https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 25 நவம்பர், 2017

அடையாளமாதல் - 249 * உட்பூசலின் சிதைவு *

ஶ்ரீ:



பதிவு : 249 / 335 / தேதி :- 25 நவம்பர்    2017

* உட்பூசலின் சிதைவு *


முரண்களின் முனைகள் ” - 18
கருதுகோளின் கோட்டோவியம் -02



தலைவர் நினைப்பது நாராயணசாமி மீளவும் தில்லி செல்வது அவருக்கோ அல்லது மாநில கட்சி அரசியலுக்கோ உகந்ததல்ல என்கிற ஆழமான கருத்து எழுந்திருக்கலாம் . தேர்தல் என ஒன்று வரும்போது , அரசியல் கடமை அதை எதிர்கொள்வதே என ஒருவர் பேசினால் அது திரிக்கும் முயற்சி என்கிற சொல்  நிற்காது . அதற்கு தலைவர் என்ன விளக்கத்தை சொன்னாலும் இந்த சமயத்தில் அது எடுபடப்போவதில்லை என்பதை அவர் அறிந்திருந்தாலும் , அவர் எப்போதும் விழைந்ததை சொல்லும் மனத்திடம் வாய்ந்தவர்.

பிறரிடம் பேசும்போது தலைவரை பொறுத்தவரை அவர் எந்த சிந்தனை பயணத்தையும் தன்னிடமிருந்தே துவங்குவார் . பொதுவாக நாம் எல்லோரும் அங்கிருந்தே அதை ஆரம்பிப்போம்  . நாராயணசாமி முதல் முறை இந்த பதவிக்கு தலைவரால் தெரிவு செய்யப்பட்டபோது அவருக்கென தனித்த திறமைகள் வெளிப்படாதா காலம் . வாய்ப்பு கிடைக்கும் எவரும் அதை தொடர்நது தக்கவைத்துக்கொள்ளவே முயற்சிப்பர் . வெகுசிலருக்கு மட்டுமே அது சாத்தியப்படுகிறது . அரசியலில் தன்வளர்ச்சி என்பது பிறிதெவருடைய பாதையை மறிப்பது .முதலில் மனம் அதற்கான நியாயங்களை கற்பித்துக்கொள்கிறது . அதை எவர்முன் வைத்தாலும் அதற்கு ஒரு நேர்மை வழிமுறையாக சொல்வதற்கான பயிற்சி நமக்குள் மறைமுகமாக பின்னப்பட்டிருக்கும் .

ஆனால் இதை தொடர் செயல்திட்டமாக மாற்றிக்கொள்ளும் போது முரண் துவங்கிவிடுகிறது  . இந்தக்கட்டத்தில் ஆதரவு , எதிர்ப்பு என உள்கட்ட அமைப்பு பிரிவுறுவது தவிர்க்க 
இயலாதது . அந்தந்த தரப்பு தனக்கான தர்க்க நியாயாத்தை கற்பித்துக்கொள்கிறது . தலைவர் பொறுத்தவரை தெரிவு செய்யப்பட்ட எவரும் அதை தனக்கான வளற்சியாக முன்னிறுத்துவதை தனக்கு எதிரான அறைகூவலாக அவர்  பார்க்கலாம் . இந்த சூழலில் அனைத்தும் ஒருவித மறைமுக தன்மையை அடைந்து விடுகிறது

ஒருவருக்கொருவர் அடுத்தவரை தனது நிழல் என தன்  பாதையில் குறுக்கிடுவதை அறியும்போது திடுக்கிடுகிறார்கள் . இது வன்மமாக மாறுகிறது . இதன் பொருட்டு எழும் இரு  பக்க குறுங்குழு இதனால் பயனடைய முயற்சிக்கும்போது . அதன் பின் விளைவுகள் ஒரு நாளும் சீர்செய்ய இயலாதபடி திரிபுற்று பரஸ்பர துரோக குற்றச்சாட்டாக வெளியாகிறது . அநேகமாக தலைவர் நாராயணசாமியின் சிக்கல் இந்த இடத்தை அடைந்துவிட்டிருக்க வேண்டும் . ஒருவரை ஒருவர் நிழல்களை கண்டு கலக்கம் கொள்ள துவங்கியதும் மனிதமனம் நிழலான பாதையிலிருந்து வெளிச்சத்திற்கு வர விழைகிறது . காரணம் இருபக்கமுள்ள அதன் கூர் வெளிப்பட்ட பிறகு காரியங்கள் வேகமெடுக்க துவங்கும் . அப்போது அது மறைமுக விளையாட்டிற்கான களமல்ல . அது எந்த காரியத்தையும் வேகமெடுக்க வைக்காது . அப்போது பகிரங்கமாக தெரிய யாரவது ஒருவர் முதலில் வெளிப்பட்டாக வேண்டும் என பிறிதொருவர் எதிப்பார்ப்பார்.

அதுவரை அனைத்தும் கருத்தாக உலவியது நேரடியாக  வைக்கப்பட்டால் , இதன் அடுத்த கட்டம் ஓட்டுவருக்கொருவர் நோக்கிய பரஸ்பர குற்றச்சட்டுகளே. இது தலைவர் நாராயணசாமி இருவரும் தங்களின் ஆழங்களை பேதித்துக்கொண்டு வெளி வருவதற்கான முன் கணம் . இந்த சந்தர்ப்பத்தில் அது வதந்திகளின் காலம் . இதுதான் அந்த உடைப்பை மேலும் பிளக்கும் நெருப்பிற்கு தீனி . அது எங்கும் இனி பேசப்படும். இது நல்லதற்கல்ல

பாலனை விட்டு பிறியும்போது நாராயணசாமிதான் எனது தலைவராக தெரிந்தார் . அவருடன் அணுக்கமாக பழகுகிற வாய்ப்பை நான் அடைந்தபோது .  என்னால் மட்டுமின்றி எவராலும் , ஒருகாலமும் அணுக்கமாக நெருங்கமுடியாத ஏதோ ஒரு தடை அவரிடம் இருப்பதை  உணர முடிந்தது . அது ஏன் என என்னால் அன்று புரிந்துகொள்ள முடியவில்லை . தலைவருக்கும் எனக்கும் தலைமுறை இடைவெளி ஒரு பள்ளத்தாக்கு அளவிற்கு ஸ்தூலமா இருந்தும் அவரை என்னால் மிக அணுக்கமாக உணரமுண்டித்தது ஏன் என பலமுறை கேட்டுக்கொண்டதுண்டு . தலைவருக்கு அடுத்த நிலையில் நாராயணசாமிதான் என்கிற நிலையில் , இப்போது வெளிப்பட இருக்கும் பனிப்போர் பலவித சிக்கலை உருவாக்கலாம்

தலைவர் வீடுவந்ததும் வல்சராஜும்  நானும் தலைவரை சந்திக்க சென்றோம் . வல்சராஜ் தலைவரிடம் பேசும்போது ஒரு விஷமத்தனம் அல்லது குறும்பு இயல்பாக வெளிப்படும் . பலநாள் நெருக்கும் ஏற்படுத்தும் ஒருவகை வயதிற்க்குமீறிய அணுக்கம் அல்லது அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தன்னிறைவை அடைந்தவரின் ஒரு ஆணவம் என அதற்கு ஏதாவதொரு காரணமிருக்கலாம் . தலைவர் கண்களில் அதை ரசிக்கும் தன்மையில்லை என்பதை புரிந்துகொண்டேன் . வல்சராஜும் இதற்கு சளைத்தவரல்ல என்பது அவரது உடல்மொழியில் வெளிப்பட்டது . நான் மெல்ல அங்கிருந்து கழன்று கொண்டேன் . பின்கட்டுக்கு வந்தபோது நான் எதிர்பார்த்ததுபோல சூர்யநாராயணன் அங்கிருந்தார் . அவரை சுற்றி தலைவர் உதவியாளர்கள் கூட்டமிருந்ததால் நான் ஒன்றும் பேசாது ரவியிடம் டீ கேட்டேன் . சுற்றியிருந்தவர்கள் சூழ்நிலையை புரிந்துகொண்ட ஒருவர்பின் ஒருவராக  வெளியேறினார்கள்  . சூரியநாராயணனிடம் விசாரித்த போது அவருக்கே உரித்தான  எள்ளளுடன் சொன்னது , நான்  முன்பே அவதானித்திருந்ததை ஒட்டியே இருந்தது  . ஆனால்  தலைவர் பக்க செய்திகள் அதில் மேலதிகமாக இருந்தது . ஒற்றை வரியில் சொல்வதென்றால்தலைவர் நாராயணசாமி தெடர்ந்து தில்லியில் இருப்பதை விரும்பவில்லை” . இது  அமைப்பிற்குள் சமநிலையை சரிக்கப்போகிறது . இதில் எது சரி தவறு என வெளியலிருந்து சொல்வது சாத்தியமில்லை . தலைமையுடன் முரண்படுதல் தனிஆளுமையின் அடையாளமாக இருக்கலாம் . ஆனால் அது அடிப்படையை சரித்துவிட கூடியதாக என் போன்றவர்களால் பார்க்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...