https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 29 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 517 *ஒளி இழந்த காலம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 517

பதிவு : 517  / 706 / தேதி 29 ஜனவரி  2020

*ஒளி இழந்த காலம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 31




கட்சிகள் தேர்தல் ஆனையததால் கண்காணிக்கப்பட்டு அதன் ஜனநாயக ஒழுக்கு பேணப்படுகிறது . அதற்கென தேர்தல் ஆனையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதிகளும் ஒழுங்கு முறைகளும்  உள்ளன .இருந்தும் அரசியல் எழுதப்பட்ட விதிகளுக்குள் அடங்குவதில்லை .பொதுவாக தலைமைக்கு அனுக்கமானவர்கள் எப்போதும் விதிகளுக்கு அப்பால் இருப்பவர்கள் .அவர்கள் பிறர் கேள்விகளுக்கு உட்பட்டவர்கள் அல்லர் .அவர்களை நோக்கி கேள்விகள் கேட்கப்படுவதுமில்லை .

சண்முகத்திற்கு மிக அனுக்கமாக நான் இருந்தபோதும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் எனது இடத்தை போராடித்தான் பெற முடிந்தது  .சண்முகம் அரசியலில்  நீண்ட அனுபவம் உள்ளவர் , பதவி வரம்பிற்குள் வராமல் தலைமையையும் மிஞ்சும் அதிகாரமிக்கவ்களாக சிலர் உருவாகிவிடுகிறார்கள் . அரசியலில் அது தவிற்க முடியாததாக எப்போதும் இருந்திருக்கிறது .தன்னை முன்னிறுத்தி  பிறர் அரசியல் செய்வதை விரும்பியதில்லை. பிறர் தன்பெயரை பயன்படுத்துவதை அனுமதிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்தது .அதனால் அவரை ஊன்றி யாரும் அரசியல் செய்ததில்லை .

பாலனுக்கு பிறகு தலைமைக்கு வந்த வல்சராஜ் சண்முகம் தரப்பிலிருந்து வந்தவர் .பல தரப்பிலிருந்து அனைவரையும் கேட்டு பெற்றே அந்த அமைப்பு உருவாகி இருந்தது .1996 தேர்தல் தோல்விக்கு பிறகு இளைஞர் காங்கிரஸ் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டதால் , அதில் பங்கு பெற பெரிய அளவினாலான போட்டிகள் இல்லை .வல்சராஜ் அந்த கமிட்டியை பல தனிப்பட்டவர்களிடம் இருந்தும் சிலரை கேட்டுப் பெற்று அந்த கமிட்டியை உருவாக்கி இருந்தார்என்னை சண்முகம் தரப்பிலிருந்து  வந்த   சிபாரிசிலிருந்து   தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என நினைத்திருந்தேன் . ஆனால் தில்லியில் இருந்து என்னை முதன்மை பொது செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுத்திருப்பதாக சொன்னார் . ஆனால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எனது இடத்திற்கு வையத்தரசை தான் தலைவர் சிபாரிசு செய்ததாக சொன்னார் 

.எனக்கு வல்சராஜ் 1991 ல் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பிருந்தது அறிமுகம் .
வல்சராஜ் கமிட்டியில் முக்கிய எந்த பதவியை குறித்தும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை . சண்முகத்திடமிருந்து எனது அரசியலை மீளவும் துவக்கிய போது எனக்கு எந்த திட்டமும் இல்லை .அதனால் பலர் வல்சராஜை தொடர்பு கொண்டு தங்களின் பதவி குறித்த வேண்டுகோள் வைத்த போது நான் அவரை சென்று சந்திக்கவே இல்லை .

பாலன் காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் ,அவரது மாநில அமைப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அவரின் தொகுதியான முதலியார்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதால் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சபாபதியிடம் சென்று இணைந்து கொண்டார்கள். அவர்களில் பலரை சபாபதி இளைஞர் காங்கிரஸ் கமிட்டிக்கு சபாரிசு செய்திருந்தார் .பாலனுக்கு ஆதரவாக இருந்ததற்காக சபாபதிக்கு என்மீது வருத்தம் இருந்திருக்க வேண்டும் .அவரது ஆதரவாளர்கள் இளைஞர் காங்கிரஸ் கமிட்டியில் நான் இடம் பெறுவதை எதிர்த்தார்கள் .ஆனால் என்ன காரணத்தினாலோ என்னை முதன்மை பொதுச் செயளாலராக நியமித்திருந்தார் .அது எனது நிலைப்பாட்டை பாதித்தது ஒரு கட்டத்தில் முழுமையாக அன்றாட அரசியலில் இருக்கும் நிலையை உருவாக்கி விட்டது 

பாலன் இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த போது அவரை அடுத்து தலைவர் பதவிக்கு 1993 ல் நான் சிபாரிசு செய்யப்பட்டேன்.அது நான் முற்றும் எண்ணாத , மன ரீதியாக தயாராவதற்கு உரிய காலம் கொடுக்கப்படாமல் அலையால் அடித்துச் செல்லப்படுபவன் போல இழுத்துச் செல்லப்பட்டேன் (அது பற்றி மிக விரிவாக முன்பே பதிவிடப்பட்டுள்ளன ) .நான் முன்னிறுத்தப்பட்டதால் சக நிர்வாகிகளில் ஒருவரான கமலக்கண்ணன் அதிருப்தி அடைந்திருந்தார் .அவர்தான் அடுத்த தலைவராக வர இருந்தவர் .

கமலகண்ணன் தன்னை இணைத் தலைவராக கற்பனை வளர்த்துக் கொண்டார் .அவரது செயல்பாடுகளால் அனைவரது அதிருப்திக்கு ஆளாகி முகமிழந்து போனார் .நான் முன்னிறுத்தப் பட்டதற்கான பல காரணங்களில் அதுவும் ஒன்று . தாமோதரன் மட்டும் கமலக்கண்ணனுக்கு ஆதரவாக இருந்தார் . பாலனுக்கு தாமோதரன் தவிற்க இயலாத ஒருவர் . பொதுவாக பிறரால் விரும்பப்டுபவர் என்பதால் தாமோதரன் எண்ணத்திற்கு  உடன்படுவது போல நிலை எடுத்தார் . ஆனால் அவருக்கு எதிராக  பாலன் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து அமைப்பை தன் கீழ் ஒருகிணைக்க , ஒருவருக்கு எதிராக ஒருவரை எதிர் நிறுத்தப்பட்டார்கள் . யாரும் யாரையும் நம்பமுடியாத சூழல் உருவானது . பாலனுடன், நெருக்கம் கொள்ள ஒருவர் பற்றி பிறிதொருவர் உளவு சொல்லத் துவங்கினர்  .அது மிக மோசமான அரசியல் நகர்வுகளில் ஒன்றானது . பலர்  வெறுப்புற்று ஒதுங்கினர் . நான்  இதைப்போல ஒன்றை எதிர்நோக்கி 1994 ல் அமைப்பில் இருந்து வெளியேறியிருந்தேன் .

தனது பிழை நகர்வுகளுக்கு பாலன் மிக விரைவில் பெரிய விலை கொடுத்தார் .1996 தேர்தல் சூழலில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு முற்றாக சிதைந்து போனது .தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் தக்க வைத்துக் கொள்ள அவர் நிகழ்த்திய நகர்வுகளின் விளைவாக ஒரு புள்ளியில் கட்சியில் இருந்தே வெளியேற வேண்டிய சூழல் எழுந்தது  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...