https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 அக்டோபர், 2022

அடையாளமாதல் * பரிசின் காலவரையறை *

 



ஶ்ரீ:



பதிவு : 646  / 836 / தேதி 25 அக்டோபர்  2022



* பரிசின் காலவரையறை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 42 .




அரசு நிர்வாகத்தின் சிக்கலுக்கு அது அளிக்கும் தீர்வு அல்லது பாதிப்பு எங்கோ ஒரு புள்ளியில் தனிமனிதனை மட்டுமே சென்றடைய முடியும். அந்த பாதையை அறிவது அரசு நிர்வாக அரசியல். ஒரு தனிமனிதனிடம் இருந்து அவனால் அந்த சிக்கல் வெளிக் கொணரப்படுகிறது . அது உருவாகும் போது அதன் விளைவுகளை உய்த்தறுபவன் அல்லது அதன் எதிர்கால தாக்கத்தை புரிந்து கொள்பவன் ஆகச் சிறந்த தலைவன். சண்முகத்தை ஆகச்சிறந்த தலைவராக நான் எப்போதும் நினைக்கிறேன். அதனால்தான் அவர் என் ஆசிரியர்,குரு. சண்முகம் , காமராஜர் தொடக்கமாக காந்தி வரை சென்று சேரக்கூடிய ஒரு குரு நிரையை அவர் எனக்கு அளிக்கிறார்அவரும் அவரது வாழ்க்கையும் எனக்கானதை சொல்லுபவை. எனக்கு அரசியல் என்பது ஒருவகை இலக்கிய வாசிப்பு போல பலவித வாழ்கை அனுபவங்களை அது தந்திருக்கிறது. பிற மனிதர்களுடன் அவர்களின் சிக்கல்களில் பங்கெடுத்துக் கொள்ள அதிலிருந்து அவர்கள் மீண்டு வெளிவர உதவுதல் என நான் நினைத்த சிலவற்றை அரசியலில் செய்து பார்க்க முடிந்தது. கூட்டுறவு திட்டம் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் குறித்த பெரும் கனவை அப்போதுதான் உருவாக்கிக் கொண்டேன்


என்னை நான் என்னை எப்போதும் செயல்களில் இருந்து கற்பவனாக உருவகித்திருந்தேன். மனிதர்களின் சிக்கல்களை அரசியலில் கொண்டு வந்து வைத்து உடைத்துப் பார்க்கும் வாய்ப்பை ஒரு முதிரா இளைஞனாக முயற்சித்து பின்னர் அவற்றை அனுபவமாக பெற்றிருக்கிறேன் .அத்தகைய முயற்சிகளுக்கு பலனை சண்முகம் என்கிற ஒருவரின் சொல்லில் இருந்தும் செயலில் இருந்தும் வழிகாட்டலில் பெற்றுக் கொண்டிருக்கிறேன். அவை அவரது வெற்றிகளில் மட்டுமின்றி அவரது தோல்விகளின் வழியாகக் கூட நான் அவற்றை சென்றடைய முடியும்


நிலையில்லா காங்கிரஸ் கட்சி அரசியலில் மிக நீண்டகாலம் தலைவராக இருந்தவர் புதுவையில் காங்கிரஸ் தொடர்ந்து முதன்மை கட்சியாக இருக்க காரணமானவர், இங்கு திராவிட அலை பொங்கி எழுந்த போதும் அதற்கு எதிரான செயலில் வென்றவர்.இந்த பதிவு முழுவதுமாக அவர் அரசியலின் உச்சம் தொட்ட பிறகு அடைந்த வீழ்ச்சி , அந்த வாழ்க்கை அதலிருந்து எனக்கு அல்லது என்னைப் போன்றவர்களுக்கு அது எதை அளிக்கிறது என அவதானிக்க முயல்கிறேன் . அரசியலில் நிலையாமை, வயோதிகம், கசப்பு, மிகைதன்மதிப்பு, நீண்ட அனுபவம் தரும் செயலின்மை என எதை கையெடுத்து , கைவிட்டதால் அவருக்கு அந்த வீழ்ச்சி நிகழ்ந்தது?.அனைவரும் ஒரு நாள் சென்று சேர வேண்டிய இடம் அதுதான்


உணர்வு நிலைகள் எல்லா எளிய மனிதர்களைப் போல மேதைகளையும் பாதிக்கின்றன. அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்களின் சிறந்தவைகளை கொடுத்துவிடுவதில்லை. தலைவர்கள் எளிய மனிதனைப் போல அலைகழிவதில்லை

தனக்கு நிகழ்வதில் இருந்து உணர்வுகளை கழித்து தகவல்களாக எடுத்துக் கொண்டு அந்த அலைக்கழிப்பில் இருந்து வெளியே வந்து விடுகிறார்கள் . வெற்றிக்கு இவை அகவயமான காரணங்கள். ஆனால் புறவயமானவைகள் வந்து மோதிக் கொண்டிருக்கையில் அப்படி எல்லா நேரங்களிலும் ஒருவரால் அவற்றில் கடக்க முடியாது போகலாம் . அந்த வீழ்ச்சி நிகழாமல் அவரால் செய்திருக்க முடியுமா? என்பதே அந்த காலத்தை நோக்கிய கேள்வியாக உருவகித்துக் கொள்கிறேன். அந்த வீழ்ச்சி அந்த உணர்வு நிலைகளை அனைத்தும் ஏதோ ஒரு கணத்தில் அகமும் புறமுமாக மிகச்சரியான விகிதத்தில் கலந்தவையாகி விடுகின்றன . அதிலிருந்து அவரால் மீண்டிருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. அதை ஊழ் என ஒற்றைச் சொல்லால் மட்டுமே வகுத்துக் கொள்ள முடியும்.


சண்முகத்தின் பல காலக் கசப்பு அவர் அத்தனை வருடங்களாக அரசியலில் திரட்டிக் கொண்டவை . கட்சித் தலைமைக்கு அதன் எல்லா தலைவர்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏமாற்றமும் அதன் வழியாக கசப்பை மட்டுமே அளிக்கக்கூடியவர்கள். ஆரம்பம் முதல் அதற்கு பழக்கமானவர்ஒரு வகையில் அவரது அரசியலே கூட அந்த கசப்பை விலக்கிக் கொள்ளும் பொருட்டு உருவானது. ஒவ்வொரு முறையும் அந்த வருத்தம் எழுகிற போது தன்னை மிகச் சிறியவாராக எண்ணி அதை கடந்திருக்க வேண்டும். அல்லது தனக்கான இடம் ஒன்று வாய்த்த பின்னர் இது போன்ற ஒன்றை சகித்துக் கொள்ளக் கூடாது என நினைத்திருக்கலாம். திருப்பி அடிக்க வேண்டியவர்களின் நீண்ட பட்டியல் கூட அவரிடம் இருந்திருக்கலாம். இங்கு இரண்டாவது நிகழ்ந்தது. அது அவர் முதல்வராக வந்தமர்ந்த போது பொங்கு வழிந்தது. அவர் தன்னைப்பற்றி கொண்ட மிகை அல்லது உயர் தன்மதிப்பு. தான் வென்று இறுதி இடத்தை அடைந்துவிட்டதாக தோன்றிய போது அதுவரை கொண்டிருந்த அனைத்தையும் போதும் என நிறுத்திக் கொண்ட அந்த கணம் முதல் அவர் வீழ்ந்து கொண்டிருந்தார். அரசியல் நிலையாமை அடிப்படையானது அதற்கு எதிராக தன்நிலை படுத்திக் கொள்ளுதலே அதை வெல்லும் ஒரே வழி. போதும் என தன்நிறைவடைகிற போது அந்த வீழ்ச்சி நிகழ்கிறது. அது யானையும் சறுக்கிய இடம்


அது எப்படி நிகழ்ந்தது என அவதானிக்க முயல்கிறேன்முதல்வரின் செயலாளர் நியமனத்தில் வில்லங்கம் நிராகரிகப்பட்டதால் மட்டும் அது நிகழ்ந்தது என நான் ஊகிக்கவில்லை. அவர் அந்த பதவியில் வந்தமர்ந்திருந்தால் இவற்றை சில காலம் தடுத்திருக்கலாம். ஆனால் புதிய வேறு சில சிக்கல்களை உருக்கியிருக்கலாம். அனால் அந்த அவமானகரமான வெளியேற்றத்தை தவிற்திருக்கும். வில்லங்கத்தை அவர் ஒதுக்கிய முறை அவருடன் மிக நீண்ட கால தொடர்பில் இருந்தவர்கள் அதிர வைத்தது. பதவி உருவாக்கும் வெற்றிடம் இது என நினைத்து கசந்தார்கள். தங்களுக்கு இது நிகழலாம் என்கிற அச்சம் உருவாக்கிய இடைவெளி பின்னர் அனைத்தையும் முடிவு செய்தது.தலைவரை சுற்றி உருவாகிய சிக்கல்கள் அவரை அலைக்கழித்தன. யாருடனும் அவரால் தன் சிக்கலை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்பதே  பெரிய பின்னடைவு. வந்து மோதும் அனைத்தின் மீதும் எப்போதும் சமநிலையுடன் எதிர் கொள்ள ஒருவரால் முடியாது. மிகப் பெரும்பாலும் அதனால் நேரடியாக பாதிக்கப்படாத பக்கத்தில் இருக்கும் பிறிதொருவர் சட்டென அதற்கு மிக எளிய தீர்வு சொல்லிவிட முடியும். அல்லது அந்த தீவிர சூழலில் இருந்து அவரை வெளிக் கொண்டுவரும் போது அவராகவே சில சிறந்த தீர்வுகளை கண்டடைந்து விடுகிறார். தேவை மூளைக் களைப்படையாமல் அதை சற்று ஓய்வாக வைக்கும் கருவிகளை உருவாக்கிக் கொள்வது. நானும் வில்லங்கமும் அவருக்கு விளையாட்டாக அவரது அலைகழிதலை விலக்கியிருக்கறோம். முடியவே முடியாது என சொன்ன சிலவற்றை அவர் மறுபரிசீலனை செய்து வேறுவிதமாக அவற்றை செயல்படுத்தி அந்த சிக்கலில் இருந்து வெளி வந்தும் அதிலிருந்து புதிய சாத்தியக்கூறுகளை உருவாகவும்  இடமளித்திருக்கிறர். முதல்வரான பிறகு அவரில் நிகழவில்லை. சிக கலின் அலைகழிதில் வாரக்கணக்கில் சிக்குண்டு கிடந்ததை பார்த்திருக்கிறேன். அந்த சூழலில் யாரும் அருகில் செல்ல முடியாதவராக தன்னை ஆக்கிக் கொண்டார். அன்றாட அரசியலை அதன் சிக்கலை யார் எடுத்துக் கொண்டு வந்தாலும் தனது அனுபவத்தை முன்னிட்டு வைத்து தன் முன் வைக்கப்பட்டதை மட்டுமின்றி வைத்தவரை நிராகரித்தார். அந்த செயல் முறை அவர்களை பின் ஒரு போதும் அவர் முன் அவர்களை கொண்டு வந்து நிறுத்தவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்