https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 அக்டோபர், 2022

அடையாளமாதல் * பரிசின் காலவரையறை *

 ஶ்ரீ:பதிவு : 646  / 836 / தேதி 25 அக்டோபர்  2022* பரிசின் காலவரையறை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 42 .
அரசு நிர்வாகத்தின் சிக்கலுக்கு அது அளிக்கும் தீர்வு அல்லது பாதிப்பு எங்கோ ஒரு புள்ளியில் தனிமனிதனை மட்டுமே சென்றடைய முடியும். அந்த பாதையை அறிவது அரசு நிர்வாக அரசியல். ஒரு தனிமனிதனிடம் இருந்து அவனால் அந்த சிக்கல் வெளிக் கொணரப்படுகிறது . அது உருவாகும் போது அதன் விளைவுகளை உய்த்தறுபவன் அல்லது அதன் எதிர்கால தாக்கத்தை புரிந்து கொள்பவன் ஆகச் சிறந்த தலைவன். சண்முகத்தை ஆகச்சிறந்த தலைவராக நான் எப்போதும் நினைக்கிறேன். அதனால்தான் அவர் என் ஆசிரியர்,குரு. சண்முகம் , காமராஜர் தொடக்கமாக காந்தி வரை சென்று சேரக்கூடிய ஒரு குரு நிரையை அவர் எனக்கு அளிக்கிறார்அவரும் அவரது வாழ்க்கையும் எனக்கானதை சொல்லுபவை. எனக்கு அரசியல் என்பது ஒருவகை இலக்கிய வாசிப்பு போல பலவித வாழ்கை அனுபவங்களை அது தந்திருக்கிறது. பிற மனிதர்களுடன் அவர்களின் சிக்கல்களில் பங்கெடுத்துக் கொள்ள அதிலிருந்து அவர்கள் மீண்டு வெளிவர உதவுதல் என நான் நினைத்த சிலவற்றை அரசியலில் செய்து பார்க்க முடிந்தது. கூட்டுறவு திட்டம் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் குறித்த பெரும் கனவை அப்போதுதான் உருவாக்கிக் கொண்டேன்


என்னை நான் என்னை எப்போதும் செயல்களில் இருந்து கற்பவனாக உருவகித்திருந்தேன். மனிதர்களின் சிக்கல்களை அரசியலில் கொண்டு வந்து வைத்து உடைத்துப் பார்க்கும் வாய்ப்பை ஒரு முதிரா இளைஞனாக முயற்சித்து பின்னர் அவற்றை அனுபவமாக பெற்றிருக்கிறேன் .அத்தகைய முயற்சிகளுக்கு பலனை சண்முகம் என்கிற ஒருவரின் சொல்லில் இருந்தும் செயலில் இருந்தும் வழிகாட்டலில் பெற்றுக் கொண்டிருக்கிறேன். அவை அவரது வெற்றிகளில் மட்டுமின்றி அவரது தோல்விகளின் வழியாகக் கூட நான் அவற்றை சென்றடைய முடியும்


நிலையில்லா காங்கிரஸ் கட்சி அரசியலில் மிக நீண்டகாலம் தலைவராக இருந்தவர் புதுவையில் காங்கிரஸ் தொடர்ந்து முதன்மை கட்சியாக இருக்க காரணமானவர், இங்கு திராவிட அலை பொங்கி எழுந்த போதும் அதற்கு எதிரான செயலில் வென்றவர்.இந்த பதிவு முழுவதுமாக அவர் அரசியலின் உச்சம் தொட்ட பிறகு அடைந்த வீழ்ச்சி , அந்த வாழ்க்கை அதலிருந்து எனக்கு அல்லது என்னைப் போன்றவர்களுக்கு அது எதை அளிக்கிறது என அவதானிக்க முயல்கிறேன் . அரசியலில் நிலையாமை, வயோதிகம், கசப்பு, மிகைதன்மதிப்பு, நீண்ட அனுபவம் தரும் செயலின்மை என எதை கையெடுத்து , கைவிட்டதால் அவருக்கு அந்த வீழ்ச்சி நிகழ்ந்தது?.அனைவரும் ஒரு நாள் சென்று சேர வேண்டிய இடம் அதுதான்


உணர்வு நிலைகள் எல்லா எளிய மனிதர்களைப் போல மேதைகளையும் பாதிக்கின்றன. அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்களின் சிறந்தவைகளை கொடுத்துவிடுவதில்லை. தலைவர்கள் எளிய மனிதனைப் போல அலைகழிவதில்லை

தனக்கு நிகழ்வதில் இருந்து உணர்வுகளை கழித்து தகவல்களாக எடுத்துக் கொண்டு அந்த அலைக்கழிப்பில் இருந்து வெளியே வந்து விடுகிறார்கள் . வெற்றிக்கு இவை அகவயமான காரணங்கள். ஆனால் புறவயமானவைகள் வந்து மோதிக் கொண்டிருக்கையில் அப்படி எல்லா நேரங்களிலும் ஒருவரால் அவற்றில் கடக்க முடியாது போகலாம் . அந்த வீழ்ச்சி நிகழாமல் அவரால் செய்திருக்க முடியுமா? என்பதே அந்த காலத்தை நோக்கிய கேள்வியாக உருவகித்துக் கொள்கிறேன். அந்த வீழ்ச்சி அந்த உணர்வு நிலைகளை அனைத்தும் ஏதோ ஒரு கணத்தில் அகமும் புறமுமாக மிகச்சரியான விகிதத்தில் கலந்தவையாகி விடுகின்றன . அதிலிருந்து அவரால் மீண்டிருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. அதை ஊழ் என ஒற்றைச் சொல்லால் மட்டுமே வகுத்துக் கொள்ள முடியும்.


சண்முகத்தின் பல காலக் கசப்பு அவர் அத்தனை வருடங்களாக அரசியலில் திரட்டிக் கொண்டவை . கட்சித் தலைமைக்கு அதன் எல்லா தலைவர்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏமாற்றமும் அதன் வழியாக கசப்பை மட்டுமே அளிக்கக்கூடியவர்கள். ஆரம்பம் முதல் அதற்கு பழக்கமானவர்ஒரு வகையில் அவரது அரசியலே கூட அந்த கசப்பை விலக்கிக் கொள்ளும் பொருட்டு உருவானது. ஒவ்வொரு முறையும் அந்த வருத்தம் எழுகிற போது தன்னை மிகச் சிறியவாராக எண்ணி அதை கடந்திருக்க வேண்டும். அல்லது தனக்கான இடம் ஒன்று வாய்த்த பின்னர் இது போன்ற ஒன்றை சகித்துக் கொள்ளக் கூடாது என நினைத்திருக்கலாம். திருப்பி அடிக்க வேண்டியவர்களின் நீண்ட பட்டியல் கூட அவரிடம் இருந்திருக்கலாம். இங்கு இரண்டாவது நிகழ்ந்தது. அது அவர் முதல்வராக வந்தமர்ந்த போது பொங்கு வழிந்தது. அவர் தன்னைப்பற்றி கொண்ட மிகை அல்லது உயர் தன்மதிப்பு. தான் வென்று இறுதி இடத்தை அடைந்துவிட்டதாக தோன்றிய போது அதுவரை கொண்டிருந்த அனைத்தையும் போதும் என நிறுத்திக் கொண்ட அந்த கணம் முதல் அவர் வீழ்ந்து கொண்டிருந்தார். அரசியல் நிலையாமை அடிப்படையானது அதற்கு எதிராக தன்நிலை படுத்திக் கொள்ளுதலே அதை வெல்லும் ஒரே வழி. போதும் என தன்நிறைவடைகிற போது அந்த வீழ்ச்சி நிகழ்கிறது. அது யானையும் சறுக்கிய இடம்


அது எப்படி நிகழ்ந்தது என அவதானிக்க முயல்கிறேன்முதல்வரின் செயலாளர் நியமனத்தில் வில்லங்கம் நிராகரிகப்பட்டதால் மட்டும் அது நிகழ்ந்தது என நான் ஊகிக்கவில்லை. அவர் அந்த பதவியில் வந்தமர்ந்திருந்தால் இவற்றை சில காலம் தடுத்திருக்கலாம். ஆனால் புதிய வேறு சில சிக்கல்களை உருக்கியிருக்கலாம். அனால் அந்த அவமானகரமான வெளியேற்றத்தை தவிற்திருக்கும். வில்லங்கத்தை அவர் ஒதுக்கிய முறை அவருடன் மிக நீண்ட கால தொடர்பில் இருந்தவர்கள் அதிர வைத்தது. பதவி உருவாக்கும் வெற்றிடம் இது என நினைத்து கசந்தார்கள். தங்களுக்கு இது நிகழலாம் என்கிற அச்சம் உருவாக்கிய இடைவெளி பின்னர் அனைத்தையும் முடிவு செய்தது.தலைவரை சுற்றி உருவாகிய சிக்கல்கள் அவரை அலைக்கழித்தன. யாருடனும் அவரால் தன் சிக்கலை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்பதே  பெரிய பின்னடைவு. வந்து மோதும் அனைத்தின் மீதும் எப்போதும் சமநிலையுடன் எதிர் கொள்ள ஒருவரால் முடியாது. மிகப் பெரும்பாலும் அதனால் நேரடியாக பாதிக்கப்படாத பக்கத்தில் இருக்கும் பிறிதொருவர் சட்டென அதற்கு மிக எளிய தீர்வு சொல்லிவிட முடியும். அல்லது அந்த தீவிர சூழலில் இருந்து அவரை வெளிக் கொண்டுவரும் போது அவராகவே சில சிறந்த தீர்வுகளை கண்டடைந்து விடுகிறார். தேவை மூளைக் களைப்படையாமல் அதை சற்று ஓய்வாக வைக்கும் கருவிகளை உருவாக்கிக் கொள்வது. நானும் வில்லங்கமும் அவருக்கு விளையாட்டாக அவரது அலைகழிதலை விலக்கியிருக்கறோம். முடியவே முடியாது என சொன்ன சிலவற்றை அவர் மறுபரிசீலனை செய்து வேறுவிதமாக அவற்றை செயல்படுத்தி அந்த சிக்கலில் இருந்து வெளி வந்தும் அதிலிருந்து புதிய சாத்தியக்கூறுகளை உருவாகவும்  இடமளித்திருக்கிறர். முதல்வரான பிறகு அவரில் நிகழவில்லை. சிக கலின் அலைகழிதில் வாரக்கணக்கில் சிக்குண்டு கிடந்ததை பார்த்திருக்கிறேன். அந்த சூழலில் யாரும் அருகில் செல்ல முடியாதவராக தன்னை ஆக்கிக் கொண்டார். அன்றாட அரசியலை அதன் சிக்கலை யார் எடுத்துக் கொண்டு வந்தாலும் தனது அனுபவத்தை முன்னிட்டு வைத்து தன் முன் வைக்கப்பட்டதை மட்டுமின்றி வைத்தவரை நிராகரித்தார். அந்த செயல் முறை அவர்களை பின் ஒரு போதும் அவர் முன் அவர்களை கொண்டு வந்து நிறுத்தவில்லை


திங்கள், 17 அக்டோபர், 2022

அடையாளமாதல் * பதவி, உதவியாளன்,ஆகப்பெரியவரும் *

  ஶ்ரீ:பதிவு : 645  / 835 / தேதி 17 அக்டோபர்  2022* பதவி, உதவியாளன்,ஆகப்பெரியவரும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 41 .
கட்சி அரசியல் காரணங்களுக்காக நான்வில்லங்கம்ஏன் முதல்வரின் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்த சொன்ன எந்தக் கருத்தையும் அவன் கேட்பதாக இல்லை. அரசியல் பற்றி அவனுக்கு அக்கரையில்லை. “வில்லங்கம்அவனுக்கான எல்லா பாதைகளையும் முடக்குவார் என அஞ்சினான். அதற்காக அவர் அங்கு வருவதை தடுக்கும் எதையும் செய்ய அவன் யோசிக்கவில்லை அந்த அச்சம் அர்த்தமுள்ளதே. அதன் பின்னர் தான் எனக்கு கரூர் பாஸ்கரிடம் இது பற்றி பேச வேண்டும் என்கிற எண்ணம் அழுத்தமாக எழுந்தது. இதற்கு பின்னால் மாறன் நிறைய உள்வேலைகள் செய்திருப்பதை உணரமுடிந்தது. நான் அது யாரை முன்நிறுத்தி நடந்திருக்கும் என ஊகித்ததால் கரூர் பஸ்கரனிடம் நேரடியாக பேசி அதை சரிசெய்யலாம் என நினைத்தேன். நான் பாஸ்கரனிடம் பேசுவதை மாறன் விரும்பவில்லை. இதில் மாறனின் விருப்பப்படி நான் முடிவு செய்ய முடியாது. அரசியலில் ஒரு பெரும் தவறு நடக்க இருப்பதை நட்பை காரணமாக நிராகரிக்க முடியாது. நான் பதற்றமடைந்திருந்தேன். கரூர் பாஸ்கரனிடம் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வரச்சொன்னார். நான் அங்கு சென்றபோது மாறன் அங்கிருப்பானென்று நினைத்தேன் அவனங்கு இல்லாமலிருந்தாலும் அவன் பாஸ்கரனிடம் நான் வரும் காரணத்தை முன்பே சொல்லியிருப்பான். இந்த முயற்சியில் எனக்கு எவ்வகையிலும் அவர் உதவவில்லை என்றாலும் நான் பேச வேண்டியதை பேசியாக வேண்டும். அரசியலில் இது நடக்கக் கூடாத தவறு. இன்று உடனடியாக அதை சரிசெய்ய இயலாமல் மோனாலும் பின்னர் ஏதாவதொரு புள்ளியில் அதை மீளவும் சரி செய்ய வாய்ப்பு வரும். நான் அஞ்சும் நூறு விஷயத்தில் பத்து நடந்தாலும் அதை சுட்டியாவது மேலும் நிகழவிருப்பதை தடுக்க இந்த பேச்சு வார்த்தையை அப்போது உபயோகப்படும் என நினைத்தேன்


பாஸ்கரனை அவரது ஹோட்டல் அறையில் சந்தித்தோது அவரிடம் மாறனின் செல்வாக்கு அவரது உடல் மொழியில் இருந்தது . நான் என்ன சொன்னாலும் அதை மறுக்கப் போகிறார் . என் மீதிருக்கும் நன்மதிப்பால் அதில் மென்மை இழையக்கூடும். நான் அவரிடம் வைத்திலிங்கத்தின் செயலாளர் பாஸ்கரனின் இடம் பற்றியும் அன்று அவர் அன்றாட உருவாகும் அரசாங்க சிக்கலை பற்றி விரிவாக சொன்னேன்.ஒவ்வொரு  அரசாங்கம் பதவியேற்ற கொண்டாட்டங்கள் முடிவிற்கு வரும் அந்த நொடி முதல் அதன் செல்வாக்கை இழக்கத் துவங்குகிறது . மெல்ல மெல்ல சட்டமன்ற உறுப்பினர்களின் அவநம்பிக்கையை மட்டுமே அதனால் அடையும் . நிர்வாக சிக்கல்கள் மிக ஆழமானவை. எல்லாமே காலக் கணக்குடன் விரிக்கப்படத் துவங்கும் போது அது நிகழ்ந்து விடுகிறது. அது போல ஒன்றை உருவாகாமல் தடுத்ததும் அவரை மீறி எழுந்தபோதெல்லாம் தயங்காமல் நசுக்கியதன் பின்னால் முதல்வரின் செயலாளர் பாஸ்கர் இருந்தார். எதையும் நேரடியாக கையாண்டார். மிகத் திறமையான ஊழியர்கள் வழியாக அது நிகழ்ந்தது. முதல்வரின் உறவினர் என்கிற அடையாளம் அவரது வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து பிறர் அஞ்சும் ஆளுமையாக உருவானார் . அரசாங்க அதிகாரிகள் அரசியலுக்கு புதியவர்கள் இல்லை. அதை மிகத் திறமையாக செய்தே உயர்பதவிகளை அடைகிறார்கள்


அவரால் ஒவ்வொரு சிக்கலை அது சார்ந்த அரசியல் இடத்தை அதை செயல்படுத்துவதில் உள்ள செரிவு போன்றவை மீண்டும் அத்தகைய சிக்கல் உருவாகாமல் பார்த்துக் கொண்டார் . அந்த அரசாங்கம் தினம் ஒரு சிக்கலை சந்தி்தாலும் ஐந்தாண்டு இருந்தது. ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் ஒரு அரசாங்கம் புணர் ஜென்மம் அடைகிறது . காரணம்அதற்கு பின்னால் இருக்கும் சமரசம் அத்தனை எடைகொண்டது. பலவித பேரங்கள் வழியாகவே அது நிலைகொள்ளும் இதற்கும் அன்றைய முதல்வருக்கும் நேரடி சம்பந்தமும் இல்லை என்பது யாருக்கும் அதிர்வை தரக்கூடியது . இங்கு திட்ட செலவீனங்கள் என்பது அரசு ஊழியர் சம்பளம் மட்டுமே. அனைத்து சிக்கலும் பிற எவரையும் போல  முதல்வருக்கு தகவலாக சொல்லப்பட்டன. செயலாளர் பாஸ்கரன் முதல்வருக்கு பின்னால் நின்று தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்டவரல்ல . தனது தனித்திறமையால் முதல்வரை தாண்டித் தெரிந்தார். வெற்றிகரமான மந்திரிசபை செயலாளராக இருந்தார் ஆனால் அவராலும் இறுதிவரை கட்சி அமைப்பிற்குள் நுழைய முடியவில்லை. காரணம் அதன் மேல் கீழ் அடுக்கு உள்விவகாரங்களை  அவர் அறிந்ததில்லை அவரை சுற்றி அமர்ந்திருந்த கூட்டம் ஒவ்வொரு எளிய தொண்டனையும் அவரிடமிருந்து வலக்கி வைத்தது


கட்சி என்பது ஒரு தொகை மட்டுமல்ல. சமூகத்தின் ஆழ்மனம் போல அதை ஒவ்வொரு தனிமனிதனும் மிகத் துல்லியமாக அந்தத் தொகையின் உட்கூறுகளை வெளிப்படுத்துகிறான். தேர்ந்த அரசியலாளன் மட்டுமே அதை பிரித்து அறிந்து கொள்ள முடியும். காரணம் அவன் அங்கிருந்து உருவாகி வருபவன், பிறிதொருவன் அங்கிருந்து உருவாகி வராமல் பார்த்துக் கொள்பவன். கட்சியின் தனிமனித ஆதரவை ஒருவர் பெறுவது மிக சிக்கலானது. காரணம் எப்போதும் அது பதவியை வைத்தே அடையாளம் காணப்படுவது. பதவிகள் எப்போதும் சமரசங்களின் வழியாக கொடுக்கப்படுவது. சமரங்களுக்கு உட்படாதவன் தனிமனிதன்,ஆனால் அவன் பதவியை அடைந்தவனை விட நுட்பமானவன். எனவே அவன் ஒருபோதும் தனக்கு மேலாக ஒருவனை நிலையாக வைத்துக் கொள்ளவதில்லை. இடம் காலம் என அது மாறிக் கொண்டிருப்பது. அவனை சரியாக புரிந்து வைத்திருக்கும் அமைப்பு வெற்றிகரமானது. துரதிஷ்டவசமாக பதவி அல்லது அதிகார எடை அந்த நுட்பத்தை உருவாக்குவதில்லை. உருவாகி வருவதை அறிந்து கொள்வதுமில்லை


அரசாங்க சிக்கலும் கட்சியின் தனிமனிதன் கொண்டுவரும் கோரிக்கையும் இணையான முக்கியத்துவம் கொண்டது. இன்று அரசு சிக்கலாக உருவெடுத்திருப்பது அனைத்தும் என்றோ ஒரு தனிமனிதன் தனது கோரிக்கயாக முன்வைத்தது கவனிக்கப்படாமல் போனது . இந்த இரண்டு புள்ளிகளும் அவற்றின் முணையில் இருக்கும் ஒத்திசைவை அவற்றின்  இடையே உள்ள அணுக்க ஒற்றுமையை அல்லது முரணை உய்த்தறிபவன் ஆகச்சிறந்த நிர்வாகியாக அறியப்படுகிறான். நிர்வாக சிக்கலும் அதன் தீர்வும் எங்கோ ஒரு புள்ளியில் ஒரு தனிமனிதனை மட்டுமே சென்றடைய முடியும். அந்த பாதையை அறிவது நிர்வாக அரசியல். ஒரு தனிமனிதனிடம் இருந்து அந்த சிக்கல் உருவகாமல் தடுப்பவன் ஆகச் சிறந்த தலைவன்.


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 65 நிகழ்வுகள்