https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 30 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 223 *குடிமைசமூகத்தின் ஒற்றை மனப்பரப்பு *

ஶ்ரீ:



அடையாளமாதல் - 223
பதிவு : 223 /  309 /  தேதி :- 30 அக்டோபர்    2017

*குடிமைசமூகத்தின் ஒற்றை மனப்பரப்பு *


வாய்ப்புகளில் புரியாமை - 09 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு , அரசியல் சார்ந்து வரும் கட்டுரைகள் முற்றாக நின்றன . அரசியலில் மையக்களத்தில் நிகழும் சிக்கல்களையும் அதற்கான முறையற்ற தீர்வுகளும் ஆட்சியாளர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் கலாச்சாரம் எழுந்து வந்திருந்தது.செய்திக்கு மிகுந்த வாட்சி இருந்த காலம் என்பதால் எனது அறிக்கைகள் தினம் வருவதுபோல சிறு சிறு நிகழ்வுகளின் வழியாக நிரைய சொல்ல துவங்கினோம் . வெறும் அறிக்கை லாவணிகளில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை .  அனைத்து கூடுகை பல சமூக சிக்கல்களுக்கு தாங்களாக முன்னின்று போராட்டம் நடத்தும் அனுபவத்தை அடைந்திருந்தது . அரசியல் களத்தின்  மையத்தில் பிற காரணிகள் குறுக்கும் நெடுக்குமாக பாயும் ஊடுபாவுகளினால் மிக ஆபத்தானதாக அதன் பிறிதொரு பரிமாணத்தை அறிய முடிந்தது இந்த சந்தர்ப்பத்தில் . 




பாலன் தலைமையின் கீழிருந்த இளைஞர் காங்கிரஸில் களப்பணிகளை செய்யும் சந்தர்ப்பம்  கிடைத்ததால்  அரசியல் உலகில் நிலவும் ஜனநாயக மரபுகளை ஒட்டி அதிகரத்தை அடைவதற்கான வழிகளும் , அதனுள்ளே இருக்கிற நடைமுறை எதிர்ப்புகளையும் அதை கடந்து அவற்றை  அடைவதற்கான பாதையும் , அடைந்ததை தக்க வைக்கும் முறைகளும் அதை பற்றிய புரிதலுக்கு வாய்பளித்திருந்தது . களத்தை மட்டுமல்லாது நான் என்னை பற்றிய புரிதலை அடைந்ததும் அப்போதுதான்

அத்தகைய பொது அரசியல் வெளியில் , காங்கிரஸின் நிகழ் அரசியலை முற்றாக வேறொரு கோணத்தில் புரிந்து கொண்டதும் அதன் சாதக பாதகங்களை பற்றிமட்டுமல்லாது வாய்ப்பை பற்றி புரிந்து கொண்டதும் அங்குதான் . மிகுந்த நம்பிக்கையுடன் அதை அங்கிருந்தே தொடக்கியிருந்தேன். ஆனால் அது அதிகாரத்திற்கு வர விரும்பும் தேர்தலாரசியலை மையமாக கொண்டிருந்தது . பாலனுக்கும் மேலும் சிலருக்கு தேர்தல் அரசியல் அவர்களின் பாதையாக இருந்தாலும்அவை எல்லாவற்றிக்கும் தொடக்கப்புள்ளி  இங்குதான் நிலைகொண்டிருந்தது . உடனடியாக அந்த வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தது பாலன் மட்டுமே

அது அதற்கான பாதையை அவருக்கு திறந்து கொடுத்தபோதும் , அவரின் அரசியல் போதாமையினால் வழியில் சந்திக்கும் அடுத்தடுத்த நிலைகளில்  செய்யவேண்டியது என்ன என்கிற கேள்விகளுக்கு அவரிடம் பதிலில்லை . தேர்தல் வெற்றி அனைத்தையும் அவருக்கு வழங்கிவிடும் என்கிற கணக்கு ஒருவேளை சரியாக இருந்தாலும் , அதை எடுத்து பரிமாறும் அமைப்பை எப்போதோ சீரழிந்துவிட்டிருந்தார் . கண்ணனின் வெற்றியும் அவருக்கு கிடைத்த வாய்ப்பும் எல்லோருக்குமான வழியாக நினைத்துக்கொண்டது அவரது இரண்டாம் பிழை , முதல் பிழை தேர்தலரிசியலில் வெற்றி பெரும் வாய்ப்பை பற்றி  அவர் சிந்தித்தாகவே தெரியவில்லை. காங்கிரஸில் சீட்டு மட்டுமே எல்லாவற்றையும் செய்து கொடுக்கவல்லதல்ல . அதற்கான எந்த களப்பணியையும் அவர் எப்போதுமே செய்திருக்கவில்லை

கண்ணனுக்கு நிகழ்ந்ததை பாலன் சரியாக புரிந்துகொள்ளாததே இந்த பிழைக்கு முக்கிய காரணி . இளைஞர் காங்கிரஸின் தலைவராக கண்ணன் இருந்தபோது , குடிமை சமூகத்திடம் ஒரு கருத்தாக அவர் மாற்றமடைந்திருந்தார் ,அதற்கு கட்சியை தாண்டி அவரது ஆளுமை பெரிய செல்வாக்கை பெற்றிருந்தது . நகர் புற பகுதிகளில் இளைஞர்களை வசீகரிக்கும் தலைமையாக அவர் உருவெடுத்திருந்தார் . அதற்கு அவரது ஆளுமை அனுகுமறை மையக்காரணமாக இருந்தது . பாலன் ஒரு ஆளை தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இடம் ஒரு புறநகர் பகுதி . எளிமை வெளிப்படுத்தும் முறையும் வெளிப்படுத்தும் தலைமையை காரணியாக கொண்டது

முதலியர்ப்பேட்டை தொழிலாளர்களின் மையமாக இருந்தாலும் , பாலனின் அணுகுமுறை அவருடன் எவர்க்கும் ஒரு பழகுதல் மனத்தடையை கொடுத்திருந்தது . தன்னை பற்றிய மிகை புரிதல் , பலரிடத்தில்  அவர்மேல் காழ்ப்பையே உருவாக்கியது . இது கண்ணனுக்கு நேர் எதிர்மறையான மனோபாவம் . கண்ணனுக்கு திறந்த கதவுகள் , இவருக்கு அடைபட்டு போயின . குடிமை சமூகத்தின் எண்ணமும் அங்கீகாரமும்  கண்ணுக்கு தெரியாத ஒரு பலம் வாய்ந்த காரணியாக இருப்பதே செல்வாக்கு என்கிற இடத்தை அடைகிறது .அதன் அனுமதியை பெற்றேதான் அனைவரும் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது

நகர்ப்புற இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவருவது அவ்வளவு எளிதானதல்ல வளர்ந்துவிட்ட தலைவர்களுக்கே அது சவால் மிகுந்தது . காரணம் நகர்புறம் பொருளியல் ரீதியான பிரிவுகளை கொண்டிருப்பதனால் அனைத்தும் உதிரிகளாக சிதறிக்கிடப்பவை , ஒரு வகைமைக்குள் அவர்களை கொண்டுவருவது சாத்தியமில்லாதது . புறநகர் பகுதிகள் சில குழு அமைப்பை கொண்டிருப்பது ஆனால் அவை சமூக எதிர்நிலை மனிதர்களுக்கு புகலிடம் அளிப்பது . குறுங் குழுக்கள் பெரும்பாலும் அவைகளை சார்ந்திருப்பது . தங்களை தற்காத்துக்கொள்ளும் முகமாக அவர்களின் போஷணத்தில் இருப்பது . ஆனால்  கிராமப்புற பகுதிகளில் அனைவரையும் பாதிக்கும் பொது சிக்கலுக்கல்களுக்கு முதலிடம் . அமைப்பு ரீதியாக அதை ஒருங்கிணைக்க முடியும் . அங்கிருந்து கிடைக்கும் அங்கீகாரத்தை கொண்டுதான் புறமட்டுறும் நகர்ப்புற இளைஞர்களை தொட இயலும் . கிராம பகுதிகள் மட்டுமே எனக்கான முதல் களமாக புரிந்துகொண்டேன்.

