https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 30 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 223 *குடிமைசமூகத்தின் ஒற்றை மனப்பரப்பு *

ஶ்ரீ:



அடையாளமாதல் - 223
பதிவு : 223 /  309 /  தேதி :- 30 அக்டோபர்    2017

*குடிமைசமூகத்தின் ஒற்றை மனப்பரப்பு *


வாய்ப்புகளில் புரியாமை - 09 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு , அரசியல் சார்ந்து வரும் கட்டுரைகள் முற்றாக நின்றன . அரசியலில் மையக்களத்தில் நிகழும் சிக்கல்களையும் அதற்கான முறையற்ற தீர்வுகளும் ஆட்சியாளர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் கலாச்சாரம் எழுந்து வந்திருந்தது.செய்திக்கு மிகுந்த வாட்சி இருந்த காலம் என்பதால் எனது அறிக்கைகள் தினம் வருவதுபோல சிறு சிறு நிகழ்வுகளின் வழியாக நிரைய சொல்ல துவங்கினோம் . வெறும் அறிக்கை லாவணிகளில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை .  அனைத்து கூடுகை பல சமூக சிக்கல்களுக்கு தாங்களாக முன்னின்று போராட்டம் நடத்தும் அனுபவத்தை அடைந்திருந்தது . அரசியல் களத்தின்  மையத்தில் பிற காரணிகள் குறுக்கும் நெடுக்குமாக பாயும் ஊடுபாவுகளினால் மிக ஆபத்தானதாக அதன் பிறிதொரு பரிமாணத்தை அறிய முடிந்தது இந்த சந்தர்ப்பத்தில் . 




பாலன் தலைமையின் கீழிருந்த இளைஞர் காங்கிரஸில் களப்பணிகளை செய்யும் சந்தர்ப்பம்  கிடைத்ததால்  அரசியல் உலகில் நிலவும் ஜனநாயக மரபுகளை ஒட்டி அதிகரத்தை அடைவதற்கான வழிகளும் , அதனுள்ளே இருக்கிற நடைமுறை எதிர்ப்புகளையும் அதை கடந்து அவற்றை  அடைவதற்கான பாதையும் , அடைந்ததை தக்க வைக்கும் முறைகளும் அதை பற்றிய புரிதலுக்கு வாய்பளித்திருந்தது . களத்தை மட்டுமல்லாது நான் என்னை பற்றிய புரிதலை அடைந்ததும் அப்போதுதான்

அத்தகைய பொது அரசியல் வெளியில் , காங்கிரஸின் நிகழ் அரசியலை முற்றாக வேறொரு கோணத்தில் புரிந்து கொண்டதும் அதன் சாதக பாதகங்களை பற்றிமட்டுமல்லாது வாய்ப்பை பற்றி புரிந்து கொண்டதும் அங்குதான் . மிகுந்த நம்பிக்கையுடன் அதை அங்கிருந்தே தொடக்கியிருந்தேன். ஆனால் அது அதிகாரத்திற்கு வர விரும்பும் தேர்தலாரசியலை மையமாக கொண்டிருந்தது . பாலனுக்கும் மேலும் சிலருக்கு தேர்தல் அரசியல் அவர்களின் பாதையாக இருந்தாலும்அவை எல்லாவற்றிக்கும் தொடக்கப்புள்ளி  இங்குதான் நிலைகொண்டிருந்தது . உடனடியாக அந்த வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தது பாலன் மட்டுமே

அது அதற்கான பாதையை அவருக்கு திறந்து கொடுத்தபோதும் , அவரின் அரசியல் போதாமையினால் வழியில் சந்திக்கும் அடுத்தடுத்த நிலைகளில்  செய்யவேண்டியது என்ன என்கிற கேள்விகளுக்கு அவரிடம் பதிலில்லை . தேர்தல் வெற்றி அனைத்தையும் அவருக்கு வழங்கிவிடும் என்கிற கணக்கு ஒருவேளை சரியாக இருந்தாலும் , அதை எடுத்து பரிமாறும் அமைப்பை எப்போதோ சீரழிந்துவிட்டிருந்தார் . கண்ணனின் வெற்றியும் அவருக்கு கிடைத்த வாய்ப்பும் எல்லோருக்குமான வழியாக நினைத்துக்கொண்டது அவரது இரண்டாம் பிழை , முதல் பிழை தேர்தலரிசியலில் வெற்றி பெரும் வாய்ப்பை பற்றி  அவர் சிந்தித்தாகவே தெரியவில்லை. காங்கிரஸில் சீட்டு மட்டுமே எல்லாவற்றையும் செய்து கொடுக்கவல்லதல்ல . அதற்கான எந்த களப்பணியையும் அவர் எப்போதுமே செய்திருக்கவில்லை

கண்ணனுக்கு நிகழ்ந்ததை பாலன் சரியாக புரிந்துகொள்ளாததே இந்த பிழைக்கு முக்கிய காரணி . இளைஞர் காங்கிரஸின் தலைவராக கண்ணன் இருந்தபோது , குடிமை சமூகத்திடம் ஒரு கருத்தாக அவர் மாற்றமடைந்திருந்தார் ,அதற்கு கட்சியை தாண்டி அவரது ஆளுமை பெரிய செல்வாக்கை பெற்றிருந்தது . நகர் புற பகுதிகளில் இளைஞர்களை வசீகரிக்கும் தலைமையாக அவர் உருவெடுத்திருந்தார் . அதற்கு அவரது ஆளுமை அனுகுமறை மையக்காரணமாக இருந்தது . பாலன் ஒரு ஆளை தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இடம் ஒரு புறநகர் பகுதி . எளிமை வெளிப்படுத்தும் முறையும் வெளிப்படுத்தும் தலைமையை காரணியாக கொண்டது

முதலியர்ப்பேட்டை தொழிலாளர்களின் மையமாக இருந்தாலும் , பாலனின் அணுகுமுறை அவருடன் எவர்க்கும் ஒரு பழகுதல் மனத்தடையை கொடுத்திருந்தது . தன்னை பற்றிய மிகை புரிதல் , பலரிடத்தில்  அவர்மேல் காழ்ப்பையே உருவாக்கியது . இது கண்ணனுக்கு நேர் எதிர்மறையான மனோபாவம் . கண்ணனுக்கு திறந்த கதவுகள் , இவருக்கு அடைபட்டு போயின . குடிமை சமூகத்தின் எண்ணமும் அங்கீகாரமும்  கண்ணுக்கு தெரியாத ஒரு பலம் வாய்ந்த காரணியாக இருப்பதே செல்வாக்கு என்கிற இடத்தை அடைகிறது .அதன் அனுமதியை பெற்றேதான் அனைவரும் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது

நகர்ப்புற இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவருவது அவ்வளவு எளிதானதல்ல வளர்ந்துவிட்ட தலைவர்களுக்கே அது சவால் மிகுந்தது . காரணம் நகர்புறம் பொருளியல் ரீதியான பிரிவுகளை கொண்டிருப்பதனால் அனைத்தும் உதிரிகளாக சிதறிக்கிடப்பவை , ஒரு வகைமைக்குள் அவர்களை கொண்டுவருவது சாத்தியமில்லாதது . புறநகர் பகுதிகள் சில குழு அமைப்பை கொண்டிருப்பது ஆனால் அவை சமூக எதிர்நிலை மனிதர்களுக்கு புகலிடம் அளிப்பது . குறுங் குழுக்கள் பெரும்பாலும் அவைகளை சார்ந்திருப்பது . தங்களை தற்காத்துக்கொள்ளும் முகமாக அவர்களின் போஷணத்தில் இருப்பது . ஆனால்  கிராமப்புற பகுதிகளில் அனைவரையும் பாதிக்கும் பொது சிக்கலுக்கல்களுக்கு முதலிடம் . அமைப்பு ரீதியாக அதை ஒருங்கிணைக்க முடியும் . அங்கிருந்து கிடைக்கும் அங்கீகாரத்தை கொண்டுதான் புறமட்டுறும் நகர்ப்புற இளைஞர்களை தொட இயலும் . கிராம பகுதிகள் மட்டுமே எனக்கான முதல் களமாக புரிந்துகொண்டேன்.

மேலும் அரசு அதிகாரமின்றி நகர்ப்புற இளைஞர்களை கவருவது சாத்தியமில்லை , அவர்கள் அனைவரும் உதிரிகளாக சிதறிக்கிடப்பதால் , தங்களுக்காகக்கூட அவர்கள் போராடுவதென்பது நடவாது . இன்று வந்து நாளை பதவி இழக்கும் அரசு அதிகாரத்தைவிட குடிமை சமூகம் தரும் அங்கீகாரம் என்றைக்குமானது . அதுவும் அவர்களுடன் பேணும் நல்ல நட்பையும் நேர்மையையும் பொறுத்து . பல விதமான் பேதங்களில் சிதறிக்கிடக்கும் இந்தியக் குடிமை சமூகம் அரசியலை சார்ந்து சித்தும்போது மட்டும் ஆச்சர்யமாக ஒற்றை  மனப்பரப்பை அடைகின்றது . அதுவே இந்தியாவை இன்னும் ஜனநாயக நாடாக வைத்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் மனித இனத்தில் ஆறில் ஒரு பங்கின் நவீன வரலாறைச் சொல்ல முயன்றுள்ளேன். இது ஒரு வரலாற்றுக் குறிப்பு மட்டுமல்ல, சுதந்தர இந்தியாவின் முக்கிய மனிதர்கள், கருத்து வேறுபாடுகள், எண்ணங்கள், சுதந்தரம் பெற்ற முறைகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வும்கூட. எனினும் கதை சொல்லும் முறை இரண்டு அடிப்படை லட்சியங்களால் உந்தப்பட்டிருக்கிறது. ஒன்று: இந்தியாவின் சமூக அரசியல் மாறுபாடுகளைக் கவனமாகக் கருத்தில் கொள்வது. இரண்டு: ஆய்வாளர்களும் சாமானியர்களும், அயல்நாட்டவரும் உள்நாட்டவரும் இதுநாள் வரை எதிர்கொண்டுவரும்இந்தியா என்ற ஒன்று ஏன் இருக்கிறதுஎன்ற புதிரை விடுவிப்பது." சிறந்த வரலாறு ஆய்வாளர்களில் ஒருவரான  திரு. ராமச்சந்திர குஹா தனது இந்திய வரலாறு - காந்திக்கு பிறகு - பாகம் 1 என்கிற தனது ஆக்கத்தில் குறிப்பிடுகிறார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்