https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

கனிவதன் பாதையில்


கனிவதன் பாதையில்

இது முற்றாக திருப்பிப்பார்பது நேர்மையாக எழுதலாம் என நினைக்கிறேன். இரு காரணம் ஒன்று தமிழ் எழுத்து இன்னும் சற்று கைக்கூடிவரலாம் இரண்டு நினைவுகளை பகுத்து தொகுப்பதும் சிந்தனை அடுக்குகளில் விழும் சிடுக்குகலை கையில் எடுத்து உற்று நோக்க முடிந்தால் இனி வரும்காலத்துடன் உரையாடும் தெளிவு ஏற்படலாம்.

வாழ்வின் இறுதிக்கு வந்து விட்டதாக உணர்கிறேன் என்னிக்கைகளில் அடங்காத நிகழ்வுகளின் குவியல் பல்வேறு தளங்களுக்கு விதி என்னும் ஊடுபாவாளால் கடத்தப்பட்டு வாழ்கை அர்த்தமுள்ளதாக இருந்ததா என நிறைவு காண்பது.என் எழுத்துக்கள் யாருக்காவது பொருள்படுமெனில் நான் பாக்கியவான் யாருக்கும் சொல்வதற்கு அன்று எனக்கு நானே என இது

ஓரிரு முறை சந்திப்பவரை சரியாக புரிந்து கொண்டனை என உள்ளம் அவருடன் சேர்ந்து , விடுத்து அல்லது சமநிலை பேனுதல் என முடிவிற்கு வரும் எண்ணம் , என்னை சரியாக புரிந்து கொண்டதா என உள்ளார்ந்து பார்த்தால் இல்லை எனவே தோன்றுகிறது .


ஒருமுறை ஶ்ரீநிவாசனின் கண்பார்வை கோளாறு கண்டறிந்து நிவர்திக்கப்பட்ட பிறகு ஆச்சரியத்துடன் அவன் கேட்டது எல்லோருக்கும் காட்சி இப்படித்தான் இருக்குமா என்று ? அப்போதும் அவனுக்கு தெரிந்ததோ இல்லையோ எனக்கு ஒன்று புரிந்தது காட்சி என்பது பார்ப்பவர் சொல்லும் வர்ணனையில் இல்லை கேட்பவர் புரிதலின் சாமர்த்தியத்தில் உள்ளது என்று.

கண்முன்னே தெரியும் காட்சிக்கே இவ்வளவு வைசித்திரியம் உள்ளபோது ஒருவரின் நினைப்பில் சொல்லில் புரிதலில் இருந்து நாம் பெறுவதென நினைக்கும் புரிதல் எத்தனை விழுக்காடு சரி. இதன் பல பரிமாணங்களே வாழ்வியலை தீர்மானிக்கிறது

நவீனமயமாதல், நுகர்வியக் கலாசாரத்தை எவர் வெறுதாலும் ஒருநாள் அது கொல்லை புற வழியே அவர் தேவைக்கேற்ப என வந்து நிற்கும்

பொருள் மற்றும் பொருள்முதல்வாதம்   (materialism) மற்றுமன்றி தத்துவமும் இறக்குமதியாகிறது அது கீழை மேலை சிந்தனைகளில் இனைப்பு நம் பார்வையை முழுமையாக மாற்றி அமைக்கலாம் .

காற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மென்பஞ்சுத்துகள் போன்றவை தான் வாழ்கை அவை. தானென்று உணரும் ஒன்றை அவை சுமந்தலையவில்லை. எனவே திசைதேடித் தவிக்கவில்லை. ஒருக்கால் விலங்கென்று ஆவதே விடுதலை போலும். கற்றுக்கற்று சென்றடையும் இடம் அதுவே என்றால் சொல்லென அமைந்து சுழற்றிக்கொண்டுசெல்லும் இம்மாயப்பெருக்கின் நோக்கம்தான் யாரும் அறிய இயலாதென்பர்முதிரா சிறுவயது கேள்விகளை வயதின் ,அனுபவத்தின் ஊடே பெற்ற அறிவினால் யாதார்த்மாக மாற்றி புத்தியின் குவி மையத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் போது, செவ்வியல் இலக்கிய வாசிப்பின் விளைவினால் எழும் தர்க்கம் அதனில் எழும் புரிதலினால் அனைத்தையும் ஒரு சட்டகத்தின் உள்ளே கொண்டுவந்து வாழ்வின் நிகழ்வுகளை அதில் பொருத்தி நிற்கும் போது நான் இரண்டல்ல மூன்றாகப் பிரிந்து கிடக்கிறேன்.

லௌகீக ஒழுக்கம் தந்தையிடம் பெற்றது ஆனால் -அதில் நான் என்கிற அகங்காரம் பட்டு உருமாறுகிறது
ஆன்மீக விழுமியங்களை சம்பிரதாயத்திலிருந்து பெற்றேன்-அதில் நான் என்கிற அகங்காரம் பட்டு உருமாறுகிறது. இவை அனைத்தையும் விலக்கி தனியாக நான் என ஒன்று நிற்கிறது மூன்றாவதென நான்  சிறுமையும் ஒன்றுமில்லாதவனாக அது அனைத்து புரிதலுக்கும் மறுபதிப்பீடு செய்யத் துவங்கும் . அதுவே புத்தி நிலைபெறுதலின் வெற்றி எனப்படுகிறது .

தன்னையே இரு கூறென பிரிக்க இயலும் . அப்பொழுது நம்மிடம் உள்ள உண்மையின் மறுபகுதி பிறர் சொல்லாமலே எழந்து வரும்

இது மனிதகுணம். பிரிந்து நிற்கவும் குழுக்களாகச் சேர்ந்து போரிடவும் அவர்கள் பல்லாயிரமாண்டுகளாக பழகியிருக்கிறார்கள். வெறுப்புதான் இயல்பாக மக்களை ஒன்றுசேர்க்கிறது. வெறுப்பைப் பேசுபவர்கள் எளிதில் புகழ்பெறுகிறார்கள். ’நம்மவர்’ என ஒருவரை நினைத்துவிட்டால் அவரை முழுமையாக ஏற்க நாம் தயாராக உள்ளோம்.இங்கு வாழ்தல் என்பது உயிருடன் இருப்பதன் இனிமையை அனுபவித்தபடி உட்கார்ந்திருப்பதுதான். இதை சோம்பல் என்று நம் மக்கள் சொல்வார்கள். நான் இதை இயற்கையில் ஒன்றி அமர்ந்திருப்பது என்று தான் பொருள் கொள்கிறேன். என்னால் இப்படி வாழமுடியாது. ஆனால் வாழ முடிந்தால் இதுதான் நல்ல வாழ்க்கை .

இன்று ஓர் அலையென எழுந்துள்ளது இவ்வாணவம். வேதப்பொருள்கொள்ள தங்கள் சிறுமதியை புன்வாழ்வை கீழ்விழைவை மட்டுமே அளவீடாகக் கொள்கிறார்கள். சொல்விளக்கம் அளிக்கிறார்கள். பொருள்நீட்டிச் செல்கிறார்கள். அவர்கள் அடைவது வேதத்தை அல்ல, வேதமென மாயைகாட்டி வரும் தங்கள் ஆணவத்தை மட்டுமே. நீராடும் ஆற்றுக்கு உடலை அளிப்பவனே விண்ணிழிந்து மலைதழுவி மண்விரிந்து பெருகும் ஆற்றை அறிகிறான். தன் சிறு கொப்பரையில் அதை அள்ளி வருபவன் கையிலிருப்பது ஆறல்ல. அவன் சிறுமை மட்டுமே .

கடந்து வந்ததை முற்றாகத் திரும்பி பார்க்கிறேன் . அது எங்கு தடம்மாறி இருப்பின் எங்கு ஏறிநிற்கும் எனபதை ஆராய்வது விடுத்து நடந்தவை யாவும் நன்று என்ற புரிதல் இப்போது ஏற்பட்டால் வாழ்வின் மிச்சத்தை உணர முயற்சிக்கலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...