https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 9 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 293 * விண்ணகத்து தொடுகை *

ஶ்ரீ:



பதிவு : 293 / 380 / தேதி :- 09 ஜனவரி  2018

* விண்ணகத்து தொடுகை *


ஆளுமையின் நிழல்   ” - 39
கருதுகோளின் கோட்டோவியம் -03



நெடுமாறன் எனக்கு தலைவரின் வீட்டில்தான் பழக்கம். அவருக்கு ஒருவகையில் தூரத்து சொந்தம், கரூர் பாஸ்கர் அவன் மூலமாக எனக்கு அறிமுகமானார் . கரூரில் பெரிய தொழிலதிபர் . பலவித அரசியல் தொடர்பு . சமூக உயர்பதவிகளில் இருப்பவர் . அவர் இதற்கு முன்பாக தலைவர் தேர்தலுக்கு வந்து உதவுவது வழமையா? என்பது எனக்கு தெரியாது . தலைவர் தேர்தலில் நின்று ஏழு வருடம் கடந்து விட்டிருந்தது . என்னை தலைவரின் பிரச்சார களத்தில் பார்த்தவர்  உற்சாகப்படுத்த என்னுடன் பேச விழைகிறார் என நினைத்தேன் . ஆனால் தலைவரின் பிரச்சார ஒருங்கமைவின்மையை கூத்தினால் நொந்துபோயிருப்பது புரிந்துகொள்ள முடிந்தது. தன்னால்  ஏதாவது செய்து சரிசெய்ய முடியுமா? என்கிற எண்ணத்திலிருக்கும்போதுதான்   நான் அவர் கண்ணில் பட்டிருக்க வேண்டும்

அவருக்கு வேறு சில திட்டங்கள் இருந்தன . அதை பேசவே என்னை சந்திக்க விழைந்தார் என்பதை பின்னர் புரிந்துகொண்டேன். நெல்லை கண்ணன் வைத்து தலைவருடன் இணை பிரச்சார திட்டத்தை முன்வைத்த போது சற்றும் தயங்காது ஏற்றுக்கொண்டார் . மேலும் தலைவரை இதில் எவ்வகையிலும் கலக்க வேண்டாம் என்றும் , என்ன சிக்கல் எழுந்தாலும் அதை தான் பார்த்துக்கொள்வதாக சொன்னார் . மேலும் அதை செழுமை படுத்த நான் நினைப்பதை சொல்ல சொன்னார் . அப்போது அவரிடம் பேசுவதற்கு எனக்கிருந்த தயக்கம் , தலைவரின் மனநிலை குறித்துத்தான்

தலைவரின் அனுகுமுறையில் முற்றாக நான் குறை காணவில்லை , இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்த்தேன்கிடைக்கும் வாய்புகளை எல்லாம் பயனபடுத்திக் கொளவது அரசியலாளனின் பாணி , அதன் பின்விளைவுகளை அறியாமல் தலையாட்டுவது மடமை. தலைவரிடம் சொல்லி இதற்கு அவர் எண்ணத்தை கேட்பது , நானே அதற்கான தடையை கேட்டுப் பெற்றதாகிப்போகும். சிறிது யோசனைக்கு பிறகு ,   அன்று மாலைக்குள் அதன் சத்தியகூறுகளை அவதானித்து பின் முழு செயல் திட்டத்தோடுவருவதாக சொல்லி மெல்ல அவரிடம் விடைபெற்று தலைவரின் பிரச்சார அணிவகுப்புடன் சென்று இணைந்து கொண்டேன் .

அன்று அனைவருக்கும் மதிய உணவிற்கு ஓர் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . காலையிலேயே சாம்பார் சாதம் தயிர்சாதம் போன்றவை காதி பவனில் சொல்லி ஏறபாடு செய்யப்படிருந்தது . கிராம்ப் பகுதியக இருந்தால் வழியில் நிழலான ஏதோ ஒரு இடம் . நகர் பகுதியாக இருந்தால் தலைவரின் வீட்டிற்கே பிரசார வண்டி திரும்பிவிடும் . இரண்டு மூன்று மணி நேர ஓய்விற்கு பிறகு மாலை பிரசாரம் துவங்கும். நான் தலைவரிடம் சொல்லி வீடு திரும்ப நினைத்த போதுதான் தலைவர் அழைத்து , கரூர் பாஸ்கர் சொன்னதை முடியுமானால் செய் , ஆனால் இரண்டையும் இணைத்து செய்ய வேண்டிருக்குமே முடியுமா? என்றார் . நான் அதன் சாத்தியத்தை சொன்ன பிறகு . சரி என சொல்லிவிட்டார்.

வீட்டின் பின்கட்டில் எனக்காக காத்திருந்த மாறன் கரூர் பாஸ்கர் , தலைவருடன் பேசிய பிறகே என்னை தொடர்புகொண்டதாக சொல்லி , அவர் தங்கியிருந்த விடுதிக்கு என்னை அழைத்து சென்றான் . அதற்குள் கரூர் பாஸ்கரின் அலுவலக பணியாளர்கள் வந்துவிட்டிருந்தனர் . எனக்கு அந்த வேகம் ஏற்புடையதாக இருந்தது . நான் மனதில் வைத்திருந்த தொடர்புறுதல் திட்டத்தின் விரிவான விளக்கத்தையும் , அவசியத்தையும் சொல்லிக்கொண்டிருந்த போதே அவருக்கு அது தெளிவாக புரிந்துவிட்டிருந்தது . எந்த மறுப்பும் சொல்லாது எனக்கு எது சரியென படுகிறதோ அதை செய்யச் சொன்னார் . அவரது உதவியாளர்களை எனக்கு உதவிகரமாக இருக்கச்சொல்லிவிட்டு தான் கரூர் செல்வதாகவும் , நான் நினைக்கும்போது தன்னை கூப்பிட தயங்கவேண்டாம் என சொல்லி புறப்பட்ட சென்றார்

எனது பிரசார ஒருங்கமைப்பை செறிவாக செய்வதற்கு, கரூர் பாஸ்கர் தனது நிருவன ஊழியர்களில் மேலும்  ஒருவரை அன்று மாலையே புதுவைக்கு அனுப்புவதாகவும் சொன்னார்அவர்கள் அனைவரும்எனக்கும் அவருக்குமான தொடர்பில் இருப்பார்கள் என்றார். தனது பேச்சின் இடையில், இதை தலைவரிடம் தான் முதல்நாள் பிரசார ஒருங்கிணைப்பு பற்றி பேசியதையும் , தலைவர் தனது பாணியில் அது சரிவராது என முதல் நிலையிலேயே மறுத்துவிட்டதை சொல்லி வருத்தப்பட்டார். தலைவர் மறுத்ததற்கு பல கரணிகள் இருந்திருக்கலாம் . என்றேன் தமிழக புதுவையின் அரசியல்பாணி என விலக்கியதும் புரிந்து கொண்டார்.

கிளம்பும் முன்னர் , பிரசார முறையை இன்னும் செறிவாக்க வேறு பேச்சாளர்களை கொண்டுவருவது என முடிவு செய்தோம் . அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என ஆலோசித்த போது பல தமிழக காங்கிரஸ் பேச்சாளர்களின் பெயரை பரிசீலீத்தோம்நான் அனைவரையும் மறுத்தேன். நெல்லை கண்ணன் என் மனதிலிருந்தார் , இலக்கிய மேடை பேச்சாளர் , காங்கிரஸ் வேட்பாளராக கலைஞர் கருணாநிதியை எதிர்த்து நின்றவர். அவரை நான் சொன்போது மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்
அவரை தொடர்பு கொண்ட போது தான் சென்னையில் இருப்பதாகவும் நாளை மறுநாள் புதுவையில் சந்திப்பதாக சொன்னார் . அதன் பிறகு இனி அடுத்த கட்ட நகர்த்தலையும் அதில் நிகழ்த்த வேண்டியவைகளை பற்றிய யோசனையில் இருந்தேன்.

நான் மிக விரும்பிய நிகழ்வாகவும் எனது தனிப்பட்ட கட்டுப்பாட்டில் வருகிற நிகழ்வாக அது அமைந்தது. எனக்கு விருப்பமான தொடர்புறுத்தல் வேலையை கையிலெடுத்துக் கொண்டேன். நாளை மறுநாள் நெல்லைக் கண்ணன் புதுவை வருவதற்குள்ளாக அனைத்தையும் ஒருங்கமைக்க வேண்டும். முதலில் நான் தேர்ந்தெடுத்திருந்த இளம் தலைவர்களை ஒன்றுகூட்டியாக வேண்டும். அதை அன்று மாலையே என் வீட்டில் அதை கூட்டினேன்


மாலை என் வீட்டில் நிகழவிருக்கும் முக்கியமான கூடுகை பற்றிய பரபரப்பில் இருந்தேன் . எனது அரசியல் வாழ்வின் முக்கியத்தருணமாக , நான் நெடுநாள் காத்திருந்த வாய்ப்பாக இதை பார்த்தேன் . நான் நினைத்தபடியான தொடர்புறுத்தலை இப்போது ஒருங்க முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை . புதிதாக திட்டமிடுதலில்  நான் இல்லை , அது எனக்குள் பல்லாயிரம் முறை  ஓடி ஓடி பிழைநீக்கப்பட்டு , எப்போதும் என்னிடம் இருந்து கொண்டிருப்பது . நான் அதன் பிறகு நிகழ்த்த வேண்டிய திட்டத்தை பற்றிய கனவிலிருந்தான் . கனவுகள் விண்ணகத்து கொடை . நமக்கான நாளையை அதுதான் திறந்து கொடுக்கிறது . ஆனால் அவை நிகழும்போது கனவில் கண்டதைப்போல் இருக்கவேண்டிய அவசியமில்லை . ஊழின் நேரடி தொடுகையில் இருப்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை , என்னுடைய வாழ்ச்சியும் வீழ்ச்சியுமான என் காலத்தை , நான் இங்கிருந்துதான் தொடங்கினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக