https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 6 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 289 * நிழல் வேலை *

ஶ்ரீ:



பதிவு : 289 / 376 / தேதி :- 05 ஜனவரி  2018


* நிழல் வேலை *



ஆளுமையின் நிழல்   ” - 35
கருதுகோளின் கோட்டோவியம் -03








பாலன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிலிருந்த போதும் , அமைப்பை மறுவுருவாக்கம் செய்த அனுபவமுண்டு. அதை முயற்சித்த போது  குறுங்குழுவை போல ஒன்று உருவாகித்தொலைத்தது. இளைஞர் அமைப்பே அப்போது அதைபோன்ற ஒன்றுதான் ஆகவே அவர்களை பேசி பேசியே சாதகமாக மாற்ற வேண்டிய அவசியம் . வருபவர்கள் நமக்காக மெனக்கெடுவதால் அவர்கள் எங்கும் அடிபடாது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நமதாகி விடும். அத்தகையவர்களை அமைப்பிற்குள்  வந்ததும் வெகு விரைவில் ஆர்வமிழந்து விலகி விடுவார்கள்

வேறு சிலரோ அரசியல் புரிந்தவுடன் தெளிவாக நம்மை விட்டு நமக்கு நேர் எதிர் அமைப்பில் தயங்காது சென்று சேர்ந்து விடுவார்கள் . அந்த குறுங்குழுவின் இழிவை அங்கிருந்த போதுதான் அறிய நேர்ந்தது . அது ஒரு நோய் போல ,  சிக்கியவர் எந்த அமைப்பிலிருந்து  வலகினாலும் அந்த மனநிலையிலிருந்து விலக முடியாது . எங்கு சென்று சேர்ந்தாலும் இதையே செய்து கொண்டிருபார்கள் . அதன் சீரழிவின் உச்சத்தைத்தான் , நான் இளைஞர் காங்கிரசிலிருந்து விலகும் போது பாரக்க நேர்ந்தது .

இனி வாழ்நாளில் இதை பிறிதொரு முறை செய்வதில்லை என நினைத்துக்கொண்டேன் . இந்த முறை அதை தலைவர் சண்முகத்தின் பொருட்டு செய்யத் துவங்கும் முன்பாக , அதைப் போல தோற்றமளிக்கும் ஒன்றை செய்வதில்லை என்பதில் தெளிவாக இருந்தேன் . பிறிதொரு சிக்கல் மேடை  பேசு மொழி . இங்கு பேசப்படும் பாணி , எனக்கு ஒவ்வாமையை கொடுத்திருந்தது , நல்ல முறையில் பேசுவதற்கு எனக்கு பயிற்சி இல்லை. அதை சொல்லிக்கொடுக்கவும்  அப்போது யாருல்லை இந்த சூழலில்தான் நெல்லைக்கண்ணன் வாய்ப்பு என்னை தேடி வரும்போது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டேன்

நான்சி நிகழ்த்திய சிறு கூடுகைகளின் வழியாக இயல்பிலேயே தனி ஆளுமையுள்ள சிலரை முன்னமே மனத்தில் நினைத்திருந்தேன் , அவர்கள் முன்பே ஒரு முடிவென எடுத்து வந்தவர்கள் . அவர்களுக்கு இது வழி என சொல்வதுதான் சரியாக எனக்கு இருக்க முடியும் . பிறிதொருவரின் முடிவை அவரின் பொருட்டு நாம் எடுத்து கொடுக்க முடியாது . அது அவர்கள் தாங்களாக  வளர்த்துக் கொள்ள வேண்டியது . அது விளைந்தால் அதன் மண் அவர்களின் மனோபாவம் . அதை இதைப்போன்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே நாம் உணரக்கூடியது . அதைக்கொண்டு அவரை வனைந்து விடலாம் , அவர் நாளை நமக்கு பயன்படாது போனாலும் ஒரு நல்ல ஆளுமையாக எழுந்து வர வாய்ப்புகள் உண்டு 

தேர்தல் களத்தில் தலைவரை பலமுறை பார்த்திருக்கிறேன் , ஆனால் அதை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு ஒருநாள் எனக்கே கிடைக்கும் என எண்ணியதில்லை . முதல் சில நாட்களுக்கு பிறகு நான்  அவருடைய பிரச்சார பயணத்தை திட்டமிட துவங்கினேன் . இன்று எந்த தொகுதிக்கு செல்கிறார் என்பது ஒருநாள் முன்னதாக தீர்மானிக்கப் பட்டுவிடும் . அந்த தொகுதியின் அனைத்து தலைவர்களுக்கும் ஊர் முக்கியஸ்தர்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு . எதை போன்ற பிரச்சாரம் என்பதை முடிவு செய்வோம் . தேர்தலின் போது அதற்கென சில முறைமைகள் உண்டு

தெருமுனை பிரச்சாரம் அது அநேகமாக இரு சாலைகள் சந்திக்கும் அனைத்து பகுதிகளிலும் நடத்துவது . கடைத்தெரு , சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களில் பேசுவது ஒரு சம்ப்ரதாயம் மட்டுமே . ஆனால் நான் திட்டமிடும்போது ஊர் பெரியவர்கள் ,வணிகர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் செல்லாக்வக்குள்ளவர்கள் என  அவர்கள் வந்து அந்தந்த ஊர் சார்பாக தலைவருக்கு மரியாதை செய்வது . மூன்று சிறிய , பெரிய பொதுக்கூட்டம் அதில் அந்த தொகுதிக்கு வேண்டிய நலத்திட்டகளின் பட்டியல் முன்னரே பெறப்பட்டு அது தலைவர் சரிபார்த்து எது செய்யக்கூடியது எது முடியாது என முடிவு செய்யப்பட்டு , அது அந்த கூட்டத்தில் அந்த விஷயங்கள் பிரதானமாக பேசப்படும் .

மிக முக்கியமானவர்களின் வீடுகளுக்கு சென்று மரியாதையை நிமித்தமாக சந்திப்பது , பிரச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது . இதை செய்யவேண்டுமென்றால் சில நாட்களுக்கு முன்னரே அனைவரையும் சந்தித்து பேசி  முடிவெடுத்து இடத்தை சென்று சரிபார்த்துதலைவர் வருவதை அவரவர்களையும் தொடர்புகொண்டு சொல்லி, இவர் வந்தால் அவர் வரமாட்டர் போன்ற விஷயங்களில் பஞ்சாயத்து செய்துஎந்த எந்த பகுதிகளுக்கு யார்யார் தலைவருடன் பிரச்சார வேனில் செல்ல வேண்டும்? .யார் தொகுதி முழுமையாக? யார் யார் குறிப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் ?. யார் சிலவெகுஜன விரோதிகளோ அவர்களை கடைசீ வரை தலைவரின் பிரச்சார வேனில் ஏற்றாதபடி பார்த்துக் கொள்வது போன்றவை .

எந்தெந்த பகுதிகளில் யார் பெயரை சொல்லவேண்டும்? யாரை தவிர்க்க வேண்டும்?. யாரைமட்டும் தனிமையில் சந்திக்க வேண்டும்? யாரை நாளை தலைவரை வீட்டிற்கு வந்து சந்திக்க சொல்ல வேண்டும் ?. யாருடம் எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக்கூடாது ? போன்ற இன்னும் சில நுட்பமாண. முறைமைகளில் எது  தவறினாலும் சில நூறு வாக்குகள் காலி . தலைவர் அருகில் எப்போதும் இருக்கும் ஒருவர் இதை செய்யவேண்டும் . அவர் மட்டுமே தலைவருடன் முழுமையாக பிரசராரத்தில் உடன் இருப்பார் , அவர் எனக்கு மிக அணுக்கராக இருப்பார் . அவர்யார் என பிறர் எவருக்கும் தெரியாதிருப்பது சிறப்பு

எங்கு யாரை தலைவருடன், பிரசார வேனில் ஏற்றியதும் அவர் எதுவரை தலைவருடன் இருப்பார் என்பது , வண்டியில்  ஏறுவதற்கு முன்பே அவருக்கு சொல்லப்பட்டுவிடும். எதிர்பாரது முன்னடியடித்து ஏறிக்கொள்ளும் ஒருவரை கறாராக பிடித்து கீழிறக்கிவிட வேண்டியது போன்றவை , தலைவர் செல்லும் பிரச்சார வேனில் செல்லும் என் அணுக்கர் செய்வார் . தலைவர் செல்லும் வாகன அணிவகுப்பில் எனது இடம் மாறிக்கொண்டே இருக்கும் . நான் அவரை எப்போதும் பின்தொடர்ந்து வருவது எனது அணுக்கர்கள் தவிர பிறிதொருவருக்கு தெரியாது பார்த்துக் கொள்வேன் . பிரச்சார திட்டத்தை  அவருக்கு பின்னல் தனிக்காரில் சென்று கொண்டிருக்கும் நான் அந்த அணுக்கருக்கு அவ்வப்போது என்ன செய்யவேண்டும் என்பதை  சொல்லியபடி இருப்பேன் . ஆயாசமளிக்கும் வேலை . ஆனால் செறிவாக செய்தால் அதைப்போல திருப்தி அளிப்பது பிறிதொன்றில்லை .ஆனால் ஒருநாள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தலைவர் வீடு வந்து சேர்வதற்குள்ளாக , நமக்கு புதிதாக பத்து எதிரிகள் உருவாகி இருப்பார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்