https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 29 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 517 *ஒளி இழந்த காலம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 517

பதிவு : 517  / 706 / தேதி 29 ஜனவரி  2020

*ஒளி இழந்த காலம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 31




கட்சிகள் தேர்தல் ஆனையததால் கண்காணிக்கப்பட்டு அதன் ஜனநாயக ஒழுக்கு பேணப்படுகிறது . அதற்கென தேர்தல் ஆனையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதிகளும் ஒழுங்கு முறைகளும்  உள்ளன .இருந்தும் அரசியல் எழுதப்பட்ட விதிகளுக்குள் அடங்குவதில்லை .பொதுவாக தலைமைக்கு அனுக்கமானவர்கள் எப்போதும் விதிகளுக்கு அப்பால் இருப்பவர்கள் .அவர்கள் பிறர் கேள்விகளுக்கு உட்பட்டவர்கள் அல்லர் .அவர்களை நோக்கி கேள்விகள் கேட்கப்படுவதுமில்லை .

சண்முகத்திற்கு மிக அனுக்கமாக நான் இருந்தபோதும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் எனது இடத்தை போராடித்தான் பெற முடிந்தது  .சண்முகம் அரசியலில்  நீண்ட அனுபவம் உள்ளவர் , பதவி வரம்பிற்குள் வராமல் தலைமையையும் மிஞ்சும் அதிகாரமிக்கவ்களாக சிலர் உருவாகிவிடுகிறார்கள் . அரசியலில் அது தவிற்க முடியாததாக எப்போதும் இருந்திருக்கிறது .தன்னை முன்னிறுத்தி  பிறர் அரசியல் செய்வதை விரும்பியதில்லை. பிறர் தன்பெயரை பயன்படுத்துவதை அனுமதிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்தது .அதனால் அவரை ஊன்றி யாரும் அரசியல் செய்ததில்லை .

பாலனுக்கு பிறகு தலைமைக்கு வந்த வல்சராஜ் சண்முகம் தரப்பிலிருந்து வந்தவர் .பல தரப்பிலிருந்து அனைவரையும் கேட்டு பெற்றே அந்த அமைப்பு உருவாகி இருந்தது .1996 தேர்தல் தோல்விக்கு பிறகு இளைஞர் காங்கிரஸ் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டதால் , அதில் பங்கு பெற பெரிய அளவினாலான போட்டிகள் இல்லை .வல்சராஜ் அந்த கமிட்டியை பல தனிப்பட்டவர்களிடம் இருந்தும் சிலரை கேட்டுப் பெற்று அந்த கமிட்டியை உருவாக்கி இருந்தார்என்னை சண்முகம் தரப்பிலிருந்து  வந்த   சிபாரிசிலிருந்து   தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என நினைத்திருந்தேன் . ஆனால் தில்லியில் இருந்து என்னை முதன்மை பொது செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுத்திருப்பதாக சொன்னார் . ஆனால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எனது இடத்திற்கு வையத்தரசை தான் தலைவர் சிபாரிசு செய்ததாக சொன்னார் 

.எனக்கு வல்சராஜ் 1991 ல் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பிருந்தது அறிமுகம் .
வல்சராஜ் கமிட்டியில் முக்கிய எந்த பதவியை குறித்தும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை . சண்முகத்திடமிருந்து எனது அரசியலை மீளவும் துவக்கிய போது எனக்கு எந்த திட்டமும் இல்லை .அதனால் பலர் வல்சராஜை தொடர்பு கொண்டு தங்களின் பதவி குறித்த வேண்டுகோள் வைத்த போது நான் அவரை சென்று சந்திக்கவே இல்லை .

பாலன் காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் ,அவரது மாநில அமைப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அவரின் தொகுதியான முதலியார்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதால் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சபாபதியிடம் சென்று இணைந்து கொண்டார்கள். அவர்களில் பலரை சபாபதி இளைஞர் காங்கிரஸ் கமிட்டிக்கு சபாரிசு செய்திருந்தார் .பாலனுக்கு ஆதரவாக இருந்ததற்காக சபாபதிக்கு என்மீது வருத்தம் இருந்திருக்க வேண்டும் .அவரது ஆதரவாளர்கள் இளைஞர் காங்கிரஸ் கமிட்டியில் நான் இடம் பெறுவதை எதிர்த்தார்கள் .ஆனால் என்ன காரணத்தினாலோ என்னை முதன்மை பொதுச் செயளாலராக நியமித்திருந்தார் .அது எனது நிலைப்பாட்டை பாதித்தது ஒரு கட்டத்தில் முழுமையாக அன்றாட அரசியலில் இருக்கும் நிலையை உருவாக்கி விட்டது 

பாலன் இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த போது அவரை அடுத்து தலைவர் பதவிக்கு 1993 ல் நான் சிபாரிசு செய்யப்பட்டேன்.அது நான் முற்றும் எண்ணாத , மன ரீதியாக தயாராவதற்கு உரிய காலம் கொடுக்கப்படாமல் அலையால் அடித்துச் செல்லப்படுபவன் போல இழுத்துச் செல்லப்பட்டேன் (அது பற்றி மிக விரிவாக முன்பே பதிவிடப்பட்டுள்ளன ) .நான் முன்னிறுத்தப்பட்டதால் சக நிர்வாகிகளில் ஒருவரான கமலக்கண்ணன் அதிருப்தி அடைந்திருந்தார் .அவர்தான் அடுத்த தலைவராக வர இருந்தவர் .

கமலகண்ணன் தன்னை இணைத் தலைவராக கற்பனை வளர்த்துக் கொண்டார் .அவரது செயல்பாடுகளால் அனைவரது அதிருப்திக்கு ஆளாகி முகமிழந்து போனார் .நான் முன்னிறுத்தப் பட்டதற்கான பல காரணங்களில் அதுவும் ஒன்று . தாமோதரன் மட்டும் கமலக்கண்ணனுக்கு ஆதரவாக இருந்தார் . பாலனுக்கு தாமோதரன் தவிற்க இயலாத ஒருவர் . பொதுவாக பிறரால் விரும்பப்டுபவர் என்பதால் தாமோதரன் எண்ணத்திற்கு  உடன்படுவது போல நிலை எடுத்தார் . ஆனால் அவருக்கு எதிராக  பாலன் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து அமைப்பை தன் கீழ் ஒருகிணைக்க , ஒருவருக்கு எதிராக ஒருவரை எதிர் நிறுத்தப்பட்டார்கள் . யாரும் யாரையும் நம்பமுடியாத சூழல் உருவானது . பாலனுடன், நெருக்கம் கொள்ள ஒருவர் பற்றி பிறிதொருவர் உளவு சொல்லத் துவங்கினர்  .அது மிக மோசமான அரசியல் நகர்வுகளில் ஒன்றானது . பலர்  வெறுப்புற்று ஒதுங்கினர் . நான்  இதைப்போல ஒன்றை எதிர்நோக்கி 1994 ல் அமைப்பில் இருந்து வெளியேறியிருந்தேன் .

தனது பிழை நகர்வுகளுக்கு பாலன் மிக விரைவில் பெரிய விலை கொடுத்தார் .1996 தேர்தல் சூழலில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு முற்றாக சிதைந்து போனது .தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் தக்க வைத்துக் கொள்ள அவர் நிகழ்த்திய நகர்வுகளின் விளைவாக ஒரு புள்ளியில் கட்சியில் இருந்தே வெளியேற வேண்டிய சூழல் எழுந்தது  . 

திங்கள், 27 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 516 * பொருட்படாமை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 516

பதிவு : 516  / 705 / தேதி 27 ஜனவரி  2020

பொருட்படாமை 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 30



மாநில முதல்வர் என்கிற சொல்லிற்கு தனி இனிப்பு உண்டு. புதுவையில் பதவிக்கு வருபவர்களுக்கு அந்த இனிப்பைத் தவிற அது வேறு அரசியல் ரீதியான பலன்களை கொடுக்கும் என சொல்வதற்கில்லை . அல்லது அதற்குரிய பார்வையோ , திட்டமோ இல்லாதவர்கள் அதில் அமரும் அனுபவத்தை தவிர பிறிதொன்றை அடைவதில்லை  . துரதிஷ்டவசமாக முதல்வர் பதவியில் அமர்ந்தவர்களை நினைவிகூறத்தகுந்த ஏதும் இல்லை என்பது வருத்ததற்குரியது . முதல்வர் பதவி இந்தியவில் உள்ள பிற முதல்வருக்கு இணையான அந்தஸ்து தரக்கூடியது என்பது அதன் பிறிதொரு பாதை .தில்லியில் அதற்கான இடம் மதிப்பு மிக்கது .

இதுவரை புதுவை ஆட்சி அமைப்பு என்பது எப்போதும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கே சாதகமானது. பிறர் அந்த இடத்தை நோக்கிய பயணப்படுவதாக , அது வெகு விரைவில் எட்டப்பட்டுவிடும் என்கிற அதிநம்பிக்கையிலேயே தனது காலத்தில் இறுதிவரை முயற்சித்து பின் வெற்றி அடையாமல்  விலகிவிடுகிறார்கள். அரசின் மனிதர்களென மிகச் சிலரே பெற்ற தங்களது தனிப்பட்ட  வெற்றிகளை தக்கவைத்துக் கொள்கிறார்கள் 

மரைகாருக்கும் சண்முகத்திற்கும் இடையேயான சமரசமும் , புரிதலும் ஆட்சிக்கும் கட்சிக்கும் ,   பொது மக்களுக்கும் நேரடியான தொடர்பு உருவாகவில்லை அல்லது உருவாக்க இருவரும் முயன்றதில்லை . அது ஆபத்தானது என அவர்கள் யூகித்திருக்கலாம் . அது ஒருவகையில்  உண்மை என்பது சில காலம் கழித்து புரிந்து கொள்ள இயன்றது .

இரண்டும் அமைப்பில் முற்றும் வேறு வேறானவை .ஒருபோதும் ஒற்றை இலக்கில் இணைந்து ஒரு காரியத்தை ஆற்ற இயலாதவைகள் . ஆனால் பொது மக்கள் என்கிற ஒற்றைப் புள்ளியில் இணையும் சாத்தியமுள்ளவை .தேர்தல் காலம் சட்டமன்றம் என்கிற அந்த  ஒற்றைபுள்ளியை நோக்கி அவை பயணப்படும் போது அது இரண்டையும் இணைப்பது போல இருப்பது ஒரு தோற்றம் மட்டுமே.பல முரண் முட்கள் முளைத்தெழுவது அப்போதுதான்.அரசியல் காரணங்களுக்காக அவை இரண்டையும் முரண்பட்டதாக நீடிக்க வைத்திருந்தார்கள் .

இளைஞர் காங்கிரஸில் இருந்தபோது அவற்றின் மிக நூண்ணிய விலகல்  புள்ளிகளை மிக நெருங்கி பார்த்து உணர்ந்து . அடுத்த தலைமுறை இரண்டுவிதமா மனநிலை உள்ளவர்களை உள்ளவர்களை உருவாக்க இயலும் என்கிற நம்பிக்கையே எனக்கான களத்தை உருவாக்கி கொடுத்தது .

முதிரா இளமை மிகுந்த வேடிக்கைக்கு உரியது . அனைத்தும் செய்து முடிக்கும் ஆற்றலை ஊழ் வழங்குகிறது போல . அனுபவமுள்ள பலர் எண்ணவே தயங்கும் பல முயற்சிகளை செய்து வென்றிட  அதில் எப்போதும் இடமுண்டு .அவை அத்தனையும் நிகழ்ந்து முடிவுறும் இடத்தில் , வெற்றியின் முணையில் வேறொன்று காத்திருக்கும் . கசப்பை காழ்பபை வைத்திருப்பது . அந்த சூழல் மானிடர்கள் மேல் நம்பிக்கையிழக்கும் தருணங்களை விளைவிப்பது . ஆனார்  வாழ்வின் நடைமுறைகளை புரிந்து   கொள்ளும் வாய்பபு  இருக்குமானால், எந்த முயற்சியும்  வாழ்கை நிறைந்து வாழ்ந்த நினைவை கொடுக்க வல்லது . அதற்க்கு வெற்றி தோல்வி என்கிற பேதமில்லை .

ஒவ்வொரு சூழலிலும் நினைவேற்ற வேண்டிய சில எப்போதும் காத்திருப்பது . அதை தொடுபவர்களுக்கு புதிய பாதைகளை திறந்து கொடுப்பது அனைத்தின் மத்தியிலும் கொண்டு நிறுத்துவது .கட்சி மற்றும் ஆட்சி அமைப்பின் இடையில் பொலிட் பீரோ போன்ற ஒன்றை நிறுவ இயலுமானால் முரண்பட்ட இரண்டு அமைப்பையும் இணைக்க அது போதுமானது என்கிற எண்ணம் உறுதியாக இருந்தது .

நங்கள் நினைத்த செயல் திட்டத்தை நிறைவேற்றும் ஒரு சூழல் சண்முகம் முதல்வராக இருந்தால்  அவற்றை முயற்சிக்க இயலும் என்கிற எண்ணம் உறுதியாக இருந்தது  .அதை அவரும் விடப்போவதில்லை என்பது வேறு விஷயம் ,என்றாலும் தர்க்க ரீதியில் அவரிடம் அதற்கான அவசியத்தை கருத்தியல் ரீதியில் வளர்த்தெடுக்க இயலும் என்கிற எண்ணம் உறுதியாக இருந்தது .அதற்கு நடைமுறை சாத்தியமில்லை என்பதை மிகத் தாமதமாக புரிந்து கொள்ள முடிந்தது . ஒரு வகையில் அமைப்பை பற்றி சண்முகமும் மரைகாரும் சரியாக கணித்திருந்தார்களோ என எண்ணத் தோன்றியது .

1995 ல் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு நித்ய கண்டம் பூர்ணாயிசாக நீடிப்பதாக தோன்றினாலும் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் அவர்களது ஆட்சி நீடித்தது .அதற்கான இறுதி காலத்தை சமச்சீர் வரி என்கிற சர்சசை துவங்கி வைத்தது .புதுவையில் திமுகாவின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தது சமச்சீர் வரி விதிப்பு துவக்கி வைத்தது ஒரு காரணமாக இருந்தது என்றாலும் அரசு தல்லாட துவங்கியதற்கு அதன் உட்கணக்குகள் வேறுவிதமான சமன்குலைவால் உருவாக்கியது என்பதுதான் நடைமுறை யதார்த்தம் 

காங்கிரஸில் இருந்து விலகி புது கட்சி கண்ட கண்ணனை நம்பி கூட்டணி அரசை உருவாக்கிய அதன் தலைமை ஜானகிராமனுக்கும் தெரியும் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என தெரிந்திருந்தாதால் . இருந்தும் தமிழ்மாநில காங்கிரஸ் மூப்பனார் தலைமையில் உருவாகி தமிகத்தில் திமுகாவுடன் ஆட்சியில் அமர்ந்த போது திமுக தலைமை அவரை நம்பி ஆட்சி அமைப்பை உருவாக்கி இருந்தார்கள் .
ஜானகிராமன் புதுவையில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள  கண்ணனை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார் . ஆனால் அதுவே கண்ணன் ஆட்சியில் இருந்து வெளியேற முதற்காரணமாக அமைந்தது என்பது விந்தை .