https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 29 அக்டோபர், 2022

மணிவாழா 10

 



ஶ்ரீ:



மணிவிழா - 10

29.10.2022





மணிவிழா நிகழ்வது வாழ்வின் ஒரு கட்டம் நிறைவுற்று பிறிதொன்று துவங்குவது பற்றிய அறிதலுக்கும் அறிவித்தலுக்கும் . அது தீர்மானங்களால் உருவாவது . அதுவரை வாழ்ந்த வாழ்கை முறையை இன்னும் செறிவாக அர்த்தமுள்ளதாக உருவாக்கிக் கொள்ள மற்றுமோர் வாய்ப்பை அது கொடுத்திருந்தது. அதில் கொண்டாடம் என பெரிதாக ஒன்றில்லை என நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பிருந்தே மனதளவில் நான் எனக்கான வாழ்வியல் முறை பற்றிய ஒழுங்கிற்குள் வந்துவிட்டிருந்தேன். வாழ்கை அளித்த நெருக்கடிகளின் வழியாக அது நிகழந்தது. மெல்ல மெல்ல அதன் பாதையை அது தேர வைத்தது. அவதானிக்க அது மிக எளிதாக இருக்கலாம். ஆனால் மனதளவில் தொடர்ந்து நிகழும் வாழ்வியலின் நாட்டங்களின் நிரகரிப்பின் வழியாக மட்டுமே அதனுள் புக முடியும். ஒன்றன் பின் ஒன்றாக அது நிகழ்ந்து கொண்டே இருந்ததால் அதுதான் ஊழின் வழி போலும் என ஊகித்திருந்தேன் பெரிய விழாக்களில் கலந்து கொள்வதை தவிற்க துவங்கி இருந்தேன். காரணம் அது ஒரு போதும் அறுபடாத நீண்ட தொடர்ச்சி. நெருங்கிய அல்லது நான் பங்கு கொள்வதை மிகவும் விழைபவர் அழைத்தால் சென்று பங்கு கொண்டிருக்கிறேன்


பொது நிகழ்வில் இருந்து முற்றாக விலகிக் கொண்டது  மெல்ல பத்து வருடத்திற்கு முன்பு துவங்கியிருந்தது. பலமுறை சிந்தித்து அதன் பின்வளைவுகளை கணக்கிட்டு 

அதை கடந்து அந்த முடிவிற்குள் வந்தேன். அரசியலில் இருந்த போது கணக்கில்லாத நிகழ்வுகளில் கலந்து கொள்வது அன்றாடம் போல நடந்து சென்ற படி இருக்க வேண்டும். அரசியலில் இருந்து விலகுவது என முடிவெடுத்தது தீவிர எண்ணங்களுக்கு அடிப்படைக் காரணங்கள் இருண்டு ஒன்று.நான் உருவாக்கி வைத்திருந்த அமைப்பு குறுகிய கால லாபம் கருதி சென்று நாராயணசாமியடம் பணிந்து பின் ஒன்றும் நிகழாது தாங்கள் பலியானதை உணர்ந்த போது அவர்களுக்கும் எனக்குமான கனவுகளில் மிச்சமிருக்கவில்லை . விலகி சென்ற அனைவருக்கும் என்மீது எழுந்த கனல் என்னை சுற்றி எல்லா புறமும் பற்றி எரிந்தது. அரசியலில் ஒருவரை ஏற்பதும் மறுப்பதும் விலகுவதும் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிற ஒன்று. ஆனால் இம்முறை அது நிகழ்ந்த போது உருவாக இருந்த மொத்த எதிர்காலத்தை நிராகரித்தது

எனது திட்டமான நுண் அரசியல் அவர்களுக்கு புரியவில்லை என்பதுடன் அதை அவர்களுக்கு விரிவாக விலக்க முடியமற்போனது. அல்லது அதற்கான காலம் திரளவில்லை


அந்த காலகட்டங்களில் ஊழ் ஒன்றை தொடர்ந்து வலியுறுத்தியது. அனைத்தும் ஒரு கட்டத்தில் திருகிக் கொள்ள நான் அரசியல், வியாபாரம், ஆன்மீக செய்பாடு என அனைத்தில் இருந்தும் விலகிக் கொண்டேன். மனதளவில் கொந்தளிப்பை அளித்த குடும்பமும் அதை சார்ந்த விஷயங்களில் அந்த பராமுகத்தை கொண்டிருக்க முடியாது. அது மெல்ல என்னை கசப்பில் ஆழத்தி விடும். குடும்ப உறுப்பினர்களால் உள்ளமும் உடலுமாக மிகவும் புண்பட்டிருந்ததால் இயல்பாக அங்கிருந்து காழ்பிற்கு செல்லும் வழி அகலத் திறந்திருந்ததாக அறிகிறேன் . நான் மன அமைதி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன். அனைவரிடமும் எனக்கான இடம் மறுக்கப்படுவதை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன். அதனால் பாதிப்படைந்து குமுறுவதை விட்டு விலகி இருந்தேன்

அது எனக்காக வகுக்கப்பட்ட ஒன்று. எனக்கு நிகழ்வது ஊழ். அருளும் மறுப்பும் என்கிற வரையறைகள் பெருந்தெய்வத்தின் கருணை. அவற்றின் மீது நமது அர்த்தங்களை ஏற்றுவது தேவையற்றது. அது நிகழ காரணங்களாக இருக்கும் எளிய மனிதர்களை பொறுப்பாக்க முயல்வது முழுப் பெரும் இறையை நோக்கிய எனது இளிவரல் போல என உணர்ந்திருந்தேன்


ஆழ்மனம் எனக்கான பாதைகளை அதன் சிடுக்களில் இருந்து பிறித்துக் கொடுத்திருந்தது. பாதை கடினம். அதே சமயம் அது பிறிதொரு பக்கம் திரும்பும் வாய்ப்பை முற்றாக நிராகரித்து செல்ல வேண்டிய பாதை இது என அழுத்தமாக சொல்லிவிடுகிறது. பயண இறுதி சுவாசம் வாங்கிக் கொள்ள அமர்கையில் மட்டுமே அதன் கொடையை உணரும் வாய்ப்பை தருகிறது. விதி உள்ளவர்கள் அதை ஆழ்ந்து அனுபவிக்கிறார்கள்.

இங்கிருந்து பார்க்கும் போது வெற்றி தோல்வி மரியாதை அவமானம் என்பவை பொருளற்றவை. நிறைந்து இருத்தல் மட்டுமேயான காலம். ஊழுக்கு நன்றி.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக