தேதி 17-02-2015
சென்னையில் இருக்கையில் ஒருமுறை நாம் சந்தித்தால் அனைத்தையும் தெளிவுறப்பேசிவிடலாமென நினைக்கிறேன்
அன்புள்ள அரிகிருஷ்ணன் அவர்களுக்கு
நான் 29 ஆம் தேதி வாக்கில் சென்னையில் இருப்பேன். அல்லது ஐந்தாம்தேதிக்குப்பின் சென்னை செல்வேன்
விசிஷ்டாத்வைத்தத்தை மூன்று முறைகளில் அணுகும் பொதுமேடையை அமைக்கலாமென்பது என் எண்ணம்
1. விசிஷ்டாத்வைத்தை இன்றையசூழலில் நவீன சொல்லாட்சிகளுடன் அறிமுகம் செய்தல். அதற்கு முதலில் தேவையானது சம்ஸ்கிருதச் சொல்லாட்சிகளை தவிர்த்து தமிழிலேயே அதை அமைத்தல். குரானும் பைபிளும் தமிழில் வந்துவிட்டன. வைணவம் வரவில்லை என்பது வேடிக்கை. உதாரணமாக ராமானுஜரின் கத்யம் என நீங்கள் சொல்கிறீர்கள். கத்யம் என்றால் செய்யுள் என்றே பொருள்.

2 விசிஷ்டாத்வைத்தை இந்தியாவின் சைவசித்தாந்தம், அத்வைதம், சமனம், பௌத்தம் உள்ளிட்ட பிற சிந்தனைகளுடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளல்
3 விசிஷ்டாத்வைத்தை இன்றைய நவீன மேலைத்தேய தத்துவசிந்தனைகளுடன் இணைத்துப்புரிந்துகொள்ளல். இதற்குரிய அறிஞர்கள் இருக்கிறார்கள். தேடிப்பிடிக்கவும் வேண்டியிருக்கும்
முடிந்தவரை செய்துபார்க்கலாம்
ஜெ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக