https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 22 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 8 விரோதி

ஶ்ரீ:

அரிய நிகழ்வும்  வெறுமையும் - 8

விரோதி 



பதிவு :  393 / தேதி :- 22 ஜனவரி  2018 






அம்மா தனக்கு காலை உணவு தேவையில்லை என்று சொல்லிவிட்டதால் , விஜி அம்மாவிற்கு துணையாக நல்லவேளை இருவரையும் புறப்பாடு பகுதியிலேயே விட்டிருந்தோம் . அவர்களும் இங்கிருந்தால் என்னாவாவது? என நினைத்தபடி ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில்  எனது மனைவியால் ஓடமுடியவில்லை அவள் நின்றுவிட்டாள் . காலம் கடந்து கொண்டிருந்தது . இந்த விமானத்தை தவறவிட்டால் , அடுத்த விமானம் இரவு 9:00 மணிக்குத்தான் . அது எங்களின் எல்லா திட்டத்தையும் பாதித்துவிடும்

என்ன செய்வது என்கிற பதட்டத்தில் இருந்தபோது , நான் நிவாஸிடம் அறிவிப்பு  செய்யும் இடத்திற்கு அவனை வேகமா போக சொல்லிவிட்டு நான் எனது மனைவியுடன் ஓட்டமும் நடையுமாக மூச்சிரைக்க வியர்த்து வழிந்தபடி தூரத்தில் தெரியும் நிவாஸின் சட்டையை குறிவைத்து அனுமானமாக விரைந்து கொண்டிருந்தோம்

மனைவி தன்னை நிலைபடுத்திக் கொள்ள நின்றாள் , அவளை திரும்பி பார்த்த போது ,எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த  நிவாஸை தவறவிட்டிருந்தேன் . அவனைக் காணவில்லை. அதுவரை எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்கிற எண்ணம் குலைந்து போனது. இப்போது அவனை வேறு தேடியாக வேண்டும்  என்கிற  பதட்டத்தில் அவனை எங்கு தவற விட்டிருக்கலாம் என சிந்தனை ஒருபக்கம், அடுத்து என்ன செய்வது என்கிற உச்சத்தில் சற்று நிதானித்துக் கொள்ள நின்றுவிடேன்

அதுவரை கேட்டுக் கொண்டிருந்த அறிவிப்பு சட்டென நின்று போனதால் , செல்லும் திசை குறித்த சந்தேகமும் , தவறான இடத்திற்கு வந்துவிட்டோமோ என்கிற குழப்பமுமாக திகைத்திருந்தேன் . சே என்ன ஒரு முட்டாள்தனம் , புறப்பாடு வாயில் அருகே இருந்த தயாருணவை வாங்கி சாப்பிட்டிருக்கலாம் . எங்கு சென்றாலும் விஷேஷித்து எதையாவது விரும்பபோய்தான் சிக்கிக்கொள்ளவதாக, உள்ளுக்குள் அதுவரை பதுக்கி இருந்த ஒன்று விரோதிபோல ஏழுந்து பேயாட்டமாட ஆரம்பித்து , அதற்கு என்னால் எந்த சமாதானமும் சொல்ல இயலவில்லை .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்