ஶ்ரீ:
பதிவு : 305 / தேதி 25-10-2017
மழு ஆழியானது , எழுதழல் - வெண்முரசு
மைந்தா, இளைய யாதவன் முன்வைக்கும் அந்த வேதத்தில் அசுரவேதம் அடக்கமா? இல்லையென்றால் எதன் பொருட்டு வஜ்ரநாபனும் பாணனும் சம்பரனும் பிற அசுரகுடிகள் நூற்றெண்மரும் அவனுடன் படை கூடியுள்ளனர்? சொல்க! இந்நிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக அசுரரும் அரசரும் போரிட்டது வேதத்தின் பொருட்டே. வேதம் காக்க அவன் நின்றிருக்கிறான் என்றால் அசுரர்கள் ஏன் அவன் பின் படைதிரண்டு நின்றிருக்கிறார்கள்? நேற்று மகாபலியின் பின்னால் அணி திரண்டார்கள். அதற்கு முன் ஹிரண்யாக்ஷனின் பின்னால். அதற்கு முன் விருத்திராசுரனுடன். அசுரர் திரண்டது அனைத்தும் வேதத்திற்கு எதிராகவே. மீண்டும் இன்று அவர்கள் ஒருங்கு திரண்டிருக்கிறார்கள். அதன் பொருளென்ன?”.
கொண்டாடும் இடத்தில் குழந்தையும் தெய்வமும் என்பார்கள். வெண்முரசு மிக நுட்பமான ஒரு விஷயத்தை இங்கு கையாளுகிறது . ஶ்ரீமத் பாகவதம் அசுரர் நிரையிலிருந்து விருத்ராசுரன் விலக்கி அவனை பக்தனென அடையாளப்படுத்துகிறது . பலிச்சக்ரவர்தியையும் பாகவதம் அப்படித்தான் சொல்கிறது . எதிர்மறை நிலைபாட்டிலிருந்து விலகும் போது தெய்வம் அனைவருக்கும் பொது என்றாகிறது . அங்கு இந்திரன் தெய்வத்தால் கைவிடப்பட்டு மறைந்து வாழ்ந்ததாக வெண்முரசிலும் சொல்லப்பட்டது . மாறிவரும் சூழலை கொண்டே கண்ணனின் நாரயணவேதம் கூர்தீட்டப்படுவதாக வெண்முரசின் வாதம் மறுக்கமுடியாததாகிறது . மழு ஆழியானதாக. அற்புதம் .
“மானுட உயிர்கள் அனைத்திற்கும் வேதம் அருளப்பட்டுள்ளது. விலங்குகளுக்கும் புழுபூச்சிகளுக்கும்கூட அவற்றுக்கான வேதம் இருக்கக்கூடுமென்று சாந்தீபனி மரபு கொள்கிறது. வேதங்கள் வேறுபடுவது அவற்றை விளங்கிக்கொள்ளும் இடத்தில்தான்”
இதைவிட நுட்பமாக வேறு எப்படி கூறமுடியும் . அற்புதமான சொல்லாட்சியாக வெளிப்படுகிறது.
காலமாற்றத்தினால் அனைத்தும் மாறுபாடுகள் அடையும் எனில் சில மேல்கீழ் அடுக்கில் மாற்றம் புதிதாக சொன்ன குற்றம் வாராது போகலாம் என்கிற முறையில் சொல்லப்பட்டிருப்பது சரியாக பொருந்தி வருகிறது. மாறாதது புரியைமையல்ல , விரும்பாமை அதை கடுமையாக கண்டிக்கிறான சுருதகீர்த்தி .
“உள்ளிருண்டவனே, ஞானமென்று எதை அறிவாய்? உன்னுள் நுரைத்திருக்கும் அந்த எளிய ஆணவத்தை மட்டுமே. இருந்து மறைந்த எண்ணிலாக் கோடிகள் கடக்கமுடியாத அழுக்கு நதி அது. அதற்கப்பால் நீ அறிந்ததுதான் என்ன?”
ஆம் ஆனவமென்பது பலர் விட்டு நிரம்பிய கடக்கமுடியத அழுக்கு நதிதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக