https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 13 நவம்பர், 2017

அடையாளமாதல் - 237 * என்னை பாதித்த ஆளுமைகள் *

ஶ்ரீ:
பதிவு : 237 / 223 / தேதி :- 13 நவம்பர்    2017


* என்னை பாதித்த ஆளுமைகள் *முரண்களின் முனைகள் ” - 07 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02

வரலாற்றில் மாபெரும் சதிகளையும் எதிர்ச்சதிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களின் கற்பனையில் அரசியல் என்பதே மாபெரும் சதுரங்க விற்பன்னர்களின் அதிநுட்பமான காய்நகர்த்தல்தான். கொஞ்சம் விஷயமறிந்த ஒருவர் இவை இந்தத் தளத்தில் ஒருபோதும் நிகழ்வதில்லை என அறிந்திருப்பார். உண்மையில் மிகப்பெரிய அரசியல்நிகழ்வுகள் கூட மிகமிகச் சாதாரணமாக, சின்னச் சின்ன விஷயங்கள் சார்ந்து அதன்போக்கில் நடைபெற்று முடிகின்றன. கடந்த இருபதாண்டுகளாக நான் கவனித்த மிகப்பெரிய அரசியல் நிகழ்வுகள் அனைத்துமே சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தங்கள் பாட்டுக்கு இருக்க, முழுக்க முழுக்கத் தற்செயலாக நடந்து முடிந்தவை. புத்திசாலி அரசியல்வாதி என்பவர் அந்த நிகழ்வுகளில் இருந்து தன் இருப்பை பாதுகாத்துக்கொண்டு லாபம் அடைந்து வெளிவரும் சமயோசிதபுத்தி கொண்டவர் மட்டுமேஎன்கிறார் திரு.ஜெயமோகன் தனதுசாட்சி மொழி கட்டுரைத் தொகுப்பில்.

அறம் சார்ந்த அரசியல்என்பது காலத்தால் ஒரே பொருளை கொண்டிருந்தாலும்; யதார்த்த நடைமுறையில் அவற்றின் அர்த்தம்  வேறுவிதமாகத்தான் திரித்து புரிந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது . இங்குஅரசியலசரி நிலைகளைசொல்லவில்லை . அதை இன்னும் சற்று நுட்பமாக செயல்படுத்துவதில் உள்ள மனநிலையை பற்றி கூறுகிறேன். இன்றைய சூழலில் அதை பயன்படுத்துவது நடப்பை கருத்தில் கொண்டு . தலைவர் சண்முகம் தனது தனித்த போக்கில் அரசியலை நிலைநிறுத்தி அதில் அமர்ந்து பெரும் வெற்றியை அடைந்து  மிக மிக அன்மைக்காலத்தில் மண்மறைந்தவர் . அவரை சுற்றியும் பலவித குற்றச்சட்டை சிலர் கூறி வந்தாலும் ; அது உணமையல்ல என அவர்களுக்கும் தெரிந்தே இருந்தது . தனது வாழ்நாள் முழுவதும் தனது நெறிகளால் அலைக்கழிகப்பட்டு வாழ்ந்தவர் என்பதை எவரும் மறுக்க முடியாது . அந்த அலைக்கழிப்பை பலர் பலவாறு பார்த்தாலும் ; அது தனிமனித அறம் என்கிற சட்டகத்திற்குள் நிகழும் போராட்டமாகவே நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்காந்தி மற்றும் காமராஜரின் காலகட்டத்தை சேர்ந்தவர் . அதன் பாதிப்பில் கடைசீ வரை நிலைநின்றவர் .புதுவை காமராஜர் என அழைக்கப்பட்டு , மிக எளிய வாழ்க்கையில் தனது நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடைசி வரை கடைபிடித்தவர் . அவர் அரசியலில் இருந்த தனது கடைசி காலம்வரை ,புதுவை அரசியல் அவரை மையப்படுத்தியே இயங்கிக்  கொண்டிருந்தது . நடைமுறை வாழ்வியலிலை நெறியோடு சந்திக்கும் ஒருவரை வைத்துத்தான் ; நாம் நேரில் காணும் வாய்பில்லாதவர்களை பலரின் ஆக்கங்கள் வழியாக , அவர்கள் நேர்மறையாக வாழ முயற்சித்தவர்களாக புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்

திரு.ஜெயமோகன் காந்தியை புரிந்து கொண்டால் பீஷ்மரை புரிந்து கொள்ள முடியுமென்கிறார். இந்த ஒற்றை வாக்கியத்தைமீள மீள ஒருவர் மீது ஒருவரை போட்டு பார்த்தால் , அவர்களின் வாழ்வின் தருணங்களை மிக நெருக்கமாக அனுகி புரிந்து கொள்வதுடன் , இந்த இருவர் மீதும் சொல்லப்படுகிற சூழ்நிலை சார்ந்த குற்றச்சாட்டுகள்; அவர்களை தொடவே முடியாத படி இருப்பதை பலவித புரிதல்களாக அடையமுடியும் என்பது, மிக ஆச்சர்யமான உண்மை .எனது மானசீக குருவாக நான் பீஷ்மரை வைத்திருக்கிறேன் . அவரிடம் தொடங்கியே என் நித்தியபடி பூஜைகள் முடிவடைகின்றன. அதன் மூலமாக கங்கையோடும் , வியாச பாரதத்தினோடும் எனக்கொரு உறவை ஒரு  சம்பந்தத்தை உருவாக்கிக் கொள்ளவும் , அதனூடாக  வாழ்வியலில் மாபெரும் மானுட தருணங்களை இன்னும் நுட்பமாக அறிந்து கொள்ள முடிகிறது . அதன் அனைத்து விதமான இடைவெளிகளை நிரப்பிக்கொள்ள எனக்கு திரு.ஜெயமோகனின் வெண்முரசு வாய்ப்பளிக்கிறது .

பல வித அடுக்குகளில் தலைப்பிடப்பட்டு என் மனப்பதிவுகளை இதுநாள்வரை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் . எனது அடையாளமாதலில் கருதுகோளின் கோட்டோவியம் -01 . நான் என்னை முழுமையாக தொகுத்து வடிவமைத்துக்கொள்ள பயன்படுத்திய இளைஞர் காங்கிரஸ் இயகத்தை எப்படி முன்னெடுக்க முயற்சித்தேன் எனபதையும் , பின்னர் அதிலிருந்த பெற்றக் கருத்துக்களை முற்றாக கலைந்து கொண்டு , மீளவும் பிறிதொரு கோணத்தில் தொகுத்துக்கொள்ள; என்னை பாதித்த ஆளுமைகளை மையப்படுத்தி கருதுகோளின் கோட்டோவியம் -02 ல் வடிவமைக்க முயற்சிக்கின்றேன்.

என்னை பாதித்த ஆளுமைகள் மிக சில. அவர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களாக இருந்தார்கள் . பெற்ற அனுபவங்களும் பல விதமாக இருந்தன. ஆன்மீக ரீதியில் திரு கிருஷ்ணப்பரேமி, திரு.வேளுக்குடி கிருஷ்ணன் , திரு DA .ஜோசப் ,அரசியல் ரீதியில் திரு.சண்முகம். இலக்கியத்தில் திரு.ஜெயமோகன். தொழில் ரீதியில் ஆப்பிள்  நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்

இந்த வலைத்தளம் திரு சண்முகத்தின் ஆளுமையை மட்டும் சொல்லவந்ததல்ல . இவை பெரும்பலும் அரசியல் சார்ந்திருப்பதால் அவரை வெகுவாக சொல்லும்படி நேர்ந்தது. எனது ஆதர்ச நாயகர்களாக நான் தலைசூடி கொண்டவர்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் தவிர மற்ற அனைவரும் நான் நேரில் சந்தித்து அவர்களிடம் உரையாடி அவதானித்து ரசித்திருக்கிறேன்

