ஶ்ரீ:
பதிவு : 248 / 334 / தேதி :- 24 நவம்பர் 2017
* கட்டுக்கடங்காத புறவய அதிகாரம் *
“முரண்களின் முனைகள் ” - 17
கருதுகோளின் கோட்டோவியம் -02
டிசம்பர் 6 முதல் 9 வரை ஹோட்டல் தாயி ல் ரூம் எடுத்திருந்தோம் . முதல் நாள் நிகழ்வு ஒரு அதிர்ச்சி போல துவங்கியது . கீதை ஒரு பிற்ச்சேர்கை என்று அவரது பேச்சு துவங்கியது . நான் அவர் முழுமையாக சொல்ல வருவதுடன் அனைத்தையும் பொருத்தி பார்ப்பது பின் , அவருடனான என் முரண் எந்தெந்த வகை என கணக்கிடுவது என , அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்தேன் , இறுதியில் அவருடன் பெரிதாக நான் முரண்பட ஒன்றில்லை என புரிந்துபோனது .
நான் வணங்கும் வெக்திக்கு கணக்கில் அடங்க பெருமைகள் இருக்கும் போது அதீதமான தொன்மை என்கிற ஒன்று ஏற்றப்பட்டு அது சிதைந்து போகும் வாய்ப்பும் , நவீன இளைஞர்களை மையப்படுத்தி , இயல்பில் அவர்கள் எந்தெந்த முறையில் அதற்கு எதிர்வினையாற்றுவார்கள் என்கிற புரிதலை மையப்படித்திருந்தது அந்த நிகழ்வு . பல தலைமுறையை கடந்து உரையாடும் வாய்ப்பை அது திறந்து கொடுத்தது . முதல் நாள் நிகழ்விற்கு முடிந்த பிறகு மேடையில் இருந்து இறங்கி சூழ்ந்து கொண்ட வாசகர்களுடன் உரையாடியபடி இருந்தவரிடம் , நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன் . அந்த கீதை நான் என்ன எதிர் நோக்குகிறேன்? அது எங்கிருந்து நான் துவங்கவேண்டும்? என்பதும் அதை பற்றி யாருடன் சொல்லாட வேண்டும் என அந்த நிமிடத்தில் முடிவானதும் . நான் அவருடன் சந்திக்கும் வாய்ப்பை கேட்டதும் தயங்காது நாளை காலை சந்திக்கலாம் என்றார் .
சில காரணங்களுக்காக அது மறுநாள்தான் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது . அவரது உடல் நிலை சற்று பாதித்து மருத்துவரை சந்திக்க புறப்படும் முன்பக்க என்னை சந்திக்க நேரம் கொடுத்திருந்தார் . கொடுக்கப்பட்ட நேரம் 30 நிமிடம். அது எனக்கு போதுமானது . அந்த உரையாடலை துவங்கும் முன்பாக நான், எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை நான் முழுமையாக எனக்கென எடுத்துக்கொள்கிறேன் என்றேன் . அவர் சொல்ல விழைந்ததை அவரது எழுத்துக்கள் வழியாக அறிந்திருந்தால் எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை முழுமையாக நான் உபயோகப்படுத்திக்கொள்ள விழைந்தேன் .
அது என்னை பற்றியது அவர் மூலமாக நான் அடைந்த மாற்றம் எனக்குள் நிகழ்த்த உடைவுகள் எனது தேடல் நிகழ்த்த விரும்பும் நிகழ்வு அதற்கு அவரது ஆதரவு . மிக நீண்ட உரையாடலாக அது மாறியது . 2 மணி நேரம் நீடித்து . மிகுந்த மனா நிறைவுடன் அங்கிருந்து வெளிவந்தேன் . முற்றாக புதிய உணர்வுகள் நம்பிக்கைகள் சவால்கள் பற்றிய நினைவோடு என்னை ஆக்கிரமித்த ஆளுமையின் எளிமையும் ஆதரவு மட்டுமே என்னுடன் இருப்பதை உணர்ந்தபடி இருந்தேன்.
என்னை எனக்கே அடையாளம் காட்டி எனக்கென ஒரு உலகலளாவிய கருத்தும் நேரான பார்வை,பாதை இருப்தாக நினைக்க வைத்ததற்கும்.எனக்கென ஒரு எழுத்து உருவாவதற்கும் காரணமான அவரை வாழ்நாளில் மறக்க இயலாது.ஏறக்குறைய இரண்டு வருங்களாக நிறுத்தி வைத்திருந்த இயக்க விஷயங்களை தடையற தொடர முடியும் என்கிற நிறைவோடு வெளியே வந்தேன்.
நான் சொன்ன கருதுகோளின் உச்சத்தில் அதைப் பற்றிய தெளிவாக முடிவில் அவர் முன்பே வந்து நேர்ந்திருந்தார். நான்தான் அதற்கு இன்னும் தயாராகாத நிலையில் இருந்தேன். மரபான இடத்தில் அவர் நினைக்கும் கருதுகோள் எப்படிபட்ட விளைவுகளை உருவாக்கும் என்கிற புரிதலை நான் அடைந்தால் அன்றி அதை செயல்படுத்துவது முடியாது . அதில் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் எத்தனை வீரியமுள்ளவை என்பதை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன் . உளப்பதிவுகளை எழுதிக் கடப்பது என்பது என்னை தொகுத்துக் கொள்வது . அதன் நோக்கத்தில் இந்தப்பதிவுகளை எழுதத்துவங்கினேன்.
நடுவில் தலைவர் சண்முகத்தை ஏன் மையப்படுத்தி இந்தப் பதிவு இருக்கிறது என்பதை விளக்க தொடங்கி ஜெயமோகனை பற்றிய பதிவாக அது மாறிவிட்டது . அதற்கென தனியான நேரத்தில் அதை இன்னும் விரிவாக பார்க்க வேண்டும் என்பதால் மறுபடியும் விட்ட இடத்திலிருந்து என்னை தொகுத்துக் கொள்ளலாம் என இருக்கின்றேன்.
சூர்யநாராயணன் தலைவரை பார்க்க புறப்பட அவருடன் ஆனந்த பாஸ்கரும் புறப்பட்டு சென்றார் . நானும் வல்சராஜும் தனித்து விடப்பட்டோம் . வல்சராஜ் மிக இயல்பாக தனது தரப்பை சொல்லத்துவங்கினார். தில்லியிலிருந்து புதுவை அரசியலுக்கு தலைவர் திரும்பிய பிறகு நாராயணசாமி தில்லையில் தனது நிலையை வளர்த்துக்கொண்டார் . தலைவர் முன்பு பார்த்த நாராயணசாமி இல்லை இவர் , நான் வல்சராஜ் பேசுவதை கேட்டபடி இருந்தேன் . அவர் விரிவாக அதை தனது கோணமாக சொன்னார். பின்னர் இருவரும் தலைவர் சந்திக்க கிளம்பினோம் . நான் வண்டியில் அவருடன் ஒன்றும் பேசவில்லை . தலைவர் மற்றும் நாராயணசாமி இருவரின் கோணத்தையும் யோசிக்க துவங்கினேன். இப்போது வாசித்த “சாட்சி மொழி” கட்டுரைத் தொகுப்பில் திரு.ஜெயமோகன் அவர்கள் சொல்வதை அப்போதுள்ள சூழலில் பொருத்திப் பார்க்கும் போது அதில் பல அலகுகளாக அவை பிரிவதை அவதானிக்க முடிகிறது.
அசலான நிகழ்வுகளும் அதற்கு காரணமா இருப்பவைகளும் துரதிஷ்டவசமாக பொதுவெளியில் விவாதத்திற்கு வருவதில்லை இந்த சூழலில் நான் தலைவர் சண்முகத்தை மையப்படுத்தி இந்த பதிவை வைக்க முற்சிக்கிறேன் . என்னை போன்றவர்கள் அரசியலில் ஈடுபடுகிற வாய்ப்பை பெற்றபோது அவர் மட்டுமே அனைத்தின் மிச்சமாக இருந்தார் . நான் கண்ட ஒழுங்கீனத்தை மாற்றும் முயற்சியில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டபோது முழு ஒத்துழைப்பை கொடுத்ததும் வழிகாட்டி அழைத்து சென்றதாலும் தற்போது அப்படிபட்ட ஒருவரை காணக்கிடைக்காததாலும் அவரே என்னளவில் காங்கிரஸின் பழைய சிஷ்ய பரம்பரையின் அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்க முயற்சித்த தலைமுறையின் மிச்சங்ளாக காண்கிறேன் . அதனாலேயே அனைத்தையும் அவரது கோணத்தில் சொல்ல விழைக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக