https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 30 மார்ச், 2017

ரிபுவின் தருணங்கள்






எனக்கு அம்மாவை பார்க்க சிரமமாக இருந்தது . நாளைய வாழ்கைப் பற்றிய எதிர்பார்ப்பு இருப்பதாலேயே , காலை விழித்தவுடன் வேளையை நோக்கி பறக்கத்தொடங்கிவிடுகிறோம் . நான் அதிலிருந்து முற்றாக விலகி சில வருடங்களாகவே தனிமையை பேணியபடி வந்துள்ளேன் .

வாழ்கையின் சிறு தருணங்கள் வழியாக வாழ்வதென்பது, தன்னளவில் நிறைவானதாக உணர்கிறேன் ,அதை ஒட்டிய முயற்சியில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறேன்.

அம்மா மஹாவார்த்தக்கியத்தை அடைந்திருந்தார் . காலைமுதலே என்னை அழைத்தபடி இருந்தது ஏன் என்று விளங்கவில்லை . தன்னை அனைத்திலும் இருந்து விலக்கிக் கொண்டுவிட்டார் . அறையில் சென்றுபோது சிறு தூக்கத்தில் இருந்தார். கையைதொட்டு எழுப்பி  என்ன என்று கேட்டபோது கக்கதம் கொண்டு சிறிது நேர விசுப்புதல் வழியாக கண்ணீர் சிந்திக்கொண்டே இருந்தார்.

என்ன பண்ணுகிறது என கேட்டதற்கு எல்லோருக்கும் சொல்லிவிடு , அம்மாவால் ஏதும் முடியவில்லை என்று , கூறும்போதே அவருடைய இயற்கை சுபாவம் தலைநீட்டுகிறது . அந்த நிலைமை க்ஷனநேரம் கூட  நீடிக்கவில்லை , வேலைக்காரியை குறைகூறத் தொடங்கிவிட்டார். தன்னால் முன்போல ஏன் இருக்கமுடியவில்லை மருத்துவரை உடனே பார்க்க வேண்டுமென்றார் . பல்வேறு உடல் உபாதைகளின் பட்டியல் நீண்டு கொண்டேயிருந்தது .

நவீன மருத்துவம் அயுள் நீட்டிப்பு தருபவையாக உள்ளன, ஆனால் அவற்றின் சிகிழச்சை முறை உடல்பிறழ்வுகளை அப்படியே வைத்தே அதன் வாழ்கையை நீட்டிக்க வைப்பது . பாம்பினால் கடிபட்டவனுக்கு சிகிழ்சை அந்த பாம்பையும் உடலோடு இனைத்து கட்டுவது போன்றது , கொடுமையானது. எல்லாம் சரியாகிவிட்டது என நம்ப முனைவது . ஆனால் அது உண்மையில்லை என்பது சில நாட்களிலேயே புரிந்து விடுகிறது.

வாழ்க்கைபோலவே மரணமும் இயல்பானதுதான் .சிகிழ்ச்சை என்பது மரணத்துக்கு எதிரான போராட்டமல்ல. சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் முயற்சியே என்கிறது அரோக்கியநிகேதனம் என்கிற வங்க நாவல் .

அதில் "உன் மரணத்தை இந்த நோயில் காண்கிறேன். நீ அதை ஏற்பதே உனக்கு நல்லது என்கிறார். ”இது உன் ரிபு தாது கோஷால் ” என்கிறார் மருத்துவர் மஷாய்.

ரிபு என்கிற சொல் ஆயுர்வேத சாஸ்திரத்தின் ஒரு விளக்க முடியாத பதம். அதன் உட்பொதிவை அடைந்த போது திரு.ஜெயமோகனுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினேன்

" வாழ்க்கைபோலவே மரணமும் இயல்பானதுதான் என்று சொல்லும் மஷாய் ,சிகிழ்ச்சை என்பது மரணத்துக்கு எதிரான போராட்டமல்ல. சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் முயற்சியே என்கிறார். உன் மரணத்தை இந்த நோயில் காண்கிறேன். நீ அதை ஏற்பதே உனக்கு நல்லது என்கிறார். ”இது உன் ரிபு தாது கோஷால் ” என்கிறார் மஷாய்". என்றும் ஆயுர்வேத மருத்துவம் "ரிபு"என்ற ஒன்றைப் பற்றி வலியுறுத்திக் கூறுகிறது என்றும் வருகிறது .இதே போல வெண்முரசு கிராதம் பகுதியில்

