https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 3 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 397 *புரிதலின் வதை *

ஶ்ரீ:பதிவு : 397 / 568 / தேதி 03 செப்டம்பர்   2018

*புரிதலின் வதை 


நெருக்கத்தின் விழைவு ” - 92
விபரீதக் கூட்டு -05 .எனது கோபத்தை முழுமையாக சூர்யநாராயணனிடம் வெளிப்படுத்தினேன் . சூர்யநாராயணன் பதட்டமானார் . எனக்கு நிதானமில்லை என்றார் , அதன் உண்மை என்னை கடுமையாக தாக்கியது . ஜனநாயக மரபில் உள்ள ஒன்று இது அதன்மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு  வழி வழியாக கையளித்த ஒன்றை உனது கோணத்தைக் கொண்டு மட்டும் பார்பது எவ்வளவு அறிவீனம் என்றது. அதிலிருந்து கொண்டுதான் நினைப்பதை சாதிக்க வேண்டும் . உன் லாபம் மட்டுமே உனக்கு இலக்கில்லை என்றால் சும்மா இரேன் என்றது கொந்தளிக்கும் ஒன்று . நான் மெல்ல என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டேன். தலைவர்  கிளம்பி வரவேண்டிய அவசியத்தை சூர்யநாராயணன் சொன்ன பிறகு அவர் கிளம்பி இங்கு வந்தார் என்பது எனக்கு புதுத் தகவல்..

இப்பவும் தலைவர் நீ செய்தது மடத்தனம் என்றுதான் நினைக்கிறார் , அவர் நினைப்பதில் உண்மையிருப்பதாக நானும் நினைக்கிறேன் . இதை அமைப்பாக மாற்றுவதுதான் உனது அரசியலே இருக்கிறது என்பது உண்மைதான். அது எவ்வளவு உண்மையோ , அந்த அளவிற்கு அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்கிறார் . இந்த கட்டத்தை நீ கடந்தாலும் , இதை உன் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் வைத்திருக்க முடியாது என்கிறார்என்றார் சூர்யநாராயணன்.

நான் அதை ஏற்றுக்கொண்டேன் , அது நாளைய மரணம் ஆனால் இன்று இதில் நான் வெற்றி பெற வேண்டும் இல்லையேல் இன்றே மரணம் . இதை இப்போது பேசுவது சரியாக இருக்காது , தலைவர் இந்த கூட்டம் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறார் , அதற்காகத்தான்  சுகுமாரனுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று சூர்யநாராயணன் சொல்லிக் கொண்டிருக்கும் போது விஜயகுமார்  பதட்டமாக ஓடிவந்து என்னை தலைவர் கூப்பிடுவதாக சொன்னன்னான் . நான்  அவரது அறைக்குள் சென்றேன் . நேரம் மதியம் 11:30 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது .நல்ல கோடை வெப்பம். அத்துடன் மனித உடலின் வெப்பமும் அவர்களின் ஆக்ரோஷமும் மொடமொடப்பான கதர் சட்டைகள் வியர்த்து கசங்கி ஒருவித வாடை கூடியதாக தலைவர் அறை வெப்ப அலையடித்துக் கொண்டிருந்தது  . உள்ளே நிற்க இடமில்லாதபடி எங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது . அனைவரும் பேச முயல்வதால் எழுந்த கார்வையான ஒலிக்கு மத்தியில் சுகுமாரன் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது

நான் அந்த வெறுப்பு மிக்க திரளின் மத்தியில் ஊடுருவி தலைவரை அடைந்தேன் , தலைவரின் முகம் அலாதியான அமைதி கொண்டிருந்தது .நான் எதையும் விவாதம் செய்யும் மனநிலையில் இல்லை . என்னை கூப்பிட்டார் , ஆகையால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு வெளியேறும் மனநிலையில் இருந்தேன் . தலைவர் என்னிடம்இவர்களுக்கு முறையான அழைப்பு இல்லையாமே அதைதான் பிரதான குற்றச்சாட்டாக கூறுகிறார்கள்என்றார். நான் இதை நினைத்தேன்  . விஜயகுமாரை திரும்பி பார்க்க அவன் கதவை நோக்கி பாய்ந்து வெளியேறினான் . சற்று நேரத்திற்கெல்லாம் கடிதம் கொடுத்த அத்தாட்சி புத்தகத்தோடு திரும்பி வந்தான். நான் அதை அமைதியாக தலைவர் முன் அதை வைத்தேன் .அவர் நிதானமாக நான் பதிந்திருந்த  487 உறுப்பினர்கள் தாங்களின் கூட்ட அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்து அதில் இருந்தது. அத்துடன் அவர்களின் பொறுப்பும் பதவியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சுகுமாரனின் கையெழுத்தும் அதில் இருந்தது.

சுமார் நாற்பது பக்கத்திற்கு நீண்டிருந்த அந்த பட்டியலை முழுக்க நிதானமாக பார்த்து முடித்ததும் அதை தனது மேஜை டிராயரில் வைத்துக்கொண்டார் . நானும் சூர்யநாராயணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம் முதலில் சூர்யநாராயணன் சிரித்தார் . எனக்கும் சிரிப்பு பீறிட்டுக்கொண்டு கிளம்ப இருந்ததை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டன்.

தலைவரிடமுள்ள ஒரு பழக்கம் இதுஒரு சிறு குறிப்பு பேப்பரை அவரிடம்  கொடுத்துவிட்டு பின் ஒருபோதும் அதை அவரிடமிருந்து திரும்ப பெற முடியாது . பலரும்  அதை திரும்பவும் வாங்க போராடி பிறகும் அதை வாங்க முடியதுதான் ஆகியிருக்கிறது , அதை நினைத்துக்கொண்டுதான் சிரித்தோம் . நான் சகஜ நிலைக்கு திரும்பி இருப்பதை அது சொன்னது .

தலைவர் சுகுமாரிடம்இதில் உன் கையெழுத்து இருக்கிறதா? ” என்றார் அவன் எதிர்நோக்காத நகர்வு அது , அதற்கு பதில் சொல்ல இயலாது திணறினான் . என்னிடம் அதையே கேட்டதும் நான் விஜயகுமாரைப்பார்த்து அந்தப் பக்கத்தைக் காட்டும்படி சொன்னேன். அவன் விறுவிறுவென்று அந்த புத்தத்தை புரட்டி சுகுமார் கையெழுத்திட்ட பக்கத்தை எடுத்து தலைவரிடம் காட்டினான் . தலைவர் சுகுமாரனிடம்நீ சொன்ன குற்றச்சாட்டு தவறு ஐந்து நாளுக்கு முன்பு உனக்கு தகவல் சொல்லப்பட்டுவிட்டது , அதன் மீது உனக்கு முரண்பாடு இருந்தால் நீ இத்தனை நாள் அதை எனக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் , அதை விடுத்து இதனை பேரை வைத்துக் கொண்டு நீ செய்ய நினைப்பது வேறு. முதலில் நீ போய் கூட்டத்தில் அமர்ந்து அதை நடத்த ஒத்துழை . உங்கள் சிக்கலை அதில் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் ,உங்களால் முடியவில்லை என்றால் அதை கடிதமாக என்னிடம் கொடு நான் என முடிவை அறிவிக்கிறேன் , நீ அழைத்துவந்த அனைவரையும் கூட்டத்தில் சென்று அமரச்சொல்என்றார்'
சிக்கல் திசைமாறுவதை உணர்ந்ததும் சுகுமாரன் வல்சராஜ் இல்லாத இந்த கூட்டம் நடக்க கூடாது என கூச்சலிட துவங்கியதும் நான் மெல்ல அவரது அறையை விட்டு வெளியேற துவங்கினேன் . இது அவனது தப்பான நகர்வு , என்னுடன் முரண்படுவதை விட்டு இப்போது தலைவருடன் மோத துவங்குகிறான. இனி சிக்கல் அவர்களுக்குள் நான் நிம்மதியாக கதவுக்கு அருகில் வருவதற்குள் சப்தம் பெரிதாக எழுந்ததும் தலைவர் தனது உக்ரமான குரலில் அவனைவெளியே போஎன்று சொன்னதும் அரை நிசப்பதாமானது. சற்று நேரம் திகைத்து நின்றிருந்த சுகுமாரன் பின்னர் நிதானித்துக்கொண்டு தான் அழைத்துக்கொண்டு வந்தவர்களை  கூட்டிக் கொண்டு அலுவலகத்திலிருந்து வெளியேறினான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...