https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 16 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 215 * பதவியெனப்படுவது யாருக்கு? யாதெனில்? *

ஶ்ரீ:
பதிவு : 215 / 295 /  தேதி :- 16 அக்டோபர்    2017


*  பதவியெனப்படுவது யாருக்கு?   யாதெனில்?   *வாய்ப்புகளில் புரியாமை - 02 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.


இது சட்டசபைக்கான பொது தேர்தல் இல்லை . இது கல்லூரி வளாகத்திற்குள் நடப்பது . சமூக விரோதிகளைக் கொண்டு தகராறுகளை அரங்கேற்ற முடியாது . அவர்களுக்குள் ஒருவையொருவர் தாக்குமளவிற்கு அதை கொண்டுசெல்வது சாத்தியமில்லை . ஆகவே மாணவர் அமைப்பின் தேர்தலை முயற்சிக்கலாம் என தோன்றியது . இந்த கல்லூரி தேர்தலில் ஒருவேளை எங்களால் வெற்றிபெறமுடியுமானால் . களத்தில் அவர்களின் நிலையாமையை  மீண்டுமொருமுறை நிறுவியதாகிறது .அதை அவர்களும் அறிந்திருந்தார்கள்.
தலைவரிடம் பேசி வந்த பிறகு மனம் அந்த இடத்திலேயே நின்று நிலைபெயரற மறுத்துக் கொண்டிருந்து .  இதுதான் அரசியல் என்பதா . மக்கள் சேவை மகிழ்வென்பதேல்லாம் வெறும் கனவு மட்டுமா ? தேர்தல் அரசியலிலிருந்து  நகர்ந்து இங்குவந்து சேர்வதற்கு பிறகு குடிமை சமூகத்திற்கு அதன் போக்கை நிர்ணயிக்கும் சக்தியின்மையே ஜனநாயகமாக எடுத்துக்கொள்ளப்படும் . இவை எல்லாம் வெறும் சிந்தனை பெருக்கு மட்டும்தானா? . இதை பற்றியேதான் யோசிக்க வேண்டுமா? . சில   சமயங்களில் நிறைய கேள்விகளை எழுப்பிக்கொள்ளும் போது முற்றிலும் பாதையற்று போய்விடுகிறது . அது முற்றாக அழிதல் அன்றி பிறிதொன்றில்லை . அரசியலின் பாதை பதவியை நோக்கி மட்டும்தான? அதைத் தாண்டி பிறிதொன்றிம் அதில் இல்லையா?.

சில சமயங்களில் நமக்கு தெரிந்த  ஒன்றும் , ஒரு தருணத்தால் எடுத்து நமது கைகளில் கொடுக்கும்போது அதற்கு முன்பு நிகழ்ந்த அனைத்தும் அதன் பெருபுத்தியை அடையும் பொருட்டே என விளக்கிவிடும் . இன்று உணரும் இந்த விடுதலையை நான் என்றும் அடைந்ததில்லை . முடிவுகள் என்றுமே கொப்பளிப்பாக அல்லது கொந்தளிப்பாக தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை . எனக்கான முடிவை அடைந்துவிட்டேன் என நினைக்கிறேன் .  

மாணவர் தேர்தலில் வெற்றியோ , தோல்வியோ எதுவாயினும்  யாருக்கும் அது மிக சிறிய அளவில்தான் இருக்கமுடியும் என தோன்றியது . பலமுறை மாணவர் பிரிதிநிதிகளை சந்தித்தபிறகு இதுதான் நிலைமை , என்னளவில் அவர்களில் மூன்றுபேர் மீது எனக்கு நம்பிக்கையில்லை . அவர்களில் இருவர் அணிமாறினால் வெற்றிவாய்ப்பு கைநழுவி போகலாம் . நான் ரஹ்மானிடம் எனது திட்டத்தை தெளிவாக கூறிவிட்டேன் .நான் செய்யக்கூடியது . அவன் செய்யவேண்டியது . கல்லூரிக்குள் நடக்கவேண்டியதை அவன் பார்த்துக்கொள்ள வேண்டியது . வெளியிலிருந்து ஆதரவளிப்பது மட்டுமே என்னால் ஆகக்கூடியது . 

தேர்தலன்று முழு காவல்படை இறக்கிவிடப்பட்டு அவர்கள் சார்பாக அது செயல்படாது இருக்குமானால் . நியாயமான தேர்தலுக்கு சாத்தியக்கூறு உண்டு. அனாவசிய வெளியாள் தலையீடு இதுவரை நிகழவில்லை . இங்கிருந்து சிலர் அங்கு தாவி , அங்கிருந்து சிலர் இங்கு மாறி வந்து சேர்வதை போல ஏதாவது ஒன்று நிகழுமானால் , அதன் பின்னனர் தீரக்க இயலாதபடி பற்றிக்கொள்ளும் வாய்ப்புகளே அதிகம். 

எதிர்நோக்காத நேரத்தில் தேர்தலன்று , வன்முறையை நோக்கியே அவர்கள் நகர்கிறார்கள் என்கிற செய்திகளே வந்த வண்ணமிருந்தது . ஆரம்பம் முதலே அதை புறம்தள்ளியி படி நான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன் . எல்லாரும், ஒருவித பதட்டத்தில் இருந்தனர். நான் பதட்டமடையாது செயல்பட முயற்சித்தேன் . 

கல்லூரி அமைந்திருந்த லாஸ்பேட்டை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர்  அனைவரையும் கல்லூரி மேட்டை சுற்றி நிற்கவைத்திருந்தோம் . தமாகா வினருக்கு இருந்த வசதிகள் எதுவும் எங்களுக்கில்லாதபோதும் . நாங்கள் சென்று அங்கு இறங்கும்போது தாமாக வினர் ரவிச்சந்திரன் தலைமையில் திரண்டிருந்தனர் . நாங்கள் கேட்டை தாண்ட முயற்சித்தபோது . போலீஸ் கெடுபிடி துவங்கியிருந்தது . மாணவர் காங்கிரஸை சேர்த்த சிலர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபாடிருந்தபோது போலீஸ் வேன் ஒன்று அங்கு வேகமாக வந்தது நின்றதும் நிலைமை விபரீதமாக மாறிவிட்டிருந்தது . நன் என்னுடன் இளைஞர் காங்கிரஸ் சேர்ந்த சிலரும் வந்திருந்தனர் . நங்கள் வந்திருங்கவும் தள்ளுமுள்ளு.துவங்கவும் சரியாக இருந்தது . 

மனதினில் சிறு நடுக்கம் தோன்றியது . பெரிய ஆதரவு என்று எதுவும் இல்லாத நிலையில் . சற்றுநேரம் என்ன செய்வது என புரியாது இருந்தது . ரவியுடன் ஊசுடு சட்டமன்ற உறுப்பினர்  ஏழுமலை நின்றுகொண்டிடுப்பதை பார்க்க முடிந்தது . எனக்கு பங்கூர் நிகழ்வுகளும் நடத்த வெறியாட்டமும் ஒருநிமிடம் கண்முன் நிழலாடியது . முன்வைத்த காலை கொண்டு பின்னகர முடியாது . அது அவமானகரமானது . வெளியில் நிகழ்ந்து கொண்டிருப்பதறகு மாறாக அவரகளுக்குள்ள உளத்தடை காரணமாக , முடிவெடுப்பதில் ஊடாடுவதை என்னால் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது . 

அன்றைய அதிர்ஷ்டம் எங்கள்பக்கம் இருந்திருக்க வேண்டும் . அவர்கள் பக்கம் சிறு குழப்பம் தெரிந்தது . ஏழுமலை ஏதோ சொல்லியிருக்க வேண்டும் . சற்று நேரத்திற்கெல்லாம் ரவியும் ஏழுமலையும் தீடீரென கிளம்பி சென்றார்கள் . என்னால் சில விஷயங்களை யூகிக்க முப்ப்டிந்தது . அவர்கள் எதற்கோ அஞ்சுகிறார்கள் . நான் கடைசீ நேரத்தில் உள்நுழைந்ததால் எங்களிடம் ஏதோ திட்டமிருக்கவேண்டும் என குழம்பி போய் இருக்கலாம் இதற்கு பெயர் குருட்டு அதிர்ஷ்டமென்பது . நான் இதை பலமுறை அனுபவித்திருக்கிறேன்.ஒறுமாதிரியாக . காங்கிரஸ் மாணவர் தலவர்  ஒரு வோட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது . ஆனால் அதன் பின் யார் சொன்னாலும் , ஒருபோதும் இதுபோன்ற மாணவர் அமைப்பிற்காக செயல்படுவதில்லை என தீர்மானித்து விட்டேன். ஆனால் இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை .

வாழ்வில் எதிகொள்ளும் நிகழ்வுகள், நிகழ்ந்து உணர்வுகளாக தேங்கி காலம் முழுவதுவதுமாக அதனுடன் முயங்கி பின்னர்  இறப்பின் நிமிடம்வரை ஒரு ரணத்தைப் போல வலியை குறியீடாக உணர்த்தியபடி கிடக்கிறது . ஒருக்கால் அது ஆறிபோனபிறகும் , சிறு அழுந்தித் தொடல் வலியையையும் அதனூடே சிறு சுகத்தையும் கூட அது கொடுக்க வல்லது என்பது தான் இன்னும் வினோதம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்