https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 12 லக்னோ விமானநிலையம்

ஶ்ரீ:
அரிய நிகழ்வும்  வெறுமையும் - 12


லக்னோ விமானநிலையம் 
பதிவு :  399 / தேதி :- 27 ஜனவரி  2018 


இந்தியாவிற்கு பல பிரதமர்களை கொடுத்த உத்திரப்பிரதேசம் ஒருகாலத்தில் மக்களவையில் நான்கில் ஒரு பகுதி உறுப்பினர்களை அனுப்பும் ஒரு மாநிலத்தின் விமான நிலையம் இந்த கதியில் இருக்கும் என யார்தான் எதிர்பார்க்க முடியும் . அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற பாராளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியிருப்பார்கள் . இதனுடைய பரிதாப நிலை அவர்களின் கண்களில் படாதது விந்தைதான்.  விமான நிலையத்தின் அவல நிலையை நினைத்துக்கொண்டிருந்த மனதை வாங்கி பக்கத்தில் என்னுடன்  ஓடிவந்து கொண்டிருந்த லக்னோவின் சாலையையும் ,இரு புறமும் வார மத்தியில் இன்னும் திறக்காத கடைகளை பார்த்த படி காரில் தங்கு விடுதி நோக்கி போய்க்கொண்டிருந்தேன் . புதிதாக பார்க்கும் எந்த ஊரை நினைவில் இருத்திக்கொள்ள தமிழக பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது , அந்த ஊரை இன்னும் அணுக்கமாக  புரிந்து கொள்ள ஒரு வழி என நான் நினைப்பதுண்டு , என்னால் லக்னோவை நான் பார்த்த எந்த ஊரோடும் பொருத்திப்பார்க்க இயலவில்லை , ஆனாலும் அது நான் இதுவரை பார்க்காத தமிழக கிராம பகுதிகளில் ஒன்றாக இருப்பதுபோல தோன்றியது . விலக்கம் கொடுத்து அது எனக்கு தெரியாத ஊர் என்றது அதன் மாற்று மொழியை தாங்கிய பதாகைகள் .

நல்ல வண்ணம் பூசிய கட்டிடம் எங்கும் கணக்கிடைக்கவில்லை எல்லாவற்றிலும் முப்பது வருட பழமை தெரிந்தது . ஒட்டிய போஸ்ட்டர்கூட நான்கைந்து வருட பழமையாக இருந்தது , இந்த பகுதிகளில் அரசியல் சார்ந்தும் ,  பிற எந்த நிகழ்வும் நடக்கவில்லை என புரிந்தது . தங்கவேண்டிய விடுதி அணுகியதும் , அதை எந்த எதிர்பார்ப்பும் இல்லது பார்த்துக்கொண்டிருந்தேன் . அந்த ஊரின் அமைப்பு எனது எதிர்பார்ப்பை ஒன்றுமில்லாது செய்துவிட்டிருந்தது . வெளியில் அது ஒரு சாதாரண அரசு விருந்தினர் விடுதி போலதான்  இருந்தது , அதன் வாடகை ஏன் அவ்வளவு செலவெறியதாக இருந்தது எனபது உள்ளே நுழைந்த மறு நொடி விளங்கியது  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...