https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 19 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 403 * வாய்ப்புகளின் கணக்கு *

ஶ்ரீ:



பதிவு : 403 / 565 / தேதி 19 செப்டம்பர்   2018

* வாய்ப்புகளின் கணக்கு 


எழுச்சியின் விலை ” - 05
முரண்களின் தொகை -01 .




அரசியலின் உள்மடிப்புகளை முழுவதுமாக புரிந்து கொள்ள முயற்சிக்கும் எண்ண விரிவுடன் கூடியவர்களை கொண்டதாக இளைஞர் காங்கிரஸ்  அமைப்பை வளர்த்தெடுக்கும் எனது  முயற்சி முழு வெற்றியை தராது போனதால் , இடைநிலையில் நின்றுவிட்ட  வளர்ச்சி எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ அதுவே நிகழ்ந்தது. மாநில செயற்குழுவின் வெற்றி, அமைப்பை எனக்கு முழுமையாக மீட்டுக்கொடுத்தது என்றாலும் , ஆரம்ப நாட்களில் என் எண்ணங்களுக்கு ஒத்திசையும் குழு இல்லாமையால் , திட்டமிடும் நிகழ்வுகளில் ஒரு சிறு பகுதியில் ஒழுங்கமையாமையே நிகழ்ந்தது. அத்தகைய நிகழ்வுகள் என்னால் கடக்கப்படுகிற ஒவ்வொரு கணத்திலும் பெரும் மனக்  கொந்தளிப்பை  நிலையழிதலையும் கொடுத்து. சிறு குறையுடன் முழுமை பெறாத நிகழ்வுகளும் அதை உருவாக்கும் அனைவரின் மீதும் அப்போது எனக்கு மனவிலக்கத்தை உண்டாக்கியது  . 

என்னை தவிற பிற அனைவரும் ஒவ்வொரு நிகழ்விலும் இயக்கம் அதன் உச்சத்தை அடைவதை எண்ணி மகிழ்கையில் , எனக்கு அதன் முழுமை பெறாத வடிவம் மட்டுமே கண்களுக்கு தெரிந்தது . செய்யப்பட்டவை அனைத்தும் அங்கு மீண்டும் ஒன்று நிகழவேண்டிய தேவையை எழுப்பி செல்வதையும் , திரும்பத்திரும்ப ஒரு காரியத்தை செய்ய வேண்டிய தேவை எழுப் போவதும் எனக்கு மனச் சோர்வை கொடுத்தது. இது பிறரின் பார்வையில் நான் எதிலும் திருப்தியுறாதவனாக தோன்றி , என் மீது வருத்தம் கொள்ள வைத்தது . எனக்கு அவர்களின் புரியாமை மீது எரிச்சலை கொடுத்தது .

ஆனால் காலம் கடக்கையில் அதன் எதார்த்தமும் , உலகியல் போக்கில் இது மிக சாமான்ய மனிதர்களின் மனப் பிரதிபலிப்பு  என்கிற புரிதலை அளித்ததும் , அது மன ஆறுதலை கொடுத்தது . அதிலிருந்து கடந்து இன்று வெகுதூரம் வந்து விட்டுருக்கிறேன் . இப்போதும் என்னை குற்றம் சொல்பவர்களாகவே அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்

அரசியலில் நம்மை சூழ்ந்து நமக்காக , நாம் சொல்லும் பணிகளை செய்பவர்களாக இருப்பவர்கள் பலவிதமான கலவைவை மனிதர்கள் . அவர்களை ஒரு வகைமைக்குள் அடைப்பது  கடினம் . இருப்பவர்களுக்குள் ஓரளவிற்கு அரசியல் நிலைகளை தெரிந்தவர்களை முன்னிறுத்துவது. எனக்கு அமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எளிதாக இருக்கும் என்பது எனது எண்ணமாக இருந்தது . கண்ணன் மற்றும் பாலன் தலைமை ஏற்ற காலத்தில் , மாநில கட்சியின் அதிகாரத்தை பெற தொடர் கட்சி நிகழ்வுகளை நடத்தி செல்வது மட்டுமே செயல்பாடுகள் என கருதப்பட்டது
அவை ஒற்றை இலக்கு மட்டுமே அவர்களுக்கு கண்களுக்கு தெரிந்தது

அத்துடன் மூர்க்கமான எதிர்ப்பு முன்வைக்கப்பட்டு பிறிதெவருடனும் இணக்கமாக இல்லாமல் குறுங்குழு மனப்பான்மையே அதன் மையமாக இருந்தது . மாறி வந்த சூழலில் . குழு மனப்பான்மையிலிருந்து அமைப்பு விலகி விஸ்தாரப் படுத்தபட்டிருக்க  வேண்டும் . ஆனால் அனைவரையும் இணைக்கும் கருத்தியலை அவர்கள் விரும்பவில்லை . எனவே அது வெற்று காழ்ப்பு மட்டுமே கொண்டதாக இறுகிப்போனது.

இளம் தலைவர்களுக்கு அதன் தலைமைசெல்வாக்குபற்றி சொன்ன செய்தி பிழையானது . அதிகாரத்தில் அமர்வது மட்டுமே அவர்களின் இலக்காக இருந்தது . அதில் கிடைக்கும் செல்வாக்கென்பது அதில் உள்ளவரகள் அனைவராலும் மதிக்கப்படுகிறார் என்பதும் ,அங்கு அமர்ந்தால் மட்டுமே பிறரால் மதியாக்கப்படுவோம் என்கிற கருத்தை கொண்டிருந்தார்கள் . அந்தக் கருத்து பிழையானது

அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களின் சொல்படி இங்கு அவர்கீழ் உள்ள அரசு அதிகாரிகள் கேட்பதில்லை என்பது வெளிப்படை . அரசாங்க பதவி என்பது சர்வரோக நிவாரணியல்ல. எல்லா தேவைகளுக்கும் அதிகாரத்திற்கும் அது வழி சொல்வதில்லை  . மௌனமாக உரையாடப்படுகிற குடிமை சமூகத்தின் அங்கீகாரம் மட்டுமே அதை செய்யக்கூடியதுஒருவர் செயல்படவேண்டிய களம் அவர்கள் வாழும் சூழலில் அவர்களுக்கான அங்கீகாரத்தை பெறுவது . அதைக்கொண்டு கட்சி அமைப்பில் ஒரு அடையாளம் உருவாவதும் . அவற்றிற்கு குறைந்தபட்ச திட்டமும் அதைக் ஒருங்கிணைவு உள்ள மனமும் முதல் தேவை என கருதுகிறேன்

குறுங்குழு மனப்பான்மையிலேயே நீண்ட நாட்களுக்கு ஒருவர் பயணிக்க முடியாது என்கிற யதார்த்தமும் நான் அறிந்தே இருந்தேன் . அதிகாரம் எப்படிபட்டவரையும் சாய்க்கக்கூடியது . நீண்ட அனுபவமுள்ள தலைவர் சண்முகம் தான் முதல்வராக வந்தபோது நிகழ்ந்ததை பின்னாளில் பார்த்தேன் . எது அவரை அதுநாள்வரை செயல்பட வைத்ததோ அது அவரைவிட்டு விலகி தான் மட்டும் மிச்சப்பட்டவராக பார்த்தபோது திகைத்துப் போனேன். கம்யூனிச சிந்தாந்த பொலிட் பீரோ போன்ற அரசாங்க பதவிக்கு விழைவு கொள்ளாத சிலர் தேவைபடுகிறார்கள் என்கிற கருத்தியலில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்த காலம். நான் அவர்களை அந்த கருத்தியலுக்கு தயார் செய்வதை எனக்கு முதன்மையான வேளையாக பார்த்தேன் . அதற்கு முன்பே அறிமுகமான பழைய நிர்வாகிகள் சரியாக பொருந்தி வருவார்கள் என்பது ஒரு எண்ணமாக இருந்தது.

கட்சி அமைப்பிற்குள் பொருந்தி இருக்ககூடியவர்கள் தேர்தல் அரசியலுக்கு சென்றாலும் அது அவர்களை முழுவதும் கறைபடிந்து விடாத குறைந்த பட்ச பொதுநோக்கில் அவர்களை அது வைத்திருக்கும்  என்பது எனது எண்ணமாக இருந்தது . எவ்வளவு மடமை அது . அரசியலுக்கு முற்றும் புதியவர்களை அரசியலின் நுண்மைக்கு பழக்குவது அவ்வளவு எளிதல்ல . அது இயல்பில் இருப்பது , அதில் காணப்படும் குறைபாடுகளை சரிசெய்வதே மிகக்கடினம் என்கிறபோது அரசியலின் அடிப்படை முறைமையையும், அதன் மனப்பாங்கையும் ஒருவரிடம் உருவாக்கிவிட முடியாது . அது சிட்டுக்குருவியை மீன்கொத்தியாக்குவது . ஒருவரின் இயல்பை மாற்றுவது போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசுகூடுகை 76 அழைப்பிதழ்