https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 15 அக்டோபர், 2022

 விழா மனநிலைக்கு முதலில் வந்தது என் மனைவி.   முழு வேகத்தில் அனைத்து வேளைகளயும் எடுத்துக் கொண்டாள். பொருளியலுக்கு விஜியும் நிவாஸும் ஏற்பாடு செய்தார்கள். நான் வேறு வகையில் தயாராகிக் கொண்டிருந்தேன். மன ரீதியில் அது அங்கிருந்து எழுந்து எதையும் பற்றுவதில்லை எனவிலகல் விலகல்என்கிற ஒற்றை சொல்லை சொல்லிக் அந்த மனப்பாண்மையை நோக்கி மெல்ல சென்று கொண்டிருந்தேன். இன்றளவும் அதில் எந்தளவிற்கு வென்றிருக்கிறேன் என தெரியாது. மனம் அடக்கப்பட்ட யானை போல மெல்ல அதிர்ந்து கொண்டிருக்கிறது

செயல்பாடுகளை தொகுத்துக் கொள்ள உருவாகும் மனநிலை நிலைப்பாடுகள் வழியாக வருவது அவை எப்போது சட்டென உருவாக நிலை கொள்வதில்லை மனதிற்கு அவற்றை மெல்ல மெல்ல ஒரு குழந்தைக்குச் சொல்லுவது போல சொல்லி சொல்லி முன்னகர்வதுஅது எளிதில் நிகழ்வதில்லை அது ஏற்காது முரண்டுபிடிக்கும் ஏற்க மறுக்கும் ஒட்டு மொத்தத்தையும் கொட்டி கவிழ்க்கும். இறப்பின் முணை வரை கூட செல்லத் தூண்டும் . வாழ்க்கையில் இருந்து கொண்டு அடைந்த வெற்றி தோல்விகளை முன்னிறுத்தி அதனுடன் தொடர்ந்து விவாதித்து விவாதித்து நீண்ட அனுபவம் பெற்றிருந்தேன் ஏறக்குறைய முழு வாழ்க்கையே அதனுடனான நீண்ட உரையாடல்காளால் ஆனது. அதீத தனிமை அதை எனக்கு கற்றுக் கொடுத்திருந்தது. அதுனுடன் உரையாடி மீண்டு வந்திருக்கிறேன்.தேவை என் இயல்பிற்கா சில கருவிகள்.


என் தந்தையிடம் இருந்து நான் பெற்ற உலகம் அவர் எனக்கு கையளிக்கும அன்றே அது காலாவதியாகி இருந்தது. இருந்தாலும் அதை முழு விருப்பத்துடன் பெற்றுக் கொண்டேன்.அவருடன் அவர் வாழ்வில் இருபது ஆண்டுகள் உடனிருந்தேன். அதேசமயம் அவரிடமும் அதைத் தவிற வேறு எதுவும் இல்லை எனக்களிக்க.அது அவர் நம்பி வாழ்ந்து வென்று முடித்து எனக்களித்ததுஅந்த வெற்றிக்கு அன்றும் இன்றும் ஒரே பொருள்.அது விலைபோகாது. என்பதுடன் இன்றளவும் அது மாறவேயில்லை என்பது யதார்த்தம். உலகியளால் தங்கள் வாழ்கையை அமைத்துக் கொண்டவர்கள் அதை புரிந்து கொள்ள முடியாது . ஏற்க மறுப்பதால் அது இல்லாமலாவதில்லை. அதற்கான புரிதலை காலம் முடிவு செய்கிறது. ஒரு நாள் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தேயாக வேண்டும்.என் தந்தை அதை அவரின் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பிள்ளைகளுக்கு உரிமையுள்ள சொத்து அது என்றாவதில்லை. என் அப்பாவின் சகோதரர் தன் தந்தையிடமிருந்து அதை பெற்றதாக நான் நினைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் கசப்புடன் காழ்ப்புடன் வாழ்ந்து மறைந்தார் என்பதுடன் அவர் வாழ்ந்த அதே இருளுக்குள் அனைவரையும் அழைத்துச் சென்றார்


என் தந்தை எனக்கு விட்டுச் சென்ற உலகம் பற்றி இந்த நொடி வரை எந்த வருத்தமோ எதிர்பார்ப்போ ஏமாற்றமோ எனக்கு இல்லை என்பதுனென்னை வியப்புற செய்கிறதுதாத்தாவிடம் இருந்து அப்பா பெற்றுக்கொண்ட விழுமியத்தையே அவர் எனக்களித்தார் அதுவே என் வாழ்க்கையானது. இன்று அந்த விழுமியங்களுக்கு மதிப்பில்லை என்பது போல தோற்றம் கொண்ட சமூகம் அதன் வாழ்வியல் முறைகளை புதிய அர்த்தங்களை கொடுக்க முயற்சிக்கிறது. அதுவே இன்றைய உலகியல் என்பது எங்கும் முழு தோற்றம் கொண்டுவிட்டதுநான் பார்த்துக் கொண்டிருக்க உலகின் போக்கை இந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் அது உருவாக்கியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது.சமூகத்தில் நீண்ட நாட்கள் இருந்தவந்த மேல் கீழ் அடுக்குகளை அது கலைத்து போட்டிருக்கிறது.இன்று அதன் முன்னே நிற்கும் வல்லமை பிற எதற்கும் இல்லைநான் என் தந்தை கையளித்த அறத்தை எனக்கானதாக முழுமையாக ஆக்கிக் கொண்டேன் வாழந்த மொத வாழ்க்கையையும் அதை ஒட்டியதாக அமைந்திருந்தது . புறஉலகம் மீண்டும் மீண்டும் என்னிடம் சொன்னவை முற்றிலும் வேறானது ஒன்று. என் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் அது மறு உருவாக்கம் செய்ய சொன்னது என்னை சுற்றி இருந்த அனைவரும் மீள மீள அதையே எனக்கு சொன்னார்கள். அந்த காலகட்டங்கள் கொந்தளிப்பானவைகள் .எனக்கான  ஆப்த வாக்கியங்களைக் கொண்டு அதிலிருந்து வெளியேறினேன்அது ஏறக்குறைய இறப்பின் தருணம் . அதையே எனது முதல் ஆப்தவாக்கியமாக எடுத்துக்கொண்டேன்இறந்தவனுக்கு உலகியல் மான அவமானங்கள் இல்லை”.என் உலகம் என் வீட்டு வாசலுடன் நின்று விடுகிறது. அதற்க்கு அப்பால் உள்ள புற உலகம் எனக்கு சொல்வதை புரிந்து கொள்கிறேன் ஆனால் ஏற்பதில்லை  அதை எனக்கு சொல்லுபவர்களுடன் நான் விவாதிப்பதில்லை. நான் எனக்கான உலகத்தை உருவாக்கிக்  அதனுள் வந்து  அமர்ந்து விட்டேன் உலகை பார்க்க எனக்கு இலக்கிய வாசிப்பு போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக