https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 28 நவம்பர், 2017

அடையாளமாதல் - 252 * புறத்தை தொடும் அகத்தின் தருணம் *

ஶ்ரீ:



பதிவு : 252 / 338 / தேதி :- 28 நவம்பர்    2017

* புறத்தை தொடும் அகத்தின் தருணம் *


முரண்களின் முனைகள் ” - 21
கருதுகோளின் கோட்டோவியம் -02



வல்சராஜ் என்னிடம் "நமது ஆதரவை யாராக இருந்தாலும், நாம் கொடுத்தே பிறர் பெறுவேண்டியத  அது மாறி வரும் சூழலுக்கு ஏற்ப்ப , நிலைப்பாடுகளிலிருந்து எழுந்து வருவது . யாரும், யாருக்கும் அதை சாஸ்வதமாக கொடுப்பதோ பெறுவதோ முடியாது . இதை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்பதிலிருந்து , அவர் நான் என்னையும் என் ஸ்தானத்தையும் பலத்தையும், அறிந்து கொள்ளாத சிறிய வட்டத்திற்குள்ளேயே நின்றுவிட்டதாக அவர் நினைத்திருக்கலாம் . ஏன் அப்படி ஒரு குறுகிய வட்டத்திற்குள் நான் என்னை நிறுத்திக் கொள்கிறேன் என்கிற புரியாமை அவருக்கு இருப்பதை என்னால் உணர முடிகிறது . அது அப்படியல்ல  என நான் அவரிடம் விளக்கிக்கூற முடியும் . ஆனால் இப்போது அதற்கு அவசியமிருப்பதாக நினைக்கவில்லை . என்னை நான் என் அகத்திலிருந்து வெளிப்படுத்தி ஒரு தனி ஆளுமையாக முன்னிறுத்த முயல்கிறேன் . ஆனால் என்னை என் அடிப்படையாலேயே அங்கீகரிப்பவர்களால்  மட்டுமே அதை ஏற்க முடியும் , என்பது ஒரு சிறிய கோட்பாடு.

தங்களை  பிறர் எப்படி புரிந்துகொள்ளவேண்டும் , எதை போன்ற வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற தெளிவு அவர்களின் விழைவிலிருந்தே நமது அடையாளமாக எழுந்து வருவது . எல்லோருக்குமே தங்களை பற்றி பிறருக்கு அப்படி ஒரு பார்வையோ எண்ணமோ இருக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கவே செய்கிறது . ஆனால் பிறிதொருவரால் அப்படி பார்க்கப்பட்டால் மட்டுமே அதை முன்னெடுக்க முடியும் . இல்லை எனில் அது ஒரு சுமையான கனவு மட்டுமே என எஞ்சும்  . நான் என்னை பிறர் எப்படி பார்க்க வேண்டும் என் விழைகிறேனோ அதன் படி எனது செயல்பாடுகளை  அமைத்துக்கொள்கிறேன் . நான் அவற்றை ஒருபோதும் நடிப்பாக செய்வதில்லை . நடிப்பு ஒரு நாள் உண்மையல்ல என வெளிபட்டேயாகும்.

தலைவர் , வல்சராஜ் ,நாராயணசாமி மூவரின் பார்வையில் நாராயணசாமியை தவிர , நான் என்னை வெளிப்படுத்திய  கோணத்திலேயே நான் பார்க்கப்பட்டேன் . தலைவர் என்னை, நான் வெளிப்படுத்திய ஆளுமையாக எடுத்துக்கொண்டார். ஆனால் அதற்கு அவருக்கு என்னை நான் நிரூபிக்க கிடைத்த சந்தர்பத்தில் அதை சரியாக செய்ததால் அவரால் அங்கீகரிக்கப்பட்டேன்

அங்கீகாரமென்பது பிறரால் சிலருக்கு மட்டுமே  வழங்கப்படுவது   அதற்கு காலமும் துணைக்க வேண்டும் . ஒன்று அதுவரை தான் நினத்தது சரி என்றோ ,அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயம் , சந்தர்ப்பத்தை உள்ளடக்கியதாக அவை எப்போதும் இருக்கும் . மாற்றமடைந்தபடி இருக்கும் அரசியல் நிலைப்பாடுகளை ஒட்டி , ஒவ்வொரு முறையும் அதற்கான அனுமதியை பெற்றே இயங்குதல் முறைமை . அது சாமானயர்களின் வழி . நான் அந்த வட்டத்திற்குள் என்னை நிறுத்திக்கொள்வதில்லை . என் பொறுத்தவரை அங்கீகரிக்கப்படுவது, சூழலால் இல்லை ;அது ஒரு நபரை அவரது தனி ஆளுமையைப் பற்றியது என்பதே .

அரசியல் என்பது நித்தமும் கால பாகுபாடு இன்றி பல அலகுகளாக இயக்கம் கொண்டிருப்பது  . அது அணிகளாக சதா முயங்குவதால் பல்வேறு முரண்களின் தொகுப்பாகவே அது எப்போதும் இருந்து கொண்டிருப்பது . தலைமையிடம் ஒவ்வொரு முறையும் சூழலை விளக்கி பெறும் அனுமதியால் நடைபெறுவதல்ல அரசியல் . அது எப்போதும் களத்தில் முடிவு செய்யப்படுவது . அங்கீகாரம் அதை செய்பவனுக்கானது , செயல்களுக்களுக்கானதல்ல . அந்த நம்பகதத்தன்மையை அடைவேண்டியது செயலாற்றுபவனே. அவனை ஒருமுறை அவனது செயல்பாடுகளிலிருந்து அவதானித்த  பிறகு , அதை ஒவ்வொரு முறையும் செய்வதைப்போல மடமை பிறிதொன்றில்லை . அது நட்ட செடி முளைத்ததை உறுதி செய்ய , நித்தம் பிடுங்கி பார்த்து பின் மீளவும் நடுவதை போல.  

வல்சராஜுக்கு என்னை புரிந்து கொள்ளவதற்கான சந்தர்ப்பத்தை நான் தனித்து அவருக்கு கொடுக்காத போதும் என்னை அனுமானித்து அவரது தனி ஆளுமை காரணம். என்னை தனித் திறம்வாய்ந்தவனாக அவர் எப்படி கணக்கிட்டார் என தெரியவில்லை . தலைவருக்கும் அவருக்கும் , அது மரபார்ந்த மற்றும் நவீன புரிதலுக்குமான வித்தியாசமாக இருக்கலாம் . நான் நாராயணசாமியால் அவதானிக்கவே அவசியமில்லாதவனாக தோன்றி இருக்கலாம் ,அல்லது அந்த இருவரையும் விட மிகத்துல்லியமாக , நான் ஒருக்காலும் அவருக்கு அணுக்கமான நிலைக்கு வரமாட்டேன் என , எனது உடல் மொழியிலிருந்து புரிதலை அவர் அடைந்திருக்கலாம் .

இப்போது வல்சராஜ் என்னுடன் பேசிக்கொண்டிருப்பதற்கு தனித்த சில காரணங்கள் அடிப்படையாக இருக்கலாம் . என்னை தலைவரின் ஆதரவு மனநிலையிலிருந்து நிகர்நிலைக்கு நகர்த்துவது . அல்லது இவையெல்லாம் முற்றாக என் கற்பனையாகவும் இருக்கலாம் . ஆனால் அனைத்தையும் கடந்து ஒன்று நிஜம். வெகு விரைவில் ஒரு பிளவு நிகழ இருக்கிறது . அதற்கான முதல் நிலை அடையாளங்களை என்னால் பார்க்க முடிகிறது, அதனாலேயே இதைப் போன்ற உரையாடல்களின் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.


இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைமை பொறுப்பில் வல்சராஜ் இருப்பதால் அவருக்கு அடுத்த ஸ்தானத்திலிருக்கும் நான் அவருக்கு சரியான இடத்தில இருந்ததாக வேண்டியது அவரது அரசியலுக்கு உகந்தது என் எண்ணுகிறார்  என நினைக்கிறேன். அரசியலில் முதிரா இளைஞனின்  கடுமையான ஆதரவு நிலைப்பாடு யாரை நோக்கி இருந்தலும், அது கண்மூடித்தனமான வழிபாடாகத்தான் வல்சராஜ் போன்றோரால் பார்க்க முடியும் என புரிந்திருந்தேன்  . ஆனால் நான் என் கடந்த கால அனுபவங்களிலிருந்து என்னை வடிவமைத்துக்கொண்டு வருகிறேன் . ஆனால் எங்கோ அழ்மனத்தில் அவற்றை நினைத்து, செயும்போதெல்லாம் அதை முன்பே செய்திருந்த எண்ணத்தை அடைந்தபடி இருந்தேன். புறவயம் கொண்டு அகமும் உணரப்படும்போதுதான் , அது ஆளுமையாக முழுமையடைகிறது . வல்சராஜ் எனக்கான இடத்தையும் முறைமைகளையும் முழுமையாக அறித்திருந்ததால்தான்  இப்போது இந்த உரையாடலே இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்