ஶ்ரீ:
பதிவு : 238 / 324 / தேதி :- 14 நவம்பர் 2017
* ஆளுமைகளும் நானும் *
“முரண்களின் முனைகள் ” - 08 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02
“எதை?” என்றார் பலராமர். யௌதேயன் புன்னகைத்து “அதை நான் சொல்ல இயலாது. உணரும்போது இருக்கும் மெய்மை அதை சொல்கையில் அமைவதில்லை” என்றான். “மாதுலரே, சொல்லில் ஒரு புனைவு இருந்தே தீரும். ஏனென்றால் சொல் என்பது புறவயமானது. ஆகவே வகுத்துரைக்கப்பட்ட பொருள் அதற்கு இருந்தாகவேண்டும். வகுக்கப்பட்டவை எல்லையும் அளவும் கொண்டவை. உண்மைக்கு அவ்விரண்டும் இருக்க இயலாது. எனவே சொல்லப்பட்ட அனைத்தும் குறையுண்மைகளே.” வெண்முரசு- எழுதழல் .
வெண்முரசு என் வாழ்வின் நிகழவுகளை மிக நுண்மையாக அனுகி பார்க்கும் வாய்பபை எனக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறது.முற்றான வெற்றியில் மட்டுமின்றி தோல்வியிலும் விண்ணுலக தெய்வங்கள் வாழ்கின்ற போலும் . ஆனால் வெற்றித்தர இயலாததை முற்றான தோல்வி கொடுத்துவிடுகிறது என்பது பேர் உண்மைகளில் ஒன்று “முழுக்க தோற்பது வரை உங்களுக்கு நிறைவுத்துயில் இல்லை. நற்காலையுமில்லை.” என்கிறான் யௌதேயன் . அனைத்தும் நிகழ்களில் அது நம் கண்ணுக்கு எட்டிய மெய்மையால் அளவிடப்படுகிறது . பின்னொரு காலத்தில் அதன் பொருள் மாற்றமடைகிற வரையில்.“ஊழ் நம் தெரிவல்ல. அதன் பொருள் நாம் அளிப்பது மட்டுமே.” என்கிறான் . முடிவை காண்பதும் நல்லூழ் , காரணம் ஏதோ ஒரு கணத்தில் நம்வாழ்வை நம் எதிரிலேயே அர்த்தமுள்ளதாக காண வைத்துவிடுகிறது. அவ்வாறு வாய்க்காதவர்களுக்கு அது அருளுவதில்லை “ஏனெனில் அவர் தன் முடிவை இன்னும் தெளிவுறக்காணவில்லை” என யுதிஷ்டிரனை சொல்லுகிறான் யௌதேயன்.“நெறிகளில் முழுமையாக நிற்பவர்கள் நிகர்செய்ய ஒரு பிறழ்வை மறுதட்டில் கொண்டிருப்பார்கள்” என்றான் யௌதேயன். பிறழ்வு இல்லையேல் வாழ்கை சமநிலை படுவதில்லை.
வைதிகமான குடும்பத்தில் பிறந்து, ஒரு நூற்றாண்டு பழமைவாய்ந்த வியாபார நிறுவனத்தின் பாரம்பரியத்தில் நான்காம் தலைமுறை வியாபாரியாக எனது பாட்டனாரால் திணிக்க பட்டதினாலேயே வியாபாரம் மிக கசப்பானதாகிப் போனது . பத்து வயதில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் எனக்கென காத்திருக்கும் பாட்டனாருடன் வியாபாரத்தில் கொண்டு செல்லப்பட்டு அவரது கண்காணிப்பில் வளர்ந்து , முழுநேர வியாபாரியாக மாறியது 1980 ல் . கல்வியில் பெரிதாக சாதிக்கும் வாய்ப்பையும், சிறுவயது அனுபவங்களை முற்றாக இழந்து போனேன் . அதன் கடுமையால் 1984 வரை அலைக்கழிப்பும் அதை விலக்க வாழ்க்கையை கட்டற்ற போக்காக மாற்றிக்கொண்டேன் . எனது தந்தையுடன் பெரிதும் புரணபட்டேன் . இது உருப்படாது என்கிற முடிவிற்கு அவர் வந்துவிட்டிருந்தார்.
நீண்ட காலமாக நடந்து வரும் வியாபாரத்தில் உள்ள முறைகளால் இயற்கையாகவே அது சவால் குறைந்தது. 1982 ல் எனது இருபது வயதில் எனக்கென முற்றிலும் புதிய தொழிலை தொடங்கினேன். ஈடுபடும் எத்துறையிலும் அதன் உயரங்களை எட்டாது விட்டதில்லை என்கிற நல்லூழ் எப்போதும் வாய்ந்தது . ஆனால் அந்த வெற்றியில் நிலைத்து அங்கேயே நின்றதில்லை. எனது அலைக்கழிக்கும் மனநிலையும், நிறைவினமையும் தேடலுமாக நிலையில்லாது இருந்தது ஒரு முக்கிய காரணி . அவற்றை இன்று என்னவென என்னால் வகை படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் நான் ஏன் இப்படி இருக்கிறேன் என பல முறை நினைத்துக்கொண்டதுண்டு.
எனக்கிருந்த குடும்ப அடையாளத்தை உதறி எனக்கான தனித்த அடையாளத்தை தேடியபடி பல துறைகளில் நுழைந்து வெளிவந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நிலையழித்தலும் அலைக்கழிக்கும் மனமுமாக இருந்த அந்த தருணங்களில் தொழில் ரீதியான வெற்றி என்னை மீட்டுத் தரக்கூடும் என்கிற முழு நாட்டம் தொழிலில் இருந்தது. அது அந்த துறையில் யாரும் அதுவரை அடையாத பெரிய வெற்றியை கொடுத்தாலும் , நான் எதிர்நோக்கியதை அது தரவில்லை .
தேடலின் உந்துதலால் சமூக இயக்களில் ஆர்வமேற்பட்டு இளம் அரிமா சங்கம் ஒன்று உருவாக நானும் ஒரு காரணமாக இருந்தது, அதில் நகரின் முக்கியஸ்தர்கள் ஈடுபடும் நடவடிக்கைகளில் உள்ள அரசியல் கட்சி அரசியலை நகல் செய்பவைகள். எனக்கு நகல்கள் மீது எப்போதும் ஆரவமிருந்ததில்லை. அப்போதுதான் விபரீதமான கட்சி அரசியலில் விருப்பேற்பட்டு அநில் நுழைந்தேன் . பல கசப்பான வழிகளை கடந்து, வளரவே முடியாது என சொல்லப்பட்ட இடத்தில் தலைவர் சண்முகத்தின் வழி காட்டலில் , மாநில அளவில் எண்ணியதை நெருங்கி அதில் பெரும் கனவை தொடும் முயற்சி பெரும் வெற்றியை அடந்தது . அது எனக்கு காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய பொறுப்பில் இருக்க வைத்ததும் . சோனியா காந்தி , ராகுல் காந்தியின் போன்ற தலைவரகளின் நேரடி சந்திப்பு என அலைந்து , திட்டமிட்ட புதிய வழியை திறக்க தடையாய் இருந்த நாராயணசாமியுடன் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவருடன் மன சமாதானமடைய மறுத்து கட்சியிலிருந்து சில காலம் ஒதுங்கினேன்.
அந்த இடைபட்ட காலத்தில் மறுபடியும் தொழில் ரீதியில் புதிய அயல்நாட்டு தொழில் நுட்பத்தை கொண்ட தொழிற்சாலை நிறுவி இந்திய முழுவதும் முக்கிய நகரங்களில் கிளைகள் பரப்பி யாரும் நினைக்க முடியாத வெற்றி . என்றாலும் ஏதும் எனது அலைக்கழிப்பையும் தேடலியும் நிறைவேற்ற இயலாது பாரமார்திகத்தை நோக்கி மனம் திருப்பப்பட்டது 2008ல்.
அனைத்தும் போதுமென ஒருநாள் தோன்றிவிட்டது . வெளிமுகமான தேடலை விடுத்து . எனக்கு தேவையானது பறவயங்களிலிருந்து கிடைக்கப்போவதில்லை எனபதால், அகவயமாக அவற்றை அடைவதற்கான வழிமுறைகளை தேடி, என்னை அவதானிக்க எனது ஐம்பதாவது வயதில் தொழில் சார்ந்து அனைத்திலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்தது 2008ல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக