https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 15 மார்ச், 2017

அடையாளமாதல் - 5 ( அரசியல் களம் , முகம் சூடல்)

அரசியல் களம் - 5

முகம் சூடல் .


கட்சி அலுவலகத்தில்  சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் புதிய அரசியல் நண்பர்களை கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் சொல்லி வைக்காத அரசியலில், இதுதான் வகைமுறை என யாரோ ஒருவரின் தவறான பதிலியாக இருப்பவர்கள் ,சொந்த முகத்தை இழந்தவர்கள் .பொய்யான மிகை ஆதரவும் , மிகை அனுதாபமுமாக சகத் தோழர்களை இவர்கள் தொடுகையில், அவர்களின் ஆன்மக் கிழிசலில் உண்மை மறையாது வெளியே தெரிகிறது . அவர்களின் பரிவு பொய்யென ,  நடிப்பென பிறருக்கும் தெரிந்தே இருப்பதால் ,இளிவரலுக்கு ஆளாகி  அனைவரின் நம்பிக்கையையும் இழக்கிறார்கள் .நிரந்தரமாக.இவர்களும் ஒருநாளும் நாங்கள் அதை நம்பவில்லை என குரல் வளைக்கிழிய கூறும் கொந்தளிப்பிருந்தாலும் இவர்கள்  கூவப்போவதேயில்லை.

அரசியல் பற்றிய சரியான  புரிதல் உள்ளவர்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம் . அதில் நான் எப்படிப்பட்ட பதிவில் இருக்கிறேன் என்கிற குழப்பம் மிகுந்திருந்த காலம் அது. ஆற்றுப்படுத்தினால் அன்றி இதில் ஈடுபடுவது தற்கொலைக்கு ஒப்பானது.அரசியலில் "காட்பாதர்" தேவை என்பது ஒரு பொது வசனம் .

இங்கு இவர்களுக்கென மந்தன மொழியும் கலைச்சொற்களும் கூட உண்டு , ஏமாளியை "பிங்கலன் "என விளிப்பதும் , கையூட்டு கொடுப்பதை "அன்பு செலுத்துதல் " என்பதுமாக அது ஒரு தனி உலகம். இதில் ஜெயித்தவர்களை விட  தோற்றவர்களே அதிகம் அதைவிட காணாமல் போனவர்கள் கணக்கில் அடங்காதவர்கள்.

என் தர்க்க புத்தி ஒன்றை தெளிவாக கூறியது . பொருந்தா புது முகம் சூடதே. நீ எப்பொழுதும் நீயாகவே இரு . முடிந்தால் இயல்பாக , இயலுமானால் கணிவாக , சாத்தியப்படுமானால் நடிப்பில்லா தோழனாக . ஏனெனில் இங்குள்ள அனைவரும் மிக எளிய மானுடர். இவர்கள் ஒவ்வொரு நிமிடமும்  சுரண்டப்படுகிறார்கள் , உன்னையும் சேர்த்தே அது நடக்கிறது , நீ உணர்ந்து இருக்கிறாய் - ஆம் நான் புரிந்தே இருக்கிறேன்

நீ உன்னை பிறர் சுரண்டக் கொடு பரவாயில்லை , ஏனெனில் அது தெரிந்தே இதனுள் புகுந்தாய் . அதுவே நீ இங்கு வளரக்கூடிய சூழலையும் , வெற்றியையும் கொடுப்பது . எளியவர்களை ஏமாற்றி முன்னேறுவதை காட்டிலும் மானுடக் கீழ்மை பிறிதொன்றில்லை . அது இங்கு அரசியல் நடைமுறை என வெடக்கமில்லாது சொல்லப்படுகிறது , செயல்படுத்தப்படுகிறது.

ஒரு நாளும் நீயும் அதில் ஈடுபட்டு கிடைக்கும் வெற்றியினால்  அடைவதற்கு ஒன்றுமில்லை .அப்படியே அடைந்தாலும் உளம் ஒப்பி அதில் உன்னால்  பொருந்தி இருக்க முடியாது - ஆம் என்னால் அவ்விதம் பொருந்தி இருக்க இயலாது ஏனெனில் , அது என் இயல்பல்ல.

இங்குள்ள எவரும் எனக்கினையில்லை அதனாலேயே இங்கு வந்து அமைந்தேன் . எதை செய்வதாக இருந்தாலும் , உண்மையாக செய் முடிந்தால் எவர்கேனும் உதவு - ஆம் அதுவே என் வழிமுறைகளும் செயல்பாடுகளாயின .

அரசியலென்று நான் இங்கு ஆற்றுவதற்கு ஒன்று இல்லை , கற்பதற்கான சூழல் இங்குமட்டுமல்ல, எங்கேயும் இல்லை. இங்கே எதுவும் சொல்லிக்கொடுக்கபடுதில்லை , அனைத்தும் அனுபவங்களே செய்யும் வினைகளின் விளைவையே நீ அடையக்கூடியது . தோல்வி ஒரு எரியென அது உன்னை பிணக்கும், பின் காலமெல்லாம் ஒட்டி உன்னை கருக்கியபடியே இருக்கும் , வெற்றியெனில் தலைவர்களால் அது உண்ணப்பட்டு, மிச்சம் உனக்கு அதிர்ஷடவசமாக உன் தட்டில் விழும், எலும்புத்துண்டாக.

நான் அப்பாவின் தொழிலில் அவருக்கு துணையாக இருப்பவன் எனக்கு அதிலிருந்த கிடைப்பவை மிக சொற்ப்பம் ஆனால் இங்க உள்ளவர்களுக்கு அது போதுமானது. நான் பெருந்தொகையாக எதையும் இவர்களுக்கு செலவழித்ததில்லை. எக்கலத்திலும் . அவர்களின் மிகச் சிறிய தேவைகளே என்னால் ஆற்ற கூடியது . அது என்கென பெரும் ஆதரவு தளமென்று ஒன்று உருவாகி மையம் கொண்டிருப்பதை நான் அப்போது அறியவில்லை.


என்னைப்பற்றிய எண்ணத்தை மறந்தேன் என் அகங்காரத்தை கைவிட்டு அனைவருடனும் இனக்கமான்னேன், காரணம் நான் கானநேர்ந்தது , என்னை கண்கலங்க வைத்த ஏழ்மை பசி ஆற்றாமை கையறுநிலை நாளை என்ற ஒன்று இல்லாமை .

இளைஞர் காங்கிரஸின் அடிப்படை பெரும் பலமென இருப்பது தாழ்த்தப்பட்ட சமூகம் . கிராமத்தில் இருந்து எவரையோ அன்டி பஸ்சில் தொற்றி அலுவலகம் வரும் முக்கியமான ஒரு பத்து பேரை எனக்கு பெயர்களுடன் அவர்கள் யார் என்றும் தெரியும் . அதில் நெருங்கிய நணபர்களாக இருந்தவர்கள் இருவர் உசுடு பெருமாள் , திருபுவனை விஜயன்.

நான் , அவர்களுக்கு ஒரு குறைந்த பட்ச ஆறுதல் . நான், அலுவலகம் வந்தால் இரண்டு டீ உண்டு என குதூகலிக்கும் இளைஞர்கள் அவர்கள் . எது இவர்களை பட்டினியால் வாடி வதங்கிபடி அரசியலை நோக்கி உந்துகிறது என இன்றுவரை வியந்துள்ளேன்.

பக்கத்தில் அமைந்துள்ள ஆனந்தா கல்யாண மண்டபத்தில் திருமணம் செய்யும் அனைவரும் இவர்களின் தாய் மடி. ஒவ்வொரு கல்யாணத்திலும் நீங்கள் இவர்களை முதல் பந்தியில் கட்டாயம் பார்த்திருப்பீர்கள் . அனேகமாமாக உங்கள் வலப்பக்கம் சாப்பிடும் அந்த தாடி வைத்த ஒரு இளைஞன் ,இளைஞர் காங்கிரஸ் என்னும் மாபெரும் இயக்கத்தின் மாநில பொது செயலாளராக இருப்பான்.

பசியின் , வறுமையின் வலிகள் நான் உணர்ந்ததில்லை , ஆனால் அதன் கோர முகங்களை பார்த்திருக்கிறேன் , இங்கு என்னை சுற்றி அமர்ந்து நேற்று நடந்ததை உற்சாகமுகமாக பேசும் இவர்கள் ,இன்று வரை புரிந்துகொள்ளவே முடியாதவர்கள் கடைசீ வரை கட்சியால் புரிந்து கொள்ளப்படாது காணாமல் போனார்கள் .

விதிவசத்தால் எனக்கான பாதையை  நேர்த்தியாக அமைந்தது. அலுவலகத்தில் தலைவர் பாலனை நான் எக்காலத்திலும் நெருங்கியதில்லை காரணம் அது என் எளிய நண்பர்களிடமுருந்து என்னை விலக்கிவிடும் . அவரை பார்கையில் அவருக்கு ஒரு வணக்கம் அவ்வளவு மட்டுமே . மற்றபடி எளிய இரண்டு அடுக்கு நண்பர்களுடன் என் பயணம் சென்று கொண்டிருந்தது.

அன்றைய இளைஞர் காங்கிரஸின் ஒற்றை குறிக்கோள் பாலனை சட்டமன்ற உறுப்பினராக்குவது . அதற்கு அகில இந்திய மற்றும் மாநில காங்கிரஸ் கட்சியில் தன் இருப்பை நிரூபிக்கும் செயல்பாடுகளே களப்பணியாக இருந்தது . அதன் தொடர் போராட்டத்தின் பாதை இரண்டு அலகுகளைக் கொண்டது ஒன்று கட்சிரீதியானது அது மாற்று கட்சிகளை எதிர்ப்பது. இரண்டு உட்கட்சி பிரச்சனைகளில் தன் பங்கிற்காக சண்டையிடுவது.
அங்கு அறையில் நான்கு நாற்காலிகள் . மாநில பொறுப்பாளர்கள் மத்தியில் எளிதில் எவரும் உட்காரும் தகுதியில்லாதவர்கள். அங்கு உட்கார்வதில் கூட அரசியல் இருக்கும்.

ஆளுகிற காங்கிரஸ் அரசுக்கு பாலனையும் ஒருசில தலைமை  நிர்வாகிகளத் தவிர மற்றவர்கள் முகமிலிகள் . பாலனை தவிர மற்றவர்கள் அனைவரும் சட்டமன்றத்திற்கு வருவதற்கோ அமச்சர்களை சந்திப்பதற்கும் தடைவிதிக்கப்பட்ட அடிமைகள். இது ஒருவித பாசிச மனப்பான்மை , தொண்டர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் மிக இழிந்த வழிகளில் ஒன்று.

என் முழுகவனமும் , நேரமும் இந்த முகமிலிகளை சுற்றியே இருந்தது எனக்கென எந்த திட்டமும் இல்லை கட்சியாலோ அரசாலும் எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை என்பதால் அதை தலைவரிடம் எதிர்பார்க்கவில்லை , ஆகையால் எனக்கு அவர்கள் செய்யக்கூடியது ஒன்றுமில்லை . இது எனக்கு கட்டற்ற சுதந்திரத்தை கொடுத்தது . நான் அனைவரின் மத்தியில் தவிற்க இயலாதவனாகிப் போனேன்

அந்த முழு அடுக்கையுமே  நான்காக தொகுத்துக் கொண்டேன் ஒன்று பாலன் . என் தொழில் நேரம் போக இரவில் வீட்டில் அவரை சந்திப்பது , இரண்டு மாநில நிர்வாகிகள் கமலக்கண்ணன் , தாமோதரன் இத்தியாதிகள் என்னுடன் விருந்து கேளிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்பவர்கள். மூன்று பெருமாள் , விஜயன் போன்றோர் அரசியலில் எனக்கு துணைப்பவர்கள் , நான்கு வெங்கடேசன் இன்னபிற .....என்னிடம் சிறு பொருளாதார உதவிகளப் பெருபவர்கள். இவர்களின் மத்தியில் என் முகம் தட்டுப்படுவதால் - அது என் முகமானது . ஆம் நான் விழைந்து சூடியது .

எனக்கான முகம் எழுந்து வந்தது அது மிக எளிய ஏமாளியின் முகம், அடுத்தவர் சிக்கலில் உதவும் முகம் . ஆம் அது நான் சூடிய முகம். ஆனால் உண்மையானது , நடிப்பில்லாது எனவே அது எனதானதாக கடைசிவரை இருந்தது . ஆனால் அந்த முகம் அரசியல் மேலடுக்கில் "பிங்கலன் " என இகழப்படுபவது  . கடைநிலை ஊழியனுக்கானது அவமானபடுவதற்கென்றே பிறந்தது .

ஆகவே அவனை இழிவுசெய் . அந்த இழிவில் தோல்விகளின் ஆற்றாமையின் வலியை மற .ஆகவே பிறரை அவமானப்படுத்து. இதுவும் அரசியலில் முறைமையே . என நம்பும் ஒரு கூட்டத்திடம் , உயரிய விழுமியங்கள் ஏதுமற்ற ,தூங்குபவர்கெல்லாம் வருமே கனவென்ற ஒன்று, அதை தனக்கும் ஒரு லட்சியமெனக் கனவு என்று ஆர்பரிக்கும் கூட்டத்தில் அவமானப்படல் ,ஒரு நிகழ்வுகூட இல்லை . எனவே ஒருநாள் நானும்  அவமானப்படுத்தப்படாதாக உணர்ந்தேன் . அது என்னை வஞ்சினமென உரைக்க வைத்தது . விளைவு , இனிய விளையாட்டாக திரிந்தவனுக்கு பாதை என அது திறந்து கொடுத்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக