https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 406 *இலக்கை நோக்கி *

ஶ்ரீ:

அடையாளமாதல் - 406

பதிவு : 406 / 569 / தேதி 30 செப்டம்பர்   2018

*இலக்கை  நோக்கி 


எழுச்சியின் விலை ” - 08
முரண்களின் தொகை -01 .





வாழ்வில் நிகழ்பவைகளுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புண்டு என்றும் இல்லை என்றும் இரு வேறு கருத்தியலாக புரிந்து கொள்ளப்படுகின்றன. பெருந்திட்ட வாதம் எனக்கு என்றும் ஏற்புடையதே . அதை ஏற்றுக்கொள்ள இயலாது போனால் உலகியல் நோக்கில் காணுகிற அனைத்தும் அநர்த்மாக மாறிவிடுகிறது என நினைக்கிறேன் .  இதைப் பற்றி ஏற்றும் ஏற்காததுமாக பலர் சொல்லியபடி இருந்தாலும் எங்கோ அறிதாக அதன் மிக அருகிலென சிலர் சென்று அமர்கின்றனர். அத்தகையவர்களே பலகாலம் எள்ளல் செய்யப்பட்ட விளக்கவியலாத பெரும் வெளியின் ஆடலை கடற்கரை மணலின் ஒரு பொருக்கிற்கு நிகராக புரிந்து கொள்கிறார்கள் . சில சமயங்களின் நிகழ்வுகளின் பொருள்  காலத்தால் நமக்கு புரிந்ததை போல மயக்கி பின்னர் அதற்கு நாம் கற்ப்பித்துக்கொண்ட அர்த்தத்தை பொருளற்றதாக ஆகிவிடுகின்றன ,.

சிறு சிறு கூடுகையின் வழியாக எனக்கு அறிமுகமாகி இருந்த பலர் சமூகத்தின் பல்வேறு நிலைகளிலிருந்து வந்தவர்கள் . அவர்களுக்கு என்னுடன் இயைந்த அரசியல் என்கிற ஒரு பொது எண்ணம்  இருந்தாலும் , அதை செயல் படுத்துவதில் பல்வேறு கருத்தியல் மாறுபாடுகலினால்  பிரிந்து கிடந்தார்கள். என்னுடன் இனைந்து செயல்படுவதை ஒரு தற்காலிக முடிவாகக் கூட அவர்கள் எண்ணியிருக்கலாம் 

மாறிவந்த சூழலில் அவர்கள் எனது தொடர் நிகழ்வுகளுக்கு கொடுத்த ஒத்துழைப்பின் வழியாக எனக்கு அனுக்கமாயினர். பலநாள் நான் அவர்களுடன் இளைஞர் காங்கிரஸின் கருத்தியல் குறித்து உரையாடி இருக்கிறேன். அதுவும் கூட ஒரு விவாதமாகவே நிகழ்ந்திருக்கிறது. அதை ஏற்றும் பொருட்படுத்தாதும் அந்த குழுவினர் இருந்தனர் . அதை கடந்து செல்வதை தவிற எனக்கும் வேறு வழிகளில்லை. அரசியலில் அவரவர்களுக்கு தனித்த பாதைகளை அவர்கள் கற்ப்பித்துக் கொண்டு பயணிப்பதால் , அனைவரையும் ஒரு முகபடுத்துவது இனி நிகழ முடியாது. அது கண்ணன் , பாலன் காலத்தோடு கணாமாலாகி இருந்தது

என்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்பபை பற்றி அவர்களிடம்  பேசியிருக்கிறேன். அவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கும் நிலை ஒருநாள் எனக்கு வரும்  என அப்போது நான் நினைத்திருக்கவில்லை. பொறுப்புகளை வழங்குமிடத்திற்கு நான் வந்து சேர்ந்த போது , எனது குழு ஒரு ஒழுங்கிற்கு வந்தது . அவர்கள் பல பிரிவின் இயல்பை பிரதிபளிப்பதால் , எனது இலக்கும் அதன் தலைமையையும் அவர்களுக்கு தெளிவான களமாக தெரிந்திருக்க வேண்டும்

எந்த காரணத்திற்காக  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முதல் செயற்குழு கூட்டத்தில், என்னால் செய்ய முடியாது போனதோ அதை இம்முறை செயல்படுத்த வாய்ப்பு கிடைத்ததும் அதை இழக்க விரும்பாது அதை முறைப்படி செய்ய முடிவு செய்தென் . வல்சராஜ் தலைமையில் நிகழ்ந்த அந்த முதற் செயற்குழுவில், எனக்கு அவர்கள் செய்ய நினைத்ததை அவர்களுக்கு திரும்பச் செய்யும்  சிந்தனை இப்போதும் எனக்கு இல்லை . அந்தக் காழ்பபை சுமத்தில் எந்த பொருளும் இல்லாத நிலையில் அதைக் கடந்து வெகு தூரம் வந்துவிட்டிருந்தேன். ஆனால் அவர்களில் யாரேனும் வெகுஜன ஆதரவுள்ளஒருகால் பிற்காலத்திலே தேர்தல் அரசியலில் நுழையும் வாய்ப்புள்ளவர்களாக அவர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கும் , எந்த அரசியல் உள் கணக்குகளும் இன்றி  வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற விழைவு மட்டுமே அன்று எனக்கு இருந்தது . அதெல்லாம் கூட மடமையோ என சில நேரங்களில் எண்ணியதுண்டு.

அரசியல்மாற்றங்களுக்கு தேவைப்படுகிற இடங்களை , கட்சி மற்றும் சட்டமன்ற இடங்களை இட்டு நிரப்ப கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த கூடுகைக்கு வந்திருந்த எல்லோரும் தனியாளுமையுள்ள , தங்கள் பகுதிகளில் அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருந்தனர் . அவர்களுக்கு நான் தலைமையேற்க இருந்ததுதான் எனக்கான இடமாக நான் உருவகித்திருந்தேன்.

அவர்கள் எதன் அடிப்படையிலும்  எனக்கு கட்டப்பட வேண்டும் என்கிற நிர்பந்தமில்லாதவர்களாக உருவாகி வந்தார்கள் . அபாயகரமான அரசியலாக இது எல்லோராலும் எனக்கு சுட்டிக்காட்டப்பட்ட போது , அவர்களுக்கு இருந்த அதே மனநிலை சில நாட்கள் என்னை கலவரபடுத்தின. எப்போதும் ஏதாவதொரு கோட்பாட்டின் படி அத்துடன் உரையாடி வெளிவந்திருக்கிறேன்.

இவர்கள் என்னையோ என் கருத்தையோ ஏற்று என் பின் அணித்திரளவில்லை . அவர்கள் வளர்வதறகான சூழல் இங்கு இருப்பதை உணர்ந்து கொண்டதால் மட்டுமே அது நிகழ்ந்திருக்க முடியும். என்னை பலவீனமான தலைமையாக அவர்கள் கணக்கிட்டிருக்கலாம். இப்போது வகிக்கும் பதவியும் , நான் செயல்படும் முறையும் எனக்கான சவால்களும் அதற்கான காரணமாக அவர்களுக்கு தெரிந்திருக்கலாம் . அது நாளைக்கு இல்லமாகும், அப்போது எதை வைத்து இவர்களை கட்டுப்படுத்துவாய் என எப்போதும் தலைக்குள் ஒன்று சொல்லியபடி இருந்தது

அரசியல் ஓட்டம் இன்று எதைநோக்கி செல்கிறது எப்பதை கண்காளால் பார்க்க கூடியதாக இருக்கும் என நான் ஒரு போதும் அறிந்ததில்லை . அதைவிட அரிதாக இருந்தது அதை பிறருக்கு நான் காட்ட முயற்சித்து  , அது முடியாமலானது. அரசியலின் முழு பரிமாணம் இது , நல்ல தலைமை , சரியான நிர்வாகம் , அரசியல் நிகர்நிலை பேணும் உளமைவு , அதற்கான தேவையும் , அதற்கான கணம் உருவாகி இருக்கும் வாய்ப்பு , அதை தொடுவதற்கான திறன் , அனைத்தும் குறுக்கும் நெடுக்குமாக ஊடுபாவுபவை அவற்றை கண்களால் பார்க்கும் வாய்ப்புள்ளவனுக்கு இது ஆடக்கூடிய ஆட்டமே .

என்னால் இதை தொடர்ந்து ஆடமுடியுமா , இல்லையா என்றெல்லாம் அவதானிக்க எனக்கு பொழுதில்லை. இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளை கொண்டவை . காலம் நேரம் வாய்ப்பு திறன் என மீளவும் அவை எதிர் திசையில் என்மீது ஊடாடுவதை பார்க்க முடிந்தது . எதுவம் நிரந்தரமல்ல . இது ஒரு பயணம் இதில் பயணிப்பதே அன்றி பிறிதொன்றை யோசிப்பதே தேவற்றதாகியது. அதில் பயணிப்பதே அதன் பலன் என்கிற காரணம் கொண்டதாகிவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக