https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 16 மார்ச், 2017

அடையாளமாதல் - 6 (அரசியல் களம் அவமதிப்பின் வஞ்சினம் )

அடையாளமாதல் - 6
அரசியல் களம் - 6

அவமதிப்பின் வஞ்சினம்


இரவு சந்திப்பிற்கு பாலன் வீட்டிற்கு வந்திருந்தேன். காரணமறியாத தயக்கத்தினால் அவரை எல்லோரும் அழைப்பதைப் போல தலைவரென்று நான் விளித்ததில்லை . அண்ணன் . ஒரு மரியாதையான மாற்றுச்சொல் . அதுவே நான் அவரை அழைக்கும் முறையானது . கடைசீவரை.

வழக்காமான இரவு பேச்சாக அது அன்று இருக்கப் போவதில்லை என கிளம்பும்போதே தெரிந்திருந்தது . மிக விரைவில் நடக்க இருக்கும் போராட்டத்திற்கான திட்டமிடல் அன்று நிகழலாம் என பட்சிகள் கூவின . மேலதிகமாக என்னை தனக்கு போட்டியாக கமலக்கண்ணன் நினைப்பதாக சொன்னார்கள் .

எனக்கு இது வேடிக்கையாக இருந்தது . நான் பொழுது போக்கிற்காகவும் அரசியலை ஒரு கலை என்கிற அளவில் கற்கும் வாய்ப்பிற்காக அங்கு வந்தவன். அங்கு இயக்க நண்பர்களின் ஏழ்மை எனக்கு ஏற்படுத்திய நெகிழ்வும் , புது களமும் பரவசமூற்றுவதாக இருந்தது . கட்சி ,தலைமை , இயக்கப்பனி இதெல்லாம் எங்கோ நெடுந்தூரத்தில் கூட இருக்கவில்லை . என் கனவுகள் என்று எதுவும் இல்லை . அதில் இருப்தால் எழும் மனமகிழ்வும் நிறைவுமே எனக்கானதாக இருந்தது . எனவே பட்சி சொன்னதை அபத்தம் என புறந்தள்ளினேன்.

மேலும், எனக்கும் கமலக்கண்ணனுக்குமான நட்பு தடையற்றதாக இருந்தது . தாமோதரன் சற்று அழுத்தமான நபராக இருந்தாலும் என்னுடைய வரவு சரியானதாகவே அவரால் பார்க்கப்பட்டது. சில விருந்து கேளிக்கைகளில் வாக்குவாதம் எழுந்தாலும் என் பட்சமாக வைக்கப்படுபவைகளே எப்போதும் கவனிக்கபட்டுள்ளன.

ஆனால் என்னையும் கமலக்கண்ணனையும் வைத்தால் அவர் என்னை தேர்தெடுக்கமாட்டார் என்பது நிஜம்.அவர் அரசியல் எதிர்காலம் கமலக்கண்ணனின் கால்களில் கட்டப்பட்டிருந்தது ,தவிரவும் அது போன்ற ஒரு நிலை எழவே இல்லை . எனக்கானப் பொறுப்பு ஏதாவது கமிட்டியில் கிடைத்தால் சரி . மற்றபடி மாநிலம் தழுவிய கட்சிப்பனியெல்லாம் நான் கனவுகூட கண்டதில்லை. எனக்கு அது சரியாகவும் வராது.

ஒல்லி சேகரைப் பொருத்தவரை சுயநலமி மாலை யானால் மூன்று பெக் வேண்டும் அதைத்தாண்டி குறுங்குழுவாக எதையாவது செய்து கொண்டிருப்பதுடன் அவ்வப்போது பாலனிடமிருந்து கடும் நிலைபாடுகளை கண்டடைவதுடன் சில காலம் தலைமறைவாழ்கை .பாலன் கூப்பிட்டனுப்பி பேசி சமாதனம் செய்வார் . இது ஏறக்குறைய ஒரு அன்றாட நிகழ்வு போல.

கணகராஜ் சேகர் ஒரு குள்ளநரியின் தந்திரமாகவே எதையும் செய்பவன் .தன்நிலை உணர்ந்தவன் தேவையற்ற இடங்களில் தென்படவேமாட்டான் அவனை மையப்படுத்தி எந்த புகாரும் எழவே முடியாதபடி பார்த்துக் கொள்வான் . சரியாக சொன்னால்  நூறு சதவிகித அரசியல்வாதி.

என்னை மையப்படுத்தி அவன் செய்து கொண்டிருக்கும் அரசியலை நான் முழுமையாக அறிவேன் . அது எனக்கு சரியான வளர்பாதையை தருவது . ஆனால் அரசியல் களத்தின் மையப்பகுதி செயல்பாடுகளையும் , அதில் தேவைபடுகிற நுட்பங்களை அறியாதவன் . குழப்வாதி . அவனை சரியாக ஆளத்தெரிந்தவனுக்கு அவன் ஒரு சிறந்த இருபக்கக்கூர் கைஆயுதம் . கையாளத் தவரினால் உடையவனையே பதம் பார்த்து விடும்.

என்னுடைய நட்பும் கட்சியில் எனது வருகையும் அவனுக்கு புதிய அந்தஸ்தையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது . அதில் அவன் திளைத்துக் கொண்டிருந்தான் . ஆனால் அதே சமயம் அவனது இயல்பான பொறாமை உணர்வு எனக்கெதிராக எழுந்தபடியே இருந்தது. இது அவனிடமுள்ள வேடிக்கையான முரண்பாடு. அல்லது மானுடர்களின் ஆழ்மன நிலைபாடுகளே அப்படித்தானோ.என்னவோ

அரசியல் களமென்பது பல அடுக்கைக் கொண்டது .முதல் அடுக்கில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் எந்த வகையில் அது மற்ற அடுக்குகளுக்கு பரவும், என்பது எளிதில் கனிக்க கூடியதல்ல . ஆனால் முயன்றால் கைவருவது. அதற்கு காலம் ,நிலை ,தொகுப்பு , உளவு , களநிலை அதில் நிலைபெறும் காய்கள் , காய்களின் இரட்டைகள் , அதற்கான எதிர்நிலை மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் , பொருளாதார நீர்மை , பதவி வழியான உடன்பாடுகள் என்பன .

இவை அனைத்தும் குறுக்கும் நெடுக்குமாக ஊடுபாவாக நெய்யப்பட்டவை . ஒரு கண்ணியில் ஏற்படும் நிறமாற்றத்தை கண்டவுடன் , மீண்டும் முதலிலிருந்து ஒவ்வொகண்ணிகளையும் அலகலகாக பிரித்து மீளவும் புதுக்கண்ணிகளாக முடியும் சலியாத மூளையின் உழைப்பை கோருபவை. அதற்கு பல அடுக்குகளைக் கொண்ட தலைவர்கள் தேவை.

இந்த சிக்கலான கணக்கிடுகை மூளையை சதா சொடக்கி கொதிப்படையச் செய்பவை . தன் பலத்தை பிரதானமாக நம்புபவர்களின் நரகம் அது . அங்கிருந்து ஒருகாலமும் அவர்கள் மீண்டு வருவதில்லை.

என்பாணி சிக்கலில்லாதது . வீசிகிற காற்றின் திசையைத் தேர்ந்து அதை சாதகமாக்கிப் பயணிப்பது , அது வெற்றியைத் தருவது தற்ச்செயலென எழும் சாதகங்களில் உள்ளதை பெருந்திட்டக்கோட்பாடுடன்  பொருத்திப் பார்ப்பது . அதை நம்புவது .எளிமை , மனிதர்களை அவர்களின் இரட்டைகளை கடந்து புரிந்து கொள்ள முயல்வதின் வகையில் பாதைகளை கண்டடைவது.

அன்று பாலன் வீட்டில் எனக்கும் ஏற்பட்டது புது அனுபவம் . அரசியலில் காய் நகர்த்துவது என்பார்களே , அதுபோன்ற ஒன்று . யார் காய் , அதை எப்படி நகர்த்துவது என்கிற விளையாட்டை பார்க்கும் ஆர்வமேற்பட்டு சென்றேன் . நான் ஒரு பிங்கலன் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று புரிந்த நாள் . நானும் கேனைத்தனமாகத்தான் அங்கு சென்றேன் .

"தலைவர் பாலன் " ஒரு எளிய முன்னாள் பஞ்சாலைத் தொழிலாளி முன்னாள் தலைவர் அமைச்சர் கண்ணனை தன்  அரசியல்     "குருவாக " ஏற்றுக்கொண்டவர் . அவரின் முதல் சுற்றுத் தலைவர்களின் மத்தியில் பிரதானமாக இருந்தவர். அவரின் நீட்சி . அவரை பதிலியாக தன்நிலையொத்தவர். ஏழ்மையான குடும்ப பிண்ணியில் இருந்து எழுந்து வந்தவர் . ஒரு முரணுக்கு பின் தனிநிலை எடுத்தவர் . அன்றும் ஏழ்மையில் உழன்றவர் . சாப்பாட்டிற்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த வெளிச்சம் .

அங்கு சென்ற போது பாலனை சுற்றி ஆறு ஏழுபேர் இருந்தனர். கமலக்கண்ணன் தாமோதரன் ஒல்லி சேகர் பாலன் மைத்துனர் சுப்புராயன் மற்றவர்கள் முதலியார்பேட்டையை சேர்ந்த சிலர் . வழக்கமான வம்பு பேச்சு போய்கொண்டுந்தது. பேச்சின் நடுவே மேலும் ஐவர் வந்தினைந்தார்கள் கூட்டம் கலைகட்ட தொடங்கியது.

தாமோதரன் இளைஞர் காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய இடத்தை வகிப்பவர் .பாலனுக்கு அடுத்த நிலை .முழுநேர தொழில்முறை அரசியல்வாதி . பாலனுடைய கட்டுப்பாடுள்ள வளையத்தில் சிக்காதவர் . அவர் கட்சியில் பலருக்கு மிரட்சி . கிருமாம்பாக்க கிராம பகுதியில்  இருந்து வருபவர் . கட்சியின் அனைத்து விதத்திலும் தனக்கான பங்கினை தருபவர். கூட்டத்தை கூட்டுபவர். தேவையான பொருளாதார உதவியை செய்து கொடுப்பவர். கட்சிரீதியான போலீஸ்டேஷன் சிக்கல் போன்றவற்றில் பாலனின் முகம் .

அனால் வெகுஜன வசீகரம் தனக்கு இல்லை என நினைப்பதாலோ அல்லது வேறு காரணிகனால் கமலக்கண்ணனை சார்ந்து இருப்பவர்.அடுத்த தலைவராக கமலக்கண்ணன் வந்தால் தனக்கான அரசியல் வாய்ப்புகள் பிரகாசமானதாக நினைப்பவர். அனைவரைப்போல பாலன் மீது அதிருப்தியில் உள்ளவர் . ஆனால் கமலக்கண்ணனைப் பற்றிய தாமோதரனின் கனிப்பு தவறானது . அவன் ஒரு மண்குதிரை.

கமலக்கண்ணனுடைய சிக்கலே தன் திறமைகளை உணராது கற்பனையில் திளைப்பவர். தாமோதரனை ஒப்பிடுகையில் தலமைபண்பு நிர்வாகத்திறன் கூட்டம் கூட்டும் சக்தி இன்னபிற..இவைகள் இல்லாது போனாலும் . பாலனுக்கு அடுத்து தலைவராக வரப்போகிறவர் என்ற வகையில் அனைவராலும் மதிக்கப்படுபவர் . துரதிர்ஷ்டமாக தன் திறமைகளை வளர்த்துக் கொள்ளாததாலேயே  பாலனிடம அனாவசியமாக மூக்கறுபடுபவர். ஆனால் தமோதரனுக்கு விரோதமாகாத வகையில் பாலன் கமலக்கண்ணனை கையாள்வார்.

பேச்சி மெதுவாக நடக்க இருக்கும போராட்டத்தை நோக்கி நகர்ந்தது , சில வினாடி நீடித்த மௌனத்தின் ஆழம் புரியவில்லை.ஆலோசனை திக்கித் தின்றத் தொடங்கியது. அவர்களின் பேச்சில் வெளிப்படைத்தன்மை இல்லாததற்கு யாரோ அங்கு தடையாக இருப்பதை உணர்ந்தேன் .

பாலனுக்கும் எனக்குமான உறவு வெகுவாக பலப்பட்டிருந்ததாகவே நான் உணர்நதுள்ளேன் . ஒரு சுழற்சியில் அந்த தடையை தொடுக்கும் நபர் நான் என்பது எனக்கு புரிந்ததும் . தாங்கவியலாத வலியாக எழுந்தது . பாலனுக்கும் எனக்குமான உறவு வேண்டுமானால் கெட்டிபடாமல் இருந்திருக்கலாம் . ஆனால் மற்றவர்களுக்கானது அப்படி அல்ல என்னை சுரண்டி கொழுத்தவர்கள் , அது என் உடன்பாட்டுடன் நிகழ்ந்தது ஆகையால்  அவர்கள் மேல் அதன் பொருட்டு துக்கமில்லை. அது திரும்பவும் அவர்களின் தேவை அதற்காக என்னையே நாடுபவர்கள் .நிலைமை இப்படி இருக்க என்னைப் பற்றிய இழிவான எண்ணம் பிறர் கொள்வதை எவ்விதத்திலும் நான் குறைகூற இயலாது அது அவர்கள் எண்ணம் . ஆனால் அதைச் செய்பவர்களுக்கு ,அதற்கான குறைந்தபடச்சத் தகுதியும் சுயகௌரவமும் அவசியம் . அது இல்லாதவர்கள் மற்றவர்களைப் பற்றி அவ்விதம் எண்ணும் அருகதையற்றவர்கள் . புழுக்கள் . பாலன் வாய்மூடி இருந்ததற்கு காரணமாயிரம் இருந்திருக்கலாம் . அன்றை பொருத்தவரை அவர் முக்கியமல்ல கமலக்கண்ணனும் மற்ற பிறரும் என்னால் மண்ணிக்கமுடியாதவர்கள் என்றாகிப் போனார்கள் .

அங்கிருந்த சட்டென கிளம்பி நாளை பார்க்கலாம் என்று கிளம்பியது அனைவரையும் பெரிதாக பாதிக்கவில்லை என்பதை என் முதுகிற்கு பின்னால் தெளிவாக உணரமுடிந்தது.

அவமானம் .அது அடக்க வியலாத வன்மம் , முதல் முறையாக அனுபவிக்கிறேன்.  அது வெளியேற வழியின்றி சுழன்று  அடர்த்தியாகிய படியே இருந்தது. ஒரு நிலைக்குமேல் தரிக்க இயலாது . வஞ்சினமாக வெளிப்பட்டது.பட்சிகள் சொன்ன துப்பு சரியானதே .அதை  கனிசியாது விட்டது என் குற்றம், அதற்கு என் மேல் நிகழ்ந்த இழிவிற்கு நான் முற்றும் தகுதியானவனே.

நான் யார் என்பதை இவர்களுக்கு உணர்த்தியே ஆக வேண்டும் . எங்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது , நீ எழுந்து செல் இது உனக்கானது இல்லை அதற்கான தகுதியும் உனக்கு இல்லை. நீ எங்களில் ஒருவனல்ல . எங்கள் நுகர்விற்கு பல பொருட்கள் உண்டு அதில்  நீயும் ஒன்று அவ்வளவே அதைத் தாண்டி நீ ஒன்றுமில்லை . அந்த உண்மை முகத்தில் அறைய நிலைகுலைந்து போனேன் .

அரி வரவில்லை , எனவே இந்தக்கூட்டம் ரத்தானது என்று கூறி இந்தக்குறுங்குழு கூடிய கூட்டத்தை ஒருநாள் ஒத்திவைக்கும் படி நான் செய்யவில்லை  என்றால் நான் ஆணிலி .என்கிற வெறியை ஆங்கிலோ பிரன்ச் நூர்பாலை ரயில்வே கேட்டை தாண்டுவதற்குள் முடிவெடுத்தபோது  மார்கழி மாதத்தின் முழு குளிர் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த என் முகத்தில் அறைந்து என்னை ஆற்றுப்படுத்தியது. குருதியில் ஏறிய சூடு தனியத் தொடங்கியது ஆறுதலித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக