https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 17 நவம்பர், 2017

அடையாளமாதல் - 241 * சட்டென முடிவுற்ற சாலை *

ஶ்ரீ:

பதிவு : 241 / 327 /  தேதி :- 17 நவம்பர்    2017

* சட்டென முடிவுற்ற சாலை *


முரண்களின் முனைகள் ” - 11 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02






இலக்கியம் என்கிற ஒன்று இருப்பது அறிமுகமானது என் தந்தையின் மூலமாக . அவரது தீவிர இலக்கிய வாசிப்பு , கார்ல் மார்கஸ் , நியூ சென்சுவரியின் வழப்பான ரஷிய தமிழ் மொழியாக்க நூல்கள் , அவரது நெருங்கிய நண்பர்களான திரு.ஜெயகாந்தனின், நா.பாரத்தசாரதி , தகழி சிவசங்கரன் .சரா போன்றவர்களின் ஆக்கம் , என அவரது புத்தக அலமாரி நிறைந்து வழிந்திருக்கும்.எடுத்து வாசிக்க துவங்கி குழம்பி எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவேன் . அவருடன் சில திரைபடங்களுக்கு சென்று பாதி படத்தில் பக்கத்திலிருந்த யாரையாவது பிறான்டிவிட்டு எழுந்து வாசலுக்கு ஓட நினைத்ததுண்டு. அனைத்தும் கலைப்படங்கள். அதற்கெல்லாம் தனியான ஒரு மூளைவேண்டும் என நினைத்த காலம் அவை.

இளமையில் நிறைய வாசித்திருக்கிறேன் அவற்றையெல்லாம்  இலக்கிய வாசிப்பு என்கிற வகைமுறைக்குள் கொண்டு வர முடியாது . சுஜதாவின் அந்தக் காலகட்டத்தை சேர்ந்த அவரது அனைத்து ஆக்கங்களையும் வாசித்திருக்கிறேன். அன்றைய தீவிர அரசியல் ஈடுபாடு சமூக வாழ்வியலின் நிதர்சணமான இன்னொரு பக்கத்தை என் முன் நிகழ்த்திக்கொண்டிருந்த காலம் . அவை புனைவுகளும் தொடாத புள்ளிகளை தொட்டிருக்கின்றன . சில சமயங்களில் நிஜம் புனைவைவிட திகைப்பை கொடுப்பவை. புத்தக வாசிப்பு ஒரு பொழுது போக்கு என்கிற அளவில்கூட என்னால் எடுத்துக்கொள்ளப்படவில்லை

சிறு வயது முதல் எனக்கு  ஒரு விசித்திர பழக்கம் ;புத்தகம் படித்தபடி சாப்பிடுவது . சாப்பாட்டு தட்டை எடுக்கும் முன்பாக ஏதாவது ஒரு புத்தகத்தை தேடி எடுத்துக்கொள்வேன் . அப்பா அந்த பழக்கத்தை கடுமையாக கண்டித்ததால் . அவருடன் நான் கடைசிவரை இணைந்து சாப்பிட அமர்ந்ததே இல்லை . என்னால் சாப்பிடும்போது படிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை . பின்னர் 2015 ல் அந்த பழக்கத்தை முற்றாக நிறுத்திக்கொண்டேன். அந்தப் பழக்கம்தான் மாதமிருறை வரும் ஏடுகள் என்னை கொஞ்சமேனும் வாசிக்க வைத்து . அவை ஒன்று துக்ளக் பிறிதொன்று தமிழ் இந்தியாடுடே. 1996 தேர்தலின் போது சோ திமுகவை ஆதரித்தார், அவர்மீது எனக்கிருந்த நம்பகத் தன்மை அடிவங்க , அதை வாசிப்பதை நிறுத்தி விடேன் . அதன் பிறகு இந்தியாடுடே மட்டுமே என்றானது

ஜெயமோகனை பற்றி நான் தெரிந்து கொண்டது அதன் மூலமாகத்தான் . தமிழ் இந்தியா டுடே அதற்கு அடுத்த மூன்று பதிப்பிற்கு தனது வெளியீட்டையே நிறுத்திக்கொண்டது . பிறகு தினசரிகளே என் வாசிப்பென்னும் அளவிற்கு சுருங்கி போனது மட்டுமின்றி . எனக்கு செய்திகளை தவிர அதில் வரும் சிறு கட்டுரைகூட படிக்கும் பொறுமை போய்,என்னால் இனி தொடர்வாசிப்பு என்கிற ஒன்றை செய்யமுடியாது என்றாகிப்போனது. ஆனால் என்னை புத்தக புத்தகமாக படிக்கவைக்கும் ஒரு நாள் வரும் என, நான் அன்று நினைத்திருக்கவில்லை. அது ஒரு நல்லூழ்.

ஜெயமோகனின் வெண்முரசை பற்றி இந்தியா டுடே,அவரது பேட்டியுடன் வெளியிட்டிருந்தது . இன்றைய இளைஞர்களின் ஆதர்ச எழுத்தாளர்கள் என்கிற தலைப்பில் . எழுத்தாளர் சேத் பற்றியகூட அதில் இருந்தது என நினைக்கிறேன் . மிக சிறிய செய்தி  அது . அது ஏன் என் கவனத்தை கவர்ந்தது என அப்போது புரியவில்லை . இளைஞர்களுக்கான ஒரு செயல்திட்டத்தில் நான் முன்னகர இயலாமல் முடங்கிக் கிடந்தது, வியாசபாரதத்தின் மீது இயல்பில் எனக்கிருந்த ஈரப்பு போன்றவை அதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என இப்போது நினைக்கிறேன். அன்று அது ஒரு தற்செயல் மட்டுமே . தற்செயல்களுக்கு பின்னல் எப்போதும்பெருந்திட்டம்ஒன்று இருப்பதாக நம்புபவன் நான். இதிலும் அது உண்மையாகிப்போனது . எனதுடேபில்எதையோ சொடுக்க அது ஜெயமோகனின் தளத்தை திறந்து கொடுத்தது . சில வருடங்களுக்கு முன்பாக அது செய்தியாக வந்திருந்தது , இப்போது ஆக்கமாக தளத்தில் . அட இது வெளிவருகிறதா? என்கிற ஆச்சரியத்துடன் . அதை வாசிக்க முயற்சித்தேன் . “eபுத்தகம்படிப்பது அதுவே முதல் முறை.

வெண்முரசு - நான் என்னை மிகுந்த ஆணவமிக்கவனாக கணிக்கிறேன் , அதனாலேயே யாரையும் தூக்கி தலையில் வைத்துக்கொள்வதில்லை , இது என்னை புரட்டிப் போட்டது . என் வாழ்கையில் இதுவரை நிகழாத அளவு மாற்றங்களை என்னுள் எப்படி ஏற்படுத்தியது?. அதில் எது என்னை? ஏன் இந்தளவிற்கு பாதித்தது? என்பதை பற்றி அவதானிக்கவே நான் சந்திக்க நேர்ந்த அரசிலை பற்றி பரக்க பேசிக்கொண்டிருந்த எனது பதிவுகள் , இப்போது ஒரு சிறிய மாற்றத்துடன் வேறொரு தளத்தை நோக்கி செல்கிறது . எனது தளம் சொல்லவந்தது அதை பற்றியே என்பதால் குறுக்காக இதை எடுத்துக்கொள்கிறேன்  . இந்த சந்தர்பத்திற்கு முன்பாகவோஅல்லது பின்பாகவோ வெண்முரசிற்குள் நான் வந்திருந்தால் . இந்தளவிற்கு தாக்குண்டு இருப்பேனா? என சொல்வதற்கில்லை. சூழல் ஒரு முக்கிய காரணியாக இருந்ததுஎனது கனவு திட்டமானதிறந்த அரங்கம்” பெரிதாக அடிவாங்கி இருந்தது . அதை  தொடங்க அதன் கருதுகோளாகவேதவிஞ்ஞானம்” எனது கோட்டோவியமாக இருந்தது . விஞ்ஞான , மெய்ஞான இணைவு அல்லது நிழல் நிஜம் என்கிற ஒன்றை துரத்திக்கொண்டிருந்தேன்

விஞ்ஞான , மெய்ஞான என்கிற இரண்டு துறையை சேர்ந்த சிறந்த விற்பன்னர்கள் என நான் நினைத்து கொண்டு அவர்களை  சந்தித்தது அப்போது தான் . அதை நான் செய்திருக்கவே  கூடாது என்பதை மிகத்தாமதமாக புரிந்து கொண்டேன்  . மிக நீண்ட பயணமது இந்திய தத்துவங்கள் நவீன எழுத்தாளர்களால் எள்ளலுக்கு உள்ளாவது சிலரின் அடையாளமாக இருந்தது . இந்தியாவின் பல கோடிபேர்களின் நம்பிக்கை எப்படி பொய்யாக இருக்க முடியும் . அதை  சொல்லுகிற முறைமையிலோ அல்லது புரிந்து கொண்டிருக்கிற வகைமையிலோ ஏதோ பிழை . தலைமுறை மாறி வருகிற போது ஏற்படும் சில மற்றங்கள் புதிய சிந்தனைகளுக்கு வழிவிடுவதை பார்த்திருக்கிறோம்

நான் இதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது இது எனது தந்தையிடமிருந்து நான் பெற்றிக்க வேண்டும் என்கிற ஆச்சர்யமான ஒரு புரிதலை அடைந்தேன் . பல நூறு விற்பன்னர்களை சந்தித்த போது , பெரும் ஏமாற்றத்தையே அதன் பலனாக அடைந்தேன் . அவர்கள் அனைவரையும் மூன்று வகைமைக்குள் அடக்கிவிடலாம் 1. தனது துறையை பற்றிய குறைந்த பட்ச ஞானமும் இல்லாதவர்கள் .2. தன் துறையில் சொல்லிக்கொடுக்கப்பட்டதற்கு அப்பால் ஏதும் தெரியாதவர்கள் 3. அடிப்படையில் என்னுடன்  ஏற்புடையவர்களாக நடிப்பவர்கள் ,  ஓய்வு பெற்ற பிறகும் பதவிக்கு ஒட்டிக்கொண்டு பிற வேலைகளுக்கு நேரமில்லாதவர்கள் என சொல்லிக்கொள்பவர்கள்  . நான் நினைத்த ஒன்று வெறும் கானல் நீர் என்கிற உண்மை முகத்தில் வந்து அறைந்தபோது மிகவும்  சோர்ந்து போனேன் . சட்டென ஒரு பாதை எப்படி முற்றாக முடிந்து போகும்? என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . எனக்குள் இனம் தெரியாத வன்மம் . எதனுடனும் தொடர்பு கொள்ள விரும்பாத, அந்த தருணத்தில்தான் நான் வெண்முரசை வந்தடைந்தேன். அதனூடாக திரு.ஜெயமோகனும் பெரும் நம்பிக்கை அளிப்பவராக  இருந்தார் . ஒரு பரபரப்பாக அந்த நினைவு என்னை தொற்றிக்கொண்டது.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் வாசிக்கும் புத்தகம் . அதுவும் கணினியில் .புது அனுபவம் . முதல் தடை , அதன் மொழி காட்டிண்யம், என்னால் அதனுள் நுழையவே முடியவில்லை . இரண்டாவது தடை ,மீறி நுழைந்ததும் அது எனது அடிப்படையை கடுமையாக தகர்க்கத்துவங்கியது . பதறி சட்டென அதிலிருந்து வெளியேறினேன் . பிறகு சில காலம் அது ஒரு அறைகூவலாக, அதற்கு என் சிறு உளநலுங்கல்கள் பதிலாக ,எப்போதும் எனக்குள்ளே இருந்து கொண்டேயிருந்தது

முதற்கனல் , வேள்விமுகம் . ஶ்ரீமத்பாகவதத்தில் படித்தது . இதில் தமிழ் நடையில் பெரும் வித்தியாசத்தை உணரமுடிந்தது . அதுவரை நான் சம்ஸ்கிரத பதத்துடன் , மணிப்பிரவாள நடையில் படித்தது . கொட்டைபக்கை போல , முரட்டு மொழியும் வரட்டு வேதாந்தமுமாக , புரிந்தும் புரியாததாக இருந்தும், அதிலுள்ள அதிமானுஷ  நில காட்சிகளும் வர்ணனைகளும் .அது தரும் திறப்புகளும் அற்புதமானவைகள் . இருந்தும் அது என் மாத்ரு பாஷை இல்லையே . அந்த காரணத்தால் என்னிடம் அதற்கு  வாத்ஸல்யமில்லை . ஆனால் வெண்முரசின் தமிழ்நடை சம்ஸ்கிரத பதத்துடன் எனக்கு ஏதோ ஒரு வகையில் பரிட்சயமான தத்துவங்களும் தர்க்கங்களுமாக  கொஞ்சம் முயற்சித்தால் புரிந்து கொள்ள கூடிய சாத்தியங்களுடன் இருப்பதாக அது எனக்கு  தூண்டிலிட்டது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்