இதில் உள்ள அனைவரையும் ஒரு விஷயம் பொதுமைபடுத்திக் காட்டும். அது அவர்களை கட்டற்ற மனப்போக்கு கொண்டவர்களாக ,அறிந்தவற்றை தங்களின் வாழ்க்கையில் ஒரு நெறியில் நின்று சொன்னவர்களாக. “மனோ வாக் காயத்தினால்தன்னை ஒரு கோட்டில் நிலைநிறுத்த முயன்றவர்களாக . இன்றைய உலகியலில் கோட்பாட்டின் மத்தியில்  இருப்பவர்களாக . அதனாலேயே வாழ்கையில் பெரிதும் அலைக்கழிப்பை சந்தித்தவர்களாக  . 

அவரவர்களிடமிருந்து , நான் அந்தந்தத் துறையின் நுட்பங்களை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருந்தேன். ஆனால் அவற்றையெல்லாம் இலக்கிய வாசிப்பு என்னும்  அனுபவத்தினால் ஒன்றாக ஒரே கோணத்தில் தொகுக்க முடியும் என நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

உண்மையில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இலக்கியத்தையும் ,இலக்கியத்தைப்புரிந்துகொள்ள வாழ்க்கையையும் பயன்படுத்துவதென்பது எளிதல்ல. அதற்கு நுண்ணுணர்வு தேவை. சலிக்காமல் அரசியலில் ஈடுபடுபவர்களிடம் அது அரிதாகவே உள்ளதுஎன்கிறார் திரு.ஜெயமோகன். இது அதுவாகக் கூட இருக்கலாம்.

தனி ஆளுமையான அவர்களில் இருந்து கிடைத்த புரிதல்களும் நுட்பங்களும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படாத தனித்து அறிதல்களாக இருந்த அனைத்தும் எனக்கு பெரும் அலைக்கழிப்பைத் தந்தவை. அவற்றை இலக்கிய வாசிப்பு என்கிற அடைப்பிற்குள் கொண்டு வருகிற போதுஅது எல்லாவற்றையும் இணைக்கும் சரடுபோல ஆகிவிடுகிறது . அதில் வெளிப்படும் இடைவெளிகளை நிரப்ப திரு. ஜெயமோகனுடன் நான் அன்றாடம் நிகழ்ததும் வாசிப்பு அவருடனான  உரையாடல்கள் என இருந்தன என்பேன் . அது அனைத்தும் வாழ்வியலின் நுட்பங்களை பற்றிய தெளிவுகளை கொடுத்துக்கொண்டே இருந்ததற்கு அவரது பலதுறைகளில் தனது எண்ணங்களை அழுத்தமான பதிவு செய்தது காரணமாக இருக்கலாம்

ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்தவர்கள் தங்களின் சமூகத்தொடர்பினாலேயே தங்களின் கருத்துக்களை அடைந்து தங்களை வாடிவமைத்துக்கொண்டவர்கள். ஆனால்  ஒரு இலக்கியவாதி தனது மனப்போக்கில் அவற்றை அனைத்தையும் உள்வாங்கி தொகுக்கும்போது எவரும் அனுபவத்தால் செல்லமுடியாத தூரத்தை அடைந்து விடுகிறார் .அனைத்து ஆளுமைகளையும் மனப்பதிவை நுணுகி நெருங்கி ஆய்ந்து செல்ல முடியும் என்பதை எனக்கு கற்று தந்தவராக திரு.ஜெயமோகனை நினைக்கிறேன் . இருமுறை அவரை சந்தித்திருக்கிறேன் . அவரின் எழுதுகளின் வழியாக அவருடன் தினமும் உரையாடியபடி இருக்கிறேன். அவற்றை பற்றியும் நான் அடைந்த திறப்புக்களை பற்றித்தான் இந்த பதிவில் சொல்ல முயற்சிக்கிறேன்  .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...