர்வு ஏதாகிலும் இருக்கலாம். மனித மனம் மற்றவர்களை ஏமாற்றுமுன் அது தனக்கே நடிக்கத் துவங்கிவிடும் இயல்பிலானது.அவரிடம் உடல்நலத்தை பார்த்துக்கொள்ளும்படியும் சென்னைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் ஊரில் போட்டது போட்டபடி இருப்தால் ஊருக்கு ஓரிரு நாள் சென்று வருவதைப்பற்றி பேசிவிட்டு வெளியில் வந்துவிடலாம் என ஏதேதோ முடிவு செய்தேன்.எக்காரணம் கொண்டும் தன் உடல்நிலை அவருக்குத் தெரியக்கூடாது என்பதால் என்குழப்பத்தை மறைத்து சகஜமாக உள்ளே சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் அளவிற்கு அதிகமான ஏசி முகத்தை அறைந்தது உள்ளே அவர் எப்படிபட்ட சூழலில் இருப்பார் என்கிற சிந்தனை சிறிதும் இன்றி உள்ளே சென்றதால் அவரை சுற்றியிருந்த மருத்துவ உபகரனங்களின் மிக மெல்லிய ரீங்காரமும் ஆழ்ந்த அமைதியும் என்னை தடுமாற்றமடையச் செய்துவிட்டது. அங்கு ஐந்து அல்லது ஆறு நோயளிகளுக்கான படுக்கைகள் இருந்தன ஒவ்வொன்றும் தனித்தனி பிலாஸ்டிக் திரைசீலை தடுப்புகளின் மத்தியில் நோயாளிகளின் முச்சொளி தவிர எந்தப் பேச்சும் இல்லாத்தால் அதுவே கேள்விப்பதிலென்று அவர்களுக்குள் இல்லாது யாரிடமோ ஒரு உரையாடல் போல ஒரு மன்றாடல் போல இருந்தது அழுத்தமான பலவிதமான மருந்து கலவையின் நெடி துர்நாற்றமென எதும்மில்லாது ஆரோக்கியமாகவே இருந்தது யாரோ தொடர்ந்து இருமினார் சளிக்காய்ச்சலுக்கு ஏசி எப்படி ஒத்துக்கொள்ளும் ....? சே எங்கு வந்து என்ன யோசனை நான் எப்பொழுதும் இப்படித்தான் கட்டுப்பாடில்லாது சிந்தனை ஆற்றுப்பெருக்கென ஒழுகியபடியே இருக்கும் . உடன் வந்த நர்ஸ் திரைச்சீலையை விலக்கி உள்ளே அழைத்து போனார் முகத்தை மூடிய பிராணவாயு மாஸ்க் சந்தனநிற மிருதுவான கம்புளி அடியில் அது உருத்தாதபடி தூய வெள்ளை காட்டன் துணி கழுத்து வரை போத்ப்பட்டு அப்பாவா இது?அடையாளம் காண வினாடி ஆனது.அவரைக் கண்டதும் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் . நர்ஸ் அப்பாவின் அருகில் சென்று நான் வந்திருப்பதைச் சொன்னார்.மெல்லக் கண்திறந்து என்னைப்பார்ததும், நான் எண்ணிவந்த எதையும் சொல்லும் மனநிலையில் இல்லை .இயல்பாக அவர் அருகனைந்ததும் மெல்ல மிக மெல்ல என் கரங்களை தொட்டார் , குளிர் நீரிலிருந்து எடுத்து போல் அவர் கைகள் நம்பமுடியாத அளவு சில்லிட்டிருந்தது என் உடலில் அது பரவ ஒருவித நடுக்கத்தை என் உடலில் உணர்ந்தேன் .
அந்த சிலிற்பிற்கு குளிரல்ல காரணம் என்கிற நினைவே முதலில் எழுந்தது . ஆம் என் நினைவு தெரிந்த நாளாக அப்பா என்னை தொட்டதே இல்லை என்கிற நினைவெழுந்தது . அவர் தொடுதலில் இருந்த ஒரு செய்தி சகல புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிலிர்பு வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு தந்தையின் தொடல். அந்த முதல் தொடலை உலகின் வேறு எந்த "முதலுடனும்" ஒப்பிட இயலாது.

அவருக்கும் என் நினைவு தகவல் உறுவெடுத்து அவருள் பரவியிருக்க வேண்டும் . ஆம் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் அவர் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் என் மார்பில் வழிந்து கொண்டிருந்தது அங்கு ஒரு சொல் எழவில்லை.அவர் கண்ணீரை நான் கண்டதில்லை,நானும் உணர்வின் மிகுதியால் அழுததாக நினைவில்லை, சிறிது நேரம் கழித்து தான் அந்த விபரீதமான பீப் சப்தத்தை உணர்ந்தேன் அப்பா எங்கோ மூழ்கிக்கொண்டிருப்து புரிந்தது.நரஸ் என்னிடம் கடுமையாக ஏதோ கூறி என்னை வெளியில் கொண்டுவிட்டார்.

நான் சமநிலை அடைய சிறிது நேரம் ஆனது.எங்கிருந்தோ ஒரு அசைக்க முடியாத ஒரு எடைமிகுந்த அமைதியால் சூழப்பட்டிருந்தேன்.என்னால் யோசிக்க முடிந்த அந்தத் "தெளிவு" ஆச்சர்யமயமானதாக இருந்தது.அவர் உடல்நிலை தேறி வெளிவருவார் என்கிற அழுத்தமான நம்பிக்கையை எங்கிருந்துப் கிடைக்கப் பெற்றேன் எனத் தெரியவில்லை.என் நினைவுகளின் அடுக்குகளிலும் அதன் ஒவ்வொரு செதில்களிலும் படிந்திருந்தது "அந்த தந்தையின் தொடுதல்" பற்றிய பிரக்ஞை ஒன்றே.

புரிதலின் தகவல் மொழி வடிவியல் கொண்டதல்ல ,அரூபமாக உணர்வினால் வெளிப்படுக்கையில் அது ஆழ்மனத்தில் படிமங்களென படர்வது அத்துடன் உரையாடும் சக்தி கொண்டது. மொழிக்கும் மொழிதலுக்கும் அப்பாற்பட்ட உணருதல் என்றிருப்பது ,பிரபஞ்சத்தையே சிறு செய்திக் குறியீட்டினென கடத்தக்கூடியது காலப்பரிமாணத்திற்கு உட்படாதது , அப்பாற்பட்டது.

நாயின் புரிதல் தன்னை கண்ட ஒருவன் கீழே குனிந்ததும் ஓடத்துவங்குவது "இவன் தன் மீது கல்லெறிவான்" என்று எந்த மொழியில் சிந்தித்து தன் செயலை முன்னெடுக்கிறது.

சட்டென அம்மாவை பற்றிய சிந்தனை வந்தது மிக எளியவர் அந்த மருத்துவமனையின் வராண்டாவின் இறுதியில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தார் அப்பாவின் நிலையை அவரிடம் கூறமுடியாது இனி அப்பாவிற்கான பணிவிடைகளை நர்ஸே பார்துக்கொள்வார்கள் இனி உள்ளே செல்வதென்பது நடவாது என எவ்வளவு சொல்லியும் அவர் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.ஒருவாறு சாமாதானப்படுத்தி ராயபுரத்தில் உள்ள என் நண்பன் கணேசன் வீட்டிற்கு வரும் போது பொழுத புலரும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

மனதில் இனம்புரியாத ஓர் மகிழ்வு ,துடைத்து விட்டது போன்ற மனது நிகழ்காலத்தின் யதார்த்தத்திற்கு சற்றும் பொருந்தி வாராது தனித்த தாளகதிக்கு சென்று கொண்டிருந்தது. மிச்சமிருந்த இரவு தூக்கமில்லாது கழிந்தது.

எங்களுக்குள் பொதுவான பேச்சோ அரட்டைகளோ இருந்ததில்லை,அவர் மேல் எனக்கு பெரும் மதிப்பு இருந்தது ஆனால் சந்தர்ப்பங்களில் அவை வெளிப்படுகின்றன.என்னைப் பற்றிய அவர் அபிப்பிராயங்களை அம்மாவிடம் சொல்லுவார்.அதை ஏன் அவனிடம் சொல்லமாட்டேன் என்கிறீர்கள் என அம்மா கேட்டதற்கு , விருந்தினரை வந்து சென்றபிறகும் ஆச்சார்யனை நேரிலும் கொண்டாடு.பிள்ளையை ஒருநாளும் கொண்டாடாதே இது சஸ்த்திரம் என்பார்.

பழக்க வசத்தால் இரவு முழுவதும் அம்மா பால், நொய்கஞ்சி பிளாஸ்க் என ஏதெதையோ உருட்டிக்கொண்டிருந்தார் அவருக்கு மறுபடி புரியவைக்க முயற்சிக்கும் வேலை நமக்கே விபரீதமாக முடியலாம்.அவரை அவர் உலகில் விடுவதே இப்போதைக்கு செய்யக்கூடியது

காலை மீண்டும் மலர் மருத்துவமனை.அருகில் நெருங்கும்போது முதல் நாள் தெளிவு காணாமல் ஆகிவிட்டுருந்தது,மறுபடியும் பதற்றம் எழத் தொடங்கி இருந்தது.நாடகத்தனமாக ஏதாவது சொல்லி விடுவார்கள் என ஏதோ ஒன்று உள்ளே எதையோ உடைத்துக்கொண்டே இருந்தது.மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக இருந்தது.மன அழுத்தத்தை வாயால் பெருமூச்சாக விட்டுக்கொண்டு இருந்தேன்.

நான் அடையாள அட்டையை காட்டி லிப்டு வழியாக மேலே சென்று கொண்டிருந்தேன்.பக்கத்தில் சிறு சப்தம் வந்ததும் சிந்தனையிலிருந்து விடுபட்டு அம்மாவைப் பார்த்தேன் சூழ்நிலையை புரியாது கட்டைப்பையில் கொண்டு வந்திருந்த பொருட்களை சரிபார்துக்கொண்டிருந்தார் லிப்டின் கதவுகள் திறக்கும் வரை எந்த சிந்தனையும் எழாதே அம்மாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன்.

லிப்ட் திறந்ததும் உள்ளே நுழைய இருந்த டாக்டர் செரியனைத்தான் முதலில் பார்த்தேன்.நட்புடன் சிரித்தார்,தோளில் தட்டி ஊருக்கு சென்று ஆகவேண்டிய வேளைகளைப் பார் உன் அப்பா தப்பிவிட்டார், ஆச்சர்யம்தான் எனக்கூறிவிட்டு சென்றார்.ஆழ்மனத்தில் இதை எதிர்பார்த்திருந்தேன் மகிழ்வாக இருந்தது ஆனால் அதிக நேரம் அது சிந்தனையில் நிற்கவில்லை அடுத்து என்ன யோசிக்க ஆரம்பித்தேன்.

இரண்டு நாள் கழித்து வார்டுக்கு மாற்றிவிட்டனர் என புதுவையில் இருந்த எனக்கு தகவல் வந்தவுடன் சென்னைக்கு புறப்பட்டேன்.

வார்டில் பார்த்த அப்பா வேறுமாதிரி இருந்தார் மிக கணிவானவராக தெரிந்தார் சிரிப்பு மாறியிருப்பது உணரமுடிந்தது.எல்லாம் சரியானது போல் இருந்தது ஆனால் அந்த மாற்றத்தை கூச்சத்துடனே என்னால் அனுக முடிந்தது,எந்த மாற்றமும் இல்லாத பழைய வாழ்கைக்கே சென்றால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.அம்மா வழக்கம்போல் சாத்துக்குடிப் பிழிந்துகொண்டிருந்தார்.மருத்துவமனைகள் நட்சத்திர அந்தஸ்திற்கு மாறிக்கொண்டிருந்த காலம். எங்கும் எல்லாம் சுத்தமாக இருந்தது மருத்துவமனைகளுக்குறிய சிடுசிடுப்பின்மை அனைவரிடமும் பொருமையான பதில்,அம்மா ஏதேதோ வியப்பாக பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு எல்லாவற்றையும் பிரமாதமானதாகச் சொல்லி கொண்டே இருத்தல் சுபாவம்.

மாலை திரும்பவும் மலர் மருத்துவமனைகள் வந்தபோது முதல்நாள் இருந்த பரபரப்பு இல்லாமையால் மனம் சலனமற்று இருந்தது மருத்துவமனையை சுற்றிலும் நோட்டமிட்டபோது.மருத்துவத்துறை சேவைமுறை வெகுவாக மாறிவருவது தெரிந்தது.ஆனால் பெரிதும் வித்தியாசமாகத் தெரிந்தது வரவேற்பு நுழைவாயிலில் இருந்த அந்த பிரமாண்டமான விநாயகர் சிலை.அந்த காலகட்டத்தில் கிருத்துவ மருத்துவமனைகள் தான், அரசாங்க மருத்துவமனைகளுக்கு மாற்று ஆனால் இந்து விநாயகர் தனித்து தெரிந்தார்.கிருத்துவ மருத்துவமனைகளில் ஒருவித பள்ளி ஒழுங்கியல் கட்டுபாடு தெரியும் வெள்ளையும் அடர் நீலமும் பட்டை பட்டையான சுவர்களுக்கு பதிலாக நவீன டையிலஸ் ஒட்டப்பட்டிருந்தது எங்கும் கண்ணாடிக்கதவுகள் கண்டிபில்லாத சேவை கால மாற்றம் பெரிதாக தெரிந்தது.

நான்காம் மாடியில் தனி அறைக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.உள்ளே அறையில் அப்பா தனியே இருந்தார்.அம்மாவை கேட்டேன் வெளியே பஜாருக்கு சென்றிருப்பதாக கூறிச் சிரித்தார் சென்னை வாழ்கை அவருக்கு களியாட்டமாக இருந்திருக்கும்.பிரச்சனைகளின் அழுத்தம் உணராது வாழ்வது என்பது ஒரு வரம்.அது அவருக்கு வாய்த்திருந்தது.

அப்பா தன் அண்ணன் தன்னை சந்திக்க விரும்புவதாக ஆள் மூலம் சொல்லி அனுப்பி இருப்பதாக சொல்லி அம்மா வாயிக்கு பயந்து மறுத்துவிட்டதை சொன்ன போது கண்களில் அடிபட்ட வலி இருந்தது.

எனக்கு சொல்லி அனுப்பி இருக்கலாமே அம்மாவை நான் பார்துக்கொள்கிறேன் நீங்கள் பெரியப்பாவை வரச்சொல்லுங்கள் என்று சொன்னதறகுதான் அப்பா மெல்ல இப்படி சொன்னார்.

"உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன் என்று"

உலகின் நிகழ்வுகள் அனைத்தும் ஊடுபாவுகளாக கொண்டு நெய்யப்பட்ட வலையை போல என்னிலடங்கா முடிச்சுக்களின் தொகுதி.ஒங்வொரு நிகழ்வும் ஒரு கண்ணிகளாக்கப்பட்டு மனித வாழ்கையின் போக்கை முடிவுசெய்வதாக, ஊழென இக்கண்ணிகள் முடியப்படுகிறது . அது மனித தவறென்ற புரிதல் சிடுக்குகளால் உறவுகளின் மத்தில் விழும் முடிச்சுக்களை மனித முயற்சி கொண்டு வாழ்நாளில் சரிசெய்து விட முடிகிறது.ஆனால் ஊழின் கைகளால் இடப்படுகிறது சில முடிச்சுக்கள் அது பெருவிசும்பின் ஆடல்களமென்றாகிறது அங்கு எந்த தீர்வுகளுக்கும் தர்மத்திற்கும் நியாயத்திற்கும் சட்டத்திற்கும் யாதொரு நெகிழ்வையும் அது காட்டுவதில்லை.எளிய மனித மனம் அக்கண்ணியில் சிக்குண்டு காலமெல்லாம் இங்கு மண்டியிட்டு கரைந்து போகின்றது.பகவத் சங்கல்பமாக சிலர் அந்த கண்ணியை கடந்து அதற்கான தீர்வையும் வெகுமதியையும் வேறொரு கண்ணியில் கிடைக்கப்பெறுகின்றனர் ஊழ் நமக்கு சொல்வது எதையும் கடந்து செல் என்பதே.பயணம் தொடரட்டும் என்பதே.

அப்பா முகக்குறிப்பிலிருந்து என்னவோ சொல்ல விழைகிறார் எனத் தெரிந்தது.பொருத்திருந்தேன் மெல்லப்பேசத் துவங்கினார்.

அப்பா தன் அண்ணன் தன்னை சந்திக்க விரும்புவதாக ஆள் மூலம் சொல்லி அனுப்பி இருப்பதாக சொன்னார்.

சுமார் இருபது ஆண்டுக்கு முன் சிதைந்த உறவு பெரியப்பாவிற்கு எப்படியும் எண்பது வயதை ஒட்டி முன் பின் இருக்கக் கூடும்.இருவருமே மரபான தந்தையால் வளர்கப்பட்டவர்கள் இன்னதென்று சொல்ல இயலாத ஓர் கசப்பு பொருளியல் சார்ந்து எழுந்து வந்தது, அப்பாவின் அண்ணன் பள்ளி வாத்தியாராக இருந்தவர்.வியாபாரத்தில் நாட்டமில்லாதவர்.அப்பா அவர் தந்தையின் பாரம்பரிய வியாபாரத்தை செய்ததுடன் புதிய முயற்சியாக பலவற்றை இனைத்து குடும்பத்திலும் சமூகத்திலும் தனித்து அறியப்பட்டார்.பெரியப்பாவின் கசப்பின் வேர் பொருளியல்  மற்றும் சமூகம் சார்ந்ததாக இருந்திருக்கலாம்.

சிறுசிறு சச்சரவுகள் எனத்தொடங்கி இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தவிர்க்க வீட்டு பெண்கள் முனுமுனுப்பின் மூலம் அது பிள்ளைகள்வரை நின்று விளையாடியது. இனி சேருவறென்பது இல்லை என்ற நிலையை அடைந்த பிறகுதான் அப்பாவிற்கும் பெரியப்பாவிற்கும் பிரிவின் கடுமை புரிந்திருக்கலாம் . அவர்கள் இருவருக்கும் இடையே மனப்புரிதல் இருந்திருக்கலாம்.அப்பா பெரியப்பாவின் கிடங்கில் வாடகைக்கு இருந்தார் அதை காலி செய்யக்கூறி அப்பாவிடம் பெரியப்பாவின் பிள்ளைகள் நடந்து கொண்ட முறை இருவருக்குமான இடைவெளியை பள்ளத்தாக்கென விரித்துவிட்டது.

என் அம்மா அனைவருக்கும் ஏதாவொரு வசைச் சொல்லை குறியீட்டு பெயாராக இட்டுவதில் நிபுனர் பின் அதுவே அவரகளின் இயற்ப்பெயராகிப்போகும்.

காலம் ஓடிவிட்டது வயோதிகத்தில் அவர்களின் இருண்ட பகுதிகள் நிழலென அவர் கால்களில் ஒட்டிக்கொண்டு ஓயாது தொடர்ந்த வண்ணம் இருந்தன.

அப்பாவிறகு பெரியப்பா மீது பெரும் மரியாதை இருந்தது அக்காலத்தில் வீட்டுக்கு மூத்தப்பிள்ளை தந்தை ஸ்தானம் என அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் வயோதிகமும் நோயும் பெரியப்பாவை கனிவுகொள்ள வைத்துவிட்டது.

பெரியப்பாவின் சந்திக்கும் விருப்பத்திற்கு என்ன சொன்னீர்கள் என்று கேட்டதற்கு கண்களில் நீர் திறள உன் அம்மாவை யார் சமாளிப்பது மருத்துவமனையில் ரகளை செய்து உண்டுயில்லை என்றாக்கி விடுவார் உனக்கு தெரியாதா? என்றார். நானும் அதை அறிந்தே இருந்தேன், இருப்பினும் அவரின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது.

எனக்கு சொல்லி அனுப்பி இருக்கலாமே அம்மாவை நான் பார்துக்கொள்கிறேன் நீங்கள் பெரியப்பாவை வரச்சொல்லுங்கள் என்றேன்.

உன் அம்மாவை பற்றி உனக்கு என்ன தெரியும் நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன் என்றார்.

என்னுடைய பதின் பருவத்தில் அப்பாவிற்கிடையான என் உறவு சுமூகமானதாக இருந்ததற்கு அம்மாதான் காரணம்.எங்களிடையே அவர்தான் தூதுவர்.எனக்காக வசைகளை அவர் பெற்றுக்கொண்டு என் காரியங்களை சாதித்துக் கொடுப்பார்.

அம்மாவை பற்றிய அப்பாவின் இந்த அபிப்பிராயத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.நான் முதல் முறையாக அப்பாவை மறுதலித்தேன்.

அந்த காலகட்டத்தில் அம்மா செயல்பாட்டில் எப்பொழுதுமே பதட்டமான ஒரு மிகை உணர்வு கொப்பளிக்கும் நான் அவருக்கு இஸ்டீரியா போல ஏதோ ஒன்று என நினைத்திருந்தேன்.அதற்கு அப்பாதான் காரணம் என்ற முடிவிலிருந்தேன்.அதைத்தான் அப்போது அவரிடம் சொன்னேன்.

அம்மாவின் மனவழுதத்திற்கு அப்பாதான் காரணம் என்றேன் அம்மாவின் கருதுக்களுகோ அபிப்பிராயத்திற்கோ எந்த முக்கியத்துவம் கொடுத்ததிலை ஹிட்லர் போலத்தான் நடந்து கொள்வார்.ஆனால் அனைத்தையும் மீறி அவர் ஒரு அற்புதமான ஆளுமை என்கிற கருத்துரு எனக்கு ஏற்படாத காலம்.

மெல்லச் சிரித்துக்கொண்டார் உன் அம்மாவை பற்றி உனக்குத் தெரிந்ததை விட எனக்குத்தெரியும் என்றார்.இது ஒரு அசட்டுத்தனமான பேச்சி நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அம்மாவை அவருக்கு தெரியும்தான் யார் இல்லையென்றார்கள்.இப்பொழுது அதுவா பிரச்சனை என நினைத்தேன்

ஆனால்  இப்படி தட்டையாக தன் வாதத்தை வைப்பவர் அல்ல அவர். எனக்குத் தெரிந்த முதல் சிறந்த இலக்கியவாதி அவருடைய புத்தக அலமாரி எனக்கு புரியாத புதிராக இருந்த காலம் உண்டு. ஆனால் இலக்கியத்தில் அது இன்தென்று அறியாது கதையாக பார்த்த காலம் அது இலக்கியமென பரிணமித்தது பிறகுதான்.

திரு.ஜெயகாந்தனின் சிறு வயது தோழர் அவருடைய இலக்கிய தொடர்புகள் நா.பார்தசாரதி, இந்தரா பார்த்தசாரதி தகழி கி.ரா,பிரபஞ்சன் லா.சா.ரா தி.ஜானகிராமன் கோர்கி போன்றவர்களின்  ரஷய்பொழிபெயர்பு நூல்கள் நியு சென்சுரி நிருவனம் சாகித்ய அக்கெடெமியின் புத்தகங்கள் உளவியில் புத்தகங்கள் இப்படி என் சிறுவயது ஞயாபகம்.

எனக்கு தெரிந்து அப்பா திரவிடக் கழக அபிமானி.தாத்தா நேரெதிர் தாத்தா செய்து வைத்த மணக்குள விநாயகர் விக்ரகம் வருட மாசி மகத்தன்று வீட்டிற்குள் வரும் அய்யர விபூதி தரும்போது கைபடாமல் எடுத்து நெற்றிபடாமல் இட்டுக்கொள்வார்.

தாத்தா பெரிதா திருமண் இட்டிரிப்பார் சைவ வைஷ்ணவ அபேதமாக இருப்பார்.

அப்பாவிற்கு வைஷ்ணவத்தில் ஈடுபாடு ஏற்பட்டதில் அலமாரி வைஷ்ணவ சாஸ்த்ர புத்தகஙளாக நிறைந்து வழிந்தது மணிப்பிரவாள எழுத்துக்களுடன் ஏதோ கல்வெட்டு ஆரய்ச்சி மாதிரி இருக்கும் . சிகப்பு மையில் நிறைந்த அடிக்கோடிட்டு வரிக்குதிரை மாதிரி இருக்கும்.

நிறைய வைஷ்ணவ தர்க புத்தகம் சாஸ்திரம் என நிறைய எழுதியிருந்தார்

அவரிடமிருந்த ரசிப்புத் தன்மையானது அவரை தனித்துக் காட்டியது அதுவே அவரது வாழ்கைமுறையானதாக அப்பழுக்கில்லாதாக இருந்தது அதுவே அவர் ஆளுமையின் காரணம் என நினைக்கிறேன்.

அம்மாவை பற்றிய அவரது கருத்து எனக்கு ஏறபுடையதாக இருக்கப்போவதில்லை இருந்தும் அவர் என்ன நினைக்கிறார் என அறிய விரும்பினேன்.அவருடன் அமர்ந்து பேசுவது இனிதானதாக இருந்தது

உன் அம்மா இஸ்டீரியா நோயாளி அல்ல.ஆனால் தான் நினப்பதை மற்றவர்கள் செய்யவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்.நினைத்ததை பேசக்கூடியவர் மற்றவர் மனவருத்தத்தை பற்றிய கவலை அற்றவர் என்று கூறினார்  இது சாதாரணமானவை என நான் கூறியதற்கு.ஆம் அனால் நீ கற்பனை செய்ய இயலாதது அதன் பரிமாணமும் வீரியமும்.அது சற்று சரியாக நிர்வகிக்கவில்லை எனில் அது வாழ்வியலை வேரொரு தளத்திற்கு கொண்டு சென்று விடும்.

யாரைப்பற்றியும் நல்ல அபிப்ராயங்களை அவர் வளர்த்து கொள்வதில்லை.சில பேரிடம் அவருக்கு இருக்கும் தொடர்புகள் கூட நீண்ட ஆயுள் கொண்டதல்ல என ஏதேதோ கூறிக்கொண்டேயிருந்தார் நிறைய தர்க்க சாஸ்திரத்திலிருந்தும் சிகமென்ட் பிராயடு உளவியல் குறித்து நிறைய பேசினார்.எனக்கு அவை எளிதில் புரியாததாகவும் குழப்பமாகவும் ஜீரணிக்க முடியாத்தாகவும் இருந்ததால் ஒரு வித மனவழுத்தத்திறகு ஆளனேன்.

நெடுநேரம் ஆகி விட்டிருந்தது அவர் பேசி முடித்ததும் நான் கேட்டேன் நீங்கள் அம்மாவை வெறுக்கிறீர்களா என்று.

மென்மையாக சிரித்தபடி நீ இப்படித்தான் கேட்பாய எனத் தெரியும் காரணம் உனது இளமனது அது குழம்பிப் போனால் இத்தகைய எளிய கேள்விகள் மூலமாக தன்னை தொகுத்து கொண்டு எதிர் கேள்வி மூலம் எதிரியின் அடிபடையை தார்மீகத்தை அசைக்கும் கேள்வியைத்தான் அது முன்னெடுக்கும் என்று கூறிவிட்டு பிராய்டில் இருந்த ஒரு கோட்பாட்டை சொன்னார்.எனக்கு சத்தியமாக புரியவில்லை.

ஆனால் அவர் சொன்னதை இப்படித் தொகுத்துக் கொண்டேன். அப்பா சொன்னார் நான் சரியாகத்தான் வாழ்ந்தேன் மனிதர்கள் குணங்களின் தொகுப்பு நேர்மறை எதிர்மறை சமநிலை எனப்பிரித்து கொள்ளாம். அம்மா எதிர்மறை பிரிவு ஆனால் நான் என் மனைவியை ஆரம்ப காலத்திலேயே மிகச்சரியாக புரிந்து கொண்டதால் எனக்கு உளவியல் சிக்கல்கள் எழவில்லை, ஆகவே நான் நேர்மறையாக என் செயல்களைத் தொகுத்துக்கொண்டேன் அது ஏறக்குறைய குழந்தையிடம் தந்தை நடந்து கொள்வதைப்போல எளிய உத்தரவுகள் வழியாக நடத்திச்செல்வது,மீறமுடியாது என்கிற ஓர் எண்ணத்தை உருவாக்கி விடுவது மீறினால் என்ன நடக்கும் என்பதை அவரின் கற்பனைக்கு விட்டுவிடுவது.நமது நேர்மறையான குணங்களைக் கண்டபின் தண்டனை வகைகளை அதுவே வகுத்துக் கொள்ளும்.அவர் வரம்பு மீறிவிட்டால் இது அத்தனையும் வெறும் பாவனை எனப் புரிந்துவிடும்.அது குடுவையை திறந்து வெளிவந்த பூதம் கதைதான்.சமாளிக்க முடியாது என்றார்.

மிகைப்படுத்துகிறார் என நினைத்தேன்.அப்பா புரிந்து கொண்டார்.உனக்கு உன் அம்மா திருவண்ணாமலை அக்கா வீட்டில் அடித்த கூத்து ஞாபகம் இருக்கிறதா என்றார்.

எனக்கு உள்ளுக்குள் ஏதோ நடுங்கியது.

வீட்டில் என் தங்கைகள் சிறுமிகளா இருந்தனர்.திருவண்ணமலை அக்கா குடும்ப சிக்கல், என்அக்கா எதற்கும் ஒத்து வராத பிறவி சிடுக்குகளிக்கு பஞ்சமில்லை மூத்த மாப்பிள்ளை மீது அப்பாவிற்கு பிரியம் அதிகம்.எதாவதொரு காரணம் சொல்லி வீட்டுக்கு வரும் அக்காவை அப்பா பிடித்து தள்ளாத குறையாக அனுப்பினாலொழிய புகுந்த வீட்டிற்கு புறப்படாள். தனியாக பஸ்சில்  செல்வதற்கு பயம். நான்தான் பலியாடு.ஒவ்வொரு முறையும் அந்த வீட்டில் நுழையும் போது மிகவும் திகிலடைந்து இருப்பேன்.அது மிக சாதாரணமான விவசாயக் குடும்பமும் எளிமையானவர்கள்.அக்கா அங்கு சும்மா இருந்தால்தான் உலக அதிசயம்.முட்டாள் முரடு நாளை எழும் சிக்கல் உணராது வாழ்வு இன்றே முடிவுறும் என பேசி விடுவார்.அவள் என் வீட்டிற்கே அடங்கியதில்லை.அப்பாவிற்கு தெரிந்த எந்த வித்த்தையும் அக்காவிடம் எடுபட்டதில்லை.

பள்ளிவிட்டு வீட்டிற்கு வந்தால் அதகளம்.அழுது வீங்கின முகமாக அம்மாவை பார்பது வலிமிகுந்ததாக இருக்கும்.வயதில் சிரியவன் இதில் ஊடுபாவ முடியாது.மோதல் என்வரையில் வராதிருக்க ஒரு முகத்தை வைத்துக்கொள்வேன்.

இதில் பொறுக்க முடியாதது எழவு அக்காவின் தன் புகுந்த வீட்டு பற்றிய குறை.அக்காவிடம் எதை எதிர்பார்த்து மாமா கல்யாணம் செய்து கொண்டார், புதிர்தான்.அதன் பிறகு அவர் வாழ்கை இன்றுவரை நரகம்.

திருவண்ணமலை சிக்கல் எனக்கு புதிதல்ல எனினும் அம்மாவின் பதட்டமும் அழுகையும் இன்று விபரீதமாக இருந்தது.தன்னை பஸ் ஏற்றிவிடும மன்றாடினார்.தகவல் எனக்கு தெரியாது. அப்பா ஏற்கனவே திருவண்ணமலை சென்றிருபதால்.இது வீரியம் கூட்டியதால் எனக்கு திகிலாக இருந்தது.ஒன்றும் சொல்ல முடியாமல் அவரை பஸ் ஏற்றிவிட்டேன்.இதைவிட மடத்தனமானது பிரிதில்லை என பிறகுதான் உணர்ந்தேன்.

அம்மா ஊர்திரும்பிது அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி இருக்கும் என்று என் தங்கை சொன்னால் சொன்னாள்.விபரீதமாக ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது என மனது பதைக்கத் தொடங்கியது.

இரண்டாவது தங்கைதான் சமையல் அறையில் இருந்தாள் முதலில் அவளை கேட்டதற்கு இந்த பைத்தியம் அங்கு சென்று என்ன செய்துவிட்டு வந்திருக்கிறது என்று அப்பா வந்தால்தான் தெரியும் என்றாள் நான் வயிற்றில் கலவரமாக உணர்ந்தேன். அம்மா முன் அறையில் உட்கார்ந்து தனக்குத்தானே பேசிக்கொள்வதும் அழுது சிவந்த முகமுமாக இருந்துந்தார்

அது அவரது இயல்பு,எதையுமே மிகை படுத்துவதும் அதையே பேசுவதுமாக இருப்பார்.கிட்டே நெருங்கியதும் பெரிதாக குரலெடுத்து அழ ஆரம்பித்தார் எனக்கு அனுதாபத்தை காட்டிலும் வெறுப்பு பற்றிக்கொண்டு வந்ததுடன் அப்பா வந்தால் இவரை பஸ் ஏற்றி விட்டதற்கு தனியாக வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டும் என்கிற பயமுமாக அவர்மேல் எரிந்து விழுந்தேன்.

அழுகையினூடே அவர் சொன்னது முதலில் எனக்கு புரியவில்லை.என்குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்துவதாக இருந்து.செய்தி திருவண்ணாமலை அக்காவை மாமாவீட்டார் கொலைசெய்து புதைத்து விட்டனர் என்றும் அதை தான் தேடிப்பார்த்து விட்டு திருப்பி வந்துவிட்டதாகவும் சொன்னார்.எனக்கு அடிவயிறு பகீரென்றது சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. நான் அம்மாவிடம் அப்பாவையும் மாமாவையும் பற்றிக் கேட்ட பொழுது அவர்களை தான் பார்க்கவில்லை என்றார்.அம்மா அங்கு சென்ற போது அப்பா ஏன் அங்கு இல்லை என்பதும் அம்மா மறுபடியும் பஸ் படிக்க மணி ஒன்று ரெண்டாயிருக்கும் அதுவரை அப்பா அக்கா மாமா எங்கு சென்றிருபாரகள்.தலை வெடித்துவிடும் போலிருந்தது.

தங்கை சொன்னது சரிதான் பைத்தியம் இது என்ன செய்து தொலைத்திருக்கும்? பகாவானுக்கே வெளிச்சம்.

இன்றும் எனக்கு ஆச்சரயமாக இருப்பது அப்பாவின் அந்த ஆத்ம பலம் அது கடும் கோபமென வெளிப்படுக்கையில் வீட்டின் ஒவ்வொரு செங்கள்லும் தகிக்கும் அதுவே குடும்பத்தை திரும்பவும் நெறிப்படுத்தும்.கடும் சொற்கள் செய்ய இயலாத விளைவுகள் அவர் ஆழ்ந்த மௌனம் சாதிக்கும்.

ஆனால் இது அதைவிட அனலென அப்பா தகித்துக்கொண்டிருந்தார் யாரும் அருகில் செல்லத் துணியவில்லை.அம்மா வேரொரு முனையில் பித்துப்படித்தாற் போலிருந்தார்.இதுபோன்றதொரு அசாதாரமாண சூழல் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அறியாதது ஏறக்குறைய மனப்பிழைவு நிலையின் அருகில் நின்றிருந்தார்.

இது உடன் முடிவுக்கு வாராது போனால் என்ன நிகழும் என யூகிக்க இயலவில்லை.ஒருவாறு தேற்றிக்கொண்டு அப்பாவின் அருகனைந்ததும் என்னை கண்டு சிறிது கனிந்தாற் போலிருந்தார்.

அம்மா திருவண்ணமலைக்கு சென்றது அங்கு சொற்களுக்குள் அடங்கா அநர்த்தம் நிகழ்ந்துள்ளது எனப் புரிந்துள்ளது.கவலை என்னவெனில் ? நான் தான் அம்மாவை திருவண்ணமலைக்கு பஸ்சில் ஏற்றியது.முதல்
செருப்படி எனக்குதான் விழும் என்பதற்கு யூகம் தேவையற்றது.

இருந்தும் யாராவது அதை வாங்கித்தானாக வேண்டும் எனக்கு புதிதல்ல செய்த செய்யாத தவறரென அனைத்திற்கும் வாங்கி இருக்கிறேன்.ஆனால் இன்று அப்படி அல்ல எங்களூடேயான பழைய இடைவெளி பெரிதன்று,எனவே பேசத்தொடங்குமுன் என்னை உட்காரச் சொன்னார்.

மிகவும் பண்பட்டவர், எனக்கு அவர்தான் "ரோல்மாடல்" பல சந்தர்பங்களில் யாரும் எதிர்பாரத வகையில் அவரின் கண்ணியமும் நேர்மையும் பார்தது நான் வியந்து போனதுண்டு.

எந்த சபையிலும் கம்பீரமாக அமர்ந்திருப்பார்,யாரும் அவரிடம் மிக மரியாதையாக நடந்து கொள்வர்.இது என் தாத்தா காலம் முதற்கொண்டு நான் பார்த்து வருவது அரும் சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் இருந்தவர்  பாண்டிச்சேரியை சுற்றி நூறு மைலுக்கு தாத்தா பெயரைச் சொன்னால் தெரியாதவர்கள் அறிது .இன்றும் அப்படித்தான்.

அப்பா உன் அம்மா நம் குடியையும் என்மானத்தையும் கெடுத்தாள் என்றார்.

புதன், 21 செப்டம்பர், 2016

வாழ்வெனும் நதி

வாழ்வெனும் நதி 



மழை - அது துளித் துளியாய் பொழிவதற்கு கடலும் கருமேகமும் தொடக்கம் என்றபோதும் , அது மீண்டு கடலை சரண் புகுமுன் பூமியை நனைத்து நதியென பிரவகித்து மனல் அரித்து சென்றாலும், சில கூழாங்கற்களை விட்டுத்தான் செல்கிறது.அவை தான் சொல்ல விழையும் பொருளை நம் வாழ்வின் தருணத்திற்கேற்ப நமக்கு ஓர் புதிய புரிதலை கொடுக்கிறது.

வாழ்வின் தொடர் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்றை பொருத்தி பார்க்கும் போது சில சமயங்களில் அதற்கு ஒரு அதீத அர்த்தம் புலப்படுகிறது.

அம்மா சொல்வார் தன் மாமனாரின் ஆசியே தன் வாழ்வியலில் நலத்திற்கு காரணம் என. ஆனால் அதை தன் வாழ்வில் எப்படி கையாண்டார் என்பது விவாதத்திற்குறியது. எப்படி எனினும் அவர் சொன்னது சத்தியம்.பெரியவர்களுக்கு அவர்களின் வயோதிகத்தில் அவர்தம்பிள்ளைகள் செய்யும் உதவிகளுக்கு, அவர்கள்  தரும் ஆசி மிக சக்தி வாய்ந்தது,

தீச்சொல்லும் அவ்விதமே.


வாழ்கையில் பெரிதும் குழப்பிக்கொண்டது இது பற்றிதான், அது என்னை தடுமாற்றமடையச் செய்தது. ஆனால் சில கோட்பாடுகளின் அடிப்படையில் அதைக் கடந்து தாண்டினேன்.

அப்பாவின் ஆசி எனக்கானது, ஆனால் அம்மாவிடம் அது எவ்வகையிலும் கிடைக்கப்போவதில்லை அது என் ஊழ்.
என் தந்தை எனை பற்றிய புரிதல் தவறானதென தன் இறுதிக்காலத்தில் சொன்னார் என நான் கேட்டதுண்டு,
அவ்வாறு என் தாய் சொல்லப்போவதில்லை.

உலகம் தாய்க்கு கொடுக்கும் அங்கீகாரம் அபரிதமானது ,அதை எக்காலத்திற்கும் எவறாலும், அத் தொகுப்பிலிருந்து ஒருவரைக்கூட விலக்க முடியாது . அப்படியானால் நான்  என் தாயுடனான விலக்கலை எங்கனம் புரிந்துகொள்வது.
அவர் குண இயல்புகள், பொதுவானதா அல்லது தனிப்பட்டதா.


தந்தைக்கு தன் மகனின் மரணம் அவனது தாயைவிட ஆகப் பெரியது என்பர் .தாய்க்கு மகன் உறவைப் போன்றதல்ல தாய் மகள் உறவு அது இன்னும் விவரிக்க இயலாதது , மிக நுண்ணிய பல மடிப்புக்களால் ஆனது .
மிக ஆழமானது.

மகள்களின் உலகில் மருமகள் எனப்படுபவள் எப்படி புரிந்து கொள்ளப்டுகிறாள் . தாய் மகன் நிலையை பாதிக்கும் உறவு என்றா ?

அப்படியானால் அனைத்து மகள்களும் யாருக்கோ மருமகளெனில் அங்கும் அவர்கள் தாய் மகனை பிறிக்கிறார்களா? எனில்
அவர்கள் எப்படி நியாயத் தராசின் முள்ளாக  முடியும்.
அவர்கள் தன் தாய்க்கு எப்படி சரியான புரிதலை கொடுக்க இயலும்.
ஆகவே தான், அவர்கள் அனுகூல பரதிகூலங்கள் வழியாக தாய்களின் வயோதிகத்தை நெருப்பால் நிறைக்கிறார்கள். நிலையின்மையில் அவர்களை பதறவைக்கிறார்கள். அவர்களுக்கு வருத்தமும் , வெறுப்பும் வாழ்வில் எங்கும் எவர்பேரிலும் நிறைந்து கிடக்கிறது.

மகள்கள் - அவர்கள் இருநிலைப்பாட்டாளர்கள் தங்களுக்கெனவும் பிறர்கெனவும் தனிவழி திறந்து வைத்துள்ளார்கள் ,ஆகவே இரு பக்கமும் தாய் மகன் உறவைகளைப் பாதிக்கிறார்கள்.
எனில், இதில் பெருவிசும்மென கரந்துரையும் ஊழின் தர்மம் எனப்படுவது யாது?.

அவர்கள் தன் விதியை எழுதிக்கொள்கிறார்கள்.
இது உலக வழக்காரு.
ஆனால் பாவம் அத்தகையர்.
அவர்கள் சின்னஞ்சிறு உயிரத்தொகைகள்.
அப்பெரும் விசும்பின் நிர்வாகத்தை முன்னெடுப்பவர்கள்.

ஆகவே தாயின் வயோதிகத்தில் உதவ மறுகப்பட்ட மகன்களுக்கு,அவர்களின் ஆசி கிடைக்க வாய்ப்பில்லையா?
இயற்கை எவ்வகையாகிலும் இதை சமன்பாடு செய்திருக்கலாம். நம் புரிதலுக்கு காலம் தேவைப்படுகிறது,
...........நாம் சரியாக இருப்பின்.

...........தான் சரியாக இருப்தென்பதென்ன? தாய்ககு எதிர் நிற்றலை விடுத்து விலகியிருத்தல். பின் யார் எதிர் நிற்பது ?

மகள்களின் உலகில் மருவும் மருமகள்தான். !!

அவளே இவ்வூழின் சங்கிலித்தொடரை அறுக்கவல்லாள்.
............தான் சரியாக இருப்பின். அவள் தான் சரியாக இருப்பது என்பது யாது?

அவள் தனக்கான கூடாததும் கூடலும் அறிந்து ஒழுகுதல்..........அதை அவன் அங்கீகரித்தல் என முடிந்தால்.

அவனுக்கு இப்பெருவிசும்பு மருமகளை மகள் என மருவித்தந்து
தன் ஊழின் கரவுகளைத் கலைந்து கொடுக்கிறது .

இறந்தகாலத்துடன் பேசுதல்

19 செப்டம்பர் 2016

இறந்த காலத்துடன் பேசுதல்




காலம் புரிதல்களால் ஆனது , நிகழ்வுகள் கால பரிமாணங்களில் பரிணமிக்கிறது.கடந்த காலத்திலிருந்து வெளியேறி நிகழ்காலத்தில் வாழ்வதும் ,எதிர்காலத்தை நோக்கி  நகர்வதும் மானஸ வியாபாரமே .ஏனெனில் இறந்தகாலம் இருந்ததற்கான தரவுகளை நம் எதிர்காலத் தேவைக்கென அது நம் நினைவுகளில் மட்டுமே அதை விட்டுச்செல்கிறது.

நினைவுகள்  புரிதல்களால் அறுதியிடப்பட்டால்தான். அது ஆழ்மனதில் படிமங்களென படர்கிறது.இதில்தான்  காலமெனும் துளாவின் முள் நிகர்நிலை கொள்கிறது.

நம்மை கடந்து சென்ற நிகழ்வுகள் நம் ஆழ்மனதில் படிமங்களாகி, நம் எதிர்காலத்திற்கான புரிதல்களை அதில் கரவுகளாக வைத்து விடுகிறது. ஆழ்மனத்துடன் உரையாடுகையில் அவை எழந்துவந்து நம் எதிர்காலம்குறித்த தெளிவுகளை பிரகாசமாக்குகிறது.

ஆழ்மனம் படிமங்களினால் ஆனது. அதில் எக்காலத்திற்குமான கேள்விகளுக்கு பதில் உண்டு, அவற்றுடன்  உரையாடுகையில் அது அனுபவஅறிவென மிளிர்கிறது ,நம் தேவைக்கேற்ப அனுபவங்களாக வெளிப்பட்டு நம்மை இயங்கவைக்கிறது. மற்றவர்களிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

காலங்களுக்கு இடையேயான மெல்லிய கோடு நம் புரிதல்களால் பகுத்து கொள்ள முடியாதபடி கலங்கிவிடின், அது நம் கடந்த காலநிகழ்வுகளின் நினைவு மையத்தில் ஓயாது அலைக்கழித்து ,துரதிஸ்டவசமாக மனதை இறந்தகாலத்தை நோக்கி நிலைநிறுத்துகிறது.

நாம் இறந்த காலத்தை நோக்கி பேசத்தொடங்குகிறோம்.

கடந்த காலத்தில் நடந்தவைகளில் இருந்து எழும் கேள்விகளுக்கு பதில் உரைக்கத்தொடங்கினால் அது மற்றொரு கேள்வி எழுதலில் கொண்டு விடும்.பின் அது முடிவிலி. ஏனெனில் தற்பெருமை,தன்நேர்மை,தான்சரி என்கிற இடத்திலிருந்து புறப்படுபவை.அவை பிரச்சனையின் ஆழத்தில் இறங்கி விவாதிக்காது ,தன்னையும் சிக்கலையும் சேர்துக் குழப்பிக்கொள்ளும் ,தன்னில் முற்றி வீங்கிய அகங்காரத்தால் எவரையும் சந்தேகிக்கும், எவ்விளக்கத்தையும் ஏற்காது.அது தான்விழையும் பதிலை அடுத்தவர் வாயால் சொல்லப்படும் எனக்காத்திருக்கும் அவ்விதம் என அது சொல்லப்பட்டால் உளம் பதறி செயலொழிந்து நிற்கும்.

எதிர்காலம் நிகழ்காலமாகும் பொழுது அதை நித்யமென எழும் சூரியோதயம் வகுப்தில்லை.புரிதலில் எழும் மானஸசிருஷ்டியே அதை வகுக்கிறது. அந்த சிருஷ்டி நிலைகொண்டுள்ள ஸ்தானத்திற்கான பாதையின் பயண ஊடகமே சூரியோதயமென பரிணமிக்கிறது.

அதைநோக்கிய பயணம் தொடங்கி நெடுநாட்களாகிறது. கடந்த காலத்திலிருந்து கற்ற பாடங்கள் அனுபவத்தில் வரவில்லை எனில் அவற்றில் இருந்து எனக்கு கிடைக்கப்போவது மனதை வருத்தி எடுக்கும் நிகழ்வுகளே.
அவை ஏன்? எதற்கு? என ஓயாத கேள்விகள் புல்லென உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறது இதற்கு பதில் இறுத்து மாளாது .

ஏதோ ஒருவகையில் என்னைப் பொருட்படுத்துகிற, என்னிடம் சொல்லவும் நான் சொல்வதைக் கேட்கவும் நினைக்கிறவர்களிடம் மட்டுமே நான் பேசுகிறேன்.அந்த உரையாடலில் கூடுமானவரை உண்மையைப் பேசவே முயல்வேன். தெளிவாக நேரடியாக. என்னிடம் ஒளிக்கவோ, பூடகமாகச் சொல்லவோ ஏதுமில்லை. என்னுடைய தனிப்பட்ட நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் என்னுடன் பேசுபவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புவேன். அவர்கள் நம்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் பேசுவேன். அப்படி நம்பி என்னுடன் விவாதிப்பவர்களை மட்டுமே எனக்குறியவர்களாக நினைப்பேன். அவர்களுடன் உரையாடும் பொழுது வாழ்கையைப்பற்றிய சில புதிய புரிதல்கள கிடைக்கலாம் .மற்றவர்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவேன்.

தன் வாழ்வனுபவங்களைக்கொண்டு, தன்னுள் தன் பண்பாடு தேக்கிய படிமங்களைக்கொண்டு ஆழ்மனத்துடன் பேசுகையில் அது அவனுன் உரையாடுகிறது.

மற்றவர்களுக்கு அது நாய்பெற்ற தேங்காய்தான். உருட்டிப்பார்க்கிறார்கள். புண்படுபவர்கள். அவர்கள் வழிதவறி வந்து விழிக்கிறார்கள்.பணிவுடன் அவர்களுக்கு திரும்பிச்செல்லும் வழியைக் காட்டுவதே நல்லது

எதிர் காலத்தை நோக்கிய பயணத்தின் படிகளில் என்றாவது அவர்களை சந்திக்க நேரின் இன்று கடலளவு கொட்டி புரியவைக்க முடியாதது அன்று ஒரு அத்மார்தமான சிரிப்பில் புரியலாம்.

- கிருபாநிதி அரிக்கிருஷணன் 

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

அம்மாவை யார் நரகத்தில் தள்ளியது?


அம்மாவை யார் நரகத்தில் தள்ளியது .








யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்தஅளவு அந்தஅளவுதுயரம் இல்லாதவன்’


வயதினால் மற்றும் ஸ்தானத்தனால் பெரியவர்களுக்கு ,வயோதிகம் இயற்கையின் கொடை என்பதை மறந்தால் அவர்கள் மறுபடியும் வாழ்தல் எனத்தொடங்கி நரகத்தை நோக்கி நகருகிறார்கள்.

தன் முதிரா இளமையில் மறுக்கப்பட்டதை மீட்டெடுத்தல் என தொடங்குகிறது அவ்வாழ்வு. கால மாற்றத்தை உணராமல் அடுத்தத் தலைமுறையினரின் விழுமியத்தை புரிந்து கொள்ள முடியாது.அதை அறியாது தன் அடுத்த தலைமுறைக்கு அறிவுரையை தொடங்கி மதிப்பிழந்து போகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று புரிவதில்லை .தன் அடுத்த தலைமுறையினர் வாழ்வின் மூன்றில் இரண்டு பகுதிகளை கடந்தவர்கள்,இல்லறம் அவர்களை மையப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறது என்று.

பெரியவர்கள் தன் இடம் உணராது பிறர் வாழ்கையில் தன்னை மையப்படுத்தியே அனைத்தையும் நடத்த முயல்கிறார்கள், அறிவுரைகளை வழங்குகிறார்கள்.அதை பெறமறுப்பவர்கள் இன்றைய நவீன உலகின் நடைமுறை யதார்த்தம் அறித்தவர்கள்.தரக்க ரீதியன்றி அவர்களை வெல்ல முடியாது.

ஸ்வதர்மத்தை உயிரென சிலர் கடைபிடித்தாலும்,நிர்பந்தமும் தேவையுமே அனைவரையும் அதில் நிற்கவைக்கிறது என்பது உலக வழக்கு .இவை இரண்டும் அவசியமில்லாத போது அனைத்து தர்மங்களுக்கும் மீறப்படுகின்றன.

இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தனக்கென ஓர் இடத்தை நோக்கிய நகர்வு தொடங்கிவிடுகிறது. தன் புகுந்த வீட்டில் தனக்கான நியாமான இடத்தை விரும்பும் இவர்கள் தன் பிறந்த வீட்டின் சிடுக்களுக்கு பெரும்பாலும் தவறான வழிகளை காட்டுகிறார்கள்.

பிறந்த வீட்டில் தாய் தந்தை இருவர் இருப்பது அல்லது இருவரில் ஒருவர் இருப்பின் சூழ்நிலை மாறுபடுகிறது 

தாய் தந்தை இருவரும் இருப்பின் பெரும்பாலும் சகஜநிலையே பேணப்படுகிறது.ஆனால் தந்தை மட்டும் என்றால் அது மருமகளைப்பொறுத்தது அவர் நியாய உணர்வு உள்ளவர் எனில் சராசரி குடும்ப பிரச்சனை கொதிநிலைக்கு வருவதில்லை ஆனால் தாய் மட்டும் மிச்சப்பட்டவர் எனில் , பிறந்த வீட்டு பெண்களின் பங்கினால் பூசல்கள் உச்ச நிலைக்கு வந்து விடுகிறது.

வயோதிகத்தின் காணமாக சமூக மான அவமானங்களின் தாக்கம் இல்லாமையாலே அவர்கள் மரபான விஷயங்களில் இருந்து விலகிவிடுகின்றனர். பெயர்தி அல்லது பெயரர்க்களின் காதலுக்கு பெரும்பாலும் பாட்டியின் ஆதரவு இருக்கும் என்பது கண்கூடு. காதலுக்கு ஆதரவு இது புரிந்து கொள்ளக்கூடிய அல்ல இது சமுகத்திறகு பதில் சொல்லவேண்டிய பொறுப்பில்லாமயாலே

உடல்சார் நலனுக்கும் நவீன மருத்துவமும் சிலரின் ஜீவனை காபாற்றிக் கொடுத்தாலும்,பல நடுத்தர வயது மற்றும் நடுத்தர வர்ககத்தின் பிராணனை வாங்கிவிடுகிறது.நவீன மருத்துவம் வரமா? சாபமா? 

நவீனத்துவம் உலகியல் வாழ்வை மறுமதிப்பீடு செய்ய வைத்துள்ளது மரபான விஷயங்களில் சிக்குண்டவர்களுக்கு அது நரகத்தையே பரிசளிக்கிறது.அதை உதாசீனமாக கருதுகையில் தன் நரகத்தை தாங்களே சிருஷடக்கத் தொடங்குகிறார்கள்.

அவர்களின் நரகம் மிக பிரம்மாண்டமானது அதை உருவாக்கி எடுக்க தனி மனிதர் உழைப்பு போதுமானவை அல்ல. சிலர் உதவிக்கு வருகிறார்கள்.

அவர்களின் மாயக்காயங்களுக்கு மருந்திடுகிறார்கள், மற்றும் அதை நக்கிக்கொடுப்பதின் வழியே அதை ஆற்றாது பெருகவைக்கிறார்கள் 

யாருக்கு எதிர்வினையாக இதை முன்னெடுக்கின்றனரோ அவர்களுடன்   நேரிடையாக தொடர்பு கொள்ளும் நிமிடம் அந்நரகத்திற்கு வாசல் திறக்கப்டுகிறது. அவர்கள் செய்வது என்வென்று அறியாது அதில் தன் அம்மாவை தள்ளுகிறார்கள்.



.

.

.



























புதன், 10 ஆகஸ்ட், 2016

அழகியலாகும் வாழ்வியல்

வாழ்வெனும் அழகியல்தொகுக்கும் சிந்தையையும் சூழலும் கொடுத்தவனை வணங்குகிறேன். ஆம் அவ்வாறே ஆகுக. அவ்விதமே ஆகுக என் வாழ்கை || ஓம் ஹரி:||




|| வாழ்கை - இன்பியல் மற்றும் துன்பியலான  முரண் கலவைகளை ஊடுபாவுகளாக கொண்டு நெய்யப்பட்டு வாழ்வியலாகிறது, அதன்  முரணியக்கம் மெல்லியாதாக உணரப்படுகையில் அழகியலாகிறது. மனம் தனக்கான உரையாடலை இங்கு தொடங்குகையில் , அது அசையாது நிலைபெற பல முலை குச்சிகளில் கட்டப்படுகிறது. ஒவ்வொரு முலைக்குச்சியும் ஒவ்வொரு காரணிகளாக பரிணமித்தது ஏற்பு கொள்ள சில வாழ்நாள் தீர்மணங்களை அது தன் உள்அடுக்குகளில் நிர்வகித்துக்கொள்கிறது . வாழ்நாள் முழுவதிலும் ஒவ்வொன்றாக உளவியல்சார் சிக்கலை சிடுக்கெடுத்து நிகர்நிலை கொள்ளும் தருணத்தில் அது அழகியலாகிறது .|| என நினைக்கின்றேன் நான்.

நான் அடிக்கடிச் சொல்வதுண்டு, மேற்கோள் அல்லது பொன்மொழி சொல்லும்தகுதி எனக்கில்லை என. சொல்வது ஒரு நிகழ்வின் தொடர் சித்தரிப்பின் பகுதி. அச்சித்தரிப்புவெளியில் வாழ்ந்து அவ்வாழ்க்கையனுபவம்  மூலம் மற்றவர்  அடைவதே உண்மை. நான் சொல்வது அல்ல.எனில் தற்செயலல்ல .

தற்செயலா இது ? இல்லை.இப்புடவிப் பெருநிகழ்வில் தற்செயல்கள் இல்லை. ஒவ்வொரு கணமும் பெரும்படிவன் சொல்லெண்ணி யாத்த கவிதை போல் அமைப்பும் ,இலக்கும் இலக்கணமும் உள்ளதென்று உணர்வதே இருத்தலியல். பெருங்கடல்களை ஊதிப் பறக்கவைக்கும் பெறும் விசும்பே,  சிறகின் சிறு தூவலையும் அலைக்கழிக்கின்றது அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் முடிவிலா விசும்பால் முடிவுசெய்யப்படுபவை. என்றால் வியப்பு கொள்ளாதிருப்போமா? ஆமென்போம்.

ஆமென்றால் மட்டுமே அதைக் கடக்க முடியும்

முடிவுரும் வாழ்வெனும் பயனம் யாருக்கும் வலி மிகுந்ததே .தேடல் மற்றும்  புரிதல் தன்  பாதையை அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் நம்மால் முடிவுசெய்யப்படுபவையா?எளியவனென்று முற்றிலும் கைவிடப்பட்டவனென்று முன்னரே வகுத்த பாதையில் செல்லும் துளியென்று உணரும் தருணம் ஒன்று ஒவ்வொருவருக்கும் உண்டு. இது அது

இது அது. இன்று இறந்தேன்.

இறந்தேன் என  நான் நினைப்பதுண்டு ஏனெனில் உவகைப்பெருக்கிற்குப் பின் ஏன் உள்ளம் நிறைவிலாது ஏங்குகிறது என்று? ஆனால் துயர் முற்றிக் கனிந்தபின் ஏன் உள்ளம் அடங்கி அலையழிந்ததாகிறது என்று? ஆம் என் மனத்திற்கினிய தொய்வம் உளம் கனிந்து எனை உற்று நோக்கியபடி இருக்க ,பின் எதனின் சூதாட்டக் களம் மானுட மனமும் பின் அதன் வழி வாழ்வும்? இதோ இழப்பும் இழிவும் என் மானுடவாழ்க்கையை நிறைவுகொள்ளச் செய்கின்றன.

செய்கின்ற மற்றும் செய்வதின் பொருட்டு அனைத்தையும் என் உள்ளாழத்தில் நாடியதையே அடைந்தேன். பலகாலமாக எழுந்து என்னால் புறந்தள்ளப்பட்டதை ,என்னை அறியாமல் கோரியதையே பெற்றேன் . துயரும் இழிவும் வந்து சேர்ந்த அந்த தீத்தருணங்களில் எனக்குள் வாழும் நான் அறியாத்தெய்வமொன்று உவகைகொண்டது அல்லவா? இனி இவன் என்னவன் என்று, ஏனெனில் நான்தான் புரியாது நின்றேன் . அது அதன் வழியில் அனைத்தும் நிகழ்ந்தடங்கிய பின்னர் ,நான் அறிந்தது ஆழ்ந்த அமைதியைத்தான்.

அமைதியையும் இன்பங்களையுமே மானுட உள்ளம் கோருகிறது என்றும், நன்மையையே அது விழைகிறது என்றும் எண்ணுவதுபோல் மடமை பிறிதில்லை.ஏனெனில்
ஓர் நிகர்நிலை மனிதன் , தன்னை உலகம் எப்படி நோக்க வேண்டும் என்பதற்கேற்ப தன்னுடைய அடையாளங்களை உருவாக்கிக் கொள் முயல்கிறான் ,உலகம் அவனை எப்படி பார்த்த பொழுதும் - சூழ்நிலைக்கேற்பபுனைந்து கொள்வது என்பது அவனால் இயலாது .

இயல்பானது வாழ்வியலில்  நிகழ்காலமென்பதும் , எதிர்காலமென்பதும் எப்போதுமே  வதைப்பது , அனுபவங்களின் நிகர்நிலை, மற்றும் நிலைப்பாடுகளைக் ஒன்றுமில்லாது செய்வது.  நிகழ்வுகளில் இருந்து கற்றது கைகொடுக்காது,சூழ்நிலைகள்  கடமைகளென்று நம் முன்னே வந்து நிற்கும் போது மனப்போராட்டமும் , சமாதானமும் எல்லா சமயமும் நிகர்நிலை கொள்ளாது , அதற்கு அங்குசம் இடாது அதைக் கடப்பது என்பது நிலையழியச்செய்வது- இதுவே இருத்தலியலின் நுட்பம்.

நுட்பமான வாழ்வியலில் மிக மலினமாக காணக்கிடைக்கும்  எதையும்  ஒப்புக்கொள்ளாது தாண்டுதல் , எந்தையாலும் எனக்கு அவர் அறிமுகப்படுத்திய சம்பிரதாயத்தாலும் நன்கு உரைக்கப்பட்டது. இது புரிதலின் உள்அடுக்குகளில் தொன்மங்களாக படியாது ஒருவருக்கு அனுபவத்தில் வாராது . கற்ற ஏட்டின் அளவே சென்று நிற்கும் .

நிற்கும் நெறியினால் பெண்கள் ஆண்களை ஆள்கிறார்கள், அதை ஆண்கள் வைதிக, சம்பிரதாய , மனொருக்கம் ,காமம் சாராத முதுமையின் எனும் பல வழியின் ஊடாக அவர்களை தங்கள் வாழ்வில் அங்கீகரிகிறார்கள். அதன்பால்பட்டு,  நிகர்நிலை உள்ளவர்கள் அதன் எல்லைகளை வகுக்கின்றார்கள் , அவர்களை அடிமை பட்டிருக்கிறார்கள் என்று, மற்றவர் அவர்களை  அங்ஙனம் நிலைநிருத்த முயல்வதும், அவரவர் கீழ்மையான மனவிகாரங்களின் முழுமை.

முழுமையாக தோற்கடிக்கப்பட்டவனின் அமைதி எவ்வளவு மகத்தானது பரிபூரணமானது அது . அவனுடன் பேச பிரம்மமும் இல்லை விதியும் இல்லை . அவனுடைய தனிமைபோல் பிறிதொன்றில்லை . அவனுடைய சொற்கள் போல ஒலியோ பொருளோ இல்லாமல் வெறும் அலைகளாக ஆழத்துக்கு சென்று படிபவை போல் ஏதுமில்லை .

எது ஆழங்கள் தெய்வம் வாழ்விடம் என்கிறதோ , அது என் நல் ஊழ் அதை அருகில் பரிதொருவனைப் போலானேன். அது என்னை  உலகிலிருந்தும்,சமூகத்திலிருந்தும், என்னிலிருந்தும்,பிரித்து உதிரிகளாக பரப்பிவிட்டது. ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதாலேயே முடிவுகள் ஏற்படுவதற்கான சூழலை ஒதுக்கி அது மறுபடியும் சிந்திக்க ஏதுவாக மற்றொன்றில் கடத்துகிறது .பின் அது முடிவிலி. அவ்வாறில்லாமல் இது என்னை எட்டி இருந்து பார்க்க வைத்தது .

வைத்தது எனக்கான பாதை, அது எங்குமெனப் பரந்து விரிந்திருக்கிறது. என்னை எதிர்பார்பவர் எவருமில்லை, எனவே கடமை என்ற ஒன்றில்லை .யாருக்கும் பதில் சொல்லத்தேவையில்லை . என் வெற்றியை யாருக்கும் நிரூபிக்க அவசியமில்லை. ஏன் ? எந்த ஒவ்வொருவருக்குமே

ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் தருணம் ஒன்று இளமையில் நிகழும். அவ்வண்ணம் இளமையில் நிகழாதவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். நிகழ்பவர்களோ பெருமழையை ஏற்கும் சிறுசெடிபோல அதன் அடியில் துடிக்கிறார்கள். வேர்கள் பறிந்து செல்லாமலிருக்க தவிக்கிறார்கள். ஒவ்வொருவம்  வாழ்க்கையின் முதன்மைப்பெருநிகழ்வு என்ற ஒன்று இருப்பதை எப்போதாவது  ஐயமில்லாமல் உணர்வார்கள்.

ஐயமில்லாது உணர்கிறேன் , இறை எனை நன்றாக சமைத்தனை.எனை என்னால் விளங்கிக்கொள்ளவொன்னா கவிதையென.

கவிதை போல் அமைப்பும் இலக்கும் இலக்கணமும் உள்ளதெனில் பொருள் புரிதல் அவசியமாகிறது. ஆம் பொருளை.

பொருள் - அதை அழகியலால் அன்றி வேறெதனாலும் யாத்தெடுக்க இயலாது . "மதுவித்தை " என்று ஒன்றுண்டு . கடித்தால் இனிக்கும் கரும்பில் கூட வேரும் சோலையும் தித்திப்பதில்லை ,ஆனால் கண்ணனைக்குறித்த" அதரம் மதுரம்" எனத் தொடங்கும் பாடல் அவனில் காண்பதத்தனையையும் தித்திக்கிறதென்கிறது.
வாழ்வியல்,விருப்பு வெறுப்பென தன்சார் இருமைகளின் வழியென எங்கும்,எதிலும் என திறந்து கிடக்கிறது. நான் அத்தனைக்கும் விருப்பு என்கிற பாதையையே தேற முயல்கிறேன். தேறினால் எல்லாம் தித்திக்கலாம்

தித்திப்பதினாலேயே அது அழகியல் - நாவினால் உணருமுன் நாசி முந்திக்கொண்டு விடுகிறது. அதன் நருமணங்களை

நருமணங்கள் -நம்மை வாழ்வியலில் மெல்லிய மணங்களை நுகரும் தருணங்களை உருவாக்கிக் கொள்வற்கு, வாழ்நாள் தீர்மணங்களை, தனிச்  சிக்கலின் அடிப்படையில்
சமரசத்திற்கு விடாது நிற்கையில்-  அழகியலாகிறது .

அழகியல் - எழுதத்தொடங்குமுன்,இது ஏன் அவசியமாகிறது?  காரணம் இதுவும் ஒரு களம்.

இது ஒரு களம் . இதில் புண்படவும் தோற்கவும் ஒரு தரப்பு இருந்தாக வேண்டும் . ஒரு நாள் வரும் என்று என் தரப்பு நியாங்களாக ஆயிரம் முறையாக மனத்தில் நடிக்கப்பட்ட சொற்கள் , சொல்லபடாமையாலே அது நிகழாத காலத்தில் வாழும். அதை கடந்து செல் விதிக்கப்பட்டிருபின், அது ஒரு ஊடகத்தின் வாயிலாக கடந்துசெல்ல இநலும் .நான் சொல்வதை குறிக்கிடாமல் கேட்பதாலும் என் எண்ணங்களை சந்தேகியாத்து என் எழுத்து ,எனவே இது எனக்குறிய ஊடகமானது.

ஊடகம் தன் செயல்விழைவுடன் முனைகொள்ளும் போது உள்ளம் தன்னையே பகடி செய்துகொள்ளும் பொருட்டு இயங்குகிறதோ என்ற ஐயம் எழுகிறது. தன்னிலை உயர்திப்பேசாது ,நிகர்நிலை பேனி எழுதுதல் நிகழும்போது , தெய்வம் எழுகிறது.

எழுகிறது. ஆம் , தெய்வம் எழுவதாக .
என்னில் சன்னதம் கொள்வதாக. அறமென.

அறம்  - அதன் அளவுகோல் நிர்ணயக்கப் படவேண்டும். குடும்ப ஒற்றுமை மற்றும் சம்பிரதாயத்தில் ஊற்றமும் இவை இரண்டும் போதுமானது. அதை கடந்த காலத்தில் நடந்தவற்றிலிருந்து அடுக்கிக் கொள்ளலாம். தர்க்கபூர்வமாக.

தர்க்கபூர்வமாக வகுக்கமுடியாதது ஒன்றுண்டு. அதை மானுட ஆணவம் என்றுரைத்தனர் . அது கணந்தோறும் உருமாறும். தன் விதிகளை தானே உருவாக்கும். சென்றபின் வழி வகுக்கும். நிகழ்ந்தபின் நெறியமைக்கும். ஒருபோதும் நிறையாது. எவ்விளக்கத்தையும் ஏற்காது. இதோ இதோவென .

"இதோவென தொட்டறிவது மனம்.
அறிந்தவற்றை அடுக்குவது புத்தி.
அடுக்கியதை தொகுத்துக்கொள்வது சித்தம்.
அதில் வேண்டியதை குறித்துக்கொள்வது அகங்காரம்.
அதைக்கொண்டு வருவதை வகுப்பது சங்கல்பம்.
அதற்கெனக் கொள்ளும் உறுதியே நிச்சயம்.
அதன்மூலம் எழும் தன்முனைப்பே அபிமானம்.          இவ்வேழு கரணங்களாலும் நம்முள் வந்த உண்மையை நமது உண்மையாக நாம் ஆக்கிக்கொள்வதை அவதாரணம் என்கின்றன நூல்கள்.”

நூல்களென ஊழ் வந்து தொடாமல் உள்ளம் எண்ணம் கொள்வதில்லை .இந்திய மனம் தன்னியல்பில் அசாதாரணமான சில உச்சங்களைச் சென்றடைய முடியும். அதற்கான ஓர் ரகசியப்பாதை நமது பண்பாட்டில் உள்ளது. அதுவே உலகில் ஒருவரை மற்றொருத்தரிடமிருந்து வேறுபடுத்தி காண்கிறது .

வேறுபடுத்தி காண்பதினால் பிற இந்திரியங்களின் ஒத்திசைவு இல்லாமலேயே ஆழமனமானது தன்உள் அடுக்குகளின் செதில்களில்  இதை வரிசைப்படுத்துதல் இயல்பாக நடக்கிறது . வாழ்நாள் தீர்மானங்கள் குலவழியாக படிமாங்ளாக இருப்பின் மனம் தர்மத்தின் பால் நிகர்நிலை கொள்வது இயல்பானது . சரியான மன சமாதானங்களை வென்றெடுக்க அவசியமாகிறது காத்திருத்தல் .

அவசியமாகிறதா ?காத்திருத்தல் . அல்லது தற்செயலானதா?இல்லை.இப்புடவிப் பெருநிகழ்வில் தற்செயல்கள் இல்லை எனும் விதி பொருந்தாது. ஒவ்வொரு கணமும் பெரும்படிவன் சொல்லெண்ணி யாத்த கவிதை போல் அமைப்பும் இலக்கும் இலக்கணமும் உள்ளதென்று உணர்வதே இருத்தலியல்.

இருத்தலியல் - விசும்பின் கரவுகள்  நம்மீது சொல்லொன்னா காதலின் பொழிவென்பது - எழுகிறது நம்முன் காலக் கொந்தளிப்பென.

காலக் கொந்தளிப்பென்பது அதை கடந்துவருதலே வெற்றி என்று அறிந்திருக்கிறேன். உலகியல் துக்காகரமானதல் இருந்து  பிரித்தெடுக்கையில் மானுடவாழ்க்கையை நிறைவுகொள்ளச் செய்கின்ற அழகியலாக பிரிகிறது.அதன்
விழுமியக்கருத்துக்களை நாம் அடையும்போதே அவற்றுடன் ஒட்டிக் கிடக்கும் வேறுபல கருத்துக்களில் இருந்து பிரித்துத்தான் எடுத்துக் கொள்கிறோம்.அப்பொழுது மிகக் குறைவான சொற்களில் சொல்லப்படும் முடிவுகளுக்கு எதிராக சொல்லாடுவது எவராலும் இயலுவதில்லை. அதன் விளைவு - தனிமைஎனப்படுகிறது.

தனிமையில் ஒருங்குகையில் பரிணமிக்கிறது- தனிமை.
வஸ்து இட கால நிர்ணயமின்றி உள்ளத்தால் தனித்திருத்தல் ஒரு தொடக்கமாகிறது . தன்னுடனான உரையாடலுடன் விவாதிக்கிறது .

விவாதம் ,இருபக்கமும் ஒத்திசைவுள்ள விழுமியதில் நிலைநிற்கிறது . அப்படி இல்லாமல் விழுமியம்கள் வேறுபட்டால் அங்கு விவாதத்தினால் எந்த பொருளுமல்ல

அல்லது அதை இப்படி சொல்கிறேன் , ஒரு முறன்பாடு களையப்படுதல் இரு தரப்புக்குமே ஜீவாதார முக்கியமானதாக இருத்தல் வேண்டும். அவ்வாறில்லாது போனால் , விவாதம் தங்கள்,தங்கள் தரப்பின் முன்முடிவுகளின் நியாயப்பயன்பாடு குறித்த சர்சையாக முடியும் .இது ஒருநாளும் தீரப்போவதில்லை.


தீரா வரலாற்றின் எந்த தரப்புக்கும் அதற்கான இருத்தல்நியாயம் என ஒன்றிருக்கவேண்டும் அதன் எல்லா தரப்பும் பிற தரப்புகளுடன் போராடித்தான் தன்னை நிறுவிக்கொண்டு முன்னகர முடியும். ஆனால் அப்போராட்டத்தை வன்மம் இல்லாமல் வெறுப்பு இல்லாமல் நிகழ்த்தமுடியும், நீயும் நானும் வரலாற்றின் இரு தரப்புகள் மட்டுமே என்ற புரிதலுடன் அதை முன்னெடுக்க முடியும் .

முடிவதனால் மகத்தானவர்களுக்கு மட்டுமல்ல சாமானியனுக்குமானதுதான் - சரித்திரம்.

சரித்திரம் என்பது ஓர் மாபெரும் தேர் வடம் போல , அதன்      தொடக்கமும் முடிவும் கண்களுக்கு விஷயமாவதில்லை ,அது தேராக எதை அல்லது யாரை வைத்துள்ளது எனபதும் யாருக்கும் தெரிவதில்லை.  அது காலமாக, சமூகமாக, குழுவாக அல்லது உதிரியான தனி ஒருவனாகவும் இருக்கலாம் . இவர்களுடைய தேவை, விருப்பம்,
அர்பணிப்பு, தியாகம் அல்லது துரோகம் . என்கிற ஒரு புள்ளியியல் பல சரடுகள் வடமாக கெட்டிப்பட்டு சரித்திரமாகிறது .

சரித்திரமென்பது அனைவருக்கும் தொன்மங்களாக உள்ளுரையும் ஒருப்புள்ளி நிகழ்கால பதிவுகளில் உள்ள நடைமுறை சாத்தியங்களை விழுமியங்களுடன் ஒப்பிட்டு புதிய மரபாக ,அனுகுமுறையாக உருப்பெறுகிறது . அது அனைத்தையும் ஒற்றை திரளாக உருமாற்றும் இடத்தில் சரித்திரமென்றாகிறது .அது ஒருவரை குறித்து புரிதலை மற்றொருவருக்கு காலமே முன்னெடுத்து கொடுக்கிறது . அதை ஒட்டியே அவர் மீதான அனைத்தும் முடிவாகிறது . நம் அபிப்ராயங்கள் அதற்கு உகப்பாக இருக்க வேண்டும் என எந்த நிர்பந்தம் இல்லை.ஏனெனில் அது வாழ்வியல்

வாழ்வியலில் பிழைத்தல்,இருத்தல், வாழ்தல்,என்பனவற்றை  அழகியலில் உணருதல் நல்லூழ். அவ் உணர்தலையும் கடந்து மனமொருத்து  ஒரு பதிவாக எழுதவேண்டும் என விழைகிறேன் .வஞ்சமோ காழ்ப்போ கொண்டு மறைக்கும் அளவுக்கு எளியதல்ல இவ்வாழ்க்கை. எண்ணி முடிப்பதற்குள் ஆண்டுகள் கடந்துபோகும். முதுமை வந்து மூடுகையில் இழந்தவற்றை எண்ணி ஏங்குவது என்றால் அதுவே வாழ்வின் மிகப்பெரிய துயரமாகும், காரணம் எந்நிலையிலும் உக்கிரம் என்பது நிலவின் வெளிச்சத்தில் அருகும் தனிமை என்கிறது ஓர் கவிதை.

கவிதை சொல்வதுபோல் ,நிகழ்வுகள் வெல்லற்கரியது. நிற்றற்கரியது. கடத்தற்கரியது. காலம் தோறும் மானுடர் அதன் முன் நின்று கதறுகிறார்கள். ஓங்கித் தலையுடைத்து மடிகிறார்கள். அது மானுடரை அறிவதே இல்லை.நெடில் ஆண்கள், குறில் பெண்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்கிற பிரசங்கமெல்லாம் சரிதான். உண்மைதான். ஆனால், ஆண்கள் அவ்வளவுதானா? யாரென இருப்பினும், எப்போதும் மிக அணுக்கமாக இருக்கும் ஒன்று இக்கட்டுகளில், சோர்வுகளில் இயல்பாகவே நெஞ்சில் கோயிலென எழுவது. அதனுள் வாழ்ந்த தெய்வம் கல்லென மாறும்போது அதுவும் கற்குவியலென மாறிவிடுகிறது.எப்போதும் முடியுறுதலில்லை

முடிவுறா முரண்பாட்டின் வேர் ,தவாறான புரிதலின் தொடக்கப்புள்ளி .அது தன்விருப்பு ,பிறன்வெறுப்பு எனும் காரணிகளை நிலமெனக் கொண்டு சொல்ல விழையா எண்ணங்களை விதையென கொண்டது . ஒரு நாளும் மலராது கனியாது . நிலத்திலன் ஆழ்இருளில் கிழங்கென பரந்து பரவி முலைவிட்டுக்கொண்டே இருக்கும். விளங்கிக் கொளவதற்குள்,முற்றிலும் புதிய ஒரு தலைமுறை உருவாகி வந்துவிடும், புதியநோக்குகள், புதிய வழிகள். மீள்பவர்கள் அனைவரும் மறந்துபோய்விட்ட ஓர் இறந்தகாலத்தில் இருந்து எழுந்து வருகிறார்கள் என்கிறார்கள்

என் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி முடிந்தது. அப்பகுதியின் உணர்வுகளும் இலக்குகளும் எதுவும் இங்கு ஒரு பொருட்டல்ல. இங்கிருக்கையில் எனக்கு ஒன்றே முதன்மையானது. நான் இருக்கிறேன். இதுவாக, இவ்வாறாக. பீடம் பீடமாக இருப்பதுபோல, அந்த மரம் மரமாக இருப்பதுபோல. ஒரு மனிதன் தன் மனத்தை அவதானிக்கும் தோறும் , அது எந்த அளவிற்கு அவனை மீறிய ஒன்று என்பதை அறிவான்.இப்பதிவை தொடங்குவதற்கு காரணமாக இருந்தது நிகழ்வின் விளைவுகளை அவதானிக்கைக்கு.
விளக்கமுடையதாக இருந்தும் விளக்க சந்தர்ப்பமே இல்லாது தொடர் நிகழ்வினால் கடந்து போகும்போது. அதன் ஒழுக்கை கூர்வது அது சொல்லவருவதை அர்த்தப்படுத்திக் கொள்ள. சொல்ல ஏதுமில்லை எவரிடமும்.

எவரிடமும்  பகிர்வதற்கல்ல ,இது எண்ணத்தின் கொந்தளிப்பை பதிவதில் நடந்ததை கடப்பற்கு ஆனால் விபரீதமாக உடன்பிறதார் அனைவரும் என் நினைவின் பதிவுகளில் இருந்து மறைந்து கொண்டே வருகிறார்கள்.ஆம். இதுவும் ஆகச்சிறந்ததே மறைந்தபின்இறந்தகாலத்திலிருந்து அதன் நினைவு மீட்சியுடன் எழுந்து வராது போனால் அது மறுபிறப்பெனவே கொள்ளப்படும் . எதையும் நினைக்க , விளக்க , வருந்த - ஏனெனில்  பிழைகளோ நோக்க நோக்க பெருகுபவை. ஏனென்றால் நோக்குபவரின் விழைவை அவை புரிந்துகொள்கின்றன.கதைகளுடன் போரிடுவதைப்போல கடினமானது பிறிதொன்றில்லை.

பிறிதொன்றாலும்  ஈடு செய்ய இயலாத  ரிக்வேதம் சொல்கிறது.

‘ஒன்றுசேர்ந்து பயணம்செய்யுங்கள்
சேர்ந்தமர்ந்து விவாதியுங்கள்
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்’
நீ சொல்லும் ஒரு சொல்லையேனும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் நீயும் நானும் ஒரே ஞானத்தேடலின் அல்லது தேடலின்  இருபக்கங்கள் என்ற பிரக்ஞை நம்மிடம் இருந்தால் நாம் எதைப்பற்றியும் விவாதிக்க முடியும்.

முடிவில்லா தொடக்கம் நம் முயற்சியை ஒருபோதும் எதிர்பார்பதில்லை, இதை கூர்ந்து பார்த்தால் ஒரு முரண் தெரிகிறது . ஒருவர் மேல் மற்றொருவருக்கான வாஞ்சை என்பது உலகில் சாமான்ய மக்களிடம் காணக் கிடைக்கிறது .ஆனால் பொருளியல்  முன்னேற்றம் என்கிற ஒரு நிலைக்கு அப்பால் இது வற்றி விடுகிறது .உலகியல் ரீதியில் சில உண்மைகளை காலம் கடந்தே நாம் புரிந்து கொள்கிறோம் , காலமும் அதையே விழைகிறது,எதன்பாரபட்டோ

எதன்பார்பட்டு இந்த இயக்கம் தொடர்ந்து இயங்குகிறது வாழும் காலத்தில் தர்மத்தை புரியவைக்கவா ? அல்லது உலகோருக்கா? அல்லது அடுத்த ஜன்மக்கணக்கா? ஆம் எனில் அதுவாவது புனிதமாகுக

புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது அதற்கு நம்பமுடியாத ஆற்றல் உண்டு.மனிதன் கள்ளங்கபடமற்று இருக்கும் போது கடவுள் அவரது இரக்கமற்ற விதிகளையெல்லாம் கொஞ்சம்  தளர்த்திக்கொள்ள வேண்டும் , அவருக்கு வேறு வழியேயில்லை சகலவித பலமிருந்தும

பலமுடையது வாழ்நாள் கேள்வி .ஏன் எதற்காக என்பதாகவே இருக்கிறது .உண்ட உணவு ஜீரணித்து மேலும் அடுத்த வேளைக்கு  வழிவிடுவது; போல் வெற்றி இறக்கம் காணுதல் நல்லூழே.

ஊழின் முழுமை என்பது கூட்டத்தின் அமர்வில் ;தன் பாதுகாப்பு குறித்த மகிழ்வில் அல்ல , யாராலும் தனக்கு உதவமுடியாமை குறித்த தன்னற தெளிவுடைமை. மேலும் உண்மை என ஒன்று இருந்தால் அது அனைவரும் அறியக்கூடியதாக இருக்காது என்று. அவ்வாறு இருந்திருந்தால் அனைவருமே அதை அறிந்திருப்பார்கள்.”

அறிந்திலேனும் ,பொருளில்லாத நிகழ்வோட்டங்களின் உள்ளே மேலும் மேலும் பொருளின்மைகள் ஊடுருவிக்கலக்க இருத்தலும் சுவைத்தலும் அறிதலும் கடத்தலும் ஒன்றேயாகி மண்புழு மண்ணைத் தின்று தின்று சென்றுகொண்டே இருந்தது. முடிவேயில்லாத நெளிதல். நெளிவு மட்டுமேயான உடல். நெளிவுக்குள் நெளிந்து செல்லும் அகம்.

அகதின் பரிசீலனைக்கு ஒரு துளி மெய் கையில் கிடைத்ததும் மானுடர் குதித்துக்கொண்டாட்டமிடுகிறார்கள். அதைக்கொண்டு எஞ்சிய மெய்யை அறிந்துவிடலாமென எண்ணுகிறார்கள். ஆனால் எஞ்சிய மெய் அதற்கு மாற்றானதாகவே எதிரே வருகிறது. எனவே எஞ்சியவற்றை மறுப்பதில் ஈடுபடுகிறார்க்ள். அவர்களின் ஞானம் தேங்கி அகங்காரம் பேருருவம்கொள்ளத் தொடங்குகிறது“மெய்மை என்பது மாற்றிலாததாக, முழுமையானதாக இருக்கும். அதை அறிந்தவனுக்கு விவாதிக்க ஏதுமிருக்காது என்றே எண்ணுகிறேன்.”ஒருவனுக்கு உள்ளே உள்ள நஞ்சு.அதுவல்ல அவன். ஆனால் அதுதான் அவன்  சாரம். நாகம் நஞ்சாலேயே நாகமாகிறது. இல்லையேல் அது புழுதான் .இச்சை தீமையல்ல ! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது.  இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்.

பொருட் செறிவுள்ள நூல்கள் மானுடரை மிகச்சிறியவர்களாகவே காட்டுகின்றன. கற்கும்தோறும் மானுடர் சிறுத்துக்கொண்டேதான் செல்கிறார்கள். மானுடரை இயக்கும் அடிப்படை விசைகள் பேருருவம் கொள்கின்றன. அவ்விசைகளை வைத்து விளையாடும் விசும்பின் கரவுகள் தெரியவருகின்றன. அது நுண்மைகளின் வாயிலற்ற கோட்டை முன் நம்மைக் கொண்டுவிட்டுவிட்டு நூல்கள் திரும்பிவிடுகின்றன. நூலறிந்தவன் அங்கே திகைத்து நின்று அழிகிறான்.”

அழிகின்ற ஓர் உறவு உடையும்போது ஆண்கள் பெரிதும் துயரமடைவது அதை பிறர் எப்படி கொள்வார்கள் என்று எண்ணிக்கொள்வதனால்தான் .விழி சொல்லாததை மொழி சொல்லாது .ஒழுக்கவியலும் தத்துவமும் பிரிக்கமுடியாதபடிக் கலந்தவை அல்ல என்பதே. ஒழுக்கம் காலம்தோறும் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது.

கூடும் ஒழுக்கவியலின் முதல்பாடமே நாம் நம்புவதை பிறர் மேல் திணிக்கவும் நம் நம்பிக்கைக்கு ஏற்ப பிறரை கட்டுப்படுத்தவும் இடைவிடாது முயலாமல் இயல்பாக இருத்தல். உலகவிரிவில் ஒழுக்கமுறைகள் வெவ்வேறானவை என்று உணர்ந்து அந்த வாழ்க்கைமுறைகளை புரிந்துகொள்ள முயல்தலால் ஏற்படுவது தனிமை.

தனித்திருப்பது அத்தனை கடினமா என்ன?
மன்னிப்பது அத்தனை பாரமா என்ன?
எளிமை அத்தனை சங்கடமானதா?
எல்லோருக்கும் என்ற சொல் ஒரு கூரிய வாளா?இந்த எனக்கு நானே எழுதும் கடிதம் என்னை என்னிடம் இருந்தே மறைக்குமா எனத் தெரியவில்லை கறாரான பாதையில் என்னைப் பிளந்து பார்க்க முடியுமா என்கிற முயற்சியே. அது என் சார்பாக பேசுகிறதா அல்லது நடந்த தவறுகளுக்கு தான் பொருப்பல்ல என மாயயைக் காட்டுகிறதா?. ஆனால்,இதற்கு யாரையும் குறை சொல்லப்பட்டுள்ளது போவதில்லை -  என்னையும் உள்பட - இதன் தொடக்கம் புள்ளி எங்கிருக்கிறது எனத் தேடத் தலைப்படுகிறேன், எதற்குமான விடை இப்படித் தொடங்குகிறது - ஏனென்னாலென.

ஏனென்றால் உள்ளம் இருநிலைகளில் ஆடுவது. கீழ்மையின் ஆழங்களுக்கு அதனால்செல்லமுடியும். அதனாலேயே அது உச்சங்களை நோக்கி மறுவிசையும் கொள்ளக்கூடும். அது யோகியின், மெய்மையில் அமர்ந்த ஞானியின் உள்ளம் அல்ல. அலைக்கழிப்புகளும் கொந்தளிப்புகளும் நிறைந்தது. தன்னைத்தானே அடிக்கடி தோற்கடிப்பது. ஆகவே அமைதியற்றது.  நிலைகொள்ளாதது.

நிலைகொள்ளாது என்னிடம் என்றுமில்லாத ஊசலாட்டத்தை பார்க்கிறேன். என் இதுநாள்வரையிலான வாழ்க்கையில் நானறிந்த பட்டறிவு ஒன்றுண்டு, ஊசலாடும் எதுவும் எதிர்நிலையிலேயே சென்று அமையும்”. தன்வினையென.

தன்வினையின் நின்று எழுந்து வரும் எதிர் வினையினை அறிதாதார் அறிவிலிகள் ,ஆகவே அவர்களுக்கு அச்சம் வளர்ந்து பெருகுவதன் பெருவலி இல்லை. கழுவிலேற்றப்படுதல் என்றால்கூட அந்தத் தருணத்தின் விலங்குத்துயரம் மட்டுமே ஏனெனில் அது தன் பிழையென எதையும் உணராததும் எதன்பார்பட்டு இது நிகழ்கிறது எனப் புரியாததும். எனவே முற்றிலும் வெல்லப்படமுடியாதவர்களாக வடிவற்ற அசைவற்ற பாறை என்றே தோன்றுவார்கள்.பலர் இனைந்துள்ள முரண்பாட்டில் ,ஒரே வளையத்தின் மையத்திற்கு அனைவரும் வந்து சேர்ந்தாலன்றி . நம்மீதான குற்றச்சாட்டுகள் தீர்ப்பாகாது. எதிர்வினை ஆற்றுவதற்கு எனக்கு நானே இட்டுக்கொண்ட விதி.

விதினை இட்டுக்கொண்ட மனம் விடுதலைக்கு ஏங்கும் . சராசரி மனித வாழ்கை நாளை வரும் என்பது நிகழாத காலத்தில் கனியலாம் . வாழ்வின் மிச்சமிருக்கும் சில நாட்களை இழக்கலாகாது. நிரைவாக வாழ்வின்  ஒரு முறை வாழ்தலே போதுமானது , அதை இழக்க விரும்பவில்லை . ஏனெனில் காலத்திற்கான அழைப்பை எதிர் நோக்கி காத்திருப்பது அம்மா மட்டுமல்ல நாங்கள் இருவரும் கூட. அல்லது அது என்கென விட்டுச்செல்லாம் யாருமற்ற தனிமையை.

யாருமற்ற தனிமையை என் வீட்டில் எதிர்கொள்ளும் தயாரிப்புகளும் அவசியமாகிறது.பாதுகாப்புணர்வு. சிலர் தனியாக இருப்பதைப் பார்த்தபோது ஓர் ஆசை எழுந்தது. வயதான காலத்தில் தனியாக இருக்கவேண்டும் என. எவரிடமும் கருணையையோ உதவியையோ நாடக்கூடாது. அதிலும் எக்காரணத்தாலும் பெண்களிடம் உதவி கோரக்கூடாது. பெண்கள் ஒரு வயதுக்குமேல் ஆண்களை வெற்றுச்சுமைகளாக உணர்வார்கள். சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் இருப்பார்கள். கம்பீரம் ,தோரணை எல்லாம் போய் ‘பேச்சுகேட்க’ ஆரம்பிக்கும் காலம் அது , ஆகவே.

ஆகவே இந்தத் தனிமையைப் பயன்படுத்தி வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு குடியை அமைப்பது மூளையை விண் விண் என தெறிக்கச் செய்வது. வாங்கவேண்டிய பொருட்களை கடைக்குச் சென்றதுமே மறந்துவிடலாம், சம்பந்தமே இல்லாத அறவுறனர்வு என்பது ஒருவன் தனிமனிதனாக தன் அந்தரங்கத்தில் உணரக்கூடிய ஒன்று. அவர்கள்  தனிமனிதர்களாக மட்டுமே தங்கள் ஆன்மீக ஆழத்தைக் கண்டடையவும் தங்கள் முழுமையையும் மீட்ட்பையும் அடையமுடியும். கூட்டான மக்கள்திரள் என்பது லௌகீகமான சுயலாபத்தை அடைவதற்கு மட்டுமே உரியது என்றும் சொல்கிறார்கள்.ஆகவே இங்கும் தனிமனிதனாக நிற்பதே தேவையாகிறது. வாழ்வியல்  மௌனங்களுக்கு அதீதமாக என் தனிப்பட்ட நோக்கைக் கொண்டு தன் மனசாட்சியை திருப்திசெய்யும் உண்மைகளை நோக்கிச் செல்லும் தனிமனிதனாக.


நன்றி
இதன் அத்துனை சொல்லெழுதலுக்கு காரணமான எழுத்தாளர் திரு.ஜெயமோகனை நன்றியுடன் நினைக்கிறேன் , ஏனெனில் இச்சொற்களுக்கு உரிமையாளர் என் எண்ணக்கருவை அவர் சொற்கொண்டு எழுதி என்னை கண்டுகொண்டமைக்கு. கிருபாநிதி அரிக்ருஷ்ணன்