https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 387 * விபரீதமாகும் முடிவுகள் *

ஶ்ரீ:




பதிவு : 387 / 568 / தேதி : 10 ஆகஸ்ட்   2018

* விபரீதமாகும் முடிவுகள்  * 


நெருக்கத்தின் விழைவு ” - 82
விபரீதக் கூட்டு -05 .





பலகாலம் தன் தொகுதி அறிமுகம் தாண்டி வேறெந்த அடையாளமில்லாத இளைஞர்கள் சிலரை இளைஞர் அமைப்பிற்குள் கொண்டுவரும் எனது முயற்சி மிக ஆபத்தானது என அறிந்திருக்கிறேன். அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் எந்த சொல்லும் என்னிடம் இல்லை . அரசியலில் யாரும் யாருக்கும் கட்டுண்டவர்களில்லை. அது அவரவர் நெறிசார்ந்தே எப்போதும் நிலைகொள்வது , அதை நினைத்து எதையும் உருவாக்கவோ அல்லது தவிர்க்கவோ இயலாது. இப்போதைய முதன்மைச் சிக்கல் அவர்களை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தி வந்தவர்கள் , காங்கிரசின் நீண்ட கால நிர்வாக பொறுப்பில் உள்ள பலர் . அவர்களால் என் செய்கையை ஏற்கவியலாது என்றாலும், தங்களுக்கான வாய்பபு வரும் அவரை வெளிப்படையாக என்னை எதிர்க்க மாட்டார்கள், இதன்பின் கட்சிக்குள் எனது எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை  கூடிவிடும்

இது போன்று ,கட்சியில் உள்ள சிலரால் கடந்த காலத்தில் அங்கீகரிக்கப்பட்டவர்கள் எல்லோரும் கிடைத்த பதவிகளை வைத்துக் கொண்டு வேறு தொடர்புகளை உருவாக்கி முன்னகர்ந்து சென்று விட்டார்கள் என்பது உண்மையே  . அவ்வாறு முன்னகர்ந்தவர்கள் , தங்களை உருவாக்கியவர்களை எதிர்த்தே தங்களின் அரசியல் முதல் கணக்கைத் துவங்கியிருக்கிறார்கள். இது ஒருநாள் எனக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் . ஆனால் இப்போது எனக்கு வேறு வழிகளில்லை.

இந்த சிக்கல் நாளை எனக்கும் நிகழும் . இது அமைப்பில்  உள்ள சிக்கலையும் , சிக்கலில் கிடைக்கும் வாய்ப்புகளை உபயோகித்துக் கொள்வது பற்றி ஒன்றை ஆற்றுவதற்கு முன்பாக அனைவரும் அவதானிப்பபது . நான் சிக்கலிலை எதிர்கொள்வதில் இருந்து எழும் வாய்பபை எனக்கானதாக கருதுகிறேன் . ஆகவே நான் இந்த சிக்கலில்  உட்கூறுகளை நன்கு அறிந்திருக்கிறேன் . இதை இப்போது நான் உருவாக்கியே ஆகவேண்டும் . அனைத்து எதிர்ப்பையும் கடந்து நான் செய்ய நினைப்பதை முழு வடிவத்துடன் செய்து முடிக்க இதுவே கடைசீ தருணம் . இப்போது இது முடியாது போனால் , பின் ஒருபோதும் செய்ய முடியாது .

தலைவர் என்னிடம் பேசிய அந்த சொற்கள் அனைத்தும் நான் நினைத்ததையே சொன்னது  . முக்கிய சிக்கல்களுக்கு அவர்களிடம் எந்த உதவியையும் எதிர்நோக்கக் கூடாது என்பது முறைமைநமக்கான பாதையை அவர்கள் போட்டுக்கொடுக்க மாட்டார்கள்அதை எதிர்பார்ப்பது அரசியில் மடைமை . பெரிய முடிவுகளுக்கு பின்னால் புதிய சமன்பாடுகள் எழுந்துவிடும் அவற்றின் சாரத்தைக்கொண்டு மீள ஒரு சமன்படை கண்டடைவது சிக்கலானது ,ஆகவே இருக்கும் பழைய பிசாசுகளே போதும் புதிய தேவதைகளை அரசியல் தலைவர்கள் எப்போதும் விரும்புவதில்லை

நான் முயற்சித்த விஷயங்களில்  இதுநாள்வரை யாராரோ போட்டிருந்த  தடைகள்யாவும் இப்போது எழுந்துள்ள இந்த தருணத்தை தவிர்க்கவே. ஆனால் எங்கோ யாரோ செய்த பிழை , என் காலத்தில் , நான் பொறுப்பில் இருக்கும் இந்த தருணத்தில் எனக்கொரு புதிய வாசலை திறந்து விட்டு, புதுமுளைக்கு வித்திட்டுள்ளது

புதிதாக பொறுப்பிற்கு வர இருப்பவர்களுக்கு நிகழவிருப்பது தெரியாது என்பது மட்டுமின்றி தாங்கள்தான் அடுத்த பொறுப்பிற்கு வரப்போகிறவர்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை . நான் அவர்களை தனித்தனியாக அழைத்து செயற்குழுவிற்கான அழைப்பிதழை கொடுத்தேன்.
அவர்களை பலமுறை கட்சியின் செயல்பாட்டிற்கு நான் அழைத்திருந்ததால் , அது போன்றே இதுவும் ஒன்று என நினைத்தனர் . செயற்குழு கூட்டத்தில் என்ன நிகழ்ந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு சொல்லப்பட்டதும் , அதன் அர்த்தம் புரியாது குழம்பிய மனநிலையில் என்னிடம் சொல்லுறுதி கொடுத்து விலகினார்கள்.அவர்கள் காங்கிரஸ் கூட்டத்திற்கு பலமுறை எண்ணிக்கை காட்டுவதன் பொருட்டு அழைத்து வரப்பட்டவர்கள் . அது அலைமோதும் திரள். தனி முகமென அதில் அவர்களுக்கு ஒன்றில்லை . ஆனால் இது தனி முகத்திற்கானது , தங்களின் புது அடையாளத்திற்கானது என்பதால் உற்சாகமாக சென்றார்கள்.

அடுத்த நகர்விற்கு திட்டமிடத்துவங்கினேன் . அதிகாரப்பூர்வமான நிர்வாகிகள் , பழைய நிர்வாகிகள் , நிர்வாகிகளாக நியமிக்கப்பட இருப்பவர்கள் என மூன்று விதமான மனிதர்களை  கொண்ட கூட்டமாக அது நிகழ இருக்கிறதுஇதில் அதிகாரப்பூர்வமான நிர்வாகிகள் பல கட்டத்தில் பல கூறுகளாக பிரிந்து கிடந்தாலும் என்னை செயல்பட முடியாத தடைகளை ஏற்படுத்துவதில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருந்தனர் . அதில் வென்றும் காட்டினர். அவர்கள் பழைய நிர்வாகிகளோடு இந்த இரண்டு நாளில் எந்தவகையான பேரத்திற்கு அல்லது சமன்பாடுகளுக்கும் வர முடியாது. அப்படியே அதை  ஏற்று ஒரு குழு வந்தால் அதை எதிர்த்து இரண்டு குழு வெளியேறும் . யாரும் முழு பெரும்பான்மைக்கு வர முடியாது . இந்த விளையாட்டில் பலம் பெரும் குழு தனது அடுத்த முயற்சியாக பழைய நிர்வாகிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ளும்

பழைய நிர்வாகங்களில் சிலர் என் மீது அர்த்தமில்லாத காழ்ப்பிலிருக்கிறார்கள் . வல்சராஜ் நியமித்த கமிட்டியில் அவர்கள் இடம்பெறத்தற்கு நான்தான் காரணம் என்று சிலர் , நான் நினைத்திருந்தால் சிலரையாவது உள்புகுத்தி இருக்க முடியும் என்று சிலர் . எனக்கு சண்முகத்திடம் அங்கீகாம் கிடைத்ததும்  பழையதை மறந்து போனதாகவும் சிலர். அவர்களில்  வாய்ப்பு கிடைத்தால் எனக்கான அங்கீகாரத்தைக் கெடுக்க துணியும் சிலருமாக அவர்கள் முற்றாக களைந்து கிடந்தார்கள் . யாருக்கும் எனது நிலையை சொல்லி புரியவைக்க முடியாது . அவர்கள் அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள் என்பதால் , பல உட்கணக்குகளை போடக்கூடியவர்கள், அதற்கான பாதையை காணும் வரை யாருடனும் எந்த ஒப்பந்தத்திற்கும் வர மறுப்பார்கள் . இப்போதைக்கு ஆறுதல் அது ஒன்றே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...