https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 15 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 402 *கனவுகளின் காலம் *


ஶ்ரீ:




பதிவு : 402 / 563 / தேதி 15 செப்டம்பர்   2018

*கனவுகளின் காலம் 


எழுச்சியின் விலை ” - 04
முரண்களின் தொகை -01 .



பாலனுடன் இருக்கும்போது என்னுடன் களத்தில் செயல்பட்டவர்களை மீளவும் அமைப்பிற்குள் கொண்டுவருவதற்கான காரணத்தை நான் ஒருவரிடமும் சொல்ல இயலவில்லை . யாருடனும் அதை விவாதிக்க வரும்பவும் இல்லை . அவர்களை உட்புகுத்துவதில் எனக்கு பாதகமான அம்சங்களையே நான் பார்த்தாலும் அதை செய்தாக வேண்டிய எண்ணத்திலிருந்து என்னால் மாறுபட இயலவில்லை . என் அனுக்கர்களில் பலர் அது எனது தேவையற்ற முடிவாகவும் , தங்களை ஒதுக்கி பழைய ஆட்களுக்கே மீண்டும் முன்னுரிமை கொடுக்க  முயற்சிக்கிறேன் , என பலவாறாக கிசுகிசுத்துக்கொண்டனர் . ஒருகட்டத்தில் வெளிப்படையான விமர்சனங்களும் வெளிவர துவங்கியது . ஒரு உண்மையை அவர்கள் யாரும் அறிய இயலவில்லை . அதுதான் அவர்களின் பிரதான தடையாக இருப்பதையும் அவர்கள் உணரவில்லை.. 

அரசியல் ஒரு நுண்ணுணர்வு உள்ளவர்களினின் களம், அங்கு உருவாகி வரும் இளம் அரசியலாளர்கள் யாரும் யாராலும்  பயிற்றுவிக்கப்படுவதில்லை. நிலவும் சூழலில் இருந்தும் தங்களுக்கு ஏற்படும் அனுபவங்களின் வழியாக அவர்கள் உருவாகி வருகிறார்கள். சுயநலம் அன்றி வேறொன்றை அறியாத அவரகளுக்கு அமையும் தலைமைகளிடம் கிடைக்கும் அனுபவங்கள் கசப்பின்றி வேறாக இருக்கு வாய்ப்பில்லை . செய்யாமையிலிருந்து செயலுக்கு திரும்பும் அனுபவங்கள் என்றும் ஒருவருக்கு ஏற்பட்டது போல இன்னொருவருக்கு ஏற்படும் வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொருவரும் சென்று அமருமிடம் ஒன்றாக இருப்பினும் துவங்கிய புள்ளி நிச்சயம் பல முகங்களை கொண்ட தருணமாகவே இருந்திருக்கும் . அது அவரின் வைப்பு நிதி போல அவ்வளவு எளிதில் பிறருக்கு கொடுத்துவிட மாட்டார்கள் .என்றாலும் அனுபவம் வாய்ந்தவர்களை இழக்க யாரும் வரும்புவதில்லை

ஆரோக்கியமான நிலை எழுந்தால் அவர்கள் எதிர்மறை அரசியலை கைவிடும் வாய்ப்புகளே அதிகம் என்றே நம்புகிறேன். பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வளர்ந்து விட்ட அரசியல் தலைவர்கள் , தங்களின் தேவைக்கு அருகில் இருக்கும் சிலரை தன்னுடைய அதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் . அவர்கள் அனைவரும் என்றாவது அரசியல் பலி மிருகங்களே மாறுபவர்களே , வீழ்ந்து போவதை தவிற அவர்களுக்கு இலக்கென ஒன்று இருப்பதில்லை . அவர்களில் ஓரிவருர் மட்டுமே தங்களின் நுண்ணிய திறனால் தன்னை சுற்றி தலைவர் அரசியலிலிருந்து தங்களுக்கான இழைகளை பிண்ணிக்கொள்கிறார்கள் . அதிலிருந்து கிளைத்ததும் காலம்  ஒருநாள் அவர்களது  உயரத்தை முடிவு செய்கிறது  . அவர்களை பிறர் எப்படி நோக்கினும் ,சொல்லினும் அவர்களே நல்லூழ் பெற்றவர்கள் .

அரசியலில் என்று மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளுக்கும் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடைக்கும்போது . எதையும் முதலில் இருந்து துவங்க வேண்டிய அவசியமில்லை நெருக்கடி காலங்களிலோ , சமயோஜித செயல்பாடுகள் தேவைபடுகிற நேரங்களில் யாருக்கும் தனி வகுப்பை எடுக்க தேவையில்லை . சில நுண்மையான விஷயங்களுக்கு அவர்களை பயன்படுத்துகிற போது , தேவையற்று அவர்களுக்கு அதை விளக்கும் நேரமும் அதனால் ஏழும் அனர்த்தத்திற்கு ஆகும் நேரம் மற்றும் சக்தியும் விரயமும் தடுக்கப்படுகிறது

எல்லா பயணமும் ஒரு பதவியை இலக்காக வைத்திருக்க நான் 2010 வருடத்தை எனது கனவு இலக்காக வைத்திருந்தேன். அது ஒன்றே என்னை பிறரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியிருக்கலாம் . ஆனால் என் அனைத்து செயல்களுக்கும் அதுவே மைய விசையாக எப்போதும் இருப்பது. அது கடந்த கால அனுபவத்திலிருந்து , சம்பாதித்ததுஅது ஒரு  கனவு போல  . மாநிலம் முழுவதும் கணக்கில் கொண்டு , அதில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக பயணிப்பது , அதற்கான முன் தயாரிப்புகளாக எனது திட்டமும் நகர்வும் இருந்ததனால் . நான் பிறரால்  புரியாத கொள்ள இயலாத நடத்தை உள்ளவனாக பார்க்கப்பட்டிருக்கலாம்.   

நாங்கள் முழுமையடையும் காலமாக , அரசியலில் பொறுப்பில் அமரும் காலமாகவும் அந்த வருடத்தை எண்ணியிருந்தேன் . அதற்கான முன்தயாரிப்புகளை செய்யத்துவங்கி . யாரையும் சார்ந்திராத தன்னிறைவைத் தரவல்ல ஒரு காலத்தை, ஆரோக்கியமான அரசியலை நோக்கியதாக அது எப்போதும் இருந்து கொண்டிருந்தது.

அன்று நடக்கவிருந்த ஆலோசனை கூட்டத்தில் 2010 ஆம் ஆண்டு எனது இலக்கு பற்றி விரிவாக  ,  முக்கியமான சில விஷயங்களை நான் அந்த கூட்டத்தில் பகிர்ந்து கொள்ள இருந்தேன் , நான் கூட்ட நினைத்த இளந்தலைவர்களை கொண்ட ஆலோசனை குழவில் மத்தியில் என்னுடன் உடன்பாடில்லாத நாராயணசாமி போன்ற தலைவர் அமர்வது எனது நோக்கத்தை சிதைத்துவிடக்கூடும்  என்பதால் அன்று அதுபற்றி பேசும் எனது எண்ணத்தை தள்ளிவைத்தேன். எனக்கு விருபமில்லாது இருந்தும் தலைவர்  சொன்னபடியே செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானேன் .

மாநில செயற்குழுவின் வெற்றி அமைப்பை எனக்கு முழுமையாக மீட்டுக்கொடுத்தது . ஆனால் நான் சந்தித்த சவால்கள் முந்தைய விட சிக்கலானதற்கு எனது அணுக்கர்களே காரணமாயினர் . என்பது இன்னும் வினோதமானது . அது நிகழ்வதற்கு எனது தவறே முக்கிய காரணம். அரசியலின் உள் மடிப்புகள முழுவதுமாக புரிந்து கொள்ளக் கூடியவர்களை கொண்ட அமைப்பாக அதை வளர்த்தெடுக்கும் முயற்சி முழு வெற்றியை தராது போனதால் , அதற்கு மாற்றாக நான் சொல்வதை நிகழ்த்தக் கூடிய நண்பர்களை அதில் உள்நுழைத்தேன். அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ அதுவே நிகழ்ந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்