மேலும் அரசு அதிகாரமின்றி நகர்ப்புற இளைஞர்களை கவருவது சாத்தியமில்லை , அவர்கள் அனைவரும் உதிரிகளாக சிதறிக்கிடப்பதால் , தங்களுக்காகக்கூட அவர்கள் போராடுவதென்பது நடவாது . இன்று வந்து நாளை பதவி இழக்கும் அரசு அதிகாரத்தைவிட குடிமை சமூகம் தரும் அங்கீகாரம் என்றைக்குமானது . அதுவும் அவர்களுடன் பேணும் நல்ல நட்பையும் நேர்மையையும் பொறுத்து . பல விதமான் பேதங்களில் சிதறிக்கிடக்கும் இந்தியக் குடிமை சமூகம் அரசியலை சார்ந்து சித்தும்போது மட்டும் ஆச்சர்யமாக ஒற்றை  மனப்பரப்பை அடைகின்றது . அதுவே இந்தியாவை இன்னும் ஜனநாயக நாடாக வைத்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் மனித இனத்தில் ஆறில் ஒரு பங்கின் நவீன வரலாறைச் சொல்ல முயன்றுள்ளேன். இது ஒரு வரலாற்றுக் குறிப்பு மட்டுமல்ல, சுதந்தர இந்தியாவின் முக்கிய மனிதர்கள், கருத்து வேறுபாடுகள், எண்ணங்கள், சுதந்தரம் பெற்ற முறைகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வும்கூட. எனினும் கதை சொல்லும் முறை இரண்டு அடிப்படை லட்சியங்களால் உந்தப்பட்டிருக்கிறது. ஒன்று: இந்தியாவின் சமூக அரசியல் மாறுபாடுகளைக் கவனமாகக் கருத்தில் கொள்வது. இரண்டு: ஆய்வாளர்களும் சாமானியர்களும், அயல்நாட்டவரும் உள்நாட்டவரும் இதுநாள் வரை எதிர்கொண்டுவரும்இந்தியா என்ற ஒன்று ஏன் இருக்கிறதுஎன்ற புதிரை விடுவிப்பது." சிறந்த வரலாறு ஆய்வாளர்களில் ஒருவரான  திரு. ராமச்சந்திர குஹா தனது இந்திய வரலாறு - காந்திக்கு பிறகு - பாகம் 1 என்கிற தனது ஆக்கத்தில் குறிப்பிடுகிறார் .

அடையாளமாதல் - 222. * அரசியலின் விபரீத ஊடுபாவுகள் *

ஶ்ரீ:




பதிவு : 222 / 308 /  தேதி :- 29 அக்டோபர்    2017

* அரசியலின் விபரீத ஊடுபாவுகள்  *


வாய்ப்புகளில் புரியாமை - 08 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.


இதைப்போன்ற பல பேரணிகள் போராட்டங்கள் நிறைய பார்த்திருந்தாலும் , நாமே நடத்தும் ஒரு வாய்ப்பு வாய்க்கும் என நினைக்கவில்லை. முழுவதும் ஒரு ஒழுங்கான ஒழுக்குடன் அது நடந்து முடிந்தது . இருப்பினும் பத்திரிக்கை செய்திகள் அவர்களுக்கு சாதகமா எழுதவில்லை . பல போராட்டங்களை நடத்திய இயக்கம் ஒருநாள் தானும் பதில் சொல்லவேண்டிய முனைக்கு வர நேரும் என்பதை அறிந்திருக்கவில்லை போலும்.





அரசியல்சரிநிலைகள் ஏன் எதிர்க்கப்பட வேண்டியவை என்றால் அவை எப்போதுமே எளிமைப்படுத்தப்படுபவை என்பதனாலேயே. அவை மனிதாபிமானம் என்ற கோணத்தில் மிகுந்த உணர்ச்சித்தீவிரத்துடன் முன்வைக்கப்படுகின்றன. ஆகவே அவை மாற்றுக்கருத்துகளையே அனுமதிப்பதில்லை. உதாரணமாக மரணதண்டனை எதிர்ப்பு என்பது இன்று அரசியல்சரியாக ஆக்கப்பட்டுள்ள ஒரு விஷயம். தீவிரமான குற்றமனப்பான்மை என்பது ஒரு மனிதனில் இருந்து நீக்கவே முடியாத அடிப்படை இயல்பு என்றும் ஆகவே பெருங்குற்றவாளிகளை திருத்தியமைக்கலாமென்பது ஒரு எளிய இலட்சியவாதக் கனவு மட்டுமே என்றும் ஒரு நிபுணர் வாதிடப் புகுந்தால் உடனே அவர் பழமைவாதியும் மனிதாபிமானம் இல்லாத ஃபாஸிஸ்டும் ஆகிவிடுவார். அப்படி ஒரு கோணத்துக்கு கண்டிப்பாக இடமுள்ளது என்பதும் மனித இயற்கையை எளிமைப்படுத்திவிடக்கூடாது என்பதும் விவாதத்துக்கே வராமல் செய்யப்பட்டுவிடுகிறது." என்கிறார்  திரு.ஜெயமோகன் தனது சாட்சிமொழி கட்டுரைத் தொகுப்பில் .

மக்களின் போராட்டமுகமாக அறியப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகர்புறங்களில் நல்ல அறிமுகமிருந்தாலும் , ஆதரவுதளம் என்பது கிரமாப்பகுதிகளிலிருந்துதான் . பால் விலை உயர்வு விஷயதில் அதன் இரட்டை  நிலைப்பாட்டை பத்திரிக்கைகள் கடுமையாக விமர்ச்சித்து எழுதி இருந்தது . அவர்களின் ஆதரவுதளங்களில் கூட உணரப்பட்டது. முக்கியமாக அவர்கள்  இதில்  முதல்வரை விமர்சித்திருக்கவேண்டும்  . ஆனால் அவரைத்தாண்டி கம்யூனிஸ்ட்  அமைப்பு பெரும் கண்டனங்களை வாங்கி கட்டிக்கொண்டது

அதில் தலைவர்கள் அளவில் மிகவும் முரண்பட்டு இருந்தாலும் அவர்கள் கட்சியின் அடுக்குமுறை மிக சாமானியர்களை கொண்டிருந்தது . அவர்களுக்கு அமைப்பில் இருந்து நம்பிக்கை மற்றும் தொடர் கூடுகை அவர்களை ஒரு குடும்பம்போல மாற்றி இருந்தது . ஆளும் அமைப்பின் அரசியல்சரிநிலைகளை வெறுத்து உருவாகும் உத்வேகமிதுஅவர்கள் எண்ணிக்கையில் சிறிதானாலும் இலக்கை  கொண்டதாக இருப்பதால் எக்காலத்திலும் நீர்த்துப்போவதில்லை . எனது அடிப்படை செயலபாடுகள் ஏறக்குறைய  இந்த சித்தாந்தத்தை ஒத்ததாக இருப்பதை அறியமுடிந்தது . அதையே எனக்கானதுமாக வடிவமைக்கத் துவங்கினேன். பேரணில்  எண்ணிக்கைக்கு பிரதானமின்றி , செயல்பாட்டிற்கு முக்கியத்துவமுள்ளதாக எல்லாவற்றையும் முன்னிறுத்தினேன். நண்பர்கள் முதலில் அதுபோன்ற ஊர்வலங்களில் பங்கு பெற கூச்சம் கொண்டார்கள் , அதன் அடிப்படை விசையை புரிந்து கொண்டதும் உற்சாகமானார்கள்.

மிக செறிவான போராட்டமாக அதை செய்திருந்தோம் . சுமார் முந்நூற்றுக்கும் அதிகமானோர் அதில் கலந்துகொண்டனர் . காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தலைவர் உற்சாகமாக கொடி அசைத்து துவக்கி வைக்க துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு அருகில் சென்று ஊர்வலம் முடிவடைந்தது . கட்சியினுடைய அனைத்து முக்கிய தலைவர்களும் அதில் கலந்து கொண்டதால் அந்த முதல் போராட்டம் கட்சிக்கும் உள்ளும் வெளியிலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை உற்றுப் பார்க்கவைத்தது . பத்திரிக்கை செய்திகள் மிக நல்லமுறையில் அதை எழுதி இருந்தது . நான் இதைப்போன்ற போராட்டங்களை அனைத்து கூடுகை நண்பர்களிடம் அவர்ரவர் தொகுதிகளில் நடத்த ஏற்பாடு செய்திருந்தோம் ,

விவசாய அமைச்சரை  அவர்கள் பாணியில் காட்டமான  அறிக்கை தயாரித்திருந்தேன் அதற்கு பத்திரிக்கையில் நல்ல வரவேற்பிருந்தது . அவை சிறிய அளவில் வெளிவரும் என நினைத்திருந்த சமயத்தில் முதல் பக்க செய்தியாக அந்த அறிக்கை வந்திருந்தது . தலைப்பு சரியாக இடப்பட்டதிலிருந்து பத்திரிக்கையின் மன சாய்வு எந்தப்பக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது . இளம் பத்திரிக்கையாளர்கள் சிலர் என்னை சந்திக்க விரும்பியது உற்சாகமூட்டுவதாக இருந்தது .பல பத்திரிக்கையாளர்கள்  எனக்கு மிக நெருக்கமானது இந்த கட்டத்தில்தான் . பத்திரிக்கைகளை சார்ந்து பத்திரிக்கையாளரகளுக்குள் நிலவும் அரசியலை மிக நெருங்கி அறிந்து கொண்டது அப்போதுதான்

பிரபல பத்திரிக்கை ஒன்று செய்திகளை போடுவதற்கு பதிலாக செய்திகளை உருவாக்ககும் இடத்தில்  இருப்பதும் பத்திரிகையாளர்கள் போக்கில் மிகவும் மாறுபாடு அடைந்திருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது . முதிர்ந்த அரசியல்வாதி மற்றும் பத்திரிக்கையாளர்கள் இடையேயான புரிதல் செறிவாக இருந்த காலம் . “பிரசுரத்திற்கு அல்லஎன்கிற தலைப்பில் அவர்கள் மணிக்கணக்கில் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவை ஒளிவுமறைவின்றி இருக்கும். அவர்கள் அரசியல் கட்டுரைகளுக்கு மையக்கருவாக அவை இருக்கும். ஒற்றைபடையான செய்திகளுக்கு மிக விரிவான விளக்கமாக அவை அமைந்துவிடும் .

ஒரு காலகட்டத்திற்கு பிறகு , அரசியல் சார்ந்து வரும் கட்டுரைகள் முற்றாக நின்றன . அரசியலில் மையக்களத்தில் நிகழும் சிக்கல்களையும் அதற்கான முறையற்ற தீர்வுகளும் ஆட்சியாளர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் கலாச்சாரம் எழுந்து வந்திருந்தது.செய்திக்கு மிகுந்த வாட்சி இருந்த காலம் என்பதால் எனது அறிக்கைகள் தினம் வருவதுபோல சிறு சிறு நிகழ்வுகளின் வழியாக நிரைய சொல்ல துவங்கினோம் . வெறும் அறிக்கை லாவணிகளில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லைஅனைத்து கூடுகை பல சமூக சிக்கல்களுக்கு தாங்களாக முன்னின்று போராட்டம் நடத்தும் அனுபவத்தை அடைந்திருந்தது . அரசியல் களத்தின்  மையத்தில் பிற காரணிகள் குறுக்கும் நெடுக்குமாக பாயும் ஊடுபாவுகளினால் மிக ஆபத்தானதாக அதன் பிறிதொரு பரிமாணத்தை அறிய முடிந்தது இந்த சந்தர்ப்பத்தில்