https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 23 நவம்பர், 2017

அடையாளமாதல் - 247 * நவீனத்தில் மரபு *


ஶ்ரீ:



பதிவு : 247 / 333 / தேதி :- 23 நவம்பர்    2017

* நவீனத்தில் மாறாத  உயிர்ப்பு     *


முரண்களின் முனைகள் ” - 16 
கருதுகோளின் கோட்டோவியம் -02



ஜெயமோகனின் உரை கீதை பற்றியதாக இருந்தது. பல விதமான மரபான உரைகளும் நவீன உரைகளுமாக அவை கணக்கில்லாமல் புழகத்திலிருக்கின்றன. சம்பிரதாய முக்கியத்தும் வாய்ந்தது  மூன்று . அதன் பிரவர்த்தகர்களான சங்கரர் ,ராமாநுஜர், மாத்துவர் ஆகியோர்களின் உரை பௌரானிக முறைப்படி மோக்ஷ தர்மத்தை பிரதானமாக பற்றி நிற்பவைகள். அதில் சிவ வைஷ்ணவ கருதுகோள் வேறுபாடுகள் பிரசித்தம் . ஒரு நூற்றாண்டு வரை இதன் சர்ச்சைகள்தான் பிரதானம் .

மத கோட்பாடுகள் சாஸ்வதமானதாகவும் , இந்திய விடுதலைக்கு பின் நிகழ்ந்த நவீன இந்திய கட்டமைப்புகளுக்கு  அதற்கு சம்பந்தமில்லாமல் , அவை தனித்த பாதையில் அவை பயணித்தபடி இருந்தன . விடுதலைக்கு முன்பாக சதி ஒழிப்பு போன்றவை மத விருத்தமானதாக மரபான இந்துக்களால் பார்க்கப்பட்டாலும் . பிரிட்டிஷ் ஆளுகையில் , சில காலம் எழுந்த எதிர்ப்பு பின் அணைந்து போனது . ஒவ்வொரு காலகட்டத்திலும் பழமை வழக்கங்கள் கலையப்படுவதற்கு  எதிர்ப்பு எழுந்தாலும் அவற்றில்  மெல்ல மெல்ல சமூகத்தின் விழுமிய வழிமுறைகளுக்குள் வந்தது சேர்ந்தது  . மத தலைவர்களின் கட்டுப்பாட்டில் இந்துமதம் என்றும் இருந்ததில்லை . பெரும் பதவியில் உள்ளவர்கள் , செல்வந்தர்கள் மத தலைவர்களின்  கட்டுப்பாட்டில் இருந்ததால் . அவர்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர்.

மதத்தலைவர்கள் பிராமண சமூகத்தை சேர்த்தவர்களாக இருந்ததாலும், வேதத்தில் அவர்களுக்கே அதிகாரம் சொல்லப்பட்டதாலும் , இந்துக்களின் நெறி நூல்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்ததாலும் , அதை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்களிடமே இருந்து வந்தது . அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மத விஷயங்களைக் இருந்து வெளியேறி தங்களின் பொருளியல்  மேம்பாட்டிற்கு பிற தொழில்களில் ஈடுப்பட துவங்கினர் . அதன் பிறகு மத ரீதியாக  அவர்களுக்கு இருந்த குறைந்த பட்ச அதிகாரமும் கைவிட்டு போனது . தலை எடுத்திருந்த பக்தி மார்க்கம் முழுமையாக அனைத்து சம்பிரதாயங்களையும்  எடுத்துக்கொண்டது

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் யோகம் மற்றும் தத்துவ ரீதியான குரு நிலைகள் பெறுக ஆரம்பித்தன . அதிலிருந்து தத்துவ ரீதியாக பெரிய தாக்கம் உருவாகி வந்தது . ரஜனீஷ் ஒரு முனை என்றால் J.கிருஷ்ணமூர்த்தி பிறிதொரு முனை . சைவ வைஷ்ணவ சாயலிலும் புதிய சிந்தனைகள் எழுந்து வந்தன . மதத்தலைவர்கள் செல்வாக்கு பெரும் சரிவை அடைந்த பிறகு . பல் நெடுங்காலமாக சில அமைப்புகள் அதில் சீர்திருந்தகளை கோரியவனம் இருந்தனர் . அவை நாத்திக போக்கு கொண்ட அமைப்பாக தங்களை அடையாளப் படுத்தி, பொது சமூகத்தில் ஊடுருவ அவர்களால் இயலவில்லை. அவை குறுங்குழுக்களாக அவ்வப்போது திடுக்கிடும் செயல்களை செய்து பத்திரிக்கை கவனம் ஈர்ப்பதோடு அவர்களின் பணி முடித்துக் கொள்கின்றன

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்த துறை   அடைந்திருக்கின்ற வளற்ச்சி அபரிதமானது . அதில் மிக சாமன்யர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது . ss ரவிசங்கர் மற்றும் ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் இதில் குறுப்பிடத்தக்கவர்கள். மரபான நம்பிக்கைக்கு மாற்றாக எழுந்த குருநிலைகளும் , நவீன  தத்துவ போக்கை கொண்ட கார்ப்பரேட் குருநிலைகளும் பின்பற்றுபவர்கள் , அடிப்படை  பொருளியல் தன்னிறைவை பெற்றவர்கள் . ஆனால் தற்போதைய எண்ணிக்கையில் பெரிய மாறுபாடுகள் இருப்பதாக நினைக்கிறேன் . மையக்கரணம் அதுவாகவே இருந்தாலும் சிலர் பொருளியல் ரீதியில் வெற்றிபெற்ற , அல்லது நவீன வாழ்கைமுறையை எதிர்நோக்கி தங்களின்  விழைவை அடையவிரும்பியவர்களாக  அவர்கள் இருந்தனர் . ஆனால் அதில் பெரும் வித்தியாசம் இன்று பெரும் திரளான மக்கள் அதை நோக்கிய நகர்வுதான் . பொருளியல் தன்னிறைவை அடைந்தவர்களுக்கானது இந்த தத்துவ சிக்கல்கள் . மரபான போக்கைவிட இந்த நவீனம் ஈர்ப்பு மிக்கதாக இருந்தது .

உண்ண , உடுக்க , இருக்க , இந்த மூன்றையும் அடைந்த பின் மிச்சமிருப்பது வாழ்வியலை எதிர் நோக்கிய தத்துவ சிக்கல் . அதற்கு நவீன குருநிலைகள் அணுகுவது ஒருவித மன விடுதலையை நோக்கியதாக இருக்கிறது . நான்திறந்த அரங்கம்துவங்க காணமாக இருந்தது மரபான தத்துவ சிந்தனையாளர்களும் நவீன தத்துவ சிந்தனையாளர்களும் ஒரே மேடையில் கொண்டுவருவதை பற்றிய கனவிலிருந்ததுதான் . அதை படிப்படியாய் வளர்த்து எடுக்க ஒரு அடிப்படை கருதுகோளை நோக்கியே எனது பயணம் இன்று வரை இருந்தது கொண்டிருக்கிறது  .  மனிதன் தன்னை சுற்றிய பிரபஞ்சத்துடன் தான் இனைத்திருப்பதை உணரும் வழிமுறைகள் மரபின் நவீனம் என்கிற பார்வையில் சொல்லப்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஜெயமோகன் தனது கீதை உரையை  ஒரு இலக்கியவாதியின் பார்வையாக இருக்கும் என சொன்னார் . அவரது எழுத்துக்களாலும் , சொல் முறையில் உள்ள தொழிட்நுட்பத்தாலும் , நான் எதிர்நோக்கும் ஒரு கருதுகொள் அங்கு கிடைக்கலாம் என்கிற ஆவலே என்னை கோயம்புத்தூர் நோக்கி உந்தியது . செல்லும் முடிவெடுத்தாலும் , தயக்கம் மிகுந்து இருந்தது . நான் பலமுறை வெண்முரசு கூடுகைக்கு கோயம்புத்துருக்கும் சென்னைக்கும் செல்லலாம் என முடிவெடுத்து . பின் எனோ தயங்கி போகாமல் இருந்து விட்டேன் . சென்னை கூடுகைக்கு ஒருமுறை செல்ல முடிவெடுத்த சமயம் பெரும் மழை காரணமாக சென்னை தத்தளித்துபோனதால் கூடுகை தள்ளிப்போனது . அந்த சமயத்தில் தான்  இந்த கீதை பற்றிய செய்தி வந்திருந்தது . செல்லலாம் என முடிவெடுத்தேன். அப்போது அங்கு தனிப்பட்ட வேலை ஏதுமில்லை என்பதுடன், நிகழ்வு மாலை மட்டுமே என்பதால் , காலை மற்றும் மதியம் என்ன செய்வது என்கிற புரிநாமை மனத்தடையாக எழுந்தபடியே இருந்தது .

ஜெயமோகனின் பல கடிதப் பதிவுகளை படித்த பிறகு அவரை பற்றிய ஒரு உருவகம் எழுந்து வந்தாலும் பல சமயங்களில் ஆளுமைகளை நேரில் சந்திக்கும் போது நம் புரிதலுக்கு சம்பந்தமில்லாது திகைப்பையோ ,திடுக்கிடலையோ கொடுத்து விடுவார்கள் . நிறைய ஆளுமைகளை சந்தித்து எதற்கு சந்தித்தோம் என் ஆகிவிட்டதுண்டு . பலமுறை தயங்கி அந்த பேய் மழை காலத்தில் கோயம்புத்தூரை நோக்கி என் நண்பர் ஒருவருடன்  கிளப்பினேன் . பாதி வழியில் கூட திரும்பி விடலாமா என்கிற எண்ணத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன் . மரபான பௌராணிகர்கள் வழியாக கேட்ட ஒன்றை இலக்கியவாதி சொல்லும்போது எப்படி ஒலிக்கும் எனபதை பற்றிய ஆவலும் திகிலும் சேர்ந்தே இருந்தது . சரியோ தவறோ நான் எனது மரபான நம்பிக்கை துணைக்க இங்குவந்து சேர்ந்திருக்கிறேன் அந்த அடிப்படையின் அடிப்படை இந்த சந்தர்ப்பத்தில் உடைந்து போனால் நான் எதார்க்கும் பயன்பட மாட்டேன் என்கிற குழப்பம் ஓங்கி அடித்தபடி இருந்ததது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...