மாம்டியின் கதைப் பகுதியில் "பலவாறாகக் கேட்டும் யமன் இரங்காததனால் இந்திரன் யமன் அறியாமல் சித்திரபுத்திரனிடம் சென்று “அந்தணரே, நான் வேள்விகாக்கும் தேவர்தலைவன். ஒன்றை மட்டும் சொல்லுங்கள், ஊழ்முதிர்கையில் அவனை அழைத்துவரும் யமபுரியின் காவலன் யார்?” என்றான். “அதைச் சொல்ல எனக்கு ஆணையில்லை, அரசே” என்றார் சித்திரபுத்திரன். “உம்மால் பிறிதொருவரை அனுப்ப முடியுமா?” என்றான் இந்திரன். “இல்லை, அம்மைந்தன் கருக்கொள்கையிலேயே இங்கே இவனும் இருட்துளியாக ஊறிவிட்டிருப்பான். இருவரும் சேர்ந்தே பிறக்கிறார்கள். இங்குள்ள பெருங்கோட்டைவாயிலில் அவன் ஒரு சிறுபுள்ளியென தோன்றிவிட்டிருப்பான்” என்றார்".

இந்த இரண்டும் ஒன்றையே குறிப்பதாக உணர்கிறேன் . கிராதத்தில் வரும் இந்த விஷயத்தை படித்த போதே பரம்மிப்பாக இருந்தது வியாச பாரததில் இது உள்ளதா அல்லது இந்த "ரிபு" பற்றிய வேறொரு  பரிமாணமாக அதை முன்வைத்தீர்களா அல்லது இந்த இரண்டும் ஒன்றுதானா ,என அறிய ஆவலாக உள்ளேன் .

எதற்கு எனில் உலக முக்கிய சாஸ்திரங்களை எதிர்காலத்தில் நிலைபெறச்செய்யும் வகையில் அனைத்தையும் மகாபாரதத்தில் இடையே செறுகுவது வழக்கம் என்று கீதை உரையின் போது கூறியிருந்தீர்கள்.இது அது போன்றதா?.

எப்படியிருந்தாலும் இந்த வரிகள் மகத்தானதாக இருக்கிறது."வாழ்க்கை முறைக்குக் காரணமாக அமையும் மனோபாவமே ரிபு எனப்படுகிறது. ஒவ்வொருவருக்குமே ஒவ்வொன்று ரிபுவாகிறது. பண ஆசை, புகழ்மோகம், வேலைப் போதை, ருசிகள், சபலங்கள்… ரிபு உண்மையில் மரணத்தின் தூதன். நம்மில் உறைந்து நம் வாழ்க்கையை வடிவமைத்து, நம்மை பலவீனப்படுத்தி, உடன் அழைத்துச் சென்று மரணத்திடம் ஒப்படைப்பவன். ரிபு ஒருவன் பிறக்கும்போதே கூடவே பிறந்துவருகிறது. ‘ உடன்பிறந்தே கொல்லும் நோய்’ என நம் நூல்களும் இதைச் சொல்கின்றன. ஆனால் நடு வயது ஆனபிறகே அது என்ன என்று தெளிவாகத் தெரிகிறது. தாந்துகோஷாவின் ரிபு என்பது உணவில், குறிப்பாக மசாலா ருசியிலும் காரத்திலும் உள்ளது; அதிலிருந்து அவன் தப்பமுடியாது என்கிறார் மஷாய்.

மரணம் என்று தன் முன் வருவது பிரபஞ்ச இயக்கத்தின் மகத்தான விதிமுறைகளில் ஒன்று என்று பிரத்யோத் டாக்டர் கண்டடைகிறார்.

எனக்கு சிரிப்புதான் வந்தது , எல்லோருக்குமான மனோபாவமிது க்ஷனத்திற்கு க்ஷனம் புரட்டி அடிக்கக்கூடியது . பெரும்விசும்பின் கருணை இது . மரணிப்பதற்கான மனநிலையில் இருப்பது எனக்கு தெளிவான சிந்தனையை அளிப்பவை அவை மேலும் கூர்கொள்ள, கடந்த காலத்தை திரும்பி பார்பது . நிறைவாக வாழ்வது அல்லது அதற்கான முயற்சியில் இருப்பது இரண்டுமே தன்னிறைவை அளிக்கவல்லது .

சிந்தனையை ஒவ்வொரு முறையும் தொகுத்துக் கொள்வதின் வழியாகவே அவற்றை கடந்து கொண்டிருக்கிறேன் . எனக்கு இது எப்பவும் இப்படியே இருக்குமா ? தெரியவில்லை . அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவர் அறையை விட்டு வெளியில் வந்தேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக