https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 31 மார்ச், 2017

புரிதலின் நஷ்டம்



தனக்கெனத் தெரிந்திருக்கவேண்டிய ஒன்றை மற்றவர் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமென முயற்சிப்பதைப் போல ஒரு மடமை பிறிதொன்று இல்லை என்றே நினைக்கிறேன் . இது "ஞானத்திற்கான" காலம் அனைவருக்கும் "அனைத்தும் தெரிந்தே இருக்கிறது "
அதற்காகவெல்லாம் பிறிதொருவர் சிரமப்பட வேண்டியதில்லை.

அவர்களுக்கும் , தங்கள் மேதாவித்தனத்தை மேற்கோளுடன் விளக்க "கூகுளாண்டவரின்" கருணைகூர்ந்துள்ளார் , ஆனால் அது நம்மை திகிலடைய வைப்பது . இப்போது அவருக்கு நாம் எதை புரியவைப்பது . அவருக்கு விளக்க வந்ததையா?அல்லது அவரது மேற்கோளையா?. இது தொடர்ந்து வளரப்போவது நாம் நம் திருவாயை மூடுவது நமக்கு நன்மை பயக்குமொரு வழி.

புதுவை முதல்வராக இருந்த திரு.சண்முகத்திடம் என் அரசியல் நண்பனொருவன் (சிறிது கேனத்தனமானவன்) .புதுவையின் மிக பிரபலமான ஒரு பள்ளியில் ஆரம்ப வகுப்புக்கு ஒரு சீட் சிபார்சு கடிதம் வாங்கித்தரச் சொன்னான் . நான் திகைத்து ,இதற்காக ஒரு மாநில முதல்வரின் சிபார்சு கடிதம் கேட்பதுபோல ஒரு மடமையில்லை ,மாற்று வழி யோசி என்று சொல்லிவிட்டேன் .

இது மாதிரியான ஒரு அனுகுமுறையை அவர் எப்படிக்கையாளவார் என்று எனக்குத்தெரியும் . அவரிடம் இதைப்போன்ற சில்லரை விஷங்களை கொண்டு செல்லாதிருப்பதே அவனுக்கும் நல்லது ,என்பது என்அவா

ஆனால் அன்று மாலை முதல்வர் வீட்டிற்கு நான் சென்றபோது அந்த அரசியல் நண்பன் அவர்வீட்டிலருந்து வெளியே வந்தான். வந்தவன் பேசாமல் சென்றிருக்கலாம் , என் ஜாதகம் அப்படி . அவன் காலையில் என்னிடம் சொன்ன அந்த சிபார்சு கடித்தில் முதல்வர் கையெழுத்திட்டது பற்றி சொல்லி என்னை ஒரேமாதிரி பார்த்து சிரித்து கொண்டே சென்றான் .

எனக்கு அடிபட்ட வலி . நேரே முதல்வரிடம் அவர் இதை எப்படி செய்யலாம் என்று சண்டைக்கு போனபோது . அவர் சொன்னது . " நீ சொன்னா கேட்டுக்குவே உனக்கு புரியும் அந்த பைத்தியகாரனுக்கு புரியாது அதா தொலையுதுன்னு போட்டு குடுத்தேன் " என்றார் .

எனக்கு இப்போதுதான் ஒன்று புரிந்தது "புரிதலால் அடைவது நஷ்டமன்றி பிறிதில்லையென.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக