https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 291 * கையில் வராப் பொருள் *

ஶ்ரீ:



பதிவு : 291 / 378 / தேதி :- 07 ஜனவரி  2018

* கையில் வராப் பொருள்  *


ஆளுமையின் நிழல்   ” - 37
கருதுகோளின் கோட்டோவியம் -03



எப்போதுமே வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் தோன்றும் தனிமனிதர்களாலேயே மாற்றங்கள் உருவாகின்றன. ஆனால் எதிர்நிலைச் சக்திகள் பெரும்பாலும் அவர்களைச் சோர்வடையவும் செய்கின்றன. ஏனென்றால் அவர்கள் ஆற்றுவதன் பயன்கள் எழுந்துவர காலம்பிடிக்கும். எதிர்நிலைகளின் கூக்குரல்கள் எழுந்துவந்து உடனடியாகச் சூழ்ந்துகொள்ளும். ஆகவேதான் கடமையச்செய், பயன் தேடிவரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்கு ஒரு கடமை உண்டு, புனிதகடமை என்றே சொல்வேன், அத்தகைய பெருமானுடரை எழுத்தில் பதியவைத்து காலத்தின் பகுதியாக்கி அடுத்தத் தலைமுறைக்கு அளிப்பதுஎனகிறார் ஜெயமோகன் தனதுஇன்றைய காந்திகட்டுரைத் தொகுப்பில் .

நான் என்னை பலநூறுமுறை கேட்டுக்கொண்டது ஒன்று உண்டென்றால் அது , எனக்கென விசேஷித்து சில கதவுகள் திறப்பதும் , அதில் நுழைந்து  பிறிதொருவர் செய்யவியலா செயல்களை செய்து , அதை செய்ததனால்  கைவிடப்படும் இழிவை நான் ஏன் மீள மீள அடைந்து கொண்டிருக்கிறேன் என்று . அவை எனக்கென காத்திருப்பவைபோல மாயம் செய்கின்றன , பிறிதெவரும் அதை கண்டும் காணாததுமாக விலகி நிற்கின்றனர் . நான் அதன் வசீகரம் கண்டு சென்று தொட்டவுடன் ஒட்டிக்கொள்கின்றன . தலைவரின் பிரசார பயண ஒருங்கிணைப்பு நான் என்னியிறாத கதவுகள் திறந்து கொடுத்தன . தொடர்புறுத்தல் அவ்வளவு எளிதில் இந்த கட்சியில் செய்து விடக்கூடி ஒன்றல்ல என்கிற எண்ணத்தில் இருந்த போதுதான் , அது வலிய வந்து என் பக்கத்தில் நின்றது.

அன்று காலை தலைவர் 7:00 மணிக்கு என்னை அழைப்பார் என் நான் நினைக்கவில்லை . இரண்டு நாள் நிகழ்வில் பிரசார ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி கொடுப்பது , முற்றும் அறியாத பிறிதொருவர் திருமண பந்தியில் வலிந்து சாம்பார் வாளி தூங்குவது போல் . அது  ஒன்றும் அவ்வளவ கௌரவமாக பார்ககப்படுவதில்லை . ஆனால் கேட்பார் இல்லாது அனாதையாக நிற்கும் ஒன்றை பார்த்தும் கடந்த செல்ல மனமின்றியே நான் வலிந்து அதனுட்புகுந்து ஒருங்கமைத்துக் கொடுத்தேன்

பின்னர் அதற்கான அணுக்கரிடம் கைமாற்றி விட்டதால் , இனி பெரிதாக நான் செய்ய ஏதுமில்லை என்கிற நினைப்பில் , மறுநாள் நிதானமாக எழுந்து , காலை 9:00 மணிக்குமேல் தலைவரை ஏதாவதொரு புள்ளியில் பிடித்து இணைந்து கொள்ளலாம் என நினைத்திருந்தபோதுதான் காலை 7:00 மணிக்கு தலைவர் தொலைபேசியில் அழைத்து என்னிடம்என்னையா செய்து கொண்டிருக்கிறாய் ஏன் இன்னும் வரவில்லை ?” என்று கேட்ட பிறகே படுக்கையிலிருந்து வாரி சுருட்டி எழுந்து ஓடினேன்

அரக்கப்பரக்க நான் தலைவரை சென்று சேரும்போது பிரசார நிகழ்விற்கான அனைத்து வண்டி நிரைகளும் புறப்பட காத்திருந்தன . முகம்தெரிந்த , தெரியாத  சிலர் அவரவர் தாங்கள் பயணம் செய்ய உத்தேசித்திருக்கும் வண்டிகளுக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தனர் . எக்காரணம் கொண்டும் அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகரமாட்டார்கள் . நகர்ந்தால் அவர்களுக்காக அந்த வண்டிகள் காத்திருக்கப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும் . அங்கு கூடி இருப்பவர்கள் பலதரப்பட்ட வேடிக்கை மனிதர்கள் . அரசியலில் எந்த காலத்திலும் எந்த உயர் பதவிகளுக்கு வரப்போவதில்லை . சிலருக்கு அன்று அவர்கள் தொகுக்கு தலைவர்  வருகிறார், ஆகவே அவர்கள் தலைவருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டருப்பதை சிலரால்  பார்க்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் . அப்படி அவர்கள் தங்களை வெளிக்காட்டும் போது பார்பவர்கள் அவர்களது   நண்பர்களாக, எதிரிகளாக, குடுப்பதினார்களாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்

அதனால் அவர்களுக்கு என்ன பயன் என , எனக்கு பல நேரங்களில் புரிவதில்லை . சில நேரம் நம்மையும் பிறர் அப்படித்தான் பார்க்கிறார்களோ?, என்கிற சந்தேகம் வந்ததும் உண்டு . நான் அவசரமாக தலைவரை சென்று பார்த்தபோது தனது வழமையான இடத்தில அமைந்தபடி அன்று அவரை தங்கள் தகுதிக்கு அழைத்து செல்லவந்திருக்கும் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார் , என்னை பார்த்ததும்கிளம்பலாமா?” என்றதும் நான்சரிஎன்றேன் . அப்போது தலைவருக்கு பின்னல் இருந்த அவரது தனி அறையிலிருந்து ஆஜானுபாகுவாக ஒருவர் வெளியே வந்தார் அவர் யார் என எனக்கு தெரியவில்லை , புதுவையை சேந்தவரில்லை என்பது மட்டும் தெரியும் . தலைவரின் தனிப்பட்ட அறையிலிருந்து வருவதால் அவரது நெருங்கிய  உறவினராக இருக்கலாம் .

அவருடன் நெடுமாறனும் வெளியே வந்தான் . நெடுமாறன் தலைவரின் தூரத்து சொந்தம் கடலூரில் தொழிற்சாலை வைத்திருக்கிறான் . தலைவர் நைஷ்டிக பிரம்மச்சாரி. குடும்ப உறுப்பினர் என பெண்கள் யாரும் அந்த வீட்டில் இல்லாததால் , வீடு முழுவதும் நானும் என்னைப் போன்றவர்களும் சுற்றி வர அனுமதியிருந்தது. பெண்கள் இல்லாத வீட்டில் அனேகமாக எந்த தனிப்பட்ட குடும்ப விழவுகளும் அங்கு நிகழ வாய்ப்பில்லை . ஆகையால் சொந்தங்கள் என சொல்லிக் கொண்டு வர யாருமில்லை . இருப்பவர்களில் சிலர் . மிக அரிதாக வருவார்கள் . பிறரை தலைவர் தன்னிடம் அண்ட விடுவதில்லை  என்பதால் சொந்தங்கள் என மிக் சிலரை நான் அங்கு பார்த்திருக்கிறேன் . நெடுமாறன்  வந்த சில நாட்களிலேயே   எனக்கு மிக நெருக்கமானவனான்

தலைவருடன் நான் எதிர்நோக்காத நெருக்கம் வந்ததற்கு பல காரணிகள் இருந்தன . நெடுமாறனின் நட்பும் அதில் ஒன்று . பல முரண்பட்ட எண்ணங்களை நாங்கள் விவாதித்து பகிர்ந்து கொண்டாலும் இறுதியில் என் சொல் நிற்கும் . கடினப்பட்டோ அல்லது காரணத்திற்காகவோ அவன் நான்  சொல்வதை ஏற்றுக்கொள்வான் . தலைவர் புதுவையின் முதல்வரான பிறகு , ஒரு கடும் விவாதத்தில் நான் அவனிடம் தோல்வியுற்றேன்


அன்று அவன் சொன்ன சில கோட்பாடுகள் எனக்கு புதிய திருப்புகளை கொடுத்தது நிஜம் அரசியலலின் பிரிதொதொரு கோணத்தை பற்றிய சிந்தனையில் நான் மூழ்கிப்போனேன் . சில முக்கிய நிகழுவுகளின் பின்னணியில் நான் இருந்த நேரமது . யதார்த்த அரசியல் நான் புரிந்து கொண்டாலும் . அதன்படி நிற்க நான் விழையவில்லை . அடிப்படைகளை விட்டுக்கொடுத்து இருத்தியால் காரணங்களுக்கு நான் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தை விட்டு உள்ளம் நெகிழ்ந்து வெளியேறினேன் . சில காலத்திற்குள்ளாக அது நொறுங்கிப்போனது . கண்களுக்கு தெரியும் பக்கத்தில் நிற்கும் ஒன்று கைகளுக்கு கிடைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்