https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 25 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 10 பதட்டம்

ஶ்ரீ:

அரிய நிகழ்வும்  வெறுமையும் - 10

பதட்டம் 



பதிவு :  396/ தேதி :- 24 ஜனவரி  2018 





நான் நிவாஸை பின்தொடர்ந்து படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன் . அந்த தளம் நீண்டு சென்று ஒரு சிறு அறைபோன்ற பகுதியில் இணைந்து பின் ஒரு குழைபோல வளர்ந்து விமானத்தின் விலா பகுதியில் இருந்த கதவை அடைத்தபடி பொருத்தப்பட்டிருந்தது . ஜன்னல் வழியாக விமானத்தையும் ஓடுதளத்தையும் பார்க்க முடிந்தது . கீழே சில பொருட்களை ஏற்றி முடித்து விமானத்தின் வால் பகுதியில் இருந்த கதவு மூடப்பட்டுக்கொண்டிருந்தது . சப்தத்தை தடுக்கும் இரட்டை கண்ணாடிகள் கொண்ட ஜன்னல்களை தண்டி இரும்பை உராய்வதைப்போல தொடர் ஒலி உச்சஸ்தாயியில் கேட்டுக்கொண்டிருந்தது

நிவாஸ் அந்த குழாய் வடிவ இணைப்பின் இறுதியில் நின்று கொண்டு விமான நிலைய சப்பந்திகளுடன் ஏதோ பேசியபடி இருந்தான் , அங்கு மேலும் மூன்று பேர் கையில் ஒயர்லெஸ் கருவியுடன் பதட்டமாக இருப்பதாகப்பட்டது . என்னவாக இருக்கும் என யூகிக்க முடியவில்லை , மீளவும் பதட்டம் தொற்றிக்கொள்ள துவங்கியது . ஒருவேளை  சென்னையிருந்து நாங்கள் வந்த விமானத்திலிருந்த எங்கள் பெட்டிகளை இதில் மாற்றுவதில் ஏதாவது குழப்பமா ? என்கிற சிந்தனையில் அவனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.  

அனைவரும் கீழே பார்ப்பதும் நிவாஸ் அவர்களிடம் என்னை காட்டி ஏதோ சொல்வதும் தெரிந்தது . நான் அவர்களை நெருங்கிவிட்டேன் . அருகிலிருந்த ஜன்னலை கடக்கையில் கீழே பார்த்தபோதுதான் கவனித்தேன் , அதுஅம்மாவீல் சேரில் அமர்ந்தபடி தன்னை சுற்றி நின்று கொண்டிருந்த சிலருடன் அவர் .வாக்குவாதம் செய்வதை பார்க்க முடிந்தது . அதற்குள் நிவஸிடம் பேசிக்கொண்டிருந்த சிப்பந்தி என்னை நெருங்கி வந்தவர் , அம்மா என்னை பார்க்காமல் விமானத்தில் ஏற மறுப்பதை சொல்லிவிட்டு அருகிலிருந்த கதவை திறந்து விட்டு என்னை கீழே இறங்கிச்சென்று அவருடன் பேசும் படி சொன்னார்.

கதவை திறந்த மறுநொடி , அது வரை மெலிதான உருமலாக கேட்டுக் கொண்டிருந்தது , இப்போது காதை கூசவைக்கும் அந்த உராய்வு ஒலி ஓங்கிப் பெருகி முகத்தில் அரைந்தது . முழுவதுமாக இரும்பு சட்டத்தினால் வடிவமைக்கப்பட்ட அந்த படிகளில் அம்மாவை நோக்கி மெல்ல இறங்கத் துவங்கினேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...