https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 31 மார்ச், 2017

புரிதலின் நஷ்டம்



தனக்கெனத் தெரிந்திருக்கவேண்டிய ஒன்றை மற்றவர் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமென முயற்சிப்பதைப் போல ஒரு மடமை பிறிதொன்று இல்லை என்றே நினைக்கிறேன் . இது "ஞானத்திற்கான" காலம் அனைவருக்கும் "அனைத்தும் தெரிந்தே இருக்கிறது "
அதற்காகவெல்லாம் பிறிதொருவர் சிரமப்பட வேண்டியதில்லை.

அவர்களுக்கும் , தங்கள் மேதாவித்தனத்தை மேற்கோளுடன் விளக்க "கூகுளாண்டவரின்" கருணைகூர்ந்துள்ளார் , ஆனால் அது நம்மை திகிலடைய வைப்பது . இப்போது அவருக்கு நாம் எதை புரியவைப்பது . அவருக்கு விளக்க வந்ததையா?அல்லது அவரது மேற்கோளையா?. இது தொடர்ந்து வளரப்போவது நாம் நம் திருவாயை மூடுவது நமக்கு நன்மை பயக்குமொரு வழி.

புதுவை முதல்வராக இருந்த திரு.சண்முகத்திடம் என் அரசியல் நண்பனொருவன் (சிறிது கேனத்தனமானவன்) .புதுவையின் மிக பிரபலமான ஒரு பள்ளியில் ஆரம்ப வகுப்புக்கு ஒரு சீட் சிபார்சு கடிதம் வாங்கித்தரச் சொன்னான் . நான் திகைத்து ,இதற்காக ஒரு மாநில முதல்வரின் சிபார்சு கடிதம் கேட்பதுபோல ஒரு மடமையில்லை ,மாற்று வழி யோசி என்று சொல்லிவிட்டேன் .

இது மாதிரியான ஒரு அனுகுமுறையை அவர் எப்படிக்கையாளவார் என்று எனக்குத்தெரியும் . அவரிடம் இதைப்போன்ற சில்லரை விஷங்களை கொண்டு செல்லாதிருப்பதே அவனுக்கும் நல்லது ,என்பது என்அவா

ஆனால் அன்று மாலை முதல்வர் வீட்டிற்கு நான் சென்றபோது அந்த அரசியல் நண்பன் அவர்வீட்டிலருந்து வெளியே வந்தான். வந்தவன் பேசாமல் சென்றிருக்கலாம் , என் ஜாதகம் அப்படி . அவன் காலையில் என்னிடம் சொன்ன அந்த சிபார்சு கடித்தில் முதல்வர் கையெழுத்திட்டது பற்றி சொல்லி என்னை ஒரேமாதிரி பார்த்து சிரித்து கொண்டே சென்றான் .

எனக்கு அடிபட்ட வலி . நேரே முதல்வரிடம் அவர் இதை எப்படி செய்யலாம் என்று சண்டைக்கு போனபோது . அவர் சொன்னது . " நீ சொன்னா கேட்டுக்குவே உனக்கு புரியும் அந்த பைத்தியகாரனுக்கு புரியாது அதா தொலையுதுன்னு போட்டு குடுத்தேன் " என்றார் .

எனக்கு இப்போதுதான் ஒன்று புரிந்தது "புரிதலால் அடைவது நஷ்டமன்றி பிறிதில்லையென.

வியாழன், 30 மார்ச், 2017

ரிபுவின் தருணங்கள்






எனக்கு அம்மாவை பார்க்க சிரமமாக இருந்தது . நாளைய வாழ்கைப் பற்றிய எதிர்பார்ப்பு இருப்பதாலேயே , காலை விழித்தவுடன் வேளையை நோக்கி பறக்கத்தொடங்கிவிடுகிறோம் . நான் அதிலிருந்து முற்றாக விலகி சில வருடங்களாகவே தனிமையை பேணியபடி வந்துள்ளேன் .

வாழ்கையின் சிறு தருணங்கள் வழியாக வாழ்வதென்பது, தன்னளவில் நிறைவானதாக உணர்கிறேன் ,அதை ஒட்டிய முயற்சியில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறேன்.

அம்மா மஹாவார்த்தக்கியத்தை அடைந்திருந்தார் . காலைமுதலே என்னை அழைத்தபடி இருந்தது ஏன் என்று விளங்கவில்லை . தன்னை அனைத்திலும் இருந்து விலக்கிக் கொண்டுவிட்டார் . அறையில் சென்றுபோது சிறு தூக்கத்தில் இருந்தார். கையைதொட்டு எழுப்பி  என்ன என்று கேட்டபோது கக்கதம் கொண்டு சிறிது நேர விசுப்புதல் வழியாக கண்ணீர் சிந்திக்கொண்டே இருந்தார்.

என்ன பண்ணுகிறது என கேட்டதற்கு எல்லோருக்கும் சொல்லிவிடு , அம்மாவால் ஏதும் முடியவில்லை என்று , கூறும்போதே அவருடைய இயற்கை சுபாவம் தலைநீட்டுகிறது . அந்த நிலைமை க்ஷனநேரம் கூட  நீடிக்கவில்லை , வேலைக்காரியை குறைகூறத் தொடங்கிவிட்டார். தன்னால் முன்போல ஏன் இருக்கமுடியவில்லை மருத்துவரை உடனே பார்க்க வேண்டுமென்றார் . பல்வேறு உடல் உபாதைகளின் பட்டியல் நீண்டு கொண்டேயிருந்தது .

நவீன மருத்துவம் அயுள் நீட்டிப்பு தருபவையாக உள்ளன, ஆனால் அவற்றின் சிகிழச்சை முறை உடல்பிறழ்வுகளை அப்படியே வைத்தே அதன் வாழ்கையை நீட்டிக்க வைப்பது . பாம்பினால் கடிபட்டவனுக்கு சிகிழ்சை அந்த பாம்பையும் உடலோடு இனைத்து கட்டுவது போன்றது , கொடுமையானது. எல்லாம் சரியாகிவிட்டது என நம்ப முனைவது . ஆனால் அது உண்மையில்லை என்பது சில நாட்களிலேயே புரிந்து விடுகிறது.

வாழ்க்கைபோலவே மரணமும் இயல்பானதுதான் .சிகிழ்ச்சை என்பது மரணத்துக்கு எதிரான போராட்டமல்ல. சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் முயற்சியே என்கிறது அரோக்கியநிகேதனம் என்கிற வங்க நாவல் .

அதில் "உன் மரணத்தை இந்த நோயில் காண்கிறேன். நீ அதை ஏற்பதே உனக்கு நல்லது என்கிறார். ”இது உன் ரிபு தாது கோஷால் ” என்கிறார் மருத்துவர் மஷாய்.

ரிபு என்கிற சொல் ஆயுர்வேத சாஸ்திரத்தின் ஒரு விளக்க முடியாத பதம். அதன் உட்பொதிவை அடைந்த போது திரு.ஜெயமோகனுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினேன்

" வாழ்க்கைபோலவே மரணமும் இயல்பானதுதான் என்று சொல்லும் மஷாய் ,சிகிழ்ச்சை என்பது மரணத்துக்கு எதிரான போராட்டமல்ல. சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் முயற்சியே என்கிறார். உன் மரணத்தை இந்த நோயில் காண்கிறேன். நீ அதை ஏற்பதே உனக்கு நல்லது என்கிறார். ”இது உன் ரிபு தாது கோஷால் ” என்கிறார் மஷாய்". என்றும் ஆயுர்வேத மருத்துவம் "ரிபு"என்ற ஒன்றைப் பற்றி வலியுறுத்திக் கூறுகிறது என்றும் வருகிறது .இதே போல வெண்முரசு கிராதம் பகுதியில்

மாம்டியின் கதைப் பகுதியில் "பலவாறாகக் கேட்டும் யமன் இரங்காததனால் இந்திரன் யமன் அறியாமல் சித்திரபுத்திரனிடம் சென்று “அந்தணரே, நான் வேள்விகாக்கும் தேவர்தலைவன். ஒன்றை மட்டும் சொல்லுங்கள், ஊழ்முதிர்கையில் அவனை அழைத்துவரும் யமபுரியின் காவலன் யார்?” என்றான். “அதைச் சொல்ல எனக்கு ஆணையில்லை, அரசே” என்றார் சித்திரபுத்திரன். “உம்மால் பிறிதொருவரை அனுப்ப முடியுமா?” என்றான் இந்திரன். “இல்லை, அம்மைந்தன் கருக்கொள்கையிலேயே இங்கே இவனும் இருட்துளியாக ஊறிவிட்டிருப்பான். இருவரும் சேர்ந்தே பிறக்கிறார்கள். இங்குள்ள பெருங்கோட்டைவாயிலில் அவன் ஒரு சிறுபுள்ளியென தோன்றிவிட்டிருப்பான்” என்றார்".

இந்த இரண்டும் ஒன்றையே குறிப்பதாக உணர்கிறேன் . கிராதத்தில் வரும் இந்த விஷயத்தை படித்த போதே பரம்மிப்பாக இருந்தது வியாச பாரததில் இது உள்ளதா அல்லது இந்த "ரிபு" பற்றிய வேறொரு  பரிமாணமாக அதை முன்வைத்தீர்களா அல்லது இந்த இரண்டும் ஒன்றுதானா ,என அறிய ஆவலாக உள்ளேன் .

எதற்கு எனில் உலக முக்கிய சாஸ்திரங்களை எதிர்காலத்தில் நிலைபெறச்செய்யும் வகையில் அனைத்தையும் மகாபாரதத்தில் இடையே செறுகுவது வழக்கம் என்று கீதை உரையின் போது கூறியிருந்தீர்கள்.இது அது போன்றதா?.

எப்படியிருந்தாலும் இந்த வரிகள் மகத்தானதாக இருக்கிறது."வாழ்க்கை முறைக்குக் காரணமாக அமையும் மனோபாவமே ரிபு எனப்படுகிறது. ஒவ்வொருவருக்குமே ஒவ்வொன்று ரிபுவாகிறது. பண ஆசை, புகழ்மோகம், வேலைப் போதை, ருசிகள், சபலங்கள்… ரிபு உண்மையில் மரணத்தின் தூதன். நம்மில் உறைந்து நம் வாழ்க்கையை வடிவமைத்து, நம்மை பலவீனப்படுத்தி, உடன் அழைத்துச் சென்று மரணத்திடம் ஒப்படைப்பவன். ரிபு ஒருவன் பிறக்கும்போதே கூடவே பிறந்துவருகிறது. ‘ உடன்பிறந்தே கொல்லும் நோய்’ என நம் நூல்களும் இதைச் சொல்கின்றன. ஆனால் நடு வயது ஆனபிறகே அது என்ன என்று தெளிவாகத் தெரிகிறது. தாந்துகோஷாவின் ரிபு என்பது உணவில், குறிப்பாக மசாலா ருசியிலும் காரத்திலும் உள்ளது; அதிலிருந்து அவன் தப்பமுடியாது என்கிறார் மஷாய்.

மரணம் என்று தன் முன் வருவது பிரபஞ்ச இயக்கத்தின் மகத்தான விதிமுறைகளில் ஒன்று என்று பிரத்யோத் டாக்டர் கண்டடைகிறார்.

எனக்கு சிரிப்புதான் வந்தது , எல்லோருக்குமான மனோபாவமிது க்ஷனத்திற்கு க்ஷனம் புரட்டி அடிக்கக்கூடியது . பெரும்விசும்பின் கருணை இது . மரணிப்பதற்கான மனநிலையில் இருப்பது எனக்கு தெளிவான சிந்தனையை அளிப்பவை அவை மேலும் கூர்கொள்ள, கடந்த காலத்தை திரும்பி பார்பது . நிறைவாக வாழ்வது அல்லது அதற்கான முயற்சியில் இருப்பது இரண்டுமே தன்னிறைவை அளிக்கவல்லது .

சிந்தனையை ஒவ்வொரு முறையும் தொகுத்துக் கொள்வதின் வழியாகவே அவற்றை கடந்து கொண்டிருக்கிறேன் . எனக்கு இது எப்பவும் இப்படியே இருக்குமா ? தெரியவில்லை . அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவர் அறையை விட்டு வெளியில் வந்தேன்


செவ்வாய், 28 மார்ச், 2017

அடையாளமாதல் - 17 (அரசியல் களம் - 15 உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமை -1)

ஶ்ரீ:


அடையாளமாதல் - 17
அரசியல் களம் - 15
உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமை -1

மூன்று வருட தொடர்பு உள்வட்டத்தின் எனக்கு அவரகளின் அரவனைப்பு என போய்கொண்டிருந்தது .1989 தேர்தல் . காங்கிரஸ் கட்சியரசியல் களம் தேர்தலரசியல் நேரத்தில் ஆயாசமளிப்பது . ஆங்கில மற்றும் இந்தி மொழி தெரியாது எளிய தொண்டர்கள் படும்பாடு சொல்லில் மாள்வதில்லை .வேளைவாய்பை தேடுவது போல.

தன் சுயத்தை காகிதத்தில் எழுதியும் கடந்த கால நிகழ்வுகளை செய்தித் தாள்களின் பேப்பர் கட்டிங்கும் அதற்கான ஆங்கில பொழிபெயரப்பு இப்படி ஒரு கோமாளித்தனமானது . சில கலைச்சொற்களின் மூலமாக , வந்தவரிடம் விளக்க அந்த கோப்பு சடுதியில் எவரைநோக்கி குற்றம்சாட்டப்பட்டதோ அவரிடமே சென்று அடைக்கலமாகும் , வந்த கூட்டம் சாதனை செய்தது அளப்பரையுடன் சென்று சேரும் .

உற்சாகமிழப்பு என்பது மனிதனுடைய இயல்பான குணம் , தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி பாய்வது போல . அவர்களுக்கு அரசியல் தேவையற்றது . எளிய உடன்பாடிற்கு இணங்குவது அவசியமற்றது .

இளைஞர் காங்கிரஸின் போக்கை முடிவு செய்தது அதன் முன்னாள் தலைவர் கண்ணன் . மிக சாதாரண ஏழ்மையான சூழலில் பிறந்து தன் அமைப்பின் மூலமாக தான் லட்சியமாக நினைத்ததை அடைந்தவர் .

ஏனோ அவரது வன்முறைபானி எனக்கு உகப்பாக இருந்ததில்லை , தனக்கென ஒரு கூட்டத்தை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாக மாற்றி அதன் விசையில் விளைந்தவர் . உணர்ச்சி ததும்ப பேசி அனைத்து இளைஞர்களையும் மின்னூட்டம் அடையச்செயவது  வழமையாக இருந்த காலம் . அப்போது அதற்கு ஒரு பெரும் ஈற்பு இருந்தென்வோ உண்மை.

அரசியல் கனவை சாதாரண மக்களின் மனதில் விதைப்பது அவர்களை ஒரு நல்ல அரசுசூழ்தலுக்கு இட்டுச்சென்றது . சமூக விழுமியங்களின் மீது நம்பிக்கைகளையும் , தன்னால் எந்த சூழலிலும் தன்னையும் தன்சூழ் சமூகத்தையும் அதன் விழுமியங்களுடன்  நிகர்நிலையில் வைக்க முடியும் என்கிற தன்நம்பிக்கையும் மிகதோழமையான, தன்னகங்காரமற்ற தனியாளுமைகளால் ஆனது.

வளர விரும்பும் இளந்தலைவர்களின் அரசியலின்  தனிப்பயன்பாடு அது . அதிகாரவர்கத்தின் முறைசாராமை ,அதன் வழுவாமைக்கு எதிராக தன் கண்டன குரலை பதிவு செய்யவாவது ஒரு தளம் அது இருந்தது வந்திருக்கிறது .

எந்த சூழலிலும் உள்ளூழல் இருந்து கொண்டுதான் இருக்கும் . அதன் போக்கை கட்டுபடுத்தும் அமைப்புகளாக இவை செயல்பட்டு வந்தன .அதை இன்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாட்டில் பார்க்கலாம் அவர்கள் பொரும்பாலும் புறநகர் மற்றும் கிராம்ப்புறங்களில் செலூக்கம் கொண்டதாக இருந்து வருகிறது.

இதில் அனால் நகர்சார்ந்த பகுதிகளில் அவை செயலபட்டதில்லை . காரணம் நகர்பகுதிகள் மக்கள் தனியர்கள் , சமூகங்களாக பிறந்திருந்தாலும் பொது பிரச்சனைக்கு வாசல் தாண்டி வரதாவர்கள் , நாசூக்கானவர்கள் . இவர்களின் சிடுக்குகள் பொதுதளத்தில் இருந்தாலும் அனேகமாக  தனிப்பட்ட செல்வாக்கில் அதை அடைய முற்படுபவர்கள் .மக்களின் பகுதிகள்  நான்கு விதத் தொகுதிகளாக அவை பிரிந்து கிடக்கன்றன

நகர் பகுதிகள்.
புறநகர் பகுதிகள்.
கிராப் பகுதிகள்.
புறக்கிராமம் பகுதிகள் .

இந்த நான்கின் தேவைகளும் விழுமியங்களும் வெவேறானவை அவைகளை கட்சிசார்ந்த புரிதலின் வழியாகத்தான் ஒன்றினைக்க இயலும் . இப்படி சொல்கிறேன் , அரசாங்கத்தில் அமைச்சர் போன்ற முக்கிய பதவி வகிக்கும் ஒருவருக்கு தன் தொகுதியை தாண்டிய மக்களால் ஆகக் கூடியது ஒன்றில்லை என்கிற நிலையில் ,அந்தந்த தொகுதியில் தேர்தெடுக்கப்பட்ட ஆளும்  அல்லது எதிர்கட்சி உறுப்பினரின் பரிந்துரைக்கும் விஷயங்கள் பொது நோக்கு கொண்டவைதான் என யாராலும் கூறவியலாது .

அதேசமயம் தொகுதிமக்களின் அசல் தேவைகளை அறிவதற்கு அவர்களுக்கு உதவக்கூடியவர்கள் அவரது தனிப்பட்ட அனுதாபிகளே. அவர்கள் பெரும்பாலும் தேர்தல் களக்காழப்பில் இருந்து விடுபட முடியாமல் அதனாலேயே உந்தப்படுபவர்கள் . எக்காலத்தும் அவர்கள் பொது விழுமியத்தில் நிலை நிற்கமுடியாதவர்கள் .

தேர்ந்தெடுக்கப்ட்ட உறுப்பினரும் , இத்தகைய ரசிகர்பட்டாளத்தையே விரும்புவர். இத்தகைய பட்டாளமே  கூட எவ்வளவு காலம் இவருடன் பிரயாணபடுவார்கள் என்பதற்கு உத்திரவாதமில்லை . அவர்கள் ஒருகாலமும் கட்சி அடையாளத்திற்கு வரமுடியாது . ஏனெனில் அது அவரது ஓட்டரசியலை சார்ந்ததாகவும் தன்சார்புடையதாவே இருக்க வாய்ப்புள்ளது .

அரசியல் கனவுமயமானது ஒருவர் கனவு நனவாகாது போகலாம் ஆனால் பலபேருடைய ஒரே கனவு தோற்பதில்லை . என் அரசியல் தாரகமந்ரமாக இருந்ததும் இதுவே. ஆனால் செயல்படும் பாணிதான் வேறுபாடுகளை உடையது . இளைஞர் காங்கிரஸ் சன்ஜய்காந்தி தலைவராக இருந்த காலத்தில் இயக்கத்தில் இருந்த எவரும் கட்சியரசியலில் தோற்கவில்லை .

அன்றைய இளைஞர்களிடத்தில் அரசியல் விழுமியங்களை அது விதைத்தது , அதை நோக்கி நகரும் நிமிர்வையும் அளித்தது . யாரையும் அண்டியநிலை ,மீட்சி என்பது சுயத்திற்கானது .அதன் தலைமையால் சுரண்டப்பட்டாலும் தனக்கென ஓர் அங்கீகாரம் நிச்சயம் ஒருநாள் வாய்க்கும் என காத்திருந்தனர் .

***

அடையாளமாதல் - 16 (அரசியல் களம் - 14 பதிவுகளின் நோக்கமும் மையமும்)

ஶ்ரீ:

அடையாளமாதல் - 16
அரசியல் களம் - 14
பதிவின் நோக்கமும் மையமும்


நட்பு ரீதியாக நானும் பாலனும் மிக நெருக்கமாக உணர்ந்த காலம் , என் இயல்பே அதுவாகத்தான் இருந்தது . அடுத்தவர்களின் பயன்பாட்டில் இருப்பது குற்றமாக நான் கருதியதில்லை . தன்மனசாட்சிக்கெதிரான சுரண்டப்படுதலை ஒருகாலமும் பொருத்ததில்லை . இந்தப் பதிவுகளை பற்றி நான் நீண்ட யோசனையில் இருந்த போது , அவ்வப்பொழுது எழும் உணர்வுகளின் அடிப்படையில் சில பதிவுகளை எழுதி அது பாதியில் நின்று போனது . காரணம் அவை என் சுயசரிதை போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கத் துவங்கியது. பதிவுகள் எக்காரணம் கொண்டும் அந்த வழியில் செல்ல நான் அனுமதிக்கப் போவதில்லை . இதை நான் தொடங்கும் போது பொது வாழ்வில் என்ன நடந்தது , நான் கடந்து வந்த பதையினூடாக ஏற்பட்ட புரிதலுக்கும் அறிதலுக்குமான அவதானிப்பில் இருக்கிறேன் .

கடந்த மூன்று வருடங்களாகவே என் இருபத்தி ஐந்து வருட மதிப்பீடுகளை மறுவரையறை செய்து இங்கு வந்து சேர்த்திருக்கிறேன் . தர்க்க புத்தி அதன் சட்டகத்தை வடிவமைத்து விட்டது .அதில் பெரிய மாறுதல் இருக்கப்போவதில்லை , ஆனால் நடைமுறையில் அதை பொருத்துவதற்கான  தர்கிப்பதை நிறுத்திக்கொள்ளாது அதனை அக புற வயமாக பெறுபுத்தியை நிர்வகிக்கத் துவங்கியது . என் புறவயமான தேவைகளுக்கான கட்டுப்பாட்டு தகர்ந்துவிட்டது , ஏனெனில் ஒதுக்குதல் இயல்பதாக நடப்பவை.

தலவர் திரு.சண்முகம் ஒரு அரசியல் ஆளுமை சர்ச்சையின் மத்தியில் இருப்பவர் . புதுவையின் அனைத்து அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக அவரது தாக்கம் இல்லாது அறுபது ஆண்டு காலம் ஒருநாள் கடந்ததில்லை . அதை தொடர்ந்தே இப்பதிவு முன்னும் பின்னும் நகர்ந்து அவைகளை விளக்க இயலுமா என பார்க்கிறேன் . சரியாக சொல்வதானால் அது அவரது அரசியல் ஆளுமையை பற்றியதாக வெளிப்படுமானால் மிக மகிழ்வாக இருக்கும .

அடையாளமாதல் பதிவுகளில் அரசியல் களத்தை எடுத்திருக்கிறேன் , என் பார்வைக்கும் கருத்துக்குமாக திரு.சண்முகம் அவர்கள் கூறியது.கேள்விப்படுதல் மற்றும் பிறர் வாயிலாக என்னை வந்தடைந்த விஷயங்களின் தொகை , அவற்றில் பிறரின் கோணம் , பிற்பாடு மற்றொரு சமயத்தில் திரு.சண்முகம் அவர்களே அதை கூறிச்சென்ற கணங்கள் என பல உள்ளடுக்கு விஷயங்களின் பதிவே இது.

***

திங்கள், 27 மார்ச், 2017

அடையாளமாதல் - 16 (அரசியல் களம் - 14 பதிவுகளின் நோக்கமும் மையமும்)

ஶ்ரீ:

அடையாளமாதல் - 16
அரசியல் களம் - 14
பதிகளின் நோக்கமும் மையமும்


நட்பு ரீதியாக நானும் பாலனும் மிக நெருக்கமாக உணர்ந்த காலம் , என் இயல்பே அதுவாகத்தான் இருந்தது . அடுத்தவர்களின் பயன்பாட்டில் இருப்பது குற்றமாக நான் கருதியதில்லை . தன்மனசாட்சிக்கெதிரான சுரண்டப்படுதலை ஒருகாலமும் பொருத்ததில்லை . இந்தப் பதிவுகளை பற்றி நான் நீண்ட யோசனையில் இருந்த போது , அவ்வப்பொழுது எழும் உணர்வுகளின் அடிப்படையில் சில பதிவுகளை எழுதி அது பாதியில் நின்று போனது . காரணம் அவை என் சுயசரிதை போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கத் துவங்கியது. பதிவுகள் எக்காரணம் கொண்டும் அந்த வழியில் செல்ல நான் அனுமதிக்கப் போவதில்லை . இதை நான் தொடங்கும் போது பொது வாழ்வில் என்ன நடந்தது , நான் கடந்து வந்த பதையினூடாக ஏற்பட்ட புரிதலுக்கும் அறிதலுக்குமான அவதானிப்பில் இருக்கிறேன் .

கடந்த மூன்று வருடங்களாகவே என் இருபத்தி ஐந்து வருட மதிப்பீடுகளை மறுவரையறை செய்து இங்கு வந்து சேர்த்திருக்கிறேன் . தர்க்க புத்தி அதன் சட்டகத்தை வடிவமைத்து விட்டது .அதில் பெரிய மாறுதல் இருக்கப்போவதில்லை , ஆனால் நடைமுறையில் அதை பொருத்துவதற்கான  தர்கிப்பதை நிறுத்திக்கொள்ளாது அதனை அக புற வயமாக பெறுபுத்தியை நிர்வகிக்கத் துவங்கியது . என் புறவயமான தேவைகளுக்கான கட்டுப்பாட்டு தகர்ந்துவிட்டது , ஏனெனில் ஒதுக்குதல் இயல்பதாக நடப்பவை.

தலவர் திரு.சண்முகம் ஒரு அரசியல் ஆளுமை சர்ச்சையின் மத்தியில் இருப்பவர் . புதுவையின் அனைத்து அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக அவரது தாக்கம் இல்லாது அறுபது ஆண்டு காலம் ஒருநாள் கடந்ததில்லை . அதை தொடர்ந்தே இப்பதிவு முன்னும் பின்னும் நகர்ந்து அவைகளை விளக்க இயலுமா என பார்க்கிறேன் . சரியாக சொல்வதானால் அது அவரது அரசியல் ஆளுமையை பற்றியதாக வெளிப்படுமானால் மிக மகிழ்வாக இருக்கும .

அடையாளமாதல் பதிவுகளில் அரசியல் களத்தை எடுத்திருக்கிறேன் , என் பார்வைக்கும் கருத்துக்குமாக திரு.சண்முகம் அவர்கள் கூறியது.கேள்விப்படுதல் மற்றும் பிறர் வாயிலாக என்னை வந்தடைந்த விஷயங்களின் தொகை , அவற்றில் பிறரின் கோணம் , பிற்பாடு மற்றொரு சமயத்தில் திரு.சண்முகம் அவர்களே அதை கூறிச்சென்ற கணங்கள் என பல உள்ளடுக்கு விஷயங்களின் பதிவே இது.

***

சனி, 25 மார்ச், 2017

அவதானிப்பில் மதிப்பீடுகள் -1

ஶ்ரீ:


கடந்த மூன்று வருடங்களாகவே என் இருபத்தி ஐந்து வருட மதிப்பீடுகளை மறுவரையறை செய்து இங்கு வந்து சேர்த்திருக்கிறேன் . தர்க்க புத்தி அதன் சட்டகத்தை வடிவமைத்து விட்டது அதில் பெரிய மாறுதல் இருக்கப்போவதில்லை , ஆனால் நடைமுறையில் அதை பொருத்துவது தர்கிப்பதை நிறுத்திக்கொண்டது . புறவயமான தேவைகளுக்கான கட்டுப்பாட்டு
தகர்ந்துவிட்டது , ஏனெனில் ஒதுக்குதல் இயல்பதாக நடப்பவை.

எனக்குள் நிகழ்ந்தவை , நிகழ்ந்து கொண்டிருப்பவைகளை அவதானிப்பின் வழியே எனக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் .

திரு. ஜெயமோகனை ஆசிரியர் ஸ்தானத்தில் இருத்தி அவரது எழுத்துக்களின் வழியே என்னைப் பற்றிய என் தொகுப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது . அந்த வகையில் அவரது சமீபத்திய பதிவை மிக நெருக்கத்தை ஏற்படுத்தியது. வழக்கம் போல இந்த பதிவின் ஊடாக கடக்க விழைகிறேன்.

நெடுங்காலம் வேர் விட்டு வளர்ந்து நிலை கொண்ட நிலப்பிரபுத்துவ அமைப்பொன்றின் இறுதிக்காலகட்டத்தில் பிறந்தவன். எனது தந்தை அந்நிலப்பிரபுத்துவ காலகட்டத்துக்குள் முழுமையாகத் திளைத்து வளர்ந்து வந்தவரின் பிள்ளயாக அவரின் விழுமியங்களையே என் தந்தைக்கு  அளித்தார் . ஆகவே அவரின் குடும்பம், பள்ளி,அலுவலகம் ,சமூகச் சூழல் அனைத்திலுமே அந்நிலப்பிரபுத்துவத்தின் மரபுகளும் நெறிகளும் நம்பிக்கைகளுமே மேலோங்கி நின்றன.

பழங்குடிகளின் கட்டற்ற பரவலான பண்பாட்டுவெளியை வாழ்ந்திராத போதும் , புரிதலின் வழியாக நிலப்பிரபுத்துவம் பல வகையிலும் முற்போக்கான வளர்ச்சியையே அளித்தது என்பதை உணர்ந்திருப்பார்.அதன் விளைவாகவே கலைகளும் இலக்கியங்களும் சிந்தனைகளும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்திற்குமேல் எழுந்து வந்த முதலீட்டியம்  நிலப்பிரபுத்துவத்தோடு ஒப்பிட்டு நோக்குகையில் மேலும் முற்போக்கானது என்பது இயல்பான காலமாற்றங்கள் உணர்த்தின. ஆகவே நாம் முதலீட்டியத்தின் ஊழியர்கள். அதில் பங்களிப்பாற்றுபவர்கள்.

ஆனால் சென்ற காலம் பொருளியல்தளத்திலும் அரசியல்தளத்திலும் பின்னகர்ந்து விட்டாலும் கூட சமூகத் தளத்திலும் பண்பாட்டுத்தளத்திலும் நீடிக்கவே செய்யும். இன்று நம்மை ஆளும் மதிப்பீடுகள் நிலப்பிரபுத்துவக் காலத்தைச் சேர்ந்தவை .அவை இலக்கியங்களாக, நீதிநூல்களாக ,ஆசாரங்களாக, ஒழுக்க வரையறைகளாக ,அற மதிப்பீடுகளாக ஆழ்படிமங்களாக நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக அவற்றை உற்று நோக்கி ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்வதினூடாகவே அவர் அவற்றை கடந்து செல்ல முயற்சிப்பவராக இருந்தார்.

அவை பெரும்பாலும் அறமதிப்பீடுகளே ஒழிய ஒழுக்க மதிப்பீடுகளோ நெறிமுறைகளோ ஆசாரங்களோ அல்ல. அந்த மாற்றம் மிகமெல்ல வளர்சிதை மாற்றமாக, முரணியக்கத்தின் வழியாக மட்டுமே நிகழமுடியும். அவ்வளர்சிதை மாற்றம் வழியாகவே நான் உருவாகி வந்தவன் என நினைக்கிறேன் . காரணம் என் தந்தை அவரின் மூத்வரோடும் என் பாட்டனாரோடும் எதிர் கொண்ட முரணை உணர்வதில் என்னை கண்டெடுக்க முயல்கிறேன் .

இச்சூழலில் நான் அறியும் ஓர் இடருண்டு. குடும்பத்தில் தந்தைக்கும், கல்வி நிலையங்களில் ஆசிரியருக்கும், தொழில் நிலையங்களில் மேலதிகாரிகளுக்கும், சமூகச் சூழலில் மூத்தவர்களுக்கும் முழுமையாக அடிபணியவே நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளால் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இயல்பாகவே எந்தை அதை செய்தும் வந்திருக்கிறார் . ஆனால் அன்றைய தலைமுறையில் அந்த மதிப்பீடுகளை உதறி முன்னகரும் இயல்பு அவருக்கு உருவாகியிருக்கலாம் ,பெரும்பாலும் நவீன தொழிற்சூழலில் இருந்து இது முளைவிடுகிறது. நிலப்பிரபுத்துவத்தோடு நூலிழைத் தொடர்புகளே நீடித்த நிலையில்  அவர் தன்தந்தை முன்னெடுத்த தொழிலில் மேலும் வலுவான முன்னகர்தலில் ஈடுபட்டார்

90களுக்குப்பிறகு உலகமயமாக்கம் இந்தியாவில் ஐரோப்பிய அமெரிக்கபாணி தொழில்- வணிகச் சூழலை உருவாக்கியது. குறிப்பாக கணிப்பொறித்துறை போன்றவற்றில் ஐரோப்பிய பாணி நிர்வாகிகளும் தொழில்உறவுகளும் உருவாயின. அங்கு மேல் கீழ் அடுக்கு என்பவை ஆசாரம் மற்றும் நம்பிக்கை இவற்றின் இரண்டுமற்ற நிலையின் நீட்சியாக நான் உருவாகி வந்திருக்கிறேன் . நிர்வாகத்தின் பொருட்டு உருவாக்கப்பட்ட தொழில்முறை உறவுகளே இருந்தன. மெல்ல குடும்பங்களுக்கும் அவை வந்து சேர்ந்து கொண்டிருந்தது . இந்த சூழலில. எந்தையின் தொழில் முழுமையாக என்னிடம் கையளிக்கப்பட்டது .

தற்போதைய இளைஞர்களிடம் கணப்படுகிற பல நவீன விழுமிங்களோடு  நான் ஒத்துப்போவதைக் காண்கிறேன் . இது எந்தை வழியாக என்னிடம் வந்து சேர்ந்திருக்கலாம் , அல்லது நிலம் சமூகம் பணபாடு அல்லது ஆழ்மனபடிமங்களாக இவஐ வெளிப்பட்டிருக்கலாம் . அதன் விளைவாக எவரும் என்மேல் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காமலிருக்கும் மனநிலை இன்று வளர்ந்துவிட்டுருப்பதை உணர்கிறேன் . தந்தையோ ஆசிரியரோ மேலதிகாரியோ மூத்தவர்களோ என்னிடம் ஆணையிட இயன்றாலும் சில சமயங்களில் கட்டுபடுவதில்லை

மானுடனாக நான் பிறருக்கு முற்றிலும் சமானமானவன் என்ற உணர்வை இளமையிலேயே அடைந்துவிட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். எனக்கும் என் தந்தைக்குமான உறவல்ல எனக்கும் என் மகனுக்குமான உறவு. நான் என் தந்தைக்கு நிகராக நின்று ஒருசொல்லும் பேசியதில்லை.என் மகன் என்னை அஞ்சுவதில்லை, அடிபணிவதுமில்லை.

இச்சூழல் அறிவார்ந்த தேடலையும் ஆன்மீகமான மலர்வையும் நோக்கி ஒவ்வொரு தனியாளுமையும் சென்று சேர்வதற்கான விடுதலையை அது அளிக்கிறது. அதற்கெதிரான சமூகத் தடைகள் அனைத்தையும் பெரும்பாலும் விலக்குகிறது. பிறிதொருவரின் வாழ்க்கைக்குமேல் நாம் செல்வாக்கு செலுத்துவது பிழை என்ற எண்ணம் இன்று வலுப்பெற்று வருகிறது. தன்மேல் பிறர் செலுத்தும் ஆதிக்கம் என்பது ஒருவகையில் அத்துமீறலே என்னும் எண்ணம் உருவாகி நிலைபெற்றுள்ளது. அனைத்து வகையிலும் முந்தைய நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளிலிருந்து முற்போக்கானதென்றும் பயன் மிக்கதென்றும் இதை ஐயமில்லாமல் சொல்ல முடியும்.என்கிறார் ஜெயமோகன் இது என்வரையில் சரி என்றே உணர்கிறேன்.

என் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை முழுமையாகவே என் ஆளுமை கொண்டு எதிர்க்கிறேன் . அது விடுதலையளிக்கும். ஆனால் அதே எதிர்ப்பு என்னை உடைத்து வார்க்கும் வாய்ப்புள்ள, முற்றிலும்புதிய ஒன்றைக் கற்பிக்கும் வழிகாட்டியான ஆசிரியனிடம் செலுத்தப்படும் என்றால் அங்கு கல்வி மறுப்பே நிகழும். அது நிகழக்கூடாது . இந்த இரட்டைகளின் மத்தியில் பயணிப்பதே சரியானதாக இருக்கும்

எனது ஆணவத்தை ஜெயமோகன் முன்னால் திறந்து வைத்தேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை அவர் உடைக்கவும் அவர் என்னுள் புகவும் நான் அனுமதித்தேன். அது எனக்கு இறப்புக்கு நிகரான அனுபவமாக இருந்தாலும் அதனூடாகவே நான் என் இளமையின் அறியாமை எனக்களித்த ஆணவத்திலிருந்து வெளியே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.இதற்குக் காரணம், சிந்தனையைத்தான் நூல்கள் அளிக்கமுடியும் சிந்திப்பதை ஆசிரியர்களே கற்பிக்கமுடியும் என்பது உண்மை தான்.
நம் எண்ணங்களை தர்க்கபூர்வமாக மாற்றுபவன் முதன்மை ஆசிரியன் அல்ல. தன் ஒட்டுமொத்த ஆளுமையையே நம் மீது பதிப்பதன்மூலம் நம்மை உடைத்து உருமாற்றி வார்ப்பவனே முதன்மையாசிரியன். குரு என்னும் சொல்லால் அதை குறிக்கலாம். அவன் எங்கே எப்படி நம்மை பாதிக்கிறான் என நாம் எளிதில் அறியமுடியாது. நம் உலகநோக்கை, சிந்தனைமுறையை நம்மையறியாமலேயே அவன் மாற்றுகிறான்.

இது ஒரு நுட்பமான குறியீட்டுத் தொடர்பு என்றே என் அனுபவத்திலிருந்து எனக்குத் தோன்றுகிறது. ஆசிரியனுடனான என்  உறவில் நான் அவரை மெல்லமெல்ல ஓர் அடையாளமாக ஆக்கிக்கொள்கிறேன். அவர் என்னிடம் நேரடியாக  உரையாடத்தையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறேன். அந்த நுட்பமான தொடர்புறுத்தலுக்கு தடையாக இருப்பது எப்போதும் என் தர்க்கபுத்தியை தீட்டி முன்வைத்திருப்பது, அது தன்னை முன்வைத்து என்னை எதிர்த்துக்கொண்டே இருக்கிறது. அதை இப்படி தொகுத்துக்கொள்கிறேன்




என்மீது கருத்தியலாதிக்கத்தை செலுத்த எவரையுமே அனுமதிக்காத இறுக்கத்தை நான் கொண்டேனென்றால் நான் எங்கு நிற்கிறேனோ அங்கேயே இறுதி வரை நின்று கொண்டிருப்பேன் . என்னுள் எந்த புதுக்கருத்தும் உள்ளே வரவும் முளைத்து மேலெழவும் அனுமதிக்காமலிருப்பேன் அதேசமயம் என்னை முழுமையாக பிறருடைய கருத்துக்களுக்கு விட்டுக் கொடுத்து ஒரு கால்பந்தாட்டத்தின் பந்து போலாவது எவ்வளவு அசட்டுத்தனமானதோ அதற்கிணையாகவே இரும்புத்தூணென நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும் உறுதியும் அபாயகரமானது என்பதையும் புரிந்தே இருக்கிறேன் . உண்மையிலேயே அது எனது தேடலைத் தொட்டு எனது ஆழ்தளங்களை விரியச்செய்யும் ஆசிரியனிடம் எனது அதே வெற்றாணவத்தைக் காட்டுவது எதையும் கற்கவியலாது செய்துவிடும்.இது பெரும்பாலும் அவரின் தனிப்பட்ட தெரிவென்றாலும்  அது மறுக்கத்தக்கதல்ல. என் ஆளுமையாக தன்முனைப்பையும் கட்டமைத்து வைத்திருப்பின் இச்சொற்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. அதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும் .

ஜெயமோகன் சொல்கிறார் " தன் குருவை தானேதான் தெரிவுசெய்துகொள்ளவேண்டும். முதன்மையாசிரியர்களை, குருநாதர்களை, அணுகும் வழி என்று மட்டுமே இதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். உதாரணமாக நான் நடத்தும் நவீன இலக்கிய விவாதங்களில் தன்னிலையைப் பேணிக்கொள்ளும் ஒருவர் நல்ல பங்களிப்பை ஆற்றமுடியும். ஆனால் சுவாமி வியாசப்பிரசாத் போன்ற குருநாதர்களிடம் அந்தமனநிலையுடன் அணுகினால் வெறும் ஆணவமே எஞ்சும்.நான் சுட்டிக்காட்ட விரும்புவது இந்த வேறுபாட்டையே."

இது ஒரு நல்ல சொல்லாட்சி , ஜெயமோகனை அனுக நான் எடுத்துக்கொண்ட "தன்னிலை பேனுதல்"  இவ்வாறு தொகுத்துக் கொண்டேன் . அது பற்றி திரு.ஜெயமோகனுக்கு எழுதும் போது இப்படி குறிப்பிட்டேன்

" என்னுடனான என் ஒப்பந்தம். உங்கள் கருத்துக்களை இரண்டாக பிறித்துக்கொள்ளவது ஒன்று;அனைத்தையும் அது சொல்லும் வகையில் புரிந்து பொதிவது. இரண்டு;ஏற்கவியலாததை தனியாக வைத்துக்கொள்வது.

மேலும் ஏற்கவியலாததை இரண்டாக பிரித்துக்கொள்வது.
ஒன்று;அவற்றை அக்கால சூழல் உணர்ந்து புரிந்து கொள்வது, அல்லது தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையை அனுமானிப்பதின் வழியே அவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பது.இரண்டு; மற்றவற்றை கடக்கவியலும் காலம் வரை விட்டு வைப்பது.ஆனால் உங்களின் “ஆறு தரிசனம்” ஆக்கம் வாசிப்பிற்கு பிறகு இந்தப்பகுதியில் தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையாக அனுமானிப்பதின் வழியே அவற்றை கடப்பது என்கிற ஒரு பொது புத்தி எழுந்து வந்துள்ளது.அவற்றை நியாயப்படுத்த தொடங்கினேன்."

திரு. ஜெயமோகன் மேலும் " இன்றைய முதலீட்டிய உலகில் பிற அனைத்து துறைகளிலும் சுதந்திரம், தனித்துவம், வணங்காமை, தன்முனைப்பு ஆகியவை  ஒருவகைப் பண்புகளாகவே நிலைகொள்கின்றன. கற்றுக்கொள்ளும் இடத்தில் மட்டும் உரிய இடத்தில் வணங்குதலும் உரிய முறையில் பணிதலும் அங்கே அவசியமானவை என்று தோன்றுகிறது. நாம் நமது வணக்கத்தின் மூலம், பணிதலின் மூலம் நாம் நம்து எல்லையைக் காணமுடியும். நமது பலவீனங்களையும் குறை பாடுகளையும் அளந்து அடையாளப்படுத்திக்  கொள்ள முடியும். அதன்பின்னரே நம்மை நாமே உடைத்து மறுவார்ப்பு செய்ய முடியும்.

நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. அதனூடாகவே வெளியிலிருந்து வரும் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் நம்முள் இடமளிக்க முடியும். அவற்றை நம்முள் நாமே வளர்த்து எடுக்க முடியும் அதனூடாக நாம் வளர்ந்து நாம் பணிந்தவர்களையும் வணங்கியவர்களையும் உண்மையிலேயே நிகரெனக்காணும் இடத்தை அடைய முடியும். கடந்து செல்லவும் கூடும்.

பிற உறவுகளிலிருந்து இவ்வுறவு வேறுபட்டது. பிற சமூக உறவுகள் அனைத்திலும் சற்றேனும் பொருளியல்சூழலின் கட்டாயங்கள் கலந்துள்ளன. அவை காலந்தோறும் நுணுக்கமான மாற்றங்களையும் அடைகின்றன. நிலப்பிரபுத்துவ காலகட்டக் காதலும் முதலீட்டியக் காலகட்டக் காதலும் வேறுபட்டவை. ஆனால் ஆசிரிய மாணவ உறவு எப்போதுமே காலாதீதமானது " என்கிறார் . அதீனமானது தானா ?


வெள்ளி, 24 மார்ச், 2017

வெண்முரசு புதுவை கூடுகை , வெண்முரசு . முதற் கனல் . பொற்கதவம்

ஶ்ரீ:
புதுவை கூடுகை பதிவு.

நாள் 23-03-2017

வெண்முரசு . முதற் கனல் . பொற்கதவம் 

தர்மம் , தன்னறம் ,அறம் மூன்றும் ஒன்றையே சொல்லவந்தவை , ஆனால் நுட்பாமான மாறுபாடுடையது. தர்மம்- ஒன்றின் இயல்பினாலானது , தன்னறம் - இயல்பை அகவயமாக நோக்குவது , அறம் - நோக்கியதை பிறிதொன்றில் பொருத்தி ஒழுகுவது .வேள்விமுகம் தொடக்கமாக அமைந்ததற்கு காரணம் , அது ஒரு சுழி ,முழு வெண்முரசின் முடிவின் தொடக்கமும் - தொடக்கத்தின் முடிவுமானது. ஆகவே தொடர்ந்து நிகழ்ந்த படியேயிருப்பது.
வேள்விக்குளத்தில் ஆஸ்தீகர் சொன்னதே அறத்தைப்பற்றிய கலியுக விவரிப்பு. ஜீவாத்மாக்களான பிரம்மா முதல் எறும்பு ஈறாக அனைத்திற்கும் முக்குண மயக்கத்தால் கோபதாபங்கள் இருக்கின்றது எனப் புரிகிறது , அதை ஒட்டி கஷ்டமும் நஷ்டமும் வரத்தான் வரும் என்பதும் விளங்கிறது .சத்வ, ரஜோ, தமோ குணங்களுடைய சமன்குலைவே இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதற்கான விழைவின் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால் அனைத்தும் சிதறி மறையும். இச்சை தீமையல்ல! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்.அறம் , அறிந்தோரால் சாமான்யம் , விசேஷம் எனப் பகுக்கப்பட்டே அதற்கு அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது . 
பீஷ்மரின் மனக்கலகத்தையும் அறத்தைப் பற்றிய அவரின் சிரமம் சொல்லவந்தது பொற்கதவம் . பாரதம் என்கிற உதிரிப்பூக்களை தொடுக்கும் நார் போல அவர் செயல்பட்டால் மட்டுமே அது நகரும் . ஒரு சூழலில் அவர் திகைக்கிறார், பெரும் அறச்சிக்கலில் உழல்கிறார் . தன்னறம் தன்னை நெறிப்படுத்துவது என கைக்கொள்ளும் நிலையில் . அதன் மீது தாக்குதல் தொடங்குகிறது . சாதனை என்றால் பரிட்சை உண்டு , அதிலிருந்து வென்று வெளிவருகிறார் . ஆனால் அவை எல்லாகாலத்திற்குமானதன்று . அதனால் பெறும் விசை அடுத்த நிலை வரையில் நீடிக்கிறது . ஏனெனில் தீர்வு ஒற்றைபடையானதல்ல , பெரும் முரண்களின் தொகையை அது முன்வைக்கிறது . தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே .தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும் என்றும் , காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் என்று சித்ரகர்ணியும் , இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை’ என்று கந்தினியும் .இவை அனைத்திற்கும் சிகரமென வியாசர் பசுவைக்கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம். ஆகவே சிங்கத்துக்கு பசுவதையின் பாவம் கிடையாது” என்கிறார்  பீஷ்மர் அதைக்கேட்டு கோல் விழுந்த பெருமுரசம் போல மனம் அதிர்ந்து திரும்பி வியாசரைப் பார்த்தார். 
இங்கு பீஷ்மர் தெளிகிறார் என்று சொல்லமுடியுமா இதை ? இல்லை , ஏனெனில் பெற்ற சில மணித்துளிகளில் காலாவதியாகி விரல்சந்தின் இடையே நோக்கி நிற்கும் போதே  சொட்டி வழிந்த மறையும் நீரென்றே    தீர்வை காலம் எப்போதும் வழங்கிவந்துள்ளது . அவை எவரையும் கலமென நிரைத்து வைப்பதில்லை , தான் புரிந்துகொள்ளவே இருநூறாண்டுகால வாழ்க்கை தேவையாகியிருக்கிறது…. என்ற வியாசரின் புரிதலை பேசுகிறது அது ,அறிதலை பற்றி அல்ல .
பொற்கதவம் . உலோக பொற்கதவை சொல்ல வரவில்லை அறக்குழப்பத்திலிருந்து அவர் வெளிபட திறந்த அவரது மனக்கதவே பொற்கதவம் . தன்னை முழுதாக கட்டமைத்துக்கொள்கிறார் . ஒவ்வொரு காலத்திலும் அவை இடபாடுகளாகி மீண்டும் மீண்டும் கட்டியெழுப்படுகிறது. புது சித்தாந்தங்களை அவை கண்டடையப்பட்டு கட்டமைக்கின்றன . பீஷ்மரின் தன்னறம் மிக்க எழுந்து கழிவிரக்கமென நான்கு முகமாக கட்டியெழுப்பப்படுகிறது 
1 .சூதர் தீர்க்கசியாமர் மூலமாக
2 .வியாசர் மூலமாக
3 .சித்ரகரணி மூலமாக
4 .கந்தினி என்ற வெண்பசு
//சந்திரகுலத்து பிருஹத்ஷத்ரன் இக்‌ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற குழந்தை இளமையிலேயே நூறு யானைகளின் ஆற்றலைக்கொண்டிருந்தது. // புராணம் பாரதவர்ஷத்தில் இரண்டு சத்திரிய வம்சத்தைச் சொல்லுகிறது சந்திர சூரியவம்சம் இந்தியாவை ஆண்ட அனைத்து ராஜாக்களையும் இந்த இரண்டு பிரிவுகளுக்குள் வைத்தது . சூரியரியனும் அதன்  ஒளியை நகல் செய்யும் சந்திரனும்  உலகம் இரவு பகல்களால் ஆக்கி மனிதர்களின் அரசனென்றாகி நெறி வளர்ந்தனர் . சந்திரவம்சம் ஆட்சியேற உதித்த கண்ணன் சொன்ன கீதையின் நாயகன் சூரிய குல ரகுராமன் . ஆக இது ஒளியை பரதிபலிப்பது . எளிய மாநுடர்களுக்கானது பாரதம் இன்று வெண்முரசாகியது.
//யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின் ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தை விட ஓங்கி ஒலித்தது. அந்த யானைகளின் எழிலைக்காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் என்றும் அந்நகர்மேல் மழை பெய்துகொண்டிருந்தது// நீர் உயர நிலம் உயர வயல் உயர நெல் உயர கோல் உயர கொடி உயரும் . இந்திரன் தன் மகள் தேவயாணிக்கு அளித்த கொடை
//“அது பறந்து போய்விட்டது. அதோ அது பறந்து போய்விட்டது” என ஆர்ப்பரித்தான். “சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது” என்றான். கூடியிருந்த அனைவரும் அதைக்கேட்டு நடுங்கி அதிர்ந்து சினம்கொண்டனர்// வாழ்வு காலத்தினால் ஆனது , இது முடிவைக்குறித்து எழுகிறது . பின் ஏற்றமென்றும் இறக்கம் என்றும் அது மாயையினால் மயக்கினாலும் . முடிவு இங்கிருந்து துவங்குகிறது காலக்குறிகளைப் பார்த்த முதுநிமித்திகர் குருவம்சத்தின் மாவீரர்களும் அறத்தின்தலைவர்களும் இனிமேல்தான் பிறக்கவிருக்கிறார்கள் என்றும் குருகுலத்தின் புகழின் பூக்காலம் இனிமேல்தான் வரவிருக்கிறது என்றும் சொன்னார். ஆனால் பித்தனின் சொற்களும் சரியாகவே இருந்தன .
//“தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” // 
பாரதத்தின்  போக்கை மாற்றி அமைப்பது சந்துனுவின் சத்தியவதியின் மேல் உள்ள இச்சையையும் , அது அவனுடைய வீரியத்தை வதைத்து , விதைகளை பலமிழக்கச்செய்கிறது . ஒரு விதையின் உள்ளே உள்ள காட்டை பிளந்து வெளிவரத் துணைக்கும் நீரும் மண்ணும் அறம்பிழைத்து அதை வதைக்கின்றன . வதைப்பதே உருவாக்கும் விசை போலும் . பீஷ்மரை அறம் எனும் நீரும் மண் எனும் அஸ்தினாபுரமும் வதைக்கிறன. 
// “இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்” //
// அருந்ததிக்கு நிகரான எரிவிண்மீன் என்ற சொல் ஒரு பெண்ணைக் குறிக்கிறதென்றும் ஊகித்திருந்தனர் //ஆனால் அவர்களனைவரும் ஆச்சரியப்படும்படியாக சத்யவதி அதை அறிந்திருந்தாள். அந்தச்செய்தியை பிறர் எவரும் அறியவேண்டியதில்லை என்று அவள் அவர்களுக்கு ஆணையிட்டு பரிசில்கள் கொடுத்து அனுப்பினாள். அஜபாகனின் சொற்களிலிருந்து நிமித்திகர் ஊகித்த கடைசிச்செய்தியை அவர்கள் சத்யவதியிடம் சொல்லவில்லை.
//பேரமைச்சர் யக்ஞசர்மர் புன்னகைசெய்து “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார்.//அர்த்த சாஸ்திர வரிகள் போல கருணையற்ற உண்மைகளை கொண்டது , உண்மைகளை விழைவை என்கிற பொய்கலவாத தர்கத்தில் வைப்தனாலேயே அது தீர்வை நோக்கி நகர்கிறது .
//இந்த கிருஷ்ணபக்‌ஷ சதுர்த்தியுடன் அஸ்தினபுரியின் மன்னர் சித்ராங்கதர் மறைந்து ஒரு வருடமாகிறது. அவரது நீர்க்கடன் நாள் வரைக்கும் ஷத்ரிய மன்னர்கள் நம் மீது படைகொண்டுவர முடியாது. மேலும் எட்டுநாள் கழித்துதான் அவர்கள் போருக்கு நாள் குறித்திருக்கிறார்கள்//அரசர்களின் உலகம் ஆசைக்கானது என்றாலும் நெறியின் வழியில் விலக்குத்தேடியே வாழ்நாள் முழுவதும் சிந்திருக்கிறார்கள் என்கிறது இந்ப்பதிவு.
//அந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.//ஆகவேதான் பெருதெய்வங்கள் கண்கள் நம்மை சிறு தெய்வ்களைப் போல்நேர் கொண்டவெறித்த பார்வையின்றி , தழைந்த நோக்கும் கருணையுமாக கனிகின்றன.
//பீஷ்மர் “அன்னையே, உங்கள் சொல் எனக்கு ஆணை. ஆனால் நான் இக்கணம்வரை என் அகம் சொல்லும் நெறியை மீறியதில்லை. எதிர்த்துவரும் ஷத்ரியனிடம் மட்டுமே நான் என் வீரத்தைக் காட்டமுடியும். அரண்மனைச் சிறுமிகளிடம் தோள்வலிமையைக் காட்டினால் இந்த பார்தவர்ஷமே என்னைத் தூற்றும்…என்னை மன்னியுங்கள். என்மேல் கருணை காட்டி தங்கள் ஆணையிலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றார். யாசிப்பவர் போல கைகள் அவரையறியாமல் நீண்டன. “பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே…என்னை அந்த இருண்ட குழியில் தள்ளிவிடாதீர்கள்” என்றார்.//
பொற்கவம் ஆஸ்தானாபுரத்தின் மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் நடுவே உள்ள அணிவாயிலுக்கு பொருந்துகிறதோ இல்லையோ பீஷமனின் மனக்கதவை குறிக்கும் சொல்.
அது திறப்பதையும் நாட்புறத்திருந்தும் அறம் அவருள்ளே நுழைகின்றது.
// சத்யவதி “தேவவிரதா, நீ கொள்ளவேண்டிய முதல்நெறி ஷத்ரிய நெறிதான். தன்னை நம்பியிருக்கும் நாட்டையும் குடிமக்களையும் காப்பதுதான் அது” என்றாள். “தன் குடிமக்களுக்காக மும்மூர்த்திகளையும் எதிர்க்கத்துணிபவனே உண்மையான ஷத்ரியன் என்று நீ கற்றதில்லையா என்ன? கடமையைத் தவிர்ப்பதற்காகவா நீ நெறிநூல்களைக் கற்றாய்? களம் நெருங்கும்போது பின்திரும்பவா ஆயுதவித்தையை பயின்றாய்?” என்றாள்.//
பீஷ்மர் தன்னறம் என நினைப்பதை சூதரிடம் விவரிக்கிறார்
//சூதரே, அறத்தின் வழிகள் முற்றறிய முடியாதவை. ஆனால் மனிதன் செய்யும் அறமீறல்களோ விண்ணிலும் மண்ணிலும் பொறிக்கப்படுபவை. மனிதனுக்கு படைப்புசக்திகள் வைத்த மாபெரும் சூது இதுவென்று நினைக்கிறேன்” என்றார். //
வனவேங்கை மரத்தடியில் ஒரு இடையச்சிறுவன் வந்தமர்ந்து குழலிசைக்கக் கேட்டார். அந்த இசையில் மயங்கி அருகே நெருங்கிச்சென்றபோது அவ்விசை மலரும்தோறும் வனவேங்கையின் கிளைகளிலெல்லாம் பொன்னிற மலர்கள் பூத்து நிறைவதைக் கண்டார். அவன் வாசித்துமுடித்தபோது மலர்க்கனத்தால் மரக்கிளைகள் தாழ்ந்து தொங்கி தூங்கும் மதயானைகளின் மத்தகங்கள்போல மெல்ல ஆடின. அவன் சென்றபின் அந்தக் குழலிசையை மெல்ல திரும்ப மீட்டியபடி வேங்கை மலருதிர்க்கத் தொடங்கியது. கண்ணீருடன் தன் தவச்சாலையை அடைந்து தன்னுடைய நூலை எடுத்துப்பார்த்தார் பராசரர். அதை அங்கேயே நெருப்பிடவேண்டுமென்று எண்ணி அனல் வளர்த்தார். அவர் சுவடிகளைப்பிரிக்கும்போது அங்கே நாரதமுனிவர் வந்தார். அவர் செய்யப்போவதென்ன என்று உணர்ந்த நாரதர் பராசர ரை தடுத்தாட் கொள்கிறார் . அவர் வான் நோக்கி துதிக்கை தூக்கும் யானையையே தன்னுள் எப்போதும் உணர்ந்தார்.
யமுனைக்கரையில் நின்றிருந்த மரமொன்றின் அடியில் இரவுறங்க வந்த பராசரர் நிலவில் தெய்வசர்ப்பம்போல ஒளி கொண்டெழும் யமுனையையே பார்த்துக்கொண்டிருந்தார். தானறிந்த ஞானமனைத்தும் அக்காட்சியின் முன் சுருங்கி மறைந்து வெறுமையாவதை உணர்ந்தபோது அவர் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டத் தொடங்கியது.
 பராசர ரிஷியின் இரண்டு வித சலனங்களின் வழியாக மாற்றமடைகிறது . அதன் விளைவாக பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என அறிகிறார் மகாவியாசர் அவதரிக்கிறார்
பீஷ்மனுக்கு மேற்படி உதாரணங்களுடன் அறப்பிழை அன்று என்கிறார் சூதர் தீர்க்கசியாமர் அதை பராசர ரிஷியின் கதையின்  வழியே வியாசனை காட்டிக்கொடுக்கிறார் .

வியாசரை சந்திக்கும் பீஷ்மர் தன்னை மனோரீதியில் சிந்திக்கும் திராணியில்லதா வெறும் ஆயுதமென்று நினைக்கிறார் 
//“ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை..”  என்கிறார் பீஷ்மர் . //
அதன் படி துல்லியமான கணக்குகள் வெல்ல அறிவற்ற ஆயுதமாக இருப்பது அறம் என உணர்கிறார் அதற்கு வியாசர். “ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்”
நான் தங்களிடம் கேட்கவிழையும் வினா ஒன்றே. ஒரு ஷத்ரியனின் முதற்கடமை எதுவாக இருக்கும்? எதன்பொருட்டு அவனுடைய பிற அனைத்துப்பிழைகளும் மன்னிக்கப்படும்?” என்றார்.
வியாசர் சிபிச்சகரவர்த்தியின் கதையில சித்ரகன் மூலம் தன்னறத்திற்கு வேறு வழி காட்டுகின்றார் 
சித்ரகன் சினந்து சிறகடித்தெழுந்தது சொல்கிறான்  “மூடனைப்போல பேசுகிறாய். தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்” என்றது. ஆக தன்னறம் என்பது ஆனவத்தின் அடையாளமாகி விடுகிறது .
பீஷ்மர் நெடுமூச்சுயிர்த்து “ஆம், ஷத்ரிய தர்மப்படி சொந்த நாட்டின் நன்மைக்காக ஷத்ரியன் ஷத்ரியப்பெண்ணை தூக்கிவருவதில் தவறே இல்லை….பிற குலத்துப்பெண்களை அவர்கள் அனுமதி இல்லாமல் தூக்கிவந்தால்தான் பெரிய பாவம்…” என்று அறம் பற்றி அறிந்து தெளிகிறார். 
ஆனால் கதையின் போக்கு மற்றொரு கோனத்திலும் பிஷமனை குற்றவாளி என்று சொல்லி பெரும்வெளியின் ஆடல் முன் புடவியில் அறங்கள் நுட்பமானவை, அறிதற்கரியவை என்கிறது

நீ என்னை அறியமாட்டாய். நானோ ஒவ்வொரு பிறவியிலும் உன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித்தெறிக்கும் கூழாங்கற்கள்கூட பிறவிகள் தோறும் உன்னை பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது. நான் இந்த முதுமைவரை வேட்டையாடி வேட்டையாடி கண்டறிந்தது ஒன்றே. காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்’ என்று சித்ரகர்ணி சொல்லிக்கொண்டது.

அப்போது வெளியே சித்ரகர்ணி கால்களைப்பரப்பி அடிவயிற்றைத் தாழ்த்தி நாசியை நீட்டி மிக மெதுவாக தவழ்வதுபோல நகர்ந்து வாசலில் நின்ற வெண்பசுவை அணுகியது. கருவுற்றிருந்த கந்தினி என்ற வெண்பசு ‘இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை’ என்று சொல்லிக்கொண்டது.
இப்போது நமக்கு தெரியாமலேயே நாம் பிழைக்கும் அறம் நம்மை சேர்ந்தது அல்ல என முடிக்கிறார் திரு. ஜெயமோகன்
- கிருபாநிதி அரிகிருஷ்ணன்

வெண்முரசு-முதற்கனல்-வேள்விமுகம்( புதுவை கூடுகை பதிவு)


திரு அரிகிருஷ்ணனது உரை   
அன்பு நண்பர்களுக்கு 


வணக்கம். நேற்றைய நகர்வு ஒரு நுண்மைக் குறியீடு என்பதையே அது நிகழ்கையில் முழுமையாக உணர முயல்கிறேன் . பெரும் தருணங்கள் நம்மிடையே வந்தமர்நது பின் அதன் சூடும்,சுவடும் தெரியாமல் எழுந்தும் சென்றுவிடுகிறது . அந்த தருணத்தை நம்மால் முழுமையாக  'ஒருநாள் அறிய இயலலாம்'. ஊழிப்பெருவளி அந்த கணத்தை நமக்கு அருள பிராத்திக்கின்றேன்.  

பிரதிநியாக, சாட்சியாக அமர்ந்திருந்த திருமதி.சுதா அவர்களுக்கு உளம்நிறைந்த நன்றி.  அது நிகழ உதவிய திரு.சிவாத்மாவை நினைத்துக்கொள்கிறேன். கூடுகை பற்றிய நம்பிக்கையை விதைத்து உந்தித்தள்ளிய திரு.கடலூர்சீனு, இலக்கிய கணத்தை அகக்கண்கொண்டு பார்க்க உதவினார். "புரிவது எளிதல்ல எனப் புரிந்தது" அவருக்கு நன்றி. திரு.மணிமாறன் சரியான தோழமை கொண்டு எல்லாவிதத்திலும் உதவியெனப்படுவது ஒன்றையே செய்தும், கம்ப ராமாயணத்தின்பால் ஈடுபாடு கொண்ட திரு.திருமாவளவனையும் அறிமுகப்படுத்தினார்.  

திரு.தண்டபானி துரைவேலு அவர்களும்திரு.நாகராஜ் அவர்களும் ஊழின் கணத்தின் இரு எல்லைகளைப் பற்றிஇருவரும் முன்பே பேசிவைத்துக்கொள்ளாதே பேசியது, உச்ச நிகழ்வுகள். திரு.நாகராஜ் அவர்கள் பேசிய சாங்கிய பெருவெடிப்புக் கொள்கைதற்செயல் வாதத்தையும் (பௌதிகவாதம்) அதை ஒட்டி அதன் மறு எல்லையான வேதக்கோட்பாடுகளை பிரபஞ்ச சிருஷ்டி ஸ்திதி சம்மாஹாரம் எனும் தன் வாலை தான் கவ்வி இருக்கும் பாப்பு பற்றிய குறியீட்டை பெருந்திட்டவாதத்தை முன்வைத்தார் திரு.தண்டபானி துரைவேலு அவர்கள் நல்ல  முரணியக்கம். எனக்கு அதன் தொடர்பின் இழை புரியத்தொடங்க நெடுநேரம் எடுத்துக்கொண்டது. 
ஸ்ரீமுகம்
வியாசர் மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்கிறார் எனவே அதன் மறு ஆக்கமான வெண்முரசு லௌகீகமும் ஆன்மீகமும் கலந்த தொன்மை இலக்கியம். அதனாலேயே அது எக்காலத்தும் விவாதப் பொருளாகிறது. பௌரானிகர் பாணி.............பிற்கால வேதாந்த கால்கட்ட பாணி வேளுக்குடிகிருஷ்ணப்பிரேமி பேச்சு .......நவீன காலகட்ட  ஜெயமோகன் பாணி...
இரண்டு தமிழ் மறுஆக்கம் ஏககாலத்தில்
உபநிஷத்து = அருகில் அமர்ந்து உரையாடல்
நீல லோகிதாஸ் ஜெயமோகன் உரையாடல்கள்
இது பின்நவீனத்துவம் காலத்தை சார்ந்ததாக வடிக்கப்படுவதால் கி.மு கி.பி என்பத போல் சுதந்திர இந்தியாவிற்கு முன பின் என சார்ந்து புரிந்து கொள்ளத்தக்கது......
இந்து ஞானமரபின் ஆறு தரிசனங்கள் என்பதை இதன் சாவியாக கொண்டால் இது பல அற்புதங்களை திறந்து காட்டக்கூடியது......
வெண்முரசு ஒரு நாவல் என்கிற அளவிலே நின்று விடக்கூடியதாஅப்படி எனில் இது விவாதப்பொருளாவதற்கு என்ன அடிப்படை...........
வெண்முரசின் புனைவில் உள்ள நிகழ்காலத்துக்கான குறியீடுகள் பற்றி அறிவது
இனி வருங்காலத்தில் வெண்முரசு தவிர்க்க இயலாதது ஏன்எப்படி...
விவாதம் நம் மொழி ,எழுத்து நடைபுரிதலின் வேகம் மற்றும் சாகச திறப்புகளின் உற்சாகம்
நாஞ்சில் நாடன் சொன்னது போல பல லட்சம் தமிழ் சொற்கள் மீட்டெடுத்தல் நிகழும்
கங்குலி மஹாபாரதம்
ஞானத்தின் ஊற்றுக்கண்ணான இந்த வரலாறு மூவுலகங்களிலும் அறியப்பட்டதாகும். இஃது உயர்பிறப்பாளர்களிடம் விபரமாகவும்சுருக்கமாகவும் என இரு வடிவங்களில் உள்ளது. இது பண்டிதர்களால் புலமைக்காகவும்உணர்வுகளுக்காகவும்மனித தெய்வ உரையாடல்களுக்காகவும் அலசி ஆராயப்பட்டதாகும். 
வியாச பாரதம் நிகழ்வே காலத்தின் வடிவிலே சொல்லப்படுகிறது ஒரு சபைக்குறிப்பு போல.
ஜெ கதை மாந்தரை கதை சொல்லியாக வருகிறார்.
பாரதம் வியாசர் - சூத பௌரானிகர் வைசம்பாயினர் - ஜனமேஜயன் . சூத பௌரானிகர் - ரிஷிகள் நைமிசாரண்யம் .
இரண்டு வம்சம் சூரிய ராமன்  சந்திர கிருஷ்ணன் வம்சம்.
 மூன்று அடுக்கு - வேதம்யோகம்விஞ்ஞானம் - தர்மம்அர்த்தம்காமம் (அறம்பொருள்இன்பம்).
சூத பௌரானிகர் மேடையில் இருக்க பிராமண ரிஷிகள் ஜாதி மறந்து கீழே அமர்ந்து கேட்டது .அவரிடம் பாரதம் இருந்ததே இது ஞானத்திற்கே முதலிடம் என்பது தெளிவு.
பாரதம் 60 லட்சம் ஸ்லோகமாக அதில் முப்பது லட்சம் {30,00,000} செய்யுளடிகள் தேவலோகத்தில் அறியப்பட்டுள்ளது. பதினைந்து லட்சம் {15,00,000} செய்யுளடிகளைப் பித்ருக்களின் உலகம் அறிந்திருக்கிறது. பதினான்கு லட்சம் {14,00,000} கந்தர்வலோகத்திலும்ஒரு லட்சம் {1,00,000} மானுட உலகத்திலும் அறியப்பட்டிருக்கிறது.
இன்றும் வஷபாம்புகளுக்கு  அரனாக ஆஸதீகர் வாக்குறுதி ஸ்லோகம் உள்ளது.
சரப்ப யாகத்தில் ,பெயர்களின் அட்டவனை ரிஷிகள் முதல் வந்து விழுந்த பாம்புகளின் குலம் மற்றும் பெயர்.
ஒவ்வொருவருக்கும் புராணத்தில் இடம் பினைவுகள் பிரம்மிக்கவைப்பவை.
வாழ்வில் நடந்தவை அவற்றினால் நான் அடைந்தவை இவற்றின் மூலம் நாம் கண்டடைதல் என்ன என தொடரும் பயணம். கண்டடைதல் ஒரு வதை என தொடங்குகிறது .
நடந்தவைகளைதத்துவமாக்குதல் ,தத்துவத்திலிருந்து ,புரிதலில் இருந்து பொருந்தும் இழைகளைக் காணுதல் பொருத்துதலுக்குப் பின்னறே கண்டடைதல் நிகழ்கிறது .
இது எந்த ஒரு விஷயம் எனத் தொடங்கி வாழ்வியல் என முடிவுறுகிறது . உபதாண,நிமித்த மற்றும்,சககாரி காரணம் என மூன்று வகைக்காரணங்கள் ,எனக்கு . உபாதணம் - ஆழ்படிமம்நிமித்தம்  - மனம்சககாரி - ஜெயமோகன்.
நான் இதை இப்படியே உணர்கிறேன் . எல்லாவித கேள்விகளுக்கும் ஆழ்மனபடிமத்திலே பதில் உண்டு என நம்புகிறேன் . அவை சில நிகழ்வுகளெனவும்காட்சிகளெனவும்மின்சொடுக்குகளான புரிதலெனவும்  சில அற்புத தருணங்களாக நமக்கு வாய்க்கின்றன. அவை அடிக்கடி நிகழ்வதில்லை .ஆனால் அவை அடிக்கடி நிகழ்கின்றன ஒரு ஆழ்ந்த இலக்கிய வாசிப்பில்.
ஆர்பரிக்கும் நீர்ப்பெருக்கென ஓயாது தாக்கும் எண்ணம் எப்பொழுதும் புரிதலையே கோருகின்றன . ஆழ்மன கங்கை உடைபெடுக்கும் தருணம்   நிலைகுலைகிறேன்.அவை சில ஏற்றசால் விள்ளளாக முகர்தெடுத்தாலோ அல்லது ஒரு கழிமுகம் கண்டு அவை ஏறி இறங்கினாலோ  நிம்மதி அடைகிறேன் .
எனக்கு ஜெயமோகன் அந்த சால் குவலைப்போல,கழிமுகம் போல .
எண்ணங்களை அவர் எழுத்துகளில் இருந்தோ கருத்துக்களில் இருந்தோ அடைகிறேன் ஆகவே இலக்கிய வாசிப்பு என்பது சுவாசம் போலாயிற்று.இதுவரை அவரை மட்டுமே வாசித்திருக்கிறேன். உலக இலக்கியங்களை தனித்தனியே வாசிக்க இயலாது . ஆனால் வாசித்தவரின் கண்களில் எனக்கான பார்வை இருப்பதால் அந்த ஜன்னல்களின் வழியே அவைகளைக் காண இயலும் .அவர் ஆக்கத்தில் வரும் "பசு வைத்திய நூல்" கொண்டு  அனைத்தையும் அறிந்தது போல அது ஒரு அங்கதமென்றாலும். ஏனெனில் வாழ்வின் தருணங்கள் பெறும்பாலும் அங்கதமாகவே முடிகின்றன.
நாகம் . ஒரு குறியீடு
நாகம் இது உலக ஆண்மீக விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது . குறிப்பாக தட்சகன் இவன் மகாபாரதக் காவியத்தில் குறுக்கு நெடுக்கிலும் ஊடுபாவக வரும் ஒரு பாத்திரம் . மிக முக்கியமாக வெளிப்படும் தருணங்கள் ஜனமேஜயன் யாகசாலை பரீட்சித்து  மகாராஜா மரணம் காண்டவனத் தகனம் எனப் பல இடம். உத்தாலகர் ஆச்சார்ய சம்பாவணை பிரித்தல் என.
நாகர் வாழ்ந்த பகுதி சீர்காழி மாயவரம் கும்பகோணம் பகுதி நாங்கூர்,நாகூர் நாகபட்டினம் தொடங்கி தமிழ்நாட்டின் இடைப்பட்ட இடங்கள் இது நாக ராஜ்யம் எனப் படுகிறது.ராஜா தட்சகன்
வேதம் விளைந்த மண் மகாபாரதத்தில் அஸ்தினாபுர புரோகிதராக வரும் தௌம்மியர் ஒரு தமிழர் இவர் வியாசரின் சீடர்.
உபநிஷத்துக்களில் பேசப்படும் உத்தாலகர் உதங்கர் இவர்கள் யாவரும் தௌம்மியரின் சீடர்களே.
சம்ஸ்கிரத வேற்ச்சொல் சில தமிழில் இருந்து சென்றவை என்கிறார் திரு.சோதிபிரகாசம் அவர்கள் .உதாரணம் லோகாயத மதம்  வேர்ச்சொற் உலகு-உலகாயதம்-லோகாயதம்.
சாங்கியம் தமிழில் தோன்றியதாக இருக்கலாம் என்கிறார் திரு.சோதிபிரகாசம் அவர்கள்.அவ்வாறு எனில் பிரபஞ்ச அடிபடைகளான ஐம்பெரும் பூத சித்தாந்தம் இங்கிருந்து சென்றிருக்க வேண்டும் என்கிறார் .
ஜனமேஜயன் -ஆஸ்தீகர் சுமூக உறவு வெண்முரசில் மாறுபடுகிறது ,மேலும் தான் நடத்த இருக்கும் அஸ்வமேத யாகத்தை நடத்தித்தர சொல்லுகிறார்
இவர் திரு.ஜெயமோகனின் இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் ஆக்கத்திற்கு அனிந்துரை அளித்தவர். இந்தியா என்கிற சிந்தனையை 1947 முன்,பின் என இரண்டாக வகுத்துக் கொள்கிறார்கள்.
இது உத்தங்கர் மற்றும் தட்சகனின் தனிப்பட்ட பழிவாங்கல் என நினைக்க தோன்றும் அளவில் தனி அலகுகள் கொண்டவை.
ஆழ்ந்த நட்புடன்
கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

வியாழன், 23 மார்ச், 2017

அடையாளமாதல் - 15 (அரசியல் களம் - 13 இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-3)

ஶ்ரீ:

அடையாளமாதல் - 15
அரசியல் களம் - 13
இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-3


புதுவையில் அன்றும் ஜனநாயக அமைப்பிற்காக தேர்தல்கள் நடந்த காலங்கள் உண்டு . என்ன, முடிவுகள் அறிவிக்கும் முன்பு பொட்டிகள் காணாமலாகி , சிலர் வென்றாதாக அறிவிப்பு வெளியாகும் . நாளடைவில் பங்குபெறுதல் இல்லாமலாகியது.

தமிழக மற்றும்  புதுவை மக்கள் மத்தியில் விடுதலையை பற்றிய உணர்வில் அடிப்படையான வித்தியாசம்  ஆட்சியாளரின் அனுகுமுறை . இங்கு ஆண்டுகொண்டிருந்த பிரெஞ்சு அரசாங்கம் இந்திய விடுதலைக்கு ஆதரவானதல்ல . தியாகிகள் இங்கு பதுங்கி இருக்க அனுமதித்தது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அதனுடனான முரண்பாட்டினால் விளைந்தவை .விடுதலை போரை ஆதரித்தால் அது ஒரு நாள் மக்களை தங்களுக்கு எதிராக கொண்டு வந்து நிறுத்தும் என அறியாதவர்கள் அல்ல .

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சர்தார் வல்லபாய் பட்டேல் பேச்சுவார்த்தைகள் மற்றும ராணுவப்பலபிரயோக முறையில் சிறு சமஸ்தானங்கள் இந்திய ஒன்றியத்தில் இனைந்து கொண்டிருந்தன. புதுவையில் பிரெஞ்சு ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் . ராணுவம் வழியான தீர்வு சாத்தியமற்றது . இந்திய ஒன்றியத்துடன் இனைய மக்கள் விழைவு ஒன்றே முக்கிய காரணியாக இருந்துவந்தது. புதுவையை இனைப்பது மெல்ல இரண்டு நாடு சம்மந்தமானதாக மாறியது . பலாத்காரமாக இனைப்பது சர்வதேச சிக்கலை


நேரு புதுவையை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பொறுப்பை காமராஜர் மற்றும் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார். புதுவை விடுதலை போராட்டம் இரண்டு இடங்களில் மையம் கொண்டிருந்தது  மடுகரை நெட்டப்பாக்கம் மற்றும் காரைக்கால் . காமராஜர் தன் களமாக காரைக்காலைத் தெரிவு செய்தார் . பிரெஞ்சு அரசாங்கம் நிர்வாகம் மிக சிறியது . மற்றும் புதுவையிலுள்ளது போல வலுவான எதிர்ப்பு அணி இங்கு இல்லை.

புதுவையின் விடுதலைக்கு போராடியவர்களை ஒருங்கினைக்க இயலாததால் , காமராஜர் மாற்று வழிக்கான திட்டம் பற்றிய அரசுசூதலில் இறங்கினார் , பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரளவாளர்களையே அவர்களுக்கு எதிராக திருப்புவது . அதில் காமராஜர் வெற்றி கண்டார் அதன் விலைவாக சுதந்திர போராட்டம் மாற்றி அமைக்கப்பட்டு வென்றது. அதன் பரிசாக பக்கிரிசாமி பிள்ளை முதல்வராக . அவர் காலமான காரணத்தால் எதுவார் குபேர் முதல்வரானார் .

புதன், 22 மார்ச், 2017

அடையாளமாதல் - 14 (அரசியல் களம் - 13 இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-2)

ஶ்ரீ:


அடையாளமாதல் - 14
அரசியல் களம் - 13
இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-2


அரசியல் இயங்குமுறையில் புதுவை தனித்தன்மை மிக்கது . அது பிரன்ச் ஆளுகையின் கீழ் இருந்தது ஒரு காரணியாக இருக்கலாம் . பிரிட்டீஷ் ஆளும் முறையிலிருந்து பிரன்ச் மாறுபட்டது . குறைந்த பட்சம் குடியுரிமை அளிப்பதில் . இந்திய சுதந்திரப் போராட்டத்திலிருந்து புதுவை சுதந்திரப் போராட்டம் பல அலகுகளில் வேறுபட்டது . இது பற்றி மறைந்த முன்னாள் முதல்வரும் நெடுங்காலம் காங்கிரஸ் கட்சி தலைவரான திரு.ப.சண்முகம் அவர்களின் பார்வை பற்றி பிரிதொரு பதிவில் பார்க்கலாம் .

தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்ததற்கு தாழ்த்தப்பட்டோர் ஆதரவு மிக முக்கியமான காரணி . இங்கு  புதுவையில் தாழ்த்ப்பட்டோரின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என காங்கிரஸின் ஆட்சி அரசியல் சூழ்நிலை சார்ந்து  முடிவாகிறது. இருப்பினும் புதுவை ஆட்சி கட்டிலில் அது மாறி மாறி நீண்ட காலம் அமர்வதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன .


தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை இழந்து அரை நூற்றாண்டுகாலம் ஆனநிலையிலும் , அது புதுவையில் பெருபாலான காலங்களில் அதிகாரத்தில் இருந்திருக்கிறது , இருந்து கொண்டிருக்கிறது. இங்கு திராவிட கட்சிகள் எப்பொழுதும் கூட்டணி  பலத்துடன் தான் அமர நேர்கிறது , காங்கிரஸும் இன்று அந்நிலைக்கு வந்துவிட்டது . தமிழ்நாட்டில் அதிமுக பெரும் அரசியல் சக்தியாக இருந்த காலத்திலும் கூட புதுவையில் பெரும் தோல்விகளைச் சந்தித்துள்ளது .

புதுவையில் அரசியல் இயங்கு முறை சிக்கலும் , நுடப்பமும் உள்ள வித்தியாசமான பல விசைகளைக்க கொண்டது . சிறிய மாநிலம் ஆகவே தொகுதிகளும் சிறியவை .அதிகபட்சமாக  ஒரு தொகுதிக்கு முப்பதாயிரம் குறைந்தபட்சம் பத்தொன்பதாயிரம் வாக்குகள் . பலமுறை ஒற்றைபடை வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்றம் பார்த்தவர்கள் ஏராளம். ஒரு பத்து குடும்பத்தினர் எதிர்பாக திரும்பினாலே வெற்றி எட்டாக் கனி . ஒரே ஒரு உறுப்பினரை அடைந்து சட்டமன்ற பெரும்பான்மை கொண்டு ஆட்சி ஆண்ட கதைகளும் உண்டு .

இங்கு ஆரம்ப அரசியலில் நுழைய விரும்புவோர் கட்சியில் சேர்வதில்லை. கட்சியில் சேர்ந்து அதன் அடிப்படையிலிருந்து மேலெழும்மி வரும் விழைவோ, அது வரை காத்திருக்கும் பொறுமையோ இவர்களுக்கு இருப்பதில்லை . மக்களிடம் நேரே "இலவச"பணிசெய்து நன்மதிப்புகள் வழியே , தங்களின் வெற்றியை உறுதி செய்யும் துடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் . தங்கள் பொருளியல் சக்தியினால் அதை சாதிக்க முடியும் என  நம்புகிறார்கள் .

குறைந்தது முப்பது சதவீத வாக்காளர்கள் மேல் வேட்பாளருக்கு நல்ல அறிமுகம் இருக்கும் . வெற்றியை உறுதிசெய்ய மிக அவசியமானது .

இவர்கள் சுயேட்சையாக நிற்க விரும்புவதில்லை . அது ஆகிறகாரியமில்லை என தெரிந்திருக்கிறது . கட்சிக்கென உள்ள ஆதரவு என்னும் ஆற்றில் தன்னாதரவு எனும் விசையின் உந்துதலால் வெற்றியின் அருகில் வந்து அமைகிறார்கள்.

கட்சிகளும் தேர்தல் காலங்களில் இவர்களை பயனபடுத்திக் கொள்ள தயங்கிவதில்லை . காலம் நேரம் , எதிர் நிற்கும் வேட்பாளர் என பல காரணிகள் துணைக்க வெற்றிகொள்கிறார்கள் , அல்லது தோற்று அனுதாபத்தை அடைகிறார்கள் . மக்களின் அனுதாபம், நல்லொதொரு வைப்புநிதி . அது அடுத்து வரும் தேர்தலுக்கானது , பெறும்பாலும் வெற்றியை கொடுப்பது . ஒரே சிக்கல் வழக்கமான "இலவச பணிகளூடே"காத்திருத்தல் .


சில சமயங்களில் சுயேட்சையாக களம் கண்டு வென்ற பின்னும் களம்பட்ட புராணம் ஆகப் பெரியது . சட்டமன்ற உறுப்பினர் பதவி ஒரு அலங்காரம் மட்டுமே . அதிகாரம் உள்ளதல்ல . அதை அதிகாரமுள்ளதாக மாற்ற அமைச்சர் பதவி நோக்கி பாய்வதில் பல எளிய சமரசங்களின் ஊடே அதை அடைபவர்கள் , அடைந்தபின் அடைவது ஏதுமில்லை என்கிற "தத்துவ தரிசணத்தை " அடைகிறார்கள் . தமிழகத்தில் மாவட்ட செயலாளருக்கு உள்ள செல்வாக்கு இவர்களுக்கு இருப்பதில்லை .சிலர் தன் தனித்தன்மையால் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள் .

முன்பே சொன்னபடி கட்சிசாரா தனியர்களின் அரசியல் விழைவு கட்சி அரசியலாக மடைமாற்படுகிறது . இது இங்கு அரசியல் முறைமையே . தர்மாதர்ம விவஸ்தைகள் மிக நுண்ணிவை , இடத்திற்கு பொருந்தப் பொருள் கொள்ளப்படுவது .

புதுவையின்  அரசியலை புரிந்து கொள்ள அதன் விடுதலைக்கு முன் பின் என இரண்டு காலங்களில் தோய்வது அதை மேலும்  புரிதலுக்கு எடுக்கும் . புதுவை விடுதலை கோரும் அமைப்புகள் , அதன் மையப்பகுதியில் செயல்படுவதை தவிர்த்து தமிழக எல்லை ஓரங்களில் தங்கள் முகாம்களை அமைத்திருந்தன . அதில் நடுநாயகமாக இருந்தது மடுகரை நெட்டப்பாக்கம் மற்றும் காரைக்கால் இரண்டுமே தமிழக பகுதிகளால் சூழப்பட்டவை.

அன்று பிரன்ச் அரசாங்கத்தை எதிர்த்தவர்களை அடக்க புதுவையை சேர்ந்தவர்களையே அது பயன் படுத்தியது . விடுதலைப் போராட்டத்தை பிரன்ச் ஆதரவு குழு அதை எதிர்கொள்ளும் .கலவரம் இந்த இரண்டு பிரிவுகளுக்குள்ளேயே வெடிக்கும் . பிரன்ச் அரசு வெறுமனே வேடிக்கை பார்க்கும் . அன்று பிரன்ச் ஆதரவு அமைப்புகளில் பெரும் செல்வந்தர்களால் நிறம்பியது . அவர்களுக்கு பிரன்ச் அரசு ஆதரவாக இருப்பதினால் சுதந்திரப் போராட்டமும் தொடர்ந்து நசுக்கப்பட்டு வந்தது.

புதுவை மையப்பகுதியில் அவை கடைசிவரையில் வீர்யமாக செயல்படவே இயலாது போனது . இந்திய விடுதலைக்கு பிறகும் புதுவையில் எந்த முன்னேற்றமும் இல்லை . புதுவை இந்திய ஒன்றியத்துடன் இனைய வேண்டும் என்கிற தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டு வெற்றியும் பெற்றது . அனால் அது புதுவையிலிருந்து சுமார் இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் தள்ளிய தமிழகம் சூழ்ந்த  கீழூர் என்கிற சிறு கிராமக் கூட்டத்தில் . எது அதை அங்கு கொண்டு சென்றது ?

இன்றும் கீழூரில் அதன் நினைவுச்சின்னம் ஸ்தூபியாக நின்று அன்றைய புதுவை விடுதலை போரின் முரண்களை மௌனமாக வெளியிட்டபடியே இருக்கிறது

செவ்வாய், 21 மார்ச், 2017

அடையாளமாதல் - 13 (அரசியல் களம் - 13 இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-1)

ஶ்ரீ:



அடையாளமாதல் - 13
அரசியல் களம் - 13
இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-1


எமர்ஜன்சிக்கு பிறகு இந்தரா காந்திக்கு  எதிராக அரசியல் எழுச்சி பெரும் பாய்ச்சலை கண்டது . அதன் நீட்சியாக இந்திரா காந்தி மத்தியில் ஜனதாவிடம் ஆட்சி இழந்ததுடன் சிறைசெல்லவும் நேர்ந்தது . ஜனதா அரசின் மடமைகளில் ஒன்று அவர்கள் கைது நடவடிக்கை மூலம் மக்களிடம் இந்திராகாந்திக்கு இருந்த கோபத்தை அனுதாபமாக ஆக்கியது .

காங்கிரஸுக்கு எதிரான எழுச்சியை கண்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சியை விட்டு ஓடிப்போனார்கள் , இனி இந்திராகாந்திக்கு  எதிரகாலமில்லை என்றானபோது , சன்ஜய்காந்தி தலைமையில் இருந்த இளைஞர் காங்கிரஸ் , காங்கிரஸ் கட்சிக்கும் இந்திராகாந்திக்கும் உறுதுனையாக இருந்தது . சன்ஜய்காந்தி இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்ததால் . சில முக்கியமான தன்னிலைசார் அதிகாரங்களுடன் இயக்கவிதிகள் மாற்றி அமைக்கப்பட்டன . அது நாடு முழுவதும் இளம் தலைவர்களை உருவாக்கி எடுத்தது . இன்று அகில இந்திய அளவிலும் மாநில அரசியலிலும் உள்ள தலைவர்கள் இளைஞர் காங்கிரஸின் வழியாகவே உருவாகி வந்தவர்கள் . அவர்களில் பெரும்பாலானவர்கள் வாரிசுகளாக இல்லாமல்  சமூகத்தில் இருந்து வந்தவர்கள் . எந்த அரசியல் பின்புலமும் பொருளாதார பலமும் இல்லாதவர்கள் .

ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் தனக்கான இடத்திற்கு போராடும் இயக்கமாக இளைஞர் காங்கிரஸ் இருந்து வந்ததிருக்கிறது . அதனுடைய அமைப்பு எந்த விதத்திலும் மாநில காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப்பட்டதல்ல . அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அதை இயக்கி வந்தது . நியமனமும் , நீக்கமும் அவர்கள் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருந்தது . எல்லா நேரங்களில் இது மாநில காங்கிரஸுடன் மோதல் போக்கையே கொண்டிருந்தது .

என்னைப் பொருத்தவரை இது மிக அற்புதமான வழிமுறையாக இருந்தது . பல தலைவர்கள் உருவாக இது முக்கிய காரணியாக இருந்தது . ஆனால் ராஜீவ்காந்தி மறைவிற்கு பின் அதன் முக்கியத்துவம் குறைக்கபட்டு காங்கிரஸின் ஒரு உட்பிரிவாக மாற்றப்பட்டு அதன் வீரியம் குறைக்கப்பட்டது . புதிய இளைஞர்களை நோக்கிய அதன் செயல்பாடுகள் முடக்கியது . காங்கிரஸின் சரிவிற்கு இதுவும் ஒரு காரணம் . வயது மூத்த தலைவர்களின் தலையீட்டால் இளைஞர்கள் ஒதுக்கப்பட்டு இன்று தள்ளாடும் நிலைக்கு வந்துள்ளது . அகில இந்திய மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் இன்று உள்ளவர்கள் ஒன்று தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது சார்ந்து பிழைக்கும் ஒட்டுன்னிகள்.

இன்றும் இந்திய அனைத்து பகுதிகளையும் இணைக்கும் ஒரே சக்தி காங்கிரஸ் மட்டுமே . அதன் வீழ்ச்சி நாட்டிற்கு நல்லதல்ல .
இன்று காணப்படும் முற்போக்கின் வீழ்ச்சி இந்த சூழலில் இருந்து உருவாகி வந்ததே .

முரண்பட்ட கருத்துகளின் ஊடாக சித்தாந்தங்களை நிருவும் சாமர்த்தியம் இல்லாது ஆளுமைகளின் போக்கால் அமைப்பு சிதைந்து நோக்கங்கள் காணாமல் ஆயின . அன்டிப்பிழைப்பதும் , ஏவல் செய்வதால் பெரும் பதவிகளில் உட்காருபவர்கள் , தங்கள் நகல்களை பண்மடங்கு உருவாக்கி கட்சிக்குள் அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள் . இவர்களை கட்சியும் தலைவர்களாக வெளியிட்டபடி இருக்கிறது.

இயக்கம் தலவர்களை உருவாக்குவதில்லை , போராட்ட குணத்தின் வெளிப்படு பகுதியாக ஒவ்வொரு புது தலைவர்களும் நிகழ்காலத்துக்குறிய அரசியல் பிரக்ஞை மற்றும் பிரச்சனைகளுக்கு உரிய சமன்பாடு திட்டத்துடன் அவர்கள் எழுந்து வருகிறார்கள் . அதுவே ஒரு இயக்கத்தை உயிர்ப்பாக வைத்திருப்பது .

இன்று ஒரு நீண்ட காலம் என்பது மூன்று வருடங்களே என்பது மிகையல்ல . அதற்கான அரசியல் நிலைபாடுகள் கூர்மை படுத்தப்பட வேண்டும் . இந்தியா பல்லின நாட்டில் கட்சியின் மேல் கீழ் அடுக்குமுறை செயல்பாடுகள் விசையால் நகர்வதில்லை , அதிகாரத்தால் நடத்தப்படுவது . கீழ்நிலை யதார்தங்களின் பிரதிபலிக்கும் பிம்பமாக முடிவுகள் ஏற்படாது , அமர்வுகளில் எடுக்கும் உப்புசப்பில்லாத ஒருமித்த கருத்தென்னும் முடிவுகளால் தீர்மானிக்கப் படுகின்றன .

பிரதிநிதித்துவம் நியமிக்கப்படுபவர்களால் ஏற்கப்படுவதில்லை , சமூகத்தில் முட்டி முயங்கி எழுந்து வருபவருக்கு கிடைக்கும் அங்கீகாரத்தினால் ஆனது.

குரு சிஷ்யப்பரம்பரை அரசியலில் காணமல்போய்விட்டது . அரசியல் குரு தன் மனோ வாக் காயத் திரிகரணங்களாலும் சமூக அங்கீகாரத்தை பெருபவர்கள் ஒருகாலமும் தப்பானவர்களை அடையாளம் காட்டமாட்டார்கள் . என்ரொரு காலம் இருந்தது . சமூக சரி தப்புகளிலிருந்து மாறுபட்டதி அரசியலில் உள்ள சரி தப்புகள் இங்கே அதன் அடர்த்தி மிக குறைவானது . சில சமயம் அது கூடியும் இருக்கும்

ஒரு தலைவரை சுற்றி பல அடுக்குத் தலைவர்கள் இருப்பார்கள் , அது இரு பிரிவுகளாலானது ஒன்று கட்சி அதிகாரம் , மற்றது ஆட்சி அதிகாரம் . சட்டமன்றத்திற்கு குறிவைத்து அரசியல் செய்யும் எவருக்கும் மந்திரி என்பது லட்சியமாக இருக்கும் அது முழுக்க ஓட்டரசியலை கொண்டிருக்கும் அதற்கும் கட்சி அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை .

இது ஒன்றுதான் பெரிய முரண் புதுவை மற்றும் தமிழ்நாடு கட்சி அரசியலில் . தமிழ்நாட்டில் இயற்கையாகவே கட்சிசார்ந்த அரசியல் ஆனால் புதுவையில் அப்படி அல்ல

திங்கள், 20 மார்ச், 2017

அடையாளமாதல் - 12 (அரசியல் களம் - 12 காங்கிரஸ் கட்சி உள்ளிருந்து ஒரு பார்வை)

அடையாளமாதல் - 12
அரசியல் களம் - 12
 காங்கிரஸ் கட்சி உள்ளிருந்து ஒரு பார்வை


காங்கிரஸ் பேரியக்கம் இந்திய நிலப்பகுதிகளின் பிரதியை  ஒத்திருக்கும் ஒரு முரண்களின் தொகுப்பு .பலவித மொழி மத கலாச்சார பண்பாடுகளின் தனித்தன்மை என பிரிந்து கிடப்பதாலேயே உயிரோட்டமுள்ளதாக ஆக்கும் மற்றும் ஒருங்கினக்கும் சக்தியாக  காங்கிரஸ் இருந்திருக்கிறது.

காந்தி மெல்ல மெல்ல உருவக்கி எடுத்தது. காங்கிரஸுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஒரு சரிந்ததிரம் இருக்கிறது . இன்றைய சமுதாயம் அதை பார்கிற மற்றும் புரிந்து கொள்கிற முறை ஊடக பிரச்சாரத்தில் மத்தயில் பெரும் முரணிலைகளின் மத்தியில் உள்ளது . யதார்த்தம் நோக்கி யாரையும் எதையும் புறவயமான முறையிலே பார்க்க வைப்பது மனித சாத்தியமில்லை. இக்காலத்தில் மட்டுமல்ல , எக்காலத்திற்கும் இதுவே பொருந்தும்.

அரசியலில் , எனக்கு தெரிந்த உண்மையை மக்களுக்கு புரியவைக்கிறேன் , ஆனால் அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் , என காழ்ப்பை கக்குபவரகளால் பிரயோஜனமில்லை அவரகளுக்கு பொதுவாழ்கையில் விருப்முள்ளவரெனில அதற்கு அவர்கள் லாயக்கில்லை.

ஒரு கருத்து அல்லது நிகழ்வு நடந்து முடிந்தவுடன் மக்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது , யாருக்கு யாரைப் பொருத்தவரை , அது சிரி,தவறு? . எவர் விளக்கிவிட இயலும் இதை .

எக்காலத்திற்கும் சரி என்கிற ஒன்று இவ்வுலகில் இல்லை , ஒரு காலத்தில் அல்லது ஒருவருக்கு அல்லது ஒரு சமுகத்திற்கு சரியாக இருப்பது மற்றரொரு காலத்தில் தவறென ஆகிறது . நவீனத்துவமும் , பின் நவீனத்துவமும் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

காங்கிரஸின் உட்கட்சி அரசியல் என்பது காந்திக்கு முன் பின் என பிரியக்கூடியது . காந்தி அதன் தலைமைக்கு வரும் வரை அது மக்களின் இயக்கமாக இருந்திருக்கவில்லை . இருந்தும், அன்று அது ஒன்றே மக்களுக்காக என தன்னை பிரதிநிதிப்படுத்தி இருந்தது . காரணம் மக்கள் முற்றிலும் அன்றாட வாழ்வியல் சிக்கலில் இருந்தனர். காந்தி தன் குறியீட்டு ரீதியான அரசியல் நகரவுகளால் தான் அது மக்களியிக்கமானது . துரதிஷ்டவசமாக அதன் விழுமியங்கள் காந்தியின் கண்முன்னேயே அவை கைவிடப்பட்டது . காரணம் இந்திய விடுதலைக்கு காந்தியின் பார்வை முரணியியல் வழியாக கட்சியில் ஏற்கப்பட்டதற்கு மக்களிடம் அதைப்பற்றிய கருத்தியலை வெற்றிகரமாக காந்தியால் எடுச்செல்ல முடிந்தது . கருத்தியலின் புரிதல் இல்லாதவரகள்கூட ,சொன்னது காந்தி என்கிற ஒற்றை நம்பிக்கையால் அது ஏற்கப்பட்டு முன்னகர்ந்தது . அது ஆட்சியை நோக்கி செலுத்துவது ,என்பதால் கட்சில் உள்ளவர்களும் அதை ஏற்ப்பதை தவிர அவரகளிக்கும் அன்று வேறு வழியில்லை.

காந்தியைப் பொருத்தவரை சுதந்திரமென்பது அவரது முற்றான திட்டமன்று அது ஒரு தொடக்கம் மட்டுமே . சுதந்திர போராட்மே கூட பல அடுக்குகளையும் உள் அலகுகளைக் கொண்டதாகவே காந்தியால் முன்னெடுக்கப்பட்டது. தன் போராட்ட முறைகளில் மக்கள் குவியாத போது , அவர் தன் போராட்டங்களை கைவிட்டு மக்களிடையே தன் பலவித சீர்திருத்தங்கள் மூலமாக உரையாடத் தொடங்குவார் . அவை பலன் அளிக்கும் என்ற புரிதல் ஏற்பட்டவுடன்.போராட்டம் சிறிய அளவில் முன்னெடுக்கப்படும் . தவறுகள் களையப்பட்டு பின் பெரிய அளவில் அது தொடங்கப்படும்.வைக்கம் போராட்டம் ஒரு சிறந்த உதாரணம்.

காந்தியின் இந்த வகை போராட்ட முறை தலைவர்களை சோர்வடையச் செய்வது , அவர்களின் எதிர்பார்ப்பான "ஒரே வித உணர்வில் "எப்போதும் வைத்துக்கொண்டிருப்பது என்கிற கோட்பாட்டிற்கு எதிரானது . ஆகவே உட்கட்சியில் தலைவர்கள் அவருக்கு எதிராக திரும்பியது ஒன்றும் வியப்பானதன்று.

இந்திய மக்களின் ஆதரவைப் பெற்றே பிரிட்டிஷாரின் ஆட்சி இங்கு நடந்து கொண்டிருந்தது . அவர்களுக்கு அதில் உள்ள நுட்பமானது ஊழலை மக்கள் மத்தியில் வெளிக்கொணரவது என்பது நிகழாமல் விடுதலைப்போர் சாத்தியமாகாது என்கிற நிலை அன்று காந்தியைத் அளவிற்கு இது பற்றிய புரிதல் உள்ளவர்கள்  அனேகமாக இல்லை.

ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியாவின் குறுக்குவெட்டு தோற்றம் , நம்மைவிட அவரகளுக்கு தெளிவாக பிரிந்திருந்தது . அதற்கு சீக்கியர்கள்,முஸ்லிம் மக்களை அவர்களின் அரசியல் சதுரங்கத்தில் ஏற்கனவே கொண்டுவந்து விட்டார்கள் . தாழ்த்தப்பட்டோரையும் அதில் சேர்க்கும் முயற்சியில் , காந்தியின் செயல்பாடுகள் , அம்பேத்கருடன் அவர் செய்து கொண்ட சமரசம் போன்றவை பிரிட்டீஷின் நரித்தன அரசியல் எடுபடவில்லை. இந்திய விடுதலைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.காந்தி அதற்கு இன்றுவரையில் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்மீது நிருவனங்களின் திட்டமிட்ட காழ்பு இன்றுவரை வழிந்த படியே இருக்கிறது.


இந்தியாவில்  கொண்டுவரவேண்டிய மாற்றங்களுக்கு மற்றும் தனித்தன்மை பாதுகாப்பிற்காக தன் கருத்தியலை பொது ஜனத்திற்கு கடத்த காந்திக்கு சமயம் வாங்கவில்லை . அதற்கு காங்கிரஸ் அரசு அமைந்ததே கூட ஒரு காரணியாகிப்போனது . வயோதிகம் , பிரிவினையில் ஏற்பபட்ட உளச்சோர்வு போன்ற காரணங்களால்  காந்தியால் அவைகள் மேல் அழுத்தும் கொடுக்கவியாது போனது. நேருவிற்கு அவர் எழுதிய கடிதங்கள் வாசிக்கப்படாமலேயே நின்றன. உலக அரசியல் குறித்த காந்தியின் பார்வை குறைவுபட்டதாக நேருவிற்கு தோன்றி இருக்கலாம். சோவியத்தின் தாக்கம் உலகளவில் இந்தியாவின் நடுநிலைப்பாடு , அணிசேரா நாடுகளுடன் இந்தியாவின் தோழமை , போன்றவை பிற்காலத்தில் வெளிப்பட்டு நேரு உலகதலவர்கள் வரிசையில் பேசப்பட்டது. சீனாவுடனான போரில் அவர் கனவுகள் கலைந்தன. இருந்தும் காங்கிரஸின் அரசியல் கொள்கை நீர்மை அடைந்திருந்தாலும் இந்திரா காலம் வரை பேனப்பட்டது.

நவீனத்துவம் பேயாய் பிடித்தாட்டியகாலம் , அது ஒரு பொது போக்கு. சோவியத்தின் வெற்றியும் கோட்பாடுகள் வெளியுலகுக்கு பெரும் போதையை தரவல்லதுமான சித்தாந்தமாக உருபெற்றது.

இவை அனைத்தும் அகவயமான புரிதலுக்கு உட்படுவது , பொது மக்களுக்கு எளிதில் புரியக்கூடியதன்று . சித்தாந்தம் மக்கள் பொது புத்திக்கு கடத்த காந்தியை போன்ற நம்பத்தகுந்த ஆளுமை இல்லாததால் அது எவறாலும் இனி செய்யக்கூடுவது ஒன்றில்லை.

பின்நவீனத்துவம் எழுந்த பிறகும் கூட தர்க்கரீதியாக இன்றும் அது தன் உரையாடலை நிறுத்தவில்லை .உலகமயமாக்கலுக்கு பிறகு பின்நவீனத்துவம் இருப்பிடம் கேள்விக்குறியாக மாறி அதை பிற சிக்கல்கள் ஆகரமித்து விட்டன.உலகமயமாதல் அனைத்து துறைகளிலும் தன் வலுவான ஆதிக்கத்தை செலுத்த துவங்கியது

இந்த யுகத்திற்கான மாநுட அறம் சார்ந்த போராட்ட வழிமுறை. அது காங்கிரஸின் வாயிலாக உலகுக்கு காந்தி வழங்கிய ஒரு  மாபெரும் கொடை . அவர் இந்த ஒன்றுக்காக மட்டுமே மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவரகள் நன்றியுடன் நினைவுகூர்தலுக்கு உரியவர். அனால் நடைமுறை யதார்த்தம்  காந்தி கசப்பை கக்கும் ஒரு பெருந்திரளின் விவாதப் பொருளாக இருப்பது விசித்திரமான முரண்நகை

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்