https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 12 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 295 * சிதையாத தனி ஆளுமைகள் *

ஶ்ரீ:



பதிவு : 295 / 382 / தேதி :- 11 ஜனவரி  2018

* சிதையாத தனி ஆளுமைகள்  *


ஆளுமையின் நிழல்   ” - 41
கருதுகோளின் கோட்டோவியம் -03




வெறுப்பு எரியும் மனங்களைப் பொறுத்தவரை உண்மையில் அவர்களுக்கென கோட்பாடோகொள்கையோஏன் இலட்சியமோ கூட ஏதுமில்லை. அவற்றின் தன்னியல்பால் அவை வெறுப்பைக் கக்குகின்றன. அவ்வெறுப்பைக் கக்குவதற்கான ஒரு காரணமாக ஏதேனும் அரசியலை சமூகநோக்கத்தைக் கண்டுகொள்கின்றன. அந்த நோக்கத்தை உச்சகட்ட அறம் சார்ந்ததாகசமூகக் கோபம் சார்ந்ததாக முன்வைக்கின்றன. அந்தநோக்கத்தைக் கொண்டு தங்கள் அதிகார வெறியைமானுடவெறுப்பை நியாயப்படுத்துகின்றன. ஆனால் உள்ளூர உள்ள சக்தி என்பது அப்பட்டமான வெறுப்பு மட்டுமே இதற்கான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். எந்த இலட்சியத்துக்காக இவர்கள் அவ்வெறுப்பைக் கக்குவதாகச் சொல்கிறார்களோ அந்த லட்சியங்களையே தங்கள் வெறுப்பின் பொருட்டு காலில்போட்டு மிதிப்பார்கள்எனகிறார் ஜெயமோகன் தனதுசாட்சி மொழிகட்டுரைத்தொகுப்பில் 

நானும் கரூர் பாஸ்கரும் பேசி முடிவெடுத்தநெல்லை கண்ணனைமுன்வைத்த  இணைப் பிரசாரத்தை பற்றி தலைவரிடம் சொன்னதும் எந்த மறுப்பு சொல்லாமல் அனுமதித்தார் . எனக்கு நெல்லை கண்ணனை நாங்கள் நடத்தும் காப்பிய விழாக்களினால் ஏற்கனவே  நல்ல அறிமுகம் இருந்தது  . காப்பிய விழா ஒரு தமிழ் இலக்கிய நிகழ்வு  அதில் நானும் பொறுப்பில் இருந்தேன்தமிழ் அருவி மணியன், சுகி சிவம் ,அப்துல் காதிர்” , போன்ற நல்ல பேச்சாளர்களை நான் அறிமுகப்படுத்திக் கொண்டது அங்குதான் . அவர்களிடம்  இருக்கும் தடையற்ற அறிவார்ந்த பேசு முறை , நல்ல சொல்வளம் , கருத்தாழம் போன்றவை என்னை எப்போதும் கவர்ந்தவை

இதை போன்று ஏன் அரசியல் மேடைகளில் பேசப்படுவதில்லை ?என நினைத்ததுண்டு . தலைவர் பேச்சு உணர்ச்சிகரமானதாக எப்போதும் இருந்ததில்லை , மிக நிதானமாக பதிவு செய்யப்பட்ட ஒலிபெருக்கி போல ஒரே விஷயத்தை மீள மீள சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார் . தான் வகித்த பதவி அதில் என்ன செய்தேன் . காந்தி காமராஜ் இந்திராகாந்தி பற்றி ஒரே விஷயம் மீள மீள .

தலைவர் அவரது தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பை ஏதற்காக என்னிடம் கொடுத்தார் என எனக்கு தெரியவில்லை . நான் முன்னமே நினைத்திருந்தது யாருக்கு கீழும் அமையாத  தனி ஆவர்த்தனம். அதில்தான் எனது முழு தொடர்புறுத்தலையும் செயல்பாட்டிற்கு கொண்டுவர இயலும் . அப்போது நெல்லை கண்ணனை வைத்து எனக்கு எந்த திட்டமும் இல்லை . எனக்கான தனித்த பிறிதொருவர் சம்பந்தமில்லாத செயல்படும் ஒரு வாய்ப்பை காத்திருந்தேன் . நெல்லைக்கண்ணன் பிரச்சார ஒருங்கிணைப்பு என்னிடம் வந்ததும் ஒரு தற்செயல் நிகழ்வு .

அது மிக தாமதமாகத்தான் என்னிடம் வந்து சேர்ந்தது . பலவிஷயங்கள் , நான் தொட்டதினால் என்னிடம் ஒட்டிக்கொண்டவை , தொடாது போய்நிருந்தால் , என்கிற கேள்வியை எழுப்பிக்கொண்டால் ?, அதற்கு என்னிடம் எப்போதும் பதிலிருந்ததில்லை . பெரும்பாலும் அரசியல் வாய்ப்பு அனைவருக்கும் இந்தப்புள்ளியிலிருந்தான் துவங்குகிறது என நினைக்கிறேன் . அரசியல் அவரவர் விதிமுகூர்தத்தின் படி அவர்கள் தலையில் வந்து அமர்கிறது . திறமையுள்ளவனும், உதவாக்கரையும் இடம்மாறி போவது இங்குதான் . தகுதியற்றவன் சரியான நேரத்தில் அங்கு இருப்பதும் திறமைசாலி ஐந்து நிமிட தமைத்தல் வாய்ப்பை இழப்பதும் பல சமயம் வரலாற்றின் திசை மாறியதாக நாம் சொல்லுகிறோம் . ஆனால் அவைதான் நம்மை கொண்டு சேர்கிறது .

நெல்லை கண்ணன் பிரச்சார ஒருங்கிணைப்பு. அதை கையிலெடுத்துக்கவண்டதும் , அது தலைவரின் பிரச்சாரத்திட்டத்தை இன்னும் செறிவாக நடத்த முடிந்ததுடன் , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வேலை செய்யும் சந்தர்ப்பத்தை எனக்கு பெற்றுத் தந்தது . மினி லாரியை ஒன்று மேடையைப்போல வடிவமைக்கப்பட்டு , நெல்லை கண்ணன் தனிகாரில் அனைத்து தொகுதிகளுக்கும் அழைத்து செல்லப்பட்டார் .அவரது முழு பயணதிட்டத்தையும் வடிமைத்து செயல் படுத்தினேன் . அதனூடாக ஒவ்வொரு தொகுதியின் தேர்தெடுக்கப்பட்ட தலவைகளை மையப்படுத்தி அந்த பிரச்சாரக்கூட்டம் இருந்தது . பின்னாளில் அவர்கள் தலைமையில் அமைப்பு ஒருங்க இதுவே முழுக்காரணமாக இருந்தது. நினைத்தபடி அவர்களை சிதையாத முழு ஆளுமைகளாக வென்றெடுக்க முடிந்தது.

தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் எனது அணுக்கர்களை மூன்று குழுவாக பிரித்துக்கொண்டேன் . நிகழ்ச்சியை நடத்தும் நான்காவது குழு அந்ததந்த தொகுக்குள் மட்டுமே செயல்படும் . நிகழ்வை நடத்தும் மையக்குழு அதுதான் பிரதானம் . அது நெல்லை கண்ணன் பயணப்படும் காரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அவருக்கு வேண்டிய உணவு, ஓய்வு வசதி ,தங்குமிடம் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் , அடுத்த புள்ளியில் அவர் பேச வேண்டிய முக்கிய குறிப்புகளையும் , யாரை விளித்து பேசவேண்டும் யாரை நோக்கி என்ன சொல்ல வேண்டும் என்பன .

முதல் நாள்  பிரச்சாரத்திற்கு  வந்து தலைவர் பேசி சென்ற விஷயத்தின் பொருள் போன்றவை அவரது பேச்சில் மையக்கருவாக இருக்கும் . தலைவர் வந்து சென்ற பிறகே நெல்லை கண்ணன் அந்த புள்ளிக்கு வருவதை உறுதி செய்து கொண்டோம் . அவரது குழுவிற்கு முன் பின் அமைத்த குழு அவர் பேசவிருக்கும் இடத்து முன்னேற்பாடுகளை கவனிக்கும் பின்னமைப்பு அவர் வந்து சென்ற பின்னர் இருப்பவற்றை அடுத்த புள்ளிக்கு நகர்த்தும் . நெல்லை கண்ணன் கூட்டத்தை பெரும்பாலும் மாலை 5:00 மணிக்கு மேல்தான் துவக்கியது இரவு 10:00 மணிக்கு முடிவுறும் . குறைந்தது நன்கு புள்ளிகளில் பேசுவது . இடத்திற்கு தகுந்தாற்போல 0:30 நிமிடத்திலிருந்து 0:45 நிமிடம் பெரிய ஊர் என்றல் ஒருமணி நேரம் , மற்ற நேரங்கள் அவரது பயணத்திற்கு சரியாக இருந்தது . நெல்லை கண்ணன் பேசுவதற்கு முன்பாக அவர் வரும் வரை உள்ளூர் பிரமுகர்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது . இது முழுக்க முழுக்க இளைஞர் அமைப்பு முன்னெடுக்கும்படி வடிவமைக்கப்பட்டிடுந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்