https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 17 மார்ச், 2017

அடையாளமாதல் - 9 (அரசியல் களம் - 9 இரண்டாம் நிலைபெறுதல் )

ஶ்ரீ:
அடையாளமாதல் - 9
அரசியல் களம் - 9

இரண்டாம் நிலைபெறுதல் .



நாங்கள் அங்கு சென்ற போது அவர்களுடன் தாமோதரன் இருந்தார். அவர் முன்பே சென்று அவர்களை கூட்டியிருக்கிறார். அந்த கூட்டம் தாமோதரனை அஞ்சும் , ஆக கட்டுண்டு நிற்கிறது . ஆனால் இது அதுமட்டுமேவா ? இல்லை , அவர்களின் எண்ணத்தில் ஒரு சிறு பகுதியாகிலும் தாமோதரனுக்கு உண்பாடு என்பதாலேயே , அதுவே இப்பேச்சுவார்த்தைக்கு இடமுள்ளதாக ஆகியிருக்கலாம் . தெளிவு, அதிருப்தியாளர்களுக்கு மட்டுமல்லாது ,தாமோதரனுக்கே அதற்கான தேவை எழுந்திருக்கலாம் .

அந்த எண்ணம் முள் தீண்டலென கடந்து சென்றது . எங்கள் குழு இந்த சூழலிலை கையாளும் தகுதியற்றது மட்டுமல்லாது அது மேலும் சொதப்பக்கூடியது . அப்படி நேரும் என்றால் தாமோதரன் அவர்கள் பக்கலில் சாய சேரலாம் , அது கொதி எண்ணைச் சட்டிக்கு தப்பி நேரே அடுப்பில் குதித்த கதையாகிப் போகும்.

குழு , சூழல் உணராது முன்னகர்ந்தது . தான் சற்று பின்னடைந்து சுப்பராயனுடம் சேர்ந்து கொண்டேன். அவரை திரும்ம காருக்கு அழைத்து என் கணக்கை சொன்னேன் , அவர் திகைப்பது தெரிந்தது . ஆனால் அவர் சொன்னது ஆட்டத்தின் போக்கை மாற்றியது .

சுப்பராயன் நேரே விஷத்திற்கு வந்தார். பாலன் சொன்னதாக அவர் கூறியது . "நம்மிடம் உள்ளது கோமாளிக்கூட்டம் , அத்தால் இதை கையாளமுடியது , என் யூகம் சரி என்றால் . பாலன் வருவதுதான் பொருத்தம் . மேலும் இது மிக சிக்கலானதாக மாறக்கூடும் . அது சரி என்பதே என் எண்ணமும். ஆனால் அவர் வரும் வரை ? ஏதாவது பேசி நேரம் வளர்ப்பது தவிர , ஆகக்கூடுவது ஒன்றில்லை ". நான் காரை பாலனை அழைத்து வர அனுப்பைனேன்.

இது வழக்கமான கூடுகையல்ல ,நெடுநாள் உளக்கொந்தளிப்பு , அது ஊரி புளித்து நொதித்து நாறிப் பொங்கத்துவங்கிவிட்டது  இயக்கத்தின் ஒற்றை கனவு அங்கு தகர்ந்து கிடந்தது . அதில் வியப்பதற்கு  ஒன்றில்லை . தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பது . அனைவரையும் பதட்டத்தில் வைத்துள்ளது. வெற்றி பெறும் குதிரையை கணிக்க வேண்டிய காலமிது . கனவிற்கும் லட்சியத்திற்கும் இங்கு நேரமில்லை . அவரவர் தன் வழி தேரும் கனம் . சரியான பேச்சும், நிலைபாடுமே இங்கு எடுபடும் . நன்றி விசுவாசம் என்கிற சாலை இங்கே எவரையும்  எங்கும் கொண்டு சேர்க்காது .

காரில் இருந்து இறங்கியது அவர்களை அருகியதும் , முதல் மின்னலென ஒரு உளவிசை இது கைளயாள்கூடியதே என்றது பின் திகைப்பான தருணமாகி அந்த வாசல் திறந்தது .

பாலனின் குழு என் தலைமையில் வருவதாக , பிழைக் கணக்கிட்டு விட்டார்கள் . அனைவரும் எழுந்து வரவேற்று எனக்கு கைகொடுத்தது , என்னை குறுக்கியது , நான் புரியாது திரும்பி சுப்பராயனை பார்த்தும் , சிரித்தபடி என்னை முன்னே செல்லும் படி ஊக்கினார் . நொடியில் எழுந்த அவரது திட்டம் வென்றது .

பேச்சுவார்த்தையின் முதல் வெற்றி என்பது இருதரப்பும் சரியான நபருடன் உரையாடுகிறோம் என்கிற நம்பிக்கை , விழைவுகள் முன்னெடுக்கப்படுகிற சாத்தியக்கூறுகள் . நாளையில் தனக்கு என்ன என்பதே தனியனின் நோக்கு . இவை இரண்டுமே அங்கு  குறியீட்டென ஆகியுள்ளது . என்னுடன் வந்தவர்களின் முகம் எந்த உணர்ச்சியும் அற்ற தெய்வசிலை சிலையின் வெறித்து நோக்கு அடைந்தனர் .

இது தனிநபர்களின் தொகை , கூடுகையல்ல , அதில் நடு நின்று பேசுவது மடமை , உத்திரவாதங்களினால் ஆவது அல்ல  அரசியல்,  இங்கு அனைத்து மீறல்களும் முறைமையையே .

சிக்கலின் நடுநாயகமாக பாலன்  உள்ளார் . பேசுபொருளும் அவரை சார்ந்தே நிலைபெற்றுள்ளது . அவர் இவர்கள் மத்தியில் பேச எழுந்தால் அவரிடத்தில் இவர்கள் "ஒன்றுமில்லை" என்கிற ஒற்றை சொல் தாண்டாது நிற்பர் . மீறி பேசுபவரை மற்றவர்கள் பாலனுக்கு எதிர் நிறுத்தி துரோகி எனத் தூற்றி பாலனிடம் அதன் பலனுக்கு கையேந்துவர் . அனைவருக்குமாக பேசவந்தவர் முடிவில் தன்னை நொந்தல் என்றாகிவிடும் .

சுப்பராயன் கூட்டத்திடம் என்னை பேச சொல்லி கைகாட்டிவிட்டார். நான் சுருக்கமாக சொன்னது . "சிக்கல் உற்ற நேரம் இது. என் தேவை என்ன என்பது இலக்கு அடைந்த பின்னர் பேசவேண்டியது . வெறுங்கையால் ஆவது ஒன்றில்லை . பேசுபொருள் பலமுறை விவாதிக்கப்பட்டதே . அதை திரும்ப வேச இதுவல்ல நேரம் . தேர்தலில் பாலனுக்கு சீட் . அது மட்டுமே இத்தருனத்தில் உள்ளது. உங்களில் மூவர் . டெல்லி செல்லவேண்டும் . யார் என முடிவு செய்து வாருங்கள் . நாளை லோகநாதன் ஷாம்பு கம்பெனியில் கூட்டம். பாலனுடன் பேசலாம் ".

கூட்டம் தன் மகிழ்வை சொன்னது . நாளை கூட்டம் என்று முடிவானது . தாமோதரனும் எங்களுடன் திரும்பினார் அனைவரும் என் வீடு நோக்கி கிளம்பினோம் . வழியில் சுப்பராயன் என்னை கட்டிக்கொண்டார் . மிகச் சரியாக கையாண்டதாக கூறினார் . எனக்கும் இது மகிழ்வாக இருந்ததுடன் , இந்நிகழ்விற்கு பின் கமலக்கண்ணன் போன்றோர்  எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை உடன்உடன் கணிக்கும் பழக்கம் முற்றுப்பெற்றது .

அடுத்த நாள் நிகழ இருக்கும் கூட்டம் பற்றிய சிந்தனை எழுந்தது . என் வீடு வந்ததும் சுப்பராயன் பாலனுக்கு தொலைபேசியில் நடந்ததை விளக்கி பேசினார் . கமலக்கண்ணன் தாமோதரன் என எல்ல்லோரும் கிளம்பிச் சென்றனர் . சுப்பராயன் தொலைபேசியை வைத்துவிட்டு . என்னிடம் பாலன் என்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னதை தெரிவித்தார் .

பின் என்னிடம் பேசும் போது இந்த முடிவு நேற்று தான் பாலனிடம் சொன்னபோது அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அதை மீறி தானே செய்ததையும், அது பெற்ற வெற்றியின் திளைப்பில் இருந்தார் சுப்பராயன் .

மேலும, "உன்னைபற்றிய கணக்குகள் பாலனுக்கு இல்லை , இன்று தொண்டர்கள் உன் வரவை நல்ல துவக்கம் என நினைக்கிறார்கள் . நீ அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட புது முகம். அரசியலில் புதுமுகம் நிறைய நம்பிக்கையை ஏற்படுத்துவது . தான் மாலை நான்கு மணிக்கு மேல் பாலன் வீட்டில் இருப்பதாகவும் அப்போது வா" என்று கூறிச்சென்றார் . மாலை நான் பாலன் வீட்டிற்கு சென்ற போது இருவரும் அங்கு எனக்காக காத்திருந்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக