https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 3 நவம்பர், 2017

அடையாளமாதல் - 227 * அரசியல் ஒட்டுண்ணிகள் *

ஶ்ரீ:




பதிவு : 227 / 313 /  தேதி :- 03 நவம்பர்    2017



* அரசியல் ஒட்டுண்ணிகள்   *




வாய்ப்புகளில் புரியாமை - 12 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.


என்ன காரணத்தினாலோ சம புத்தியுடன் நடந்து கொள்வதாக நினைத்து அந்த கூடுகையை நடத்த தீர்மானித்தார் .  அது எனக்கு வேலியிடுவதாக மிக திட்டமிட்ட செயலாக கூடுகையில் வெளிப்பட்டது. நான் கூடுகையில் என் தரப்புபை வைக்க முதலில் முடிவு செய்திருந்தேன் . ஆனால் எனக்கான வழி பிறிதொருவரிடம் கேட்டு பெறுவதில்லை . அந்த கூடுகையில் நிகழவிருப்பதை அவதானிக்க முடிவு செய்தேன் . என்னை எங்கு நிறுத்தினாலும் . நான் எனக்கான பயணத்தை அங்கிருந்தே தொடங்க முடயும் . நான் என்னை அந்த திறைக்கு வெளிப்புறம் நிறுத்திக் கொண்டேன் . உலகம் பரந்து விரிந்தது . அதன் எல்லா வழிகளையும் ஒரு அறையில் அமர்ந்திருப்பவர்கள் அடைத்து விட முடியாது . நான் எனது நேரத்திற்காக காத்திருக்க முடிவு செய்தேன்.





முதல் மாநில நிர்வாகிகளின்  செயற்குழு கூடுகை துவங்குவதற்கு முன்பாக ,அதில் பங்குபெற வந்திருந்த அனைவரையும் ஒவ்வொருவராக பார்த்தபோது ஏதோ ஒன்றை நெருடலாக உணர்ந்தேன் . அநேகமாக அவர்களுக்குள்  முதல்கட்ட பேச்சுவார்த்தை  நிகழ்ந்து, பின் பொருந்தி வராத ஏதோ சில விழைவுகளினால் அறுந்து , இரு பக்கமும் அதன் நுணி தெரியும்படி இருந்தது. அவர்களுக்குள் அதை மறைக்க முயல்பவர்களின் நிலையழிதலை  உணர்ந்து கொண்டிருந்தேன் .சில அடிப்படை விஷயங்களில் அவர்களுக்குள் ஒரு  சம நோக்கு இருந்தாலும் ,எதிலோ அவர்களுக்குள் பொருந்தி வராமல் இடறுவது , அவர்கள் அமர்ந்திருக்கும் முறையில் தெரிந்தது . அவர்களுக்குள் சிலவற்றில் உடன்பாடும், முரண்பாடும் தெரிவதை அவர்களால் விலக்க முடியவில்லை. எனக்கு ஏன் அப்படி தோன்றியது என தெரியவில்லை . இரு பிரிவினர்களுக்கும் நான் பொது எதிரி . மூன்றாவதாக  எதிலும் சேராத ஒரு குழு ஒன்றும் அங்கிருந்து. உள்நுழைந்த போது மற்றவர்களின் தலையசைப்பும் மென்முறுவலையும் பெற்றபடி மூன்றாவது குழுவின் அறிமுகத்திற்காக அவர்கள் அருகில் சென்று நெருங்கி அமர்ந்து கொண்டேன். அவர்களுக்கும் என்னை தெரியாது.

அங்கு அமர்நதிருந்த அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பதவியில் மனோரீதியாக உட்கார்ந்து விட்டார்களே , தவிர பிறிதெவருடனும் இணங்கி போகாத போக்குள்ளவர்கள் . அவருக்கே ஒன்று புரிந்திருக்கும், கட்சியில் தங்களுக்கு மரியாதையை வல்சராஜ்தான் வாங்கித்தர வேண்டி இருக்கும் என்று . வல்சராஜூக்குத்தான் அது இனி புரிய வேண்டியிருக்கும். இயக்கம் செயல்படுவதாக காட்டியாக வேண்டய நிர்பந்தம் அவருக்கு . இல்லையெனில் தான் வந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்கிற கெட்ட பெயர் எழுந்துவிடக்கூடும் . அமைப்பை செயல்பட அனுமதிக்கும் திட்டத்துடன் . வல்சராஜ் கூடுகை அறையில் நுழைந்ததும் . பிரதான இடத்தில் அமர்ந்திருந்த அனைவரின் முறைமைகளை பெற்று கூடுகை துவங்கியது.

கூட்டம் துவங்கியதும் திட்டமென்ன என்பது தெளிவாகியது.  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் மொத்தம் இருபத்தியேழு தொகுதிகள் அவற்றில் புதுவை மட்டும் இருபத்தியோரு தொகுதியை உள்ளடக்கியது . அவை மூன்று தொகுதிகளைக் கொண்ட  ஏழு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தது . அதற்கான முன்வரைவை வலஸ்சராஜ் அனைவருக்கும் வினியோகித்தார் , பின்னர் யாருக்கு எந்த பகுதி என நிர்ணயம் செய்யும் கூட்டமிது.என அதை துவக்கி வைத்தார். ஏழு பிரிவின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் . அவர்கள் இரண்டு மாத கால அவகாசத்திற்குள்ளாக அளிக்கப்படும் மூன்று தொகுதிகளுக்கும் சென்று ,வட்டார கமிட்டிகளை அமைத்து அதன் நிர்வாகிகளின் பட்டியிலை தன்னிடம் கொடுக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன் அவை முன்வைக்கப்பட்டது . தான் அதன் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு மாற்றாக யாருக்கு எந்தப்பகுதியில் , சிறப்புற பணியாற்ற இயலுமென நினைப்பவர்கள். அதை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

அதுவரையில் குழுக்கள் தனிப்பட்ட முறையில் அவரிடம் பல முறை பேசி இருந்ததைக் கொண்டு , தொகுதி நிர்வாக பொறுப்பை ஏற்பதில் அனைத்து குழுவிற்கு இடையே  பெரிய போட்டி நிலவும் என அவர் கணக்கிட்டிருக்க வேண்டும். அதை தொடர்ந்து அவருடன் அரசியல் பேசிய சிலர் கொடுத்த அழுத்தம் வல்சராஜை சிந்திக்க வைத்தலும், அதை அவர் தன்னுடைய பாணியில் செயல்பட வைக்க நினைத்து  உருவாக்கிய திட்டமிது . ஆனால் இதிலுள்ள நடைமுறை எதார்த்தப் பிழையை அவர் தெரிந்துகொள்ளும் தருணம் இப்போது வாய்த்தது. நான் மவுனமாக அடுத்து நடக்கவிருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தேன் .

அவர் எண்ணியது , யார் எந்த பிரிவை எடுத்துக்கொள்வது என்பது பெரும் போட்டி நிலவும் . பின் அதன் மத்தியில் அனைத்தும் முடிவானால் , யாரும் தனித்தலைமையாக வெளிப்பட முடியாது. அனைவரையும் ஒருங்கிணைத்த அமைப்பு ஒன்று உருவாகிவரும் என்பது அவரது திட்டமாக இருந்திருக்க வேண்டும் . குழுவிற்குள் நிலவும் போட்டியே தன் முன் வைக்கப்படும் எல்லா கேளவிகளுக்கும் ,தான் சொல்ல வேண்டிய பதிலை எடுத்துக் கொடுக்கும். என வல்சராஜ் நினைத்திருக்கலாம். 

இது நல்ல திடடம்தான் . அவர் கேரள மார்க்ஸீய பாணி அரசியல் கட்சிகளின் தீவிர செயல்பாட்டு பின்புலத்திலருந்து வருபவர்.இங்கு நிலவும் அரசியலின் முகத்தை அறிந்திருந்தும் , அதன் யதார்த்த  முகம் வெளிபடும்போது துணுக்குறுவது தவிற்க இயலாதது. இங்குள்ள இக்குறுங்குழுவிற்கு அவரவர் தொகுதியிலேயே அமைப்பை உருவாக்கும் திறமையின்மையை அவர் அவதானிக்கவில்லை. குறுங்குழுகள் எப்போதும் உயரிய செயல்பாட்டினால் தங்கள் இடங்களை வெல்வதில்லை . அவை எப்போதும் கவ்வி நின்று   நிழல்தலைமையை வெளிப்படுத்தும் ஒட்டுண்ணிகள். 

வல்சராஜூக்கு மெள்ள தனது பிழை புரிதல் தெரியத் துவங்கியது. அவர் எதிர்நோக்கிய போட்டி எழுப்போதில்லை .அனைத்து குழுவும் வாய்மூடி மௌனம் காத்தது . அது தனது தொகுதி நிர்வாகிகளை நியமிக்கும் ஆற்றலினமையையும் , தொண்டர் அமைப்புடன் தொடர்பின்றி தனித்து உதிரிகளாக இருப்பதை வெளிபடுத்திக் கொண்டது . ஏற்கனவே தான் தயாரித்து வைத்திருந்த மூன்று மூன்று தொகுதிகளைக் கொண்ட பட்டியலை பலமுறை அறிவித்ததும் , அங்கு நிலவிய அந்த கணத்த மௌனம் கலையவில்லை. வல்சராஜூக்கு இது போதுமானது . இங்கு நிலவும் குறுங்குழுவின் வழிமுறை செயல்படும் வாய்பை எதிர்நோக்கியதல்ல . எவரையும் செயல்படாது வைக்க முயல்பவை என . இனி பின்வாங்குவது அவரால் நினைக்க முடியவில்லை என்பதை , அவர் மீளமீள அதை விளக்குவதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.


இங்கு அவர் தோற்கடிக்கபட கூடாது . அவரின் புரிதலின் பிழையை இதைவிட மிக சரியாக உணரும் தருணம் அவருக்கு  வரப்போவதில்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்