https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 6 நவம்பர், 2017

அடையாளமாதல் - 230 * மையங்கொண்ட புயல் *



ஶ்ரீ:



பதிவு : 230 / 316 / தேதி :- 06 நவம்பர்    201


* மையங்கொண்ட புயல்  *




வாய்ப்புகளில் புரியாமை - 15 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.

உங்களுடனான நட்பை நல்ல முறையில் பேண விரும்புகிறேன். இங்கு நிலவும் அர்த்தமற்ற போக்கு என்றேனும் ஒருநாள் என்னை உங்களுக்கு  எதிரெதிராக கொண்டுவந்து நிறுத்திவிடும் என அஞ்சுகிறேன் “என்றேன். அதற்கு அவர் சிரித்தபடி “எனக்கு எதிர் நிற்க அஞ்சுகிறாயா?” என்றார். “இல்லை நான் அஞ்சுவது என்னை” என்றேன் . “இது எனக்கு பழக்கப்பட்ட களம் , நான் செயல்பட வேண்டுமென முடிவெடுத்துவிட்டால் இங்கு நீங்கள் மட்டுமல்ல எவரும் என் எதிர் நிற்க முடியாது . நான் சிக்கலின் மையத்திலிருப்பதை வெறுக்கிறேன்” என்றேன் . “இது முடிவுறாத கதவுபோல மீள மீள சிக்கலின் மையத்தில் என்னை நிலைகொள்ளச் செய்கிறது” . வல்சராஜ் “இது அரசியலில் ஒரு அங்கம் என இன்னும் உணரவில்லையா” என்றார் . “அது எனக்கு புரிந்திருக்கிறது” . “ஆனால் அதை எனக்கு நிகழ்த்துபவர்கள் மிக வேண்டியவர்களாக இருப்பதால்  வலிமிகுந்ததாக உணர்கிறேன்” என்றேன்.





அரசியலில் எதிர்கொள்ளும் அனைத்து சிடுக்குகளும் எனக்கு வேண்டியவர்களால் ஏற்படுவது அல்லது அவர்கள் மெளன பார்வையாளராக இருக்க சிலர் வேறு செய்வது . அதைத்தான் அரசியல் என அந்த சிலர் நினைப்பதை எதிர்க்கிறேன் . கட்சி அரசியல் எனது பாதையை என நான் தோர்ந்த போது அதன் அங்கீகாரத்தை குடிமை சமூகம் அளிக்கவேண்டும் என்கிற கருதுகோளை ஒட்டியே அதை உருவாக்கிக் கொண்டேன் . அதை நிரந்தரமாகப் பெறுவதற்கு முறையான செயலூக்கமும் அவர்களுடான நல்ல தொடர்புருத்தலும்தான் நல்ல அரசியல் என நம்புகிறேன் . தன்னை நிலைநிறுத்திக்கொள்வதை  தாண்டி அரசியலென்ற ஒன்று இருக்கிறது என்றால் அது இதுதான் . தலைவர்கள் அரசியலின் போக்கை ஒவ்வொரு முறையும் நிர்ணயம் செய்வதில்லை. அது ஆற்றுப்பெருக்கென தன்வழியை தான் தேர விடுவது என்கிற கோட்பாட்டை அனைத்திலும் நடைமுறை படுத்த முயல்பவர்களாகவே அவர்கள் எப்போதுமே இருந்திருக்கிறார்கள் .

வளர விழைபவர்களின்  அரசியல் , நல்ல செயல்பாடுகளைக் கொண்டதாக மட்டுமே இருப்பது . அதனாலேயே அது பிறரின் பார்வைக்கு சரியும் தவறுகளுமாக அனைத்தையும் முன்நகர்த்துகிறது. இதில் மாறுபட்டு நிற்பது எனது வழிமுறைகள் . பழைய அனுபவங்களிடமுருந்து  நான் அவற்றை அடைந்ததனால் முடிந்தவரை தவறுகளுகளை தவிற்கமுயற்சிப்பது. எனக்கு மேலான ஸ்தானத்தில் இருப்பவர்கள்  என்னை போன்ற ஒருவனிடம்  இதுபோன்ற ஒரு அணுகுமுறையை அவர்கள் இதுவரை கண்டதில்லை, அதனால் பதறுகிறார்கள் , முடக்க நினைக்கிறார்கள் . என் வழிமுறைகள்  எனக்கு முதல் நிலையானது . அதை எனது உளத்திருப்திக்காக ஆற்றுவது . அதை தொடர்ச்சியாக நிகழ்த்த  ஒரு எனக்கு  ஸ்தானம் தேவைபடுகிறது . அதை தானாக கிடைக்க அரசியில் செய்கிறேன்  . அது கிடக்காமல் போனால் கவலை அடைவதில்லை . எனவே அதை தேடி நான் செல்வதில்லை

ஏன் இப்படி சிந்திக்கிறேன் என்பதற்கு , ஊசுடுவில் நடந்ததையும் அதன் பின்விளைவுகளையும் வல்சராஜிடம் சொன்னேன் . “அரசியல் சூழ்தல் நான் அறியாததல்ல . செயல்பாடுகளை சரியாத திக்கில் செலுத்துவதற்கும் அந்த  வெற்றியின் பலனை பொருத்திருந்து பெறுவதையும்  விரும்புகிறேன் . முரணியக்கமாக அதை செய்ய நான் தயங்குவதில்லை . ஆனால் அதையே உட்கார்ந்த இடத்தில் செய்துகொண்டிருப்பவர்களை நான் வெறுக்கிறேன்என்றேன்வாசராஜ் என்ன சொல்லியும் நான் ஏற்கும் நிலையில் இல்லை என்பதையும் அது அவரது பதட்டத்தை அதிகரிக்க செய்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன் . என் நோக்கம் அவருக்கு பதட்டத்தை கொடுப்பதில்லை . நான் அங்கிருந்து கிளம்ப முயற்சிக்க அப்போது சூர்யநாராயணன் உள் நுழைவதை பார்த்தேன் .

உள்ளே நுழைந்த சூர்யநாராயணன் நாங்கள் இருக்கும் இருப்பில் ஏதோ உய்த்துணரந்து என்னைப்பார்த்தது எள்ளலாக கண் சிமிட்டிய படிஏதாவது சதியாலோசனையா? நான் வரலாமில்லையா ?” என்றார் . வல்சராஜ் மெளனமாக நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார் . அதை வாங்கிய வேகத்தில் படித்து முடித்து வல்சராஜிடம் கொடுத்தார் . நான் அவர்கள் பேசட்டும் என வெளியேற எழுந்தபோது , சூர்யநாராயணன் என்னிடம் உட்காரச்சொல்லி என்னிடம்  நான் சென்ற பிறகு உங்கள் சின்ன பசங்க விளையாட்டை  வைத்துக்கொள்ளுங்கள் , நான் ஒரு முக்கிய தகவல்  சொல்ல வந்திருக்கிறேன் , வல்சராஜை சந்தித்து பேசிய பிறகு உங்களைத்தான் அழைக்க எண்ணியிருந்தேன்என்றார் . அதற்குள் முன்னாள் அமைச்சர் அனந்தபாஸ்கர் உள்ளே வந்தார் . ஏதோ சிக்கலென புரிந்துபோனது . “என்னை பார்த்ததும் என்ன துவங்கிவிட்டீர்களாஎன்றார் . நான் மௌனமாகி வல்சராஜை பார்த்தேன் .இவரிடமும் அந்த கடிதத்தை காட்ட போகிறாரா? என நினைத்தேன் நல்லவேளையாக . அவர் அதை செய்யவில்லை

தலைவரின் செய்தியாளராக சூர்யநாராயணன் சொல்லவந்தது சற்று சிக்கலான விஷயம் . அதை வல்சராஜ் மட்டும்தான் கையாள முடியும்நாராயணசாமியின் பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் பதவி முடிவுறுகிறது . தலைவர் இந்தமுறை கட்சி  போட்டியிடவேண்டாம் என்கிற முடிவில் இருப்பதாக சொன்னார் . நமக்கு போதிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலம் இல்லாததால் பல சிக்கல் எழ வாய்ப்புள்ளதாக நினைக்கிறார் . ஆனால் நாராயணசாமி வெற்றி தோல்வியை பற்றிய கவலை இல்லாது , தேர்தல் என்று வந்தால் கட்சி சார்பாக யாரவது நிற்கத்தான் வேண்டும் என்கிற முடிவிலிருப்பதாக சொன்னார்  . இரண்டு பட்சத்திலும் நியாயமிருப்பதாக தோன்றினாலும் , இரண்டு பக்க அரசியலின் உள்மடிப்பில் எண்ணிக்கையிலடங்கா அரசியல் கணக்குகள் உறைகின்றன . அவற்றை உள்ளாழ்ந்து  அகழ்ந்து  இரவு முழுவதும் நாங்கள் பேசினாலும்  அதன் பின்புலத்தில் உள்ள எல்லா அரசிய்லையும் பேசிவிட இயலாது .

நாராயணசாமியையும் சேர்த்து நாங்கள் அனைவரும் தலைவரின் ஆதரவாளர்கள்தான் , இருப்பினும் தலைவரா?, நாராயணசாமாயா? என்கிற கேள்வி எழுந்தால், வல்சராஜ் எப்போதும் நாராயசாமியை நோக்கிய மனச்சாய்வு கொண்டவர் . தலைவர் தரப்பில் நாங்கள் மூவர் மிச்சப்படுவோம் என்றாலும் எங்களுக்குள் ஸ்தான பேதமிருக்கிறது . ஆனால் ஒன்று தெளிவாக தெரிந்தது பெரும் புயலின் தொடக்கமிது . அனைத்து நிலைகளையும் புரட்டிப் போடக்கூடியது. இதை ஒட்டி தன்னிலை மறந்து அவசரத்தில் ஏற நினைப்பவர்களை சுற்றி எழும் பதட்டம் உள்ள  கூட்டமும் , அதைசுற்றி நிகழவிருக்கும் அனர்த்தங்களையும் அப்போது  என்னால் யூகிக்க முடிந்தது . புயலின் மையம் நாங்கள் உருவாக்க நினைக்கும் எங்களின் எதிர்காலத்தை சிதைக்கக் கூடியது என நினைத்தேன்.ஆனால் முற்றாக அழிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்