https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 13 ஜனவரி, 2020

அடையாளமாதல் - 512 *அரசியலின் பாதைகள் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 512

பதிவு : 512  / 698 / தேதி 13 ஜனவரி  2020

*அரசியலின் பாதைகள் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 26



தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள சண்முகம் தனக்கென இட்டுக்கொண்ட சில தடைகள்  அவரின் அசாத்திய புரிதல்களினால்  உருவானவர்கள் அதிலிருந்து தனது விட்டுக் கொடுத்தலும் , விலகி நிற்தலும் அவரின் பலத்திற்கு அடிப்படையானவைகள் . பிரமிக்கத்தக்கவைகள் . அதுவே அவரை வடிவமைத்து புதுவை அரசியல் களம்  அரை நூற்றாண்டுகள் அவரை சார்ந்திருக்கச் செய்திருந்தன . அவற்றில் இருந்து மெல்ல விலகி ஒரு புள்ளியில் முற்றாக வெளியேறினார் . அது 1990-91 களில் அவருக்கு  ஏக காலத்தில் நிகழ்ந்த தேர்தல் மற்றும் அரசியல் தோல்விகளுக்கு வழிவகுத்தது

நேரு குடும்ப விசுவாசமும் அதனால் நிலைபடுத்திக் கொண்ட வெற்றிகளும் ராஜிவ்காந்தியின் மரணத்திற்கு பிறகு காணாமலாகி இருக்க வேண்டும் . அதன் பிறகு அகில இந்திய தலைமைக்கு வந்தவர்களுடனாட அவரது உறவு பரம்பத விளையாட்டைப் போல ஏற்ற இறக்கம் மிக்கதாக இருந்தது .மத்தியில் காங்கிரஸின் பிடி ராஜிவ்காந்தி காலத்தில் நழுவி கொண்டிருந்ததை அவர் யூகித்திருக்க வேண்டும் . அல்லது தனக்கான  ஆட்சி அதிகாரத்திற்குறிய காலம் கணிந்திருப்தாக எங்கோ உணர்ந்திருக்க வேண்டும் . அதுவே அவரை மாநில அரசியலுக்கு கொண்டுவந்ததிருக்க வேண்டும் .

மாநில அரசியலுக்கு வர முடிவெடுத்த சூழலில் அவருக்கும் மரைகாருக்கும் இடையே மூன்றாவது சக்தியாக வளர்ந்து வந்து கொண்டிருந்த கண்ணனை அவர் அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டிருந்தது  . கண்ணனை எதிர்கொள்ள மிக விரிவான அதே சமயம் மிக நுணுக்கமான அரசியல் நகர்வுகள் செய்தார் . கண்ணன், மரைகாருக்கும் சண்முகத்திற்கும் இடையான அதிகாரப்புள்ளியாக உருவெடுத்திருந்தார் . அது  அரசியல் முக்கோணக் களத்தை உருவாக்கி இருந்தது . மரைக்கார் மற்றும் சண்முகம் சம பலத்தில்  இருக்கும் எல்லா சூழலிலும் கண்ணன் சாயும் பக்கமே வெற்றிபெறும் என்கிற நிலை உருவானது .

கண்ணனுக்கு எப்போதும் மரைகாரை நோக்கிய மனச்சாய்வு உண்டு என்றாலும் அவர்களுக்கு  ஒருவரை ஒருவர் நம்புவதில் அடிப்படை சிக்கலிலிருந்தது .புதுவை அரசியலில் சண்முகம் வென்று முதலவரானால் கண்ணன் மரைக்காரின் பக்கம் நிற்பார் என்பது வெளிப்படை என்றாலும் சண்முகத்திற்கு  மரைகாருடன் ஒற்றை அமர்வில் எல்லாவிதமான  சமரசங்களை உருவாக்கிக் கொள்வதில்  எந்த மனத்தடையும் இருந்திருக்க வாய்ப்பில்லை , ஆனால் அரசாங்கம் என்பது அன்றாட நிகழ்வு அதில் நித்தியபடி சமரசங்கள் செய்து கொள்ளும் எவரும்  அரசியல் ரீதியாக முகமிழக்க வேண்டிவரும் .சண்முகம் அதற்கு தயாரில்லை .

மரைகார் தில்லிக்கு செல்வதால் காலியாகும் லாஸ்பேட்டை தொகுதிக்கு தனக்கு மாற்றாக தனது தம்பி இக்பாலை நிறுத்த இருப்தாக தகவல்கள் பரவ ஆரம்பித்தது . மரைகாரின் அரசியல் முகம் என்றால் அது இக்பால் என்பதும் மரைகாருடைய வெற்றிக்கு பின்னால் இக்பால் இருப்பதாக ஒரு கூற்று . அது புதுவை அரசியளார் அனைவருக்கும் தெரிந்த ரகசியம் . அன்றைய சூழலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறக்கூடும் என பரவலாக நம்பப்பட்டது .இக்பால் மற்றும் கண்ணன் பங்குபெரும் மந்திரிசபை மிக மிக சிக்கலானது என்பதால் .இரண்டையும் சமன் செய்யும் நகர்வில் கண்ணனின் கோட்டை என கருதப்பட்ட காசுகடைத் தொகுதியில் போட்டியிட சண்முகம் முடிவெடுத்ததார். கண்ணனுக்கு தொகுதி இல்லமலானது

1991 தேர்தலில் காங்கிரஸ் அதிமுக வுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை எளிதில் முடிவானது , ஆனால் சண்முகம் , மரைகாருக்கான உடன்பாடு பெரும் சிக்கலை சந்தித்தது .சென்னை மற்றும் தில்லியில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு எட்டவில்லை . தில்லியில் இறுதிகட்ட நகர்வில்தான் காசுகடை தொகுதியில் தான் நிற்க இருப்பதை சொல்லி மரைகாரை அதிரவைத்தார்.கொந்தளிப்பு உச்சத்தை அடைந்தது . மரைகாரும் அதற்கு தகுந்தாற்போல் தனது தம்பி இக்பாலை விலக்கி தனது தொகுதியை கண்ணனுக்கு கொடுத்தார் .

சண்முக்கத்தின் கனவிற்கு எதிராக முதல் விதையாக  விழுந்தது . இதில் வினோதம் கண்ணனுக்கும் அதுவே எதிர் விதையானது .மரைகார் கண்ணனுடன் காசுக்கடை தொகுதியில் சண்முகம் தோற்றால் கண்ணன் முதல்வர் என்கிற ஒப்பந்தம் உருவானதாக அலர் எங்கும் இருந்தது கண்ணனை  முதல்வராக்க மரைகார் ஒருபோதும் முயலப்போவதில்லை . காரணம் கண்ணன் யாருக்கும் கட்டுப்படுபவரல்லஅது   அனைவருக்கும் தெரிந்ததே .சண்முகம் தோற்றால் வைத்திலிங்கம் முதல்வராவார் என்பதே இதற்கு அப்பால் பெரியதாக பேசப்பட்ட பிறிதொரு அலர் .

காங்கிரஸ் ,அதிமுக வுடன் 20-10 என்கிற அளவில் தொகுதி உடன்பாடு முடிந்ததும் சண்முகம் ,மரைகார் உடன்பாடு 15 - 5 என்கிற எண்ணிக்கையில்  முடிந்திருக்க வேண்டும் .ஆனால் யாருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்பதில் நீண்ட இழுபறி நிலவியது .இருவருக்கும் மாநில அரசியலில் தங்களின் இடம் குறித்தது  என்பதால்  உரையாடல் மிக உக்கிரமாக இருந்தது . சண்முகத்துக்கு மரைகார் மூலமாக  மட்டுமின்றி வேறு பல பக்கங்களில் இருந்து சிக்கல்கள் முளைத்தன . குருவிநத்தம் தொகுதி குறித்து அதிமுக எழுப்பிய சிக்கல் விளைவாக தியாகராஜன் காங்கிரஸ் வேட்பாளராக மாற்றி புதுவை அதிமுக வை தினறவைத்தார் .இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலன் முதலியார் பேட்டை தொகுதியை கேட்டு எழுப்பிய சிக்கல் ராஜீவ் காந்தி வரை சமரசரசத்திற்கு செல்லவேண்டி இருந்தது.இறுதியில் சண்முகம் நிறுத்த விரும்பிய வேட்பாளர் சபாபதியை சீட் மறுக்கப்பட்டு பாலன் நிறுத்தப்பட்டார் .பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவரைப் போல மாநில தேர்தல்  அரசியலில் நுழைய விரும்பிய பாலனின் தனிக்கணக்கு சண்முகத்தை எரிச்சலுறசெய்திருக்க வேண்டும் . அதை தவிர்த்து  புதிதாக எழுந்து வண்ணியர் கணக்கு மாநில அரசியலை வேறு இடத்திற்கு நகர்த்தியது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...