https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

அடையாளமாதல் - 524 *புதியதின் ஆபத்து *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 524

பதிவு : 524  / 714 / தேதி 18 பெப்ருவரி   2020

*புதியதின் ஆபத்து  * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 38 .



எனது அனுக்கர்கள் தங்களின் கூடுகையை மிக ரகசியமாக ஏற்பாடு செய்திருந்தனர்  அதில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள விழையும் பாலனின் பழைய கமிட்டியில் இருந்தவர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களை அனுக முடிவு செய்யப்பட்டது  .  தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்களில் பெரும்பான்மையினர்  யாருடனான இணைப்பில் இல்லாமல் சிதறிப்போய் இருந்தனர். தொட இயன்ற மிகச் சிலர் கூட மீண்டும் இளைஞர் காங்கிரஸில் செயல்பாடுவதில் நம்பிக்கை இல்லாத நிலையை அடைந்துவிட்டிருந்தனர் . இனி அவர்களை திரட்டுவது சாத்தியமில்லை என்றானது .

புதிய இளைஞர்கள் அமைப்பின் முதன்மை பொறுப்புகளுக்குள்  கொண்டுவர எனக்கு மிகுந்த தயக்கம் இருந்தது  . முற்றும் புதியவர்களை பொறுப்பில் கொண்டு வருவது அமைப்பின் தொடர்ச்சி காணாமலாக்குவது , அதுவரை இருந்து ஒழுக்கை பேண இயலாது செய்வது , அதனால் புதிய செயல்முறையை கோருவது . மேலும் மேல் கீழ் என்கிற அடுக்கு நிலை இல்லாதது , அது பலகால செயல்படுகளின் வழியாக தானாக உருவாகி வருவது .அவற்றில் அதை புதிதாக உருவாக்கிட இயலாது என்பதால்  , அதை மீளவும் முயறசிக்க எனக்கு உடன்பாடு இல்லை . காரணம் அது எந்த அடிப்படையையும்  இல்லாத வெறும் திரளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் . இளைஞர் காங்கிரஸ் தொடர்  செயல்வழியாக உருவாகும் அமைப்பு . குறுகிய காலத்தில் அதை உருவாக்க முடியாது . அதை மீறி உருவாக்க இயலுமானாலும் அது  விழுமியம் ஏதும் இல்லாததாகவே திரண்டு நிற்கும் .

நான் எனக்கான விழுமியம் என நினைத்ததே அறுபட்டுப் போன இணைப்பு பாதையை சரி செய்வது என்பதாக இருந்தது .அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இங்கு வர இயலாது போனவர்கள் .அவர்களை விடுத்து இன்று பல தொகுதிகளிலிருந்து உருவாக்கி எடுக்கும் புதியவர்கள் தேர்தல் காலத்தில் முற்றாக அதன் அத்தனை எதிர்மறை கோட்பாடுகளுக்கும் அறிமுகமாகிய பின்னர் அவர்களை அமைப்பின் உறுப்பினராக நிலைநிறுத்தவே இயலாது

மேலும் கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டவர்களுடனான உரையாடல் செயல்பூர்வமிக்கது . ஆணைகளில் இருந்து யதாரத்த நிலவரத்தை சட்டென புரிந்து கொள்ளக் கூடியவரகள் . அவர்களுக்கு எதையும் விளக்கி அல்லது நம்பிக்கையூட்டி ஒன்றை செயல்படுத்த வேண்டிய தேவையில்லை .அவரவர் தங்களின் அனுபவத்தில் இருந்து , அங்கிருந்து தங்களின் இடத்தை வருங்காலத்தை உணர்ந்து கொள்வார்கள் .அந்த இடத்தை  முற்றும் புதியவர்களை கொண்டு நிரப்புவது போல அரசியல் பிழை பிறிதொன்றில்லை . அவர்களுக்கு அரசியலின் தவறுகளால் நிகழும் வலியை யாரால் புரியவைத்து விட முடியும்?

யாருக்காக இந்த நீண்ட சண்டையை துவங்கினேனோ அவர்கள் பங்கெடுக்காத அமைப்பு என்னவாக உருவாகி வரும் என்பதை கற்பனையில் கூட என்னால் எண்ணிப் பார்க்க இயலவில்லை .அனைத்தையும் முதலில் இருந்து துவக்குவதா என்கிற ஆயாசம் எழுந்து அடித்தது .

இன்று இந்த இடத்திலிருந்து முன்னெடுத்த முயற்சியை கைவிட வேண்டும் என்கிற இடத்தை நோக்கி செல்ல முடியாத தொலைவிற்கு வந்து சேர்ந்திருந்தேன் .மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளில் சிலர் தங்கள் ஆதரவாளர்களின் பட்டியலை சண்முகத்திடம் கொடுக்க துவங்கியது  . முதற் கோணலை தொடங்கி வைத்தது . அதை ஒட்டி நானும் எனது பட்டியலை அவரிடம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது .நான் புதிதாக தேர்ந்தெடுத்து வைத்திருந்த இளம் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் எனது நண்பர்கள் சிலரை உடன் அழைத்துச்செல்ல நினைத்தேன் .

புதியவர்களுக்கும் எனக்கும் ஒரு சிறு இணைப்பு புள்ளியாக எனது நண்பர்களை உள்நுழைக்க முடிவு செய்தேன் . மிக தவறான முடிவு எனத் தெரிந்தே அதை செய்தேன் . எனக்கு நண்பர்களின் உளவியல் குறித்த அனுபவம் முன்பே இருந்தது. ஆனால்  அரசியலின் எந்த நிலையிலும் ஒரு நகர்வை துவங்கும் முன்பு களத்தையும் , அமைப்பின் மனநிலையையும் கணிசியாது காரியத்தில் இறங்குவது ஆபத்தானது . அரசியலின் எந்த நகர்வும் நீண்ட தொடர் அசைவை உருவாக்கியபடி செல்வது . சில சமயங்களில் அதன் தொடுமுனை வளைந்து வந்து நாம் அறியாது நமது பக்கத்தில் உள்ளவரை சீண்டி நமக்கு எதிராக்கி விடுவதுண்டு .மிக விந்தையான ஒன்று .

உருவாக்க நினைத்தது அமைப்பின் கட்டுப்பாடுகள் , காத்திருத்தல் அரசியலின் முதன்மை கோட்பாடு , எதிர் கால கனவு மற்றும் அதற்குறிய விழுமியங்களை கொண்டிருப்பது அவசியம் . முதிரா இளமை பல ஆதர்சங்களை உருவாக்கி ஏற்கவைப்பது .ஆனால. ஆழுள்ளத்தில் அதன் நடைமுறை விபீதங்களை உணர்ந்திருந்தேன் . பின்னாளில் அதற்கு பலியாகும் போது ஒரு நாள் தூக்கமிழந்ததைத் தவிர அது என்னை பெரியதாக பாதிக்கவில்லை .கசப்புகளில்லாமல் அனைத்திலிருந்தும் வெளிவர இயன்றதற்கு அதுவே காரணமாக இருந்திருக்க வேண்டும் .

தொகுதி அளவில் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இளம் தலைவர்கள் அடங்கிய பட்டியலை நானும் சண்முகத்திடம் கொடுத்தேன் ,அதன் பிறகு அமைப்பை விட்டு விலகிய முன்னாள் நிர்வாகிகளில் யாரையும் என்னால் ஒருபோதும் உள்ளே கொண்டுவர முடியவில்லை . அவர்கள் இருபதாண்டுகளாக  இரண்டு முன்னாள் தலைவர்களால் சண்முகத்திற்கு எதிராக திரட்டப்பட்டவர்கள் . சண்முகம் எதிர்ப்பு என்கிற ஒற்றை இலக்கை  கடந்த அரசியல் என ஒன்று இருக்கிறது அதில் அவரை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் வாய்ப்புள்ளது என்கிற எனது கருத்தியல் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. புரிந்து சிலருக்கும் தங்களை சட்டென மாறிக் கொள்ள இயலவில்லை என்பது புரிந்து கொள்ளக்கூடியது

சனி, 15 பிப்ரவரி, 2020

அடையாளமாதல் - 523 *பயணம் விட்டு சென்ற வடுக்கள் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 523

பதிவு : 523  / 713 / தேதி 15 பெப்ருவரி   2020

*பயணம் விட்டு சென்ற வடுக்கள் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 37 .





சூரயநாராயண்ணன் சொன்ன தகவல் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்தது , இரட்டை மனநிலையில் சென்று சண்முகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது முதலில் என்னுள் எழந்தது ,அவர் என்ன சொன்னாலும் மறுக்க வேண்டும் என்கிற உஷ்ண உந்துதல் .ஆனால் அவரை  அறையில் சந்தித்த போது அங்கிருந்த சூழல் நான் எண்ணியிருந்ததை செயலாக்க தயங்க செய்தது அதே சமயம் நிமிரவும் செய்தது .மாநில அமைப்பின் மூத்த நிர்வாகிகள் பலர் அவருடன் அப்போது உரையாடிக் கொண்டிருந்தனர்

முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சபாபதியும் வேறு சிலரும் கூட அங்கு இருந்தனர் .அவர்களில் பெரும்பாலானவர்கள்  ஏதாவது ஒருவகையில் எனது செயல்பாடுகளுக்கு எப்போதும் எதிர்மறை விமர்சனத்தை வைப்பவர்கள் . பாலனுடன் எனக்கிருந்த தொடர்பு அவர்களுக்கு என் மீதிருந்த காழ்பிற்கு அடிப்படை .வல்சராஜ் தலைவராக இருக்க நான் அவருக்கு இணைத்தலைவராக அதிகப்பிரசங்கித்தனமாக  நடப்பதாக எப்போதும் குற்றம் சுமத்துபவர்கள் .எனது நடவடிக்கைகள்  சண்முகத்தால் அங்கீகரிகப்படாதவை என்கிற எண்ணம் உள்ளவர்கள் . சண்முகமே கூட அதைபோன்ற கருத்து உருவாக காரணமாக இருந்திருக்கலாம் .

அவர் தன்னை நோக்கி வரும்  யாரை பற்றிய பதறும் குற்றசாட்டுகளுக்கு எனக்கு தெரியாது யா , அப்படியா நடக்குது , கூப்டு கண்டிக்கிறேன்” என்பதாக இருக்கும் . அதனால் உருவாகும் தலைமை தெளிவின்மையும் அதைப்பற்றி  எழும் செயல் குழப்பம் குறித்து அவர் கவலைப்படுவதில்லை .அது அவர்வரைக்கும் பாதிப்புக்கு உள்ளாகும் போது அந்த நொடி அதை சரி செய்து விடுவார். அரசியலில் இன்று  மட்டுமே நேற்று எப்போதும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை .

நான் அவரது அலுவலகம்  நுழைந்ததும் என்னை பார்த்தது அருகழைத்து தில்லியிலிருந்து வந்திருந்த கடிதத்தை கொடுத்து முக்கியமான இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்களுடன் தில்லி பயணம. குறித்து திட்டமிட சொன்னார் .அந்த நிமிடம்  வரை என்னை பற்றிய பிழை புரிதல் உள்ளவர்கள் உடன் தங்கள் நிலைகளை மேம்படுத்திக் கொள்வார்கள் . அதனுள்  அடங்காதவர்கள் இனி எதிர்பை மறைமுகமாக்க துவங்குவார்கள் . நான் மறுப்பேதும் சொல்லாமல் அதை பெற்றுக்கொண்டேன் .அது எனக்கான அங்கீகாரத்தை , இருப்பை அறிவிப்பது , மேலும் அங்கு அதை மறுப்பது பின்னாளில் சிக்கலை உருவாக்குவது . .

அதை பெற்ற மறுகணம் மனதிற்குள் தீவிர திட்டமிடலுடன் தில்லி வரை நண்பர்களுடன் நீண்ட பயணம் சென்றுவிட்டிருந்தேன் . எனக்கு அதை மறுக்க வேண்டாம் என தோன்றிப் போனது .என் பிரதான எதிர்பாளர்கள் முன் நிகழ்ந்தது என்குள் ஒருவித தருக்களை கொடுத்தது . இது அதற்கான தருணம் அதை இழக்க நான் தயாரில்லை . மேலும் அமைப்பை முன்னெடுப்பது பற்றி சில வருடங்களுக்கு முன் முயற்சித்து தோற்கடிக்கப்பட்டிருந்தேன்.மிகுந்த மன கொந்தளிப்பை கொடுத்த நேரம் . ஒரு புள்ளியில் பதவியை ராஜினாமா செய்ய முயன்றது அதற்கு வல்சராஜ் சொன்ன யதார்தத அரசியல் வியாக்யாணம்”  மனதில்  நிழலாடியது .

 நெடுநாள் முன்பு திட்டமிட்ட ஒன்றை இப்போது நிகழ்த்தி பார்க்கும் வாய்ப்பு கண்முன்னென வந்து சென்றது .முன்பு இளைஞர் காங்கிரஸில் நிர்வாக கமிட்டியில் எனக்கிருந்த எதிர்ப்பு” என்கிற ஒற்றை புள்ளி செயல்திட்டம் இப்போது காணாமலாகி இருந்தது . இப்போது இதை மறுப்பது அறிவீனம் . காரணம் இப்போது சண்முகம்செய்ய சொன்னது மிக எளிய பயண ஒருங்கிணைப்பாளர் வேலை . ஒருவேளை என்னவிட சிற்பாக செய்யக்கூடியவர்கள் கூட கிடைக்கலாம் . ஆனால் இதை முன்வைத்து எனக்கு பெரிய திட்டமிருந்தது .

1996 தேர்தல் தோல்வியால் கடந்த சில வருடங்களாக மாநில கட்சி அரசியல் தொய்வடைந்திருந்தது . யாருக்கும் சொல்லிக் கொள்ளும்படி  வேலை என ஒன்றில்லை . சண்முகமே கூட தினம் ஒரு வேளை  மட்டும் கட்சி அலுவலகத்திற்கு வந்து சென்றார்  . சில நாட்கள் வீட்டிலிருந்தபடியே கட்சி வேலைகளை செய்யத்துவங்கி இருந்தார் .மிகுந்த மன ஆயாசத்தை கொடுத்த காலம் . அது போன்ற நேரம் சில அடிப்படைகளை பெரிய எதிர்புகள் இல்லாமல்  உருவாக்க சரியான காலமாக எனக்கு தோன்றியது .

ஒரு பக்கம்  நீண்ட நாட்களாக நினைத்திருந்ததை செய்து முடிக்கும் ஆர்வம் எழுந்தாலும்   , இதை எப்போதோ செய்திருக்க வேண்டியவர் , அந்த காலத்தையெல்லாம் விடுத்து இப்போது தானக்காக அதை நிகழ்த்தி இருக்கிறார் என்கிற எண்ணம் எரிச்சலை ஏற்படுத்திய உடன் நான் எப்போதும் விளையாடும்  தற்காப்பு ஆட்டத்தை விடுத்து இனி அடித்து ஆட வேண்டும் என்கிற வெறி எழுந்தது .

ஆனால் மிக நிதானமாக எனது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கத் துவங்கினேன் .முதல் கட்டமாக எனது அனுக்கர்களின் கூடுகையை மிக ரகசியமாக ஏற்பாடு செய்து அதில் அடுத்து செய்யவேண்டிய திட்டத்தை  முன்வைத்தேன் . தில்லியில் நடைபெற இருக்கும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள விழையும் பழைய பாலன் காலத்து நிர்வாகிகளை தொடர்பு கொள்ள சொன்னபோது எதிர்பார்த்த பலனை அது கொடுக்கவில்லைஅதற்குள்ளாக மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளில் சிலர் தங்கள் ஆதரவாளர்களின் பட்டியலை சண்முகத்திடம் கொடுக்க துவங்கினர் . அது முதற் கோணல் . நானும் எனது பட்டியலை அவரிடம